தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 417

நவம்பர் 16, 2020

உண்மையான ஜெபத்திற்குள் ஒருவனால் எப்படி நுழைய முடியும்?

ஜெபிக்கும்பொழுது, தேவனுக்கு முன்பாக அமைதியான ஒரு இருதயம் உங்களுக்குக் காணப்பட வேண்டும். மேலும், உன் இருதயத்தில் நேர்மை காணப்பட வேண்டும். நீ உண்மையாகவே தேவனோடு ஐக்கியங்கொண்டு, ஜெபம் செய்யும்பொழுது, நீ இனிய சொற்களாலாகிய வாக்கியங்கள்மூலம் தேவனை ஏமாற்ற வேண்டும் என்று நினைக்கக் கூடாது. ஜெபமானது, தேவன் இப்பொழுது நிறைவேற்ற விரும்புகிற ஒன்றை மையப்படுத்தியே காணப்படவேண்டும். தேவன் உனக்கு அதிக ஞான ஒளியையும், பிரகாசத்தையும் கொடுக்கும்படி, அவரிடம் கேள். ஜெபிக்கும்பொழுது உன் உண்மை நிலையையும், உனது பிரச்சனைகளையும், தேவனுக்கு முன்பாக நீ எடுத்த தீர்மானங்களையும் கூட அவருடைய சமூகத்திற்குள் கொண்டுவா. ஜெபம் என்பது வெறுமனே செயல்முறையைக் கைக்கொள்ளுதல் அல்ல; மாறாக, நேர்மையுள்ள இருதயத்துடன் தேவனைத் தேடுகிற ஒரு செயலாகும். உன் இருதயம் பெரும்பாலும் தேவனுக்கு முன்பாக அமைதியோடு காணப்படும்படியாகவும், அவர் உன் இருதயத்தைக் காத்துக் கொள்ளும்படியாகவும் அவரிடம் வேண்டிக்கொள்; இதனால், அவர் உன்னை வைத்துள்ள சூழலில், நீ உன்னையே அறிந்துகொண்டு, உன்னை வெறுத்து, உன் சுயத்தைக் கைவிட்டுவிட்டு, பின் தேவனுடன் சாதாரண ஒரு உறவைக் கொண்டிருக்கும் படியாக, உன்னை விட்டுக் கொடுத்து, உண்மையிலேயே தேவனை நேசிக்கும் ஒருவராக மாற முடியும்.

ஜெபத்தின் முக்கியத்துவம் என்ன?

ஜெபமானது மனிதன் தேவனுடன் ஒத்துழைக்கும் வழிகளில் ஒன்றாகும். தேவனை மனிதன் கூப்பிடுவதற்கு ஒரு வழியாகும் மற்றும் தேவனுடைய ஆவியினாலே மனிதன் அசைக்கப்படும் ஒரு செயல்முறையாகும். இப்படியாகக் கூறலாம்; ஜெபம் இல்லாதவர்கள், ஆவியில் வெறுமையுடன் காணப்படுகிற மரித்த ஜனங்களாவார்கள். அவர்கள் தேவனால் அசைக்கப்படுவதற்கு மனவலிமை அற்றவர்கள் என்பதை அது நிரூபிக்கின்றது. ஜெபம் இல்லாமல், ஒரு சாதாரண ஆவிக்குரிய வாழ்க்கையை நடத்துவது சாத்தியம் இல்லை; பரிசுத்த ஆவியானவரின் கிரியை நம்மில் மிகவும் குறைவாகக் காணப்படும். ஜெபம் இல்லாமல் இருப்பது ஒருவன் தேவனுடனான உறவை முறித்துக்கொள்வதாகும். அப்படிப்பட்ட ஒருவன் தேவனிடமிருந்து பாராட்டைப் பெறுவது என்பது சாத்தியமில்லை. தேவனில் விசுவாசம் உள்ளவனாக, அதிகமாக ஜெபிக்கிற ஒருவன்; அதாவது, அதிகமாக ஜெபிக்கிற அவன் தேவனால் அசைக்கப்பட்டிருக்கிறான். அதிகம் ஜெபிக்கிற அவன், தீர்மானங்களால் நிறைந்து காணப்படும்பொழுது, ஓரளவே ஜெபிக்கிற ஒருவன் புதிய ஞான ஒளியைப் பெற்றுக் கொள்வதற்கு அது உதவுகிறது. அதன் விளைவாக, இப்படிப்பட்ட மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் மிக விரைவாகப் பரிபூரணமாக்கப்படுவார்கள்.

ஜெபம் என்ன பலனை அடைய வேண்டும்?

ஜனங்கள் ஜெபத்தைப் பயிற்சி செய்யலாம் மற்றும் ஜெபத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், ஜெபம் வல்லமையுள்ளதாய் இருப்பது எளிதான விஷயம் அல்ல. ஜெபம் என்பது ஒரு இயக்கத்தின் வழியாகச் செல்வதோ, வழிமுறையைப் பின்பற்றுவதோ அல்லது தேவனுடைய வார்த்தையை மனப்பாடம் செய்து கூறுவதோ அல்ல. வேறுவிதமாகக் கூறினால், ஜெபம் என்பது குறிப்பிட்ட வார்த்தைகளைத் திரும்பத் திரும்பக் கூறுவதோ மற்றவர்களைப் பின்பற்றுவதோ அல்ல. ஜெபத்தில் ஒருவன் தன் இருதயத்தைத் தேவனுக்கு ஒப்படைக்கக்கூடிய நிலையை அடைந்து, தேவனால் அவன் அசைக்கப்படும்படி ஒருவனது இருதயம் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஜெபம் வல்லமையுள்ளதாக இருக்க வேண்டுமானால், அது ஆண்டவருடைய வார்த்தைகளை வாசிப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தைகளிலிருந்து நாம் ஜெபிப்பதன் மூலம் மட்டுமே அதிக அறிவொளியையும், வெளிச்சத்தையும் பெற முடியும். ஒரு உண்மையான ஜெபத்தின் வெளிப்பாடு என்னவென்றால், தேவன் கேட்கிற எல்லாவற்றிற்காகவும் ஏங்குகிற ஒரு இருதயம் பெற்றிருத்தல், மேலும் அவர் என்ன கோரிக்கை வைத்திருக்கிறாரோ, அதை நிறைவேற்றி முடிக்க விரும்புதல்; ஆண்டவர் வெறுப்பதை வெறுத்தல், இவற்றின் அடிப்படையில் இதைப்பற்றிக் கொஞ்சம் புரிந்து கொள்ளுதலைப் பெற்று, தேவன் தெளிவுபடுத்திய உண்மையைக் குறித்த சிறிது அறிவையும், தெளிவையும் பெற்றிருத்தலே ஜெபத்தின் வெளிப்பாடு ஆகும். மன உறுதி, விசுவாசம், அறிவு மற்றும் ஜெபத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்ய ஒரு வழி ஆகியவை இருக்கும்பொழுது மட்டுமே, அது உண்மையான ஜெபம் என்று அழைக்கப்பட முடியும். மேலும், இவ்வகையான ஜெபம் மட்டுமே வல்லமையுள்ளதாகக் காணப்படும். இருப்பினும் ஜெபமானது தேவனுடைய வார்த்தைகளினாலான சந்தோஷத்தின் மீது கட்டப்பட்டதாக இருக்க வேண்டும்; தேவனோடு அவருடைய வார்த்தைகளின் மூலமாகத் தொடர்பு கொள்வதன் அடிப்படையில் அது ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும், இதயம் தேவனைத் தேடக் கூடியதாகவும் அவருக்கு முன்பாக அமைதியுடனும் காணப்பட முடியும். இந்த வகையான ஜெபம் தேவனுடனான உண்மையான ஐக்கிய நிலைக்குள் ஏற்கனவே நுழைந்திருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெபத்தைப் பயிற்சி செய்வது குறித்து” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க