தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 304

ஜனவரி 15, 2023

எல்லா மனுஷர்களும் இயேசுவின் நிஜமான முகத்தைக் காண விரும்புகிறார்கள், அனைவரும் அவருடன் இருக்க விரும்புகிறார்கள். எந்தவொரு சகோதரனும் சகோதரியும் தனக்கு இயேசுவைக் காணவோ அல்லது அவருடன் இருக்கவோ விரும்பவில்லை என்று சொல்வார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் இயேசுவைக் காண்பதற்கு முன், நீங்கள் மனுஷரூபத்திலுள்ள தேவனைக் காண்பதற்கு முன், நீங்கள் எல்லா வகையான யோசனைகளையும் உத்தேசிக்க வாய்ப்புள்ளது, எடுத்துக்காட்டாக, இயேசுவின் தோற்றம், அவருடைய பேசும் முறை, அவருடைய வாழ்க்கை முறை மற்றும் பலவற்றைப் பற்றி உத்தேசிக்க வாய்ப்புள்ளது. ஆனால் நீங்கள் அவரை உண்மையிலேயே பார்த்தவுடன், உங்கள் கருத்துகள் விரைவாக மாறிவிடும். இது ஏன்? நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? மனுஷனின் சிந்தனையைப் புறக்கணிக்க முடியாது, அது நிஜம்—ஆனால் அதைவிட, கிறிஸ்துவின் சாராம்சம் மனுஷன் ஏற்படுத்தும் மாற்றத்தைப் பொறுத்துக் கொள்ளாது. நீங்கள் கிறிஸ்துவை அழிவில்லாதவர் அல்லது ஒரு ஞானி என்று நினைக்கிறீர்கள், ஆனால் அவரை யாரும் மகிமையை சாராம்சமாகக் கொண்ட ஒரு சாதாரண மனுஷராகக் கருதுவதில்லை. அதே போல், தேவனைக் காண இரவும் பகலும் ஏங்குகிறவர்களில் பலர் உண்மையில் தேவனின் எதிரிகள், அவருக்கு இணக்கமாய் இராதவர்கள். இது மனுஷனின் தரப்பில் உள்ள தவறல்லவா? இப்போது கூட நீங்கள் கிறிஸ்துவின் முகத்தைக் காண உங்களைத் தகுதியுடையவராக்க உங்கள் நம்பிக்கையும் விசுவாசமும் போதுமானது என்று நினைக்கிறீர்கள், ஆனால் நடைமுறைக்கு சாத்தியமான பல விஷயங்களால் உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும்படி நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்! கடந்தகாலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும், கிறிஸ்துவுடன் ஐக்கியத்தில் இருந்த பலர் தோல்வியுற்றனர் அல்லது தோல்வியடைவார்கள்; அவர்கள் அனைவரும் பரிசேயர்களின் பாத்திரத்தை வகிக்கிறார்கள். உங்கள் தோல்விக்குக் காரணம் என்ன? உங்கள் கருத்துப்படி உயர்ந்த மற்றும் போற்றுதலுக்குரிய ஒரு தேவன் இருக்கிறார் என்பதே இதற்குத் துல்லியமான காரணம். ஆனால் நிஜம், மனுஷன் விரும்பியபடி இருப்பதில்லை. கிறிஸ்து உயர்ந்தவரல்ல என்பது மட்டுமல்ல, அவர் குறிப்பாகச் சிறியவர்; அவர் ஒரு மனுஷர் மட்டுமல்ல, அவர் ஒரு சாதாரண மனுஷர்; அவர் பரலோகத்திற்கு எழும்புவது இல்லை என்பது மட்டுமல்ல, பூமியில் கூட அவரால் சுதந்திரமாக நகர முடியாது. இது இவ்வாறு இருக்கையில், "நிஜமான கிறிஸ்துவின்" வருகைக்காக காத்திருக்கும்போதெல்லாம் ஜனங்கள் அவரை ஒரு சாதாரண மனுஷனை நடத்துவது போலவே நடத்துகிறார்கள்; அவர்கள் அவருடன் இருக்கும்போது சாதாரணமாக அவரை நடத்துகிறார்கள், அவரிடம் அஜாக்கிரதையாகப் பேசுகிறார்கள். நீங்கள் ஏற்கனவே வந்த கிறிஸ்துவை ஒரு சாதாரண மனுஷனாகவும், மற்றும் அவருடைய வார்த்தைகளை சாதாரண மனுஷனின் வார்த்தைகளாகவும் கருதுகிறீர்கள். இந்தக் காரணத்திற்காக, நீங்கள் கிறிஸ்துவிடமிருந்து எதையும் பெறவில்லை, அதற்குப் பதிலாக உங்கள் சொந்த அசிங்கத்தை முற்றிலுமாக வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளீர்கள்.

கிறிஸ்துவுடனான தொடர்புக்கு முன்னர், நீ உனது மனநிலை முழுமையாக மாற்றப்பட்டிருப்பதாக, நீ கிறிஸ்துவை விசுவாசத்துடன் பின்பற்றுபவனாக, உன்னைவிட கிறிஸ்துவின் ஆசீர்வாதங்களைப் பெறும் தகுதி யாருக்கும் இல்லை என்று நம்பியிருக்கலாம்—மேலும், பல சாலைகளில் பயணித்து, அதிக வேலைகளைச் செய்து, அதிக பலன்களைக் கொண்டுவந்த நீ, இறுதியில் கிரீடத்தைப் பெறுபவர்களில் ஒருவனாக நிச்சயமாக இருப்பாய். ஆயினும், நீ அறியாத ஓர் உண்மை உள்ளது: மனுஷனின் சீர்கெட்ட மனப்பான்மையும், அவனுடைய கலகமும் எதிர்ப்பும் அவன் கிறிஸ்துவைப் பார்க்கும்போது அம்பலப்படுத்தப்படுகிறது, மேலும் இந்த நேரத்தில் வெளிப்படும் கலகமும் எதிர்ப்பும் வேறு எதையும் விட முற்றிலும் வெளிப்படையாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்தப்படுகிறது. கிறிஸ்து சாதாரண மனுஷத்தன்மையைக் கொண்ட மனுஷகுமாரன் என்பதே இதற்குக் காரணம்—எனவே மனுஷன் அவரை மதிப்பதோ மரியாதை கொடுப்பதோ இல்லை. தேவன் மாம்சத்தில் வாழ்கிறார் என்பதால்தான் மனுஷனின் கலகம் மிகவும் முழுமையாகவும் தெளிவான விவரங்களுடனும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. ஆகவே, கிறிஸ்துவின் வருகை மனுஷகுலத்தின் அனைத்து கலகத்தையும் கண்டுபிடித்து, மனுஷகுலத்தின் தன்மையை வெளிப்படையாக்கியுள்ளது என்று நான் சொல்கிறேன். இது "ஒரு புலியை மலையிலிருந்து கவர்ந்திழுப்பது" மற்றும் "ஒரு ஓநாயை அதன் குகையிலிருந்து கவர்ந்திழுப்பது" எனப்படுகிறது. நீ தேவனுக்கு விசுவாசமுள்ளவன் என்று சொல்ல உனக்கு தைரியம் இருக்கிறதா? நீ தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிதலைக் காட்டுகிறேன் என்று சொல்ல உனக்கு தைரியம் இருக்கிறதா? நீ கலகம் பண்ணுவதில்லை என்று சொல்ல உனக்கு தைரியம் இருக்கிறதா? சிலர் கூறுவார்கள்: "தேவன் எப்போதெல்லாம் என்னை ஒரு புதிய சூழலில் வைக்கிறாரோ, அப்போதெல்லாம் நான் ஒரு முணுமுணுப்பும் இல்லாமல் கீழ்ப்படிகிறேன், மேலும் நான் தேவனைப் பற்றிய எந்தக் கருத்துக்களையும் உத்தேசிப்பதில்லை." சிலர் இவ்வாறு கூறுவார்கள்: "தேவன் எனக்கு என்ன வேலையைக் கொடுத்தாலும், நான் எனது திறனுக்கேற்ப சிறப்பாகச் செய்கிறேன், ஒருபோதும் நான் கவனக்குறைவாக இருந்ததில்லை." அவ்வாறான நிலையில், நான் உங்களிடம் இதனைக் கேட்கிறேன்: நீங்கள் கிறிஸ்துவுடன் வாழும்போது அவருடன் இணக்கமாக இருக்க முடியுமா? நீங்கள் எவ்வளவு காலம் அவருடன் இணக்கமாக இருப்பீர்கள்? ஒரு நாள்? இரண்டு நாட்கள்? ஒரு மணி நேரம்? இரண்டு மணி நேரம்? உங்கள் விசுவாசம் பாராட்டத்தக்கதாக இருக்கலாம், ஆனால் நீங்கள் வைராக்கியமான வழியில் அதிக விசுவாசத்தைக் கொண்டிருக்க மாட்டீர்கள். நீ உண்மையிலேயே கிறிஸ்துவோடு வாழ்ந்தவுடன், உன் சுயநீதியும் சுய முக்கியத்துவமும் உன் சொற்கள் மற்றும் செயல்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும், மேலும் அதே போல் உன் இறுமாப்பு ஆசைகளும், உன் கீழ்ப்படியாத மனநிலையும் அதிருப்தியும் இயல்பாகவே வெளிப்படும். இறுதியாக, நீ அக்கினியையும் ஜலத்தையும் போலவே கிறிஸ்துவுக்கு அதிகமாக முரண்பட்டு இருக்கும் வரையிலும் உனது அகந்தை இன்னும் அதிகமாகிவிடும், பின்னர் உனது இயல்பு முற்றிலும் வெளிப்படும். அந்த நேரத்தில், உனது கருத்துக்களை இனி மூடிமறைக்க முடியாது, உனது புகார்களும் இயல்பாகவே வெளிவரும், மேலும் உனது மோசமான மனுஷத்தன்மை முழுமையாக வெளிப்படும். ஆயினும்கூட, நீ உனக்குச் சொந்தமாக கலக மனப்பான்மை இருப்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறாய், அதற்குப் பதிலாக இது போன்ற ஒரு கிறிஸ்துவை மனுஷன் ஏற்றுக்கொள்வது எளிதானது அல்ல, அவர் மனுஷனை மிகவும் வற்புறுத்துகிறார், மற்றும் அவர் இரக்கமுள்ள கிறிஸ்துவாக இருந்தால் நீ முழுமையாகக் கீழ்ப்படிவாய் என்று நம்புகிறாய், உங்கள் கலகக் குணம் நியாயமானது என்றும், அவர் உங்களை அதிக தூரம் தள்ளும்போது மட்டுமே நீங்கள் அவருக்கு எதிராகக் கலகம் செய்கிறீர்கள் என்றும் நீங்கள் நம்புகிறீர்கள். நீங்கள் ஒருபோதும் கிறிஸ்துவை தேவனாகப் பார்க்க வேண்டுமென்றும், அவருக்குக் கீழ்ப்படியும் எண்ணம் உங்களுக்கு இல்லை என்றும் நீங்கள் ஒருபோதும் கருதவில்லை. மாறாக, உனது சொந்த விருப்பங்களுக்கு ஏற்ப கிறிஸ்து செயல்பட வேண்டும் என்று நீ பிடிவாதமாக வலியுறுத்துகிறாய், உனது சொந்த சிந்தனைகளுக்கு முரணான ஒற்றைக் காரியத்தை அவர் செய்தவுடன், அவர் தேவன் அல்ல மனுஷன் என்று நீ நம்புகிறாய். இந்த வழியில் அவருடன் வழக்காடிய பலர் உங்களிடையே இல்லையா? எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் யாரை விசுவாசிக்கிறீர்கள்? நீங்கள் எந்த வழியில் தேடுகிறீர்கள்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்துவுக்கு இணக்கமாய் இராதவர்கள் நிச்சயமாகவே தேவனின் எதிராளிகள்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க