தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 519

பிப்ரவரி 1, 2023

தேவனுடைய கிரியையை மனிதன் அனுபவித்து, தன்னையே தெரிந்துகொள்கிறான், அவனுடைய சீர்கேடான மனநிலையைச் சுத்திகரிக்கிறான், வாழ்க்கையில் உயர்வைத் தேடுகிறான், அனைத்துமே தேவனை அறிந்து கொள்வதற்காகவே. நீ உன்னைப் பற்றி மட்டுமே தெரிந்து கொள்ளவும், உன் சொந்தச் சீர்கேடான மனநிலையைக் கையாளவும் மட்டுமே முயன்று, ஆனால் தேவன் மனிதன் மீது என்ன கிரியை செய்கிறார், அவருடைய இரட்சிப்பு எத்தனைப் பெரியது, அல்லது நீ எவ்வாறு தேவனுடைய கிரியையை அனுபவித்து, அவருடைய செயல்களை சாட்சி பகருகிறாய் என்பதையும் பற்றி எந்த அறிவும் இல்லை என்றால், உனது அனுபவம் பயனற்றதாகும். ஒருவன் சத்தியத்தைக் கைக்கொண்டு நீடித்திருப்பதால் அவனுடைய வாழ்க்கை முதிர்ச்சி அடைந்ததாக நீ நினைத்தால், நீ இன்னும் வாழ்க்கையின் முழு அர்த்தத்தையோ அல்லது மனிதனைப் பரிபூரணப்படுத்தும் தேவனின் நோக்கத்தையோ புரிந்துகொள்ளவில்லை என்பதே அர்த்தமாகும். ஒரு நாள், நீ மதவாத திருச்சபைகளில் மனந்திரும்புதல் திருச்சபையின் அல்லது வாழ்வியல் திருச்சபையின் உறுப்பினர்களிடையே இருக்கும்போது, நீ பல பக்தியுள்ள ஜனங்களைக் காண்பாய், அவர்களுடைய ஜெபங்களில் "தரிசனங்கள்" உள்ளடங்கியிருக்கும், அவர்கள் வாழ்க்கையைத் தொடரும்போது, வார்த்தைகளால் தொடப்பட்டு வழிநடத்தப்படுகிறார்கள். மேலும், அவர்கள் அநேக காரியங்களைத் தாங்கிக் கொள்ளவும், தங்களையே கைவிடவும் இயன்றவர்களாய் இருக்கிறார்கள், மற்றும் மாம்சத்தால் நடத்தப்படுவதும் இல்லை. அந்நேரத்தில், உன்னால் வித்தியாசத்தைச் சொல்ல முடியாது: நீ அவர்கள் செய்வது எல்லாம் சரியானது என்று நம்புவாய் என்பது வாழ்க்கையின் இயற்கையான வெளிப்பாடாகும், மற்றும் அவர்கள் தவறான நாமத்தை விசுவாசிக்கிறார்கள் என்பது ஒரு பெரிய பரிதாபம். இதுபோன்ற கருத்துக்கள் முட்டாள்தனமானவை அல்லவா? ஏன் பலருக்கு ஜீவன் இல்லை என்று சொல்லப்படுகிறது? ஏனென்றால் அவர்கள் தேவனை அறியாதிருக்கிறார்கள், ஆகவே அவர்கள் தேவனைத் தங்கள் இருதயங்களில் பெறவில்லை, மற்றும் ஜீவனையும் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. தேவன் மீதான உன் விசுவாசம், நீ தேவனின் கிரியைகளையும், தேவனின் யதார்த்தத்தையும், தேவனின் கிரியையின் ஒவ்வொரு கட்டத்தையும் முழுவதும் தெரிந்து கொள்ளும் திறனுள்ள ஒரு நிலையை அடைந்துவிட்டால், நீ சத்தியத்தைப் பெற்றிருக்கிறாய். தேவனின் கிரியையும் மனநிலையும் பற்றி உனக்குத் தெரியாவிட்டால், இன்னும் உன் அனுபவத்தில் ஏதோ ஒன்றைக் காணவில்லை. இயேசு தமது கிரியையின் அந்தக் கட்டத்தை எப்படி நடப்பித்தார், இந்தக் கட்டம் எப்படி நடப்பிக்கப்படுகிறது, கிருபையின் காலத்தில் தேவன் எவ்வாறு தமது கிரியையைச் செய்தார் மற்றும் என்ன கிரியை செய்யப்பட்டது, இந்தக் கட்டத்தில் என்ன கிரியை செய்யப்படுகிறது போன்ற இந்தக் காரியங்களைக் குறித்த முழுமையான அறிவு உனக்கு இல்லையென்றால், நீ ஒருபோதும் உறுதியுள்ளவனாக உணர மாட்டாய், நீ எப்போதும் பாதுகாப்பற்றவனாக இருப்பாய். ஓர் அனுபவ காலத்திற்குப் பிறகு, உன்னால் தேவன் செய்த கிரியையையும் அவருடைய கிரியையின் ஒவ்வொரு படியையும் அறிந்து கொள்ள முடிந்தால், மற்றும் அவருடைய வார்த்தைகளைப் பேசுவதில் தேவனின் நோக்கங்களைக் குறித்தும், ஏன் அவர் கூறிய பல வார்த்தைகள் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை என்பதைக் குறித்தும் முழுமையான அறிவை நீ பெற்றிருந்தால், நீ தைரியமாகவும், முன்னாலிருக்கும் பாதையைத் தொடர்வதை நிறுத்தி வைக்காமலும் கவலையும் சுத்திகரிப்பும் இல்லாமலும் முன்னேறலாம். தேவன் தமது அநேக கிரியையை எதைக் கொண்டு நிறைவேற்றுகிறார் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். அவர் பேசுகிற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், மனிதனைச் சுத்திகரிக்கிறார் மற்றும் அவனது கருத்துக்களைப் பலவிதமான வார்த்தைகளின் மூலம் மாற்றுகிறார். நீங்கள் அனுபவித்த எல்லா துன்பங்களும், நீங்கள் கடந்து சென்றிருக்கிற அனைத்து சுத்திகரிப்புகளும், உங்களுக்குள் நீங்கள் ஏற்றுக்கொண்ட கையாளுதலும், நீங்கள் அனுபவித்த அறிவொளியும் என இவை அனைத்தும் தேவன் கூறிய வார்த்தைகளின் மூலம் அடையப்பட்டுள்ளன. மனிதன் தேவனை எந்தக் காரணத்தால் பின்பற்றுகிறான்? தேவனின் வார்த்தைகளால் அவன் பின்பற்றுகிறான்! தேவனின் வார்த்தைகள் மிகவும் இரகசியமானவை, அதற்கும் மேல் அவை மனிதனின் இருதயத்தை அசைக்கவும், அதற்குள் ஆழத்தில் புதைந்திருக்கும் காரியங்களை வெளிக்கொணரவும், கடந்த காலத்தில் நடந்த காரியங்களை அவனுக்குத் தெரிவிக்கவும், அவனை எதிர்காலத்திற்குள் ஊடுருவ அனுமதிக்கவும் செய்யும். ஆகவே, தேவனின் வார்த்தைகளால் மனிதன் துன்பத்தைத் தாங்குகிறான், மேலும் தேவனின் வார்த்தைகளாலும் பரிபூரணமாக்கப்படுகிறான். இந்நேரத்தில் மட்டுமே மனிதன் தேவனைப் பின்பற்றுகிறான். இந்தக் கட்டத்தில் மனிதன் செய்ய வேண்டியது என்னவென்றால், அவன் பரிபூரணமாக்கப்பட்டிருக்கிறானா அல்லது சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறானா என்பதைப் பொருட்படுத்தாமல் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும், தேவனின் வார்த்தைகளே திறவுகோல் ஆகும். இதுவே தேவனின் கிரியை, இதுவும்கூட மனிதன் இன்று தெரிந்து கொள்ள வேண்டிய தரிசனம் ஆகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறிந்தவர்களால் மட்டுமே தேவனுக்கு சாட்சிப் பகர முடியும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க