தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 301

மே 18, 2023

மனிதனில் எழும் சீர்கேடான மனநிலைகளுக்கான மூலக்காரணம் என்னவென்றால் சாத்தானுடைய வஞ்சகமும், சீர்கேடும் மற்றும் விஷமுமேயாகும். மனிதன் சாத்தானால் கட்டப்பட்டும் கட்டுப்படுத்தப்பட்டும் இருக்கிறான், மேலும் அவனுடைய சிந்தனை, அறநெறி, உள்ளுணர்வு மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றின் மேல் சாத்தான் விளைவித்த மோசமான தீங்கை அவன் அனுபவிக்கிறான். அதனுடைய மிகச்சரியான காரணம் என்னவென்றால் மனிதனின் அடிப்படைக் காரியங்கள் சாத்தானால் கெடுக்கப்பட்டிருக்கிறது. தேவன் அவைகளை உண்மையாக எப்படிப் படைத்தாரோ அதைப்போல முற்றிலும் இல்லாமல் இருக்கிறது. மனிதன் தேவனை எதிர்க்கிறான், மேலும் அவனால் சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. இப்படி, மனிதனுடைய மனநிலையின் மாற்றங்கள், தேவனைப் பற்றிய புரிதலையும், சத்தியத்தைப் பற்றிய புரிதலையும் மாற்றக்கூடிய அவனுடைய சிந்தனை, உள்ளுணர்வு மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றில் உண்டாகும் மாற்றத்திலிருந்து தொடங்க வேண்டும். மிக ஆழமாகக் கெடுக்கப்பட்டிருக்கிற இடங்களில் பிறந்தவர்கள், தேவன் யார் அல்லது தேவனை நம்புவது என்றால் என்ன என்று இன்னும் அறியாமலேயே இருக்கின்றனர். எவ்வளவு அதிகமாக ஜனங்கள் கெடுக்கப்படுகிறார்களோ, அவ்வளவு குறைவாக அவர்கள் தேவன் இருப்பதை அறிந்திருப்பார்கள், மேலும் அவர்களுடைய பகுத்தறிவும் உள்ளுணர்வும் அவ்வளவு மோசமானதாக இருக்கும். தேவனுக்கு எதிரான எதிர்ப்பு மற்றும் கலகத்தன்மையின் மூலக்காரணம் மனிதன் சாத்தானால் கெடுக்கப்பட்டிருப்பதாகும். சாத்தானுடைய கெடுதலினால் மனிதனுடைய மனசாட்சி மரத்துப் போய்விட்டது. அவன் நெறிகெட்டு இருக்கிறான், அவனுடைய நினைவுகள் சீர்கெட்டதாக இருக்கின்றன, அவனுக்குப் பின்னோக்கிய மனக்கண்ணோட்டம் இருக்கிறது. சாத்தானால் கெடுக்கப்படுவதற்கு முன்பாக, மனிதன் இயல்பாகவே தேவனைப் பின்பற்றினான், அவருடைய வார்த்தைகளைக் கேட்டு கீழ்ப்படிந்தான். அவன் இயற்கையாகவே நல்ல பகுத்தறிவு, மனசாட்சி மற்றும் இயல்பான மனிதத்தன்மையுடன் இருந்தான். சாத்தானால் கெடுக்கப்பட்டப் பிறகு, மனிதனின் உண்மையான பகுத்தறிவு, மனசாட்சி மற்றும் மனிதத்தன்மை மந்தமாகி, சாத்தானால் பலவீனமடைந்தது. இவ்வாறு, தேவனிடத்திலான கீழ்ப்படிதலையும் அன்பையும் அவன் இழந்துபோனான். அவனுடைய அறிவு ஒழுக்கம் தவறிப்போனது. அவன் மனநிலை மிருகத்தின் மனநிலையைப் போலவே மாறிவிட்டது. தேவனைப் பற்றின அவனுடைய கலகத்தன்மை ஏராளமானதாகவும் வருந்தத்தக்கதாகவும் மாறிவிட்டது. ஆயினும், மனிதன் இதை அறிந்திருக்கவுமில்லை, அங்கீகரிக்கவுமில்லை, வெறுமனே எதிர்க்கிறான், கண்மூடித்தனமாகக் கலகம் செய்கிறான். மனிதனுடைய பகுத்தறிவு, உணர்வு மற்றும் மனசாட்சியின் வெளிப்பாடுகளில் அவனுடைய மனநிலை வெளிப்படுகிறது. ஏனென்றால் அவனுடைய பகுத்தறிவும், உள்ளுணர்வும் சீர்கெட்ட நிலையில் உள்ளது. அவனுடைய மனசாட்சி மிகப்பெரிய அளவில் மழுங்கிப் போயிற்று. இவ்வாறு அவனுடைய மனநிலை தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்கிறதாய் இருக்கிறது. மனிதனுடைய அறிவும், உள்ளுணர்வும் மாற முடியாவிட்டால், அவனுடைய மனநிலையில் மாற்றங்கள் என்பது தேவனுடைய சித்தத்திற்கு இணங்க நடக்காத ஒன்றாகவே இருக்கும். மனிதனுடைய உணர்வு சீர்கெட்டதாக இருந்தால், அவனால் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது, தேவனால் பயன்படுத்தப்பட தகுதியற்றவனாவான். "இயல்பான உணர்வு" என்பது தேவனுக்குக் கீழ்ப்படிவது, அவருக்கு உண்மையாக இருப்பது, தேவனுக்காக வாஞ்சையாக இருப்பது, தேவனிடத்தில் முழுமையுடன் இருப்பது மற்றும் தேவனைக் குறித்த மனசாட்சியைக் கொண்டிருப்பது ஆகியவற்றைக் குறிக்கிறது. அது ஒரு மனதோடு, ஒரு சிந்தையோடு தேவனிடத்தில் இருப்பதையும், வேண்டுமென்றே தேவனை எதிர்க்காமல் இருப்பதையும் குறிக்கிறது. ஒழுக்கம் தவறிப்போன உணர்வைக் கொண்டிருப்பது இது போன்றதல்ல. மனிதன் சாத்தானால் கெடுக்கப்பட்டதிலிருந்து, அவன் தேவனைக் குறித்த கருத்துக்களை எழுப்புகிறான், அவனுக்கு தேவனிடத்தில் விசுவாசமோ அவரிடத்தில் வாஞ்சையோ இருந்ததில்லை, தேவனிடத்திலான மனசாட்சியைக் குறித்துச் சொல்வதற்கு அவனுக்கு ஒன்றுமில்லை. மனிதன் வேண்டுமென்றே தேவனை எதிர்க்கிறான். அவர் மீது நியாயத்தீர்ப்புகளை வழங்குகிறான். மேலும் அவருடைய முதுகுக்குப் பின்னாக வசைமொழிகளை வீசியெறிகிறான். அவர் தேவன் என்ற தெளிவான புரிதலோடு, மனிதன் தேவனுடைய முதுகுக்குப் பின்பாக நியாயத்தீர்ப்பை வழங்குகிறான்; தேவனுக்குக் கீழ்ப்படிகிற எண்ணம் மனிதனுக்கு இல்லை. அவன் வெறுமனே கண்மூடித்தனமான கோரிக்கைகளையும் விண்ணப்பங்களையும் அவரிடத்தில் வைக்கிறான். ஒழுக்கம் தவறிப்போன உணர்வைக் கொண்ட இத்தகைய ஜனங்களால் தங்கள் சொந்த இழிவான நடத்தையை அறிந்துகொள்ளவோ அல்லது அவர்களுடைய கலகத்தன்மைக்காக வருத்தப்படவோ இயலாது. ஜனங்களால் தங்களையே அறிந்துகொள்ள முடிந்தால், அவர்கள் தங்கள் உணர்வை சிறிதளவு திரும்பப் பெற்றிருப்பார்கள். இன்னும் தங்களைக் குறித்து அறிய முடியாத ஜனங்கள் தேவனை எத்தனை அதிகமாக எதிர்க்கிறார்களோ, அவர்களின் உணர்வு அத்தனை குறைவுடன் இருக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க