தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 303

மே 18, 2023

தேவனுக்கு உணர்ச்சி இருப்பதாலும் அல்லது தன்னை மனிதன் ஆதாயமாக்கிக் கொள்வதற்கு விருப்பமற்றவராய் தேவன் இருப்பதாலும் அல்ல, மாறாக மனிதன் தேவன் தன்னை ஆதாயமாக்கிக் கொள்ள விரும்பாததால், அவரை உடனடியாகத் தேட விரும்பாததால், அவன் அவரை ஆதாயமாக்கிக் கொள்ளத் தவறுகிறான். தேவனை உண்மையாய்த் தேடுகிறவர்களில் ஒருவர் எப்படி தேவனால் சபிக்கப்பட முடியும்? நல்ல உணர்வும், உணர்வுள்ள மனசாட்சியும் கொண்ட ஒருவர் எப்படி தேவனால் சபிக்கப்பட முடியும்? தேவனை உண்மையாய் ஆராதித்து, அவருக்கு ஊழியம் செய்கிற ஒருவர் எப்படி அவருடைய கோபத்தின் அக்கினியினால் விழுங்கப்பட முடியும்? தேவனுக்கு மகிழ்ச்சியாய்க் கீழ்ப்படியும் ஒருவர் எப்படி தேவனுடைய வீட்டிலிருந்து வெளியேற்றப்பட முடியும்? தேவனை அதிகமாக நேசிக்கும் ஒருவர் எப்படி தேவனுடைய தண்டனையில் வாழ முடியும்? தேவனுக்காக எல்லாவற்றையும் மகிழ்ச்சியாய் விட்டுவிடுகிற ஒருவர் எப்படி ஒன்றுமில்லாமல் விடப்படுவார்? மனிதன் தேவனைப் பின்பற்ற விரும்புவதில்லை, தன்னுடைய உடைமைகளைத் தேவனுக்காக செலவழிக்க விரும்புவதில்லை, வாழ்நாளின் பிரயாசத்தைத் தேவனுக்காக அர்ப்பணிக்க விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக, தேவனைப் பற்றின அதிகக் காரியங்கள் மனிதனுடைய கருத்துக்களுடன் முரண்படுகிறதாயிருக்கும்படி, தேவன் மிக தூரம் போய்விட்டார் என்று அவன் சொல்லுகிறான். இப்படிப்பட்ட மனிதத்தன்மையுடன், நீங்கள் உங்கள் பிரயாசங்களில் தாராளமாக இருந்தாலும் கூட, தேவனுடைய அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள உங்களால் முடியாமல் போகும். நீங்கள் தேவனைத் தேடவில்லை என்ற உண்மையைக் குறித்து உங்களால் ஒன்றும் சொல்ல முடியாது. நீங்கள் மனித இனத்தின் குறைபாடுள்ள சரக்குகள் என்று உங்களுக்குத் தெரியாதா? உங்களைவிட கீழான மனிதத்தன்மை வேறில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? உங்களைக் கனப்படுத்த மற்றவர்கள் உங்களை எப்படி அழைக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? தேவனை உண்மையாக நேசிப்பவர்கள் உங்களை ஓநாயின் தகப்பன், ஓநாயின் தாய், ஓநாயின் மகன் மற்றும் ஓநாயின் பேரன் என்று அழைக்கிறார்கள். நீங்கள் ஓநாயின் சந்ததிகள், ஓநாயின் ஜனங்கள் ஆவீர்கள். உங்களின் சொந்த அடையாளம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதை நீங்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது. நீங்கள் உங்களை ஏதோ மேலான பிரபலம் என்று நினைக்காதீர்கள். நீங்கள் மனுக்குலத்தின் நடுவில் மிகக் கொடூரமான மனிதரல்லாத கூட்டம். இதில் எதுவுமே உங்களுக்குத் தெரியாதா? உங்களிடத்தில் கிரியை செய்கிறதால் நான் எத்தனை பெரிய இடர்நேரும் நிலையை எதிர்கொண்டேன் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய உணர்வு மீண்டும் இயல்பானதாக மாற முடியாவிட்டால், உங்களுடைய மனசாட்சி இயல்பானதாக இயங்க முடியாவிட்டால், நீங்கள் "ஓநாய்" என்ற பெயரை ஒருபோதும் தள்ளிவிட முடியாது. நீங்கள் ஒருபோதும் சாபத்தின் நாளிலிருந்தும், உங்கள் தண்டனையின் நாளிலிருந்தும் தப்ப முடியாது. நீங்கள் தாழ்ந்தவர்களாக, எந்த மதிப்பும் இல்லாத ஒரு காரியமாய்ப் பிறந்தீர்கள். நீங்கள் சுபாவப்படி பசியாயிருக்கும் ஓநாய்க் கூட்டம், குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களின் குவியல், நான் உங்களைப் போலல்லாமல் உங்களிடத்தில் நன்மைகளை பெற்றுக்கொள்வதற்காக உங்களிடம் கிரியை செய்யாமல், மாறாக என்னுடைய கிரியைத் தேவைப்படுவதால் அப்படிச் செய்கிறேன். நீங்கள் இப்படியே தொடர்ந்து கலகத்தன்மை உள்ளவர்களாக இருந்தால், நான் என்னுடைய கிரியையை நிறுத்திவிடுவேன். மீண்டும் ஒருபோதும் உங்களிடத்தில் கிரியை செய்ய மாட்டேன். மாறாக நான் என்னுடைய கிரியையை என்னைப் பிரியமான மற்றொரு கூட்டத்திற்கு கைமாற்றி விடுவேன். இவ்வகையில் நான் உங்களை என்றென்றும் விட்டு விலகுவேன். ஏனென்றால் என்னை விரோதிக்கிறவர்களை நோக்கிப் பார்க்க எனக்கு விருப்பமில்லை. அப்படியானால், நீங்கள் என்னுடன் ஒத்துப்போக விரும்புகிறீர்களா அல்லது என்னை விரோதிக்க விரும்புகிறீர்களா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க