தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 518

பிப்ரவரி 1, 2023

தேவனை விசுவாசிப்பதும் தேவனை அறிந்துகொள்வதும் பரலோகத்தால் நியமிக்கப்பட்டு பூமியால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, தேவன் மனுவுருவாகி தமது கிரியையைத் தாமே நேரில் செய்யும் ஒரு காலமான இன்றைய காலமானது தேவனை அறிந்து கொள்வதற்கான மிகவும் நல்லதொரு காலமாக இருக்கிறது. தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்வதற்கான அஸ்திபாரத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் அடையக்கூடிய ஒன்றே தேவனைத் திருப்திப்படுத்துவது என்பதாகும், மேலும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள, தேவனைப் பற்றிய கொஞ்சம் அறிவைப் பெற்றிருப்பது அவசியமானதாகும். தேவனைப் பற்றிய இந்த அறிவு தேவனை விசுவாசிக்கிறவனுக்கு தரிசனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இது தேவன் மீதான மனிதனின் விசுவாசத்தின் அடிப்படையாகும். இந்த அறிவு இல்லையானால், தேவன் மீதான மனிதனின் விசுவாசம் தெளிவற்ற நிலையிலும், வெற்றுக் கோட்பாட்டின் மத்தியிலும் இருக்கும். தேவனைப் பின்பற்றுவதே இது போன்றோர்களின் தீர்மானமாக இருந்தாலும், அவர்கள் எதையும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த ஓட்டத்தில் எதையும் பெறாதவர்கள் அனைவருமே புறம்பாக்கப்படுவார்கள்—அவர்கள் அனைவரும் ஒட்டுண்ணிகள். தேவனுடைய கிரியையின் எந்தப் படியை நீ அனுபவித்தாலும், ஒரு வல்லமையான தரிசனம் உன்னுடன் இருக்க வேண்டும். இல்லையெனில், புதிய கிரியையின் ஒவ்வொரு அடியையும் ஏற்றுக்கொள்வது உனக்குக் கடினமாக இருக்கும், ஏனென்றால் தேவனின் புதிய கிரியை மனிதனின் கற்பனைத் திறனைத் தாண்டி உள்ளது, மேலும் அது அவரின் எண்ணத்தின் எல்லைக்களுக்கு அப்பாற்பட்டது. எனவே, மனிதனை கவனிக்க ஒரு மேய்ப்பன் இல்லாமல், தரிசனங்களைப் பற்றி ஐக்கியத்தில் ஈடுபடுவதற்கு ஒரு மேய்ப்பன் இல்லாமல், இந்தப் புதிய கிரியையை மனிதனால் ஏற்க இயலாது. மனிதனால் தரிசனங்களைப் பெற முடியாவிட்டால், தேவனின் புதிய கிரியையை அவனால் பெற முடியாது, தேவனின் புதிய கிரியைக்கு மனிதனால் கீழ்ப்படிய முடியாவிட்டால், மனிதனால் தேவனின் சித்தத்தைப் புரிந்து கொள்ள இயலாது, எனவே தேவனைப் பற்றிய அவனுடைய அறிவு ஒன்றுமில்லை என்று எண்ணப்படும். மனிதன் தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றுவதற்கு முன், தேவனுடைய வார்த்தையை அவன் அறிந்திருக்க வேண்டும். அதாவது, அவன் தேவனின் சித்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்விதமாக மட்டுமே தேவனின் வார்த்தையைத் துல்லியமான வகையிலும் தேவனின் சித்தத்தின் படியும் நிறைவேற்ற முடியும். இது சத்தியத்தைத் தேடும் எல்லோரும் கொண்டிருக்க வேண்டிய ஒன்றாகும், மேலும் இது தேவனை அறிய முயலும் எல்லோரும் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டிய செயல்முறையாகும். தேவனின் வார்த்தையை அறிந்து கொள்ளும் முறையானது தேவனையும் தேவனின் கிரியையையும் அறிந்து கொள்ளும் முறையாகும். எனவே, தரிசனங்களை அறிந்துகொள்வது மனுவுருவான தேவனுடைய மனிதத்தன்மையைத் தெரிந்து கொள்வதை மட்டுமல்லாமல், தேவனின் வார்த்தையையும் கிரியையையும் அறிந்து கொள்வதையும் குறிக்கிறது. ஜனங்கள் தேவனின் வார்த்தையிலிருந்து தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்கிறார்கள், தேவனின் கிரியையிலிருந்து அவர்கள் தேவனின் மனநிலையையும் தேவன் என்றால் யார் என்பதையும் அறிந்துகொள்கிறார்கள். தேவன் மீதான விசுவாசம் என்பது தேவனை அறிந்துகொள்வதற்கான முதல் படியாகும். தேவன் மீதான இந்தத் தொடக்க விசுவாசத்திலிருந்து அவரைப் பற்றிய மிக ஆழமான விசுவாசத்திற்கு முன்னேறுவதற்கான முறையே, தேவனை அறிந்துகொள்வதற்கான முறையும், தேவனுடைய கிரியையின் அனுபவத்தை உணரும் முறையுமாகும். நீ தேவனை அறிந்து கொள்வதற்காக இல்லாமல், விசுவாசிப்பதற்காக மட்டுமே தேவனை விசுவாசித்தால், உன் விசுவாசத்தில் எந்த யதார்த்தமும் இல்லை, உன் விசுவாசம் தூய்மையானதாக மாற முடியாது—இதில் சந்தேகமேதும் இல்லை. தேவனின் கிரியையை மனிதன் அனுபவிக்கும் செயல்முறையின்போது, அவன் படிப்படியாக தேவனை அறிந்துகொள்கிறான் என்றால், அவனது மனநிலை படிப்படியாக மாறும், மேலும் அவனுடைய விசுவாசம் பெரிதான முறையில் உண்மையாகிவிடும். இவ்வழியில், தேவன் மீதான விசுவாசத்தில் மனிதன் வெற்றியடையும் போது, அவன் தேவனை முற்றிலுமாகப் பெற்றிருப்பான். தேவன் தமது கிரியையைத் தாமே நேரில் செய்ய இரண்டாவது முறையாக மாம்சமாக மாற தேவன் இவ்வளவு தூரம் சென்றதன் காரணம், அதனால் அவரை மனிதன் தெரிந்து கொள்ளவும், அவரைப் பார்க்கவும் வேண்டும் என்பதாகும். தேவனை அறிவது என்பது தேவனுடைய கிரியையின் முடிவில் அடைய வேண்டிய இறுதிப் பலன் ஆகும்; இது மனிதகுலத்திடம் தேவன் வைக்கும் கடைசி கோரிக்கையாகும். அவர் இதைச் செய்வதற்கான காரணம் அவருடைய இறுதி சாட்சியத்திற்காகவே. மனிதன் இறுதியாக முழுவதும் அவரிடம் திரும்புவதற்காகவே அவர் இந்தக் கிரியையைச் செய்கிறார். மனிதனால் தேவனை அறிவதன் மூலம் மட்டுமே தேவனை நேசிக்க முடியும், தேவனை நேசிக்க அவன் தேவனை அறிந்திருக்க வேண்டும். அவன் எப்படி முயன்றாலும், எதைப் பெறுவதற்கு முயன்றாலும், அவனால் தேவனைப் பற்றிய அறிவை அடைய இயல வேண்டும். இவ்வழியில் மட்டுமே மனிதன் தேவனின் இருதயத்தைத் திருப்தி செய்ய முடியும். தேவனை அறிவதன் மூலம் மட்டுமே மனிதனுக்கு தேவன் மீது உண்மையான விசுவாசம் இருக்க முடியும், தேவனை அறிவதன் மூலம் மட்டுமே அவன் தேவனை உண்மையாக வணங்கவும், அவருக்குக் கீழ்ப்படியவும் முடியும். தேவனை அறியாதவர்கள் ஒருபோதும் தேவனுக்கு கீழ்ப்படியவும் அவரை வணங்கவும் மாட்டார்கள். தேவனை அறிவது என்பதில் அவருடைய மனநிலையை அறிவதும், அவருடைய சித்தத்தைப் புரிந்துகொள்வதும், அவர் யாரென்று தெரிந்துகொள்வதும் உள்ளடங்கும். எந்தவொரு அம்சத்தை ஒருவர் அறிய நேர்ந்தாலும், ஒவ்வொன்றுக்கும் மனிதன் ஒரு விலைக்கிரயத்தைச் செலுத்த வேண்டும், மற்றும் கீழ்ப்படிவதற்கான மன உறுதி தேவைப்படுகிறது, இவை இல்லாமல் இறுதிவரை தொடர்ந்து செல்ல யாராலும் முடியாது. தேவனின் கிரியை மனிதனின் கருத்துக்களுடன் மிகவும் ஒத்துப்போகாததாக இருக்கிறது. தேவனின் மனநிலையும் தேவன் என்றால் யாரென்றும் மனிதனுக்குத் தெரிந்து கொள்வது மிகவும் கடினம், தேவன் சொல்லும் செய்யும் எல்லாவற்றையும் மனிதனுக்கு மிகவும் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. மனிதன் தேவனைப் பின்பற்ற விரும்பியும், அவருக்குக் கீழ்ப்படிய விரும்பவில்லை என்றால், மனிதன் எதையும் பெறமாட்டான். உலகை சிருஷ்டித்ததிலிருந்து இன்று வரை, மனிதனுக்குப் புரியாத பல கிரியைகளைத் தேவன் செய்ததை ஏற்றுக்கொள்வதை மனிதன் கடினமாகக் கருதியிருக்கிறான், மேலும் மனிதனின் கருத்துக்களைக் குணமாக்குவது கடினம் என்று தேவன் அதிகம் கூறியுள்ளார். ஆனால் மனிதனுக்கு பல சிரமங்கள் இருப்பதால் அவர் ஒருபோதும் தமது கிரியையை நிறுத்தியதில்லை. மாறாக, அவர் கிரியை செய்வதையும் பேசுவதையும் மேற்கொண்டார், மேலும் ஏராளமான "செயல்வீரர்கள்" வழியிலேயே வீழ்ந்திருந்தாலும், அவர் இன்னும் தமது கிரியையைச் செய்து வருகிறார், மேலும் இடைவெளியில்லாமல் அவரின் புதிய கிரியைக்கு தங்களை அர்பணிக்கும் மக்களின் ஒரு குழுவையடுத்து அடுத்த குழுவைத் தொடர்ந்து தேர்வு செய்கிறார். வீழ்ந்த "நாயகர்களைக் குறித்து" அவருக்குப் பரிதாபமில்லை, அதற்குப் பதிலாக அவருடைய புதிய கிரியைகளையும் வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்பவர்களைப் பொக்கிஷமாக்குகிறார். ஆனால் எது வரையில் அவர் படிப்படியாக இவ்வழியில் செயல்படுகிறார்? ஏன் அவர் சிலரை எப்போதும் புறம்பாக்கி, மற்றவர்களைத் தெரிவு செய்கிறார்? இத்தகைய முறையை ஏன் அவர் எப்போதும் பயன்படுத்துகிறார்? அவரது கிரியையின் நோக்கம் மனிதன் அவரை அறிந்து கொள்ள அனுமதிப்பதும், இதனால் அவரால் ஆதாயப்படுத்தப்படுவதும் ஆகும். அவருடைய கிரியையின் கொள்கை என்னவென்றால், அவர் இன்று செய்யும் கிரியைக்கு கீழ்ப்படியக் கூடியவர்களின் மேல் கிரியை செய்வதே தவிர, அவர் கடந்த காலத்தில் செய்த கிரியைக்குக் கீழ்ப்படிந்து இன்று அவர் செய்யும் கிரியையை எதிர்ப்போரின் மேல் கிரியை செய்யமாட்டார். அவர் அநேகம்பேரை புறம்பாக்கிக் கொண்டிருப்பதற்கான காரணம் இதில்தான் உள்ளது.

தேவனை அறிந்துகொள்ளும் பாடத்தின் பலன்களை ஒன்றிரண்டு நாட்களில் அடைய முடியாது. மனிதன் அனுபவங்களைச் சேர்த்து, துன்பங்களுக்குள்ளாகி, உண்மையான கீழ்ப்படிதலைப் பெறவேண்டும். முதலாவதாக, தேவனின் கிரியையிலிருந்தும் வார்த்தைகளிலிருந்தும் தொடங்குங்கள். தேவனைப் பற்றிய அறிவில் என்னென்ன அடங்கியுள்ளன, இந்த அறிவை எவ்வாறு அடைவது, உன் அனுபவங்களில் தேவனை எவ்வாறு பார்ப்பது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இதுதான் இன்னும் தேவனை அறியாத நிலையில் எல்லோரும் செய்ய வேண்டியதாகும். ஒரே மூச்சில் தேவனின் கிரியையையும் வார்த்தைகளையும் ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாது, மேலும் தேவனைப் பற்றிய அறிவை முழுமையாக ஒரு குறுகிய காலத்திற்குள் யாராலும் அடைய முடியாது. அனுபவத்தின் அவசியமான செயல்முறை ஒன்று உள்ளது, அது இல்லாமல் யாராலும் தேவனை அறியவோ அவரை உண்மையாக பின்பற்றவோ முடியாது. தேவன் எவ்வளவு அதிகமாகக் கிரியை செய்கிறாரோ, மனிதன் அவரை அவ்வளவு அதிகமாக அறிந்துகொள்கிறான். தேவனின் கிரியை மனிதனின் கருத்துக்களுடன் எவ்வளவு அதிகமாக முரண்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக தேவனைப் பற்றிய மனிதனின் அறிவு புதுப்பிக்கப்பட்டு ஆழமாகிறது. தேவனின் கிரியை என்றென்றும் நிலையாகவும் மாறாமலும் இருந்திருந்தால், அவரைக் குறித்த மனிதனின் அறிவு அதிகமாக இருந்திருக்காது. சிருஷ்டிப்பின் காலத்திற்கும் தற்போதைய காலத்துக்கும் இடையில், நியாயப்பிரமாண காலத்தில் தேவன் என்ன செய்தார், கிருபையின் காலத்தில் அவர் என்ன செய்தார், ராஜ்யத்தின் காலத்தில் அவர் என்ன செய்கிறார்—நீங்கள் இந்தத் தரிசனங்களைப் பற்றி தெள்ளத் தெளிவாக இருக்க வேண்டும். தேவனுடய கிரியையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறிந்தவர்களால் மட்டுமே தேவனுக்கு சாட்சிப் பகர முடியும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க