தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 409

செப்டம்பர் 7, 2021

தேவனை விசுவாசிக்கையில், தேவனுடன் ஒரு இயல்பான உறவைக் கொண்டிருப்பதிலுள்ள பிரச்சினையையாவது நீங்கள் தீர்க்க வேண்டும். நீங்கள் தேவனுடன் ஓர் இயல்பான உறவைக் கொண்டிருக்கவில்லை என்றால், தேவன் மீதான உங்கள் விசுவாசம் அர்த்தம் இழக்கிறது. தேவனோடு ஓர் இயல்பான உறவை நிலைநிறுத்துவது என்பது தேவனுடைய சமுகத்தில் அமைதியாக இருக்கும் இருதயத்தால் முற்றிலும் அடையக்கூடியதாக இருக்கிறது. தேவனோடு ஓர் இயல்பான உறவைக் கொண்டிருப்பது என்பது சந்தேகப்படாமல் இருக்கவும், அவருடைய எந்தக் கிரியையையும் மறுக்காமல் இருக்கக் கூடியது மற்றும் அவருடைய கிரியைக்கு ஒப்புக்கொடுக்கக் கூடியது ஆகும். இதன் அர்த்தம், தேவனுடைய சமுகத்தில் சரியான நோக்கங்களைக் கொண்டிருப்பது, உனக்கு நீயே திட்டங்கள் போடாமல் இருப்பது, மற்றும் எல்லாவற்றிலும் தேவனுடைய குடும்பத்தின் நலன்களைக் கருத்தில் கொள்வது என்பதாகும்; தேவனின் மீளாய்வை ஏற்றுக்கொள்வதும் தேவனின் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிவதும் இதன் அர்த்தமாகும். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தேவனுடைய சமுகத்தில் உங்கள் இதயத்தை அமைதிப்படுத்த உங்களால் முடிய வேண்டும். தேவனின் சித்தத்தை நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும், உங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் உங்கள் திறனுக்கு ஏற்றவாறு நீங்கள் நிறைவேற்ற வேண்டும். தேவனின் சித்தம் உனக்கு வெளிப்படுத்தப்பட்டவுடன், அதைச் செயல்படுத்து, அது மிகவும் தாமதமானதாக இருக்காது. தேவனுடனான உனது உறவு இயல்பாகிவிட்டால், நீ ஜனங்களுடன் இயல்பான உறவுகளைக் கொண்டிருப்பாய். எல்லாம் தேவனுடைய வார்த்தைகளின் அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது. தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணு, பின்னர் தேவனின் தேவைகளைக் நடைமுறைப்படுத்து, உனது பார்வைகளைச் சரிசெய், தேவனை எதிர்ப்பதற்கு அல்லது சபையைத் தொந்தரவு செய்வதற்கு எதையும் செய்வதைத் தவிர்த்திடு. உனது சகோதர சகோதரிகளின் வாழ்க்கைக்குப் பயனளிக்காத எதையும் செய்யாதே, பிறருக்கு உதவாத எதையும் சொல்லாதே, வெட்கக்கேடான எதையும் செய்யாதே. நீ செய்யும் எல்லாவற்றிலும் நீதியுடனும் நன்மதிப்புடனும் இருந்திடு, உனது ஒவ்வொரு செயலும் தேவனுக்கு முன்பாக கனமுள்ளதாய் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள். சில நேரங்களில் மாம்சம் பலவீனமாக இருந்தாலும், தேவனுடைய குடும்பத்தின் நலன்களுக்கு உன்னால் முதலிடம் கொடுக்க இயல வேண்டும், மேலும் தனிப்பட்ட லாபத்திற்காகப் பேராசை இல்லாமல், உன்னால் நீதியுடன் செயல்பட இயல வேண்டும். உன்னால் இந்த வகையில் நடைமுறைப்படுத்த முடிந்தால், பிறகு தேவனுடனான உனது உறவு இயல்பானதாக இருக்கும்.

நீ செய்யும் எல்லாவற்றிலும், உனது நோக்கங்கள் சரியானதாக இருக்கிறதா என்பதை நீ ஆராய வேண்டும். தேவனின் தேவைகளுக்கு ஏற்ப உன்னால் செயல்பட முடிந்தால், பிறகு தேவனுடனான உனது உறவு இயல்பானது. இது குறைந்தபட்ச தரமாகும். உனது நோக்கங்களைப் பார், தவறான நோக்கங்கள் எழுந்திருப்பதை நீ கண்டால், அவற்றிற்குத் திரும்பி உனது முதுகைக் காட்ட இயலவும், தேவனுடைய வார்த்தைகளின்படி செயல்பட முடியவும் வேண்டும்; இவ்வாறு நீ தேவனுக்கு முன்பாக சரியாக இருக்கும் ஒருவராக மாறுவாய், இது தேவனுடனான உனது உறவுகள் இயல்பானது என்பதையும், மேலும் நீ செய்யும் அனைத்தும் தேவனுக்காகவே, உனக்காக அல்ல என்பதையும் நிரூபிக்கிறது. நீ செய்யும் அனைத்திலும் மற்றும் நீ சொல்லும் அனைத்திலும், உனது இருதயத்தைச் சரியாக அமைத்து, உனது செயல்களில் நீதியுள்ளவனாக இருக்கக் கூடியவனாக வேண்டும், மேலும் உனது உணர்ச்சிகளால் வழிநடத்தப்படாதே, உனது சொந்த விருப்பப்படி செயல்படாதே. தேவனுடைய விசுவாசிகள் தாங்கள் கைக்கொண்டு நடந்துகொள்ள வேண்டிய கொள்கைகள் இவை. சிறிய விஷயங்கள் ஒரு நபரின் நோக்கங்களையும் நன்மதிப்பையும் வெளிப்படுத்தக்கூடும், ஆகவே, யாரோ ஒருவர் தேவனால் பரிபூரணபடுத்தப்படும் பாதையில் நுழைவதற்கு, அவர்கள் முதலில் தங்கள் நோக்கங்களையும் தேவனுடனான அவர்களின் உறவையும் சரிசெய்ய வேண்டும். தேவனுடனான உனது உறவு இயல்பானதாக இருக்கும்போதுதான், நீ அவரால் பரிபூரணப்படுத்தப்பட முடியும்; அப்போதுதான் தேவனின் கையாளுதல், களைதல், ஒழுக்கம் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவை உன்னில் அவை கொண்டிருக்கும் நோக்கத்தின் விளைவை அடைய முடியும். அதாவது, மனுஷர்களால் தேவனை தங்கள் இருதயத்தில் வைத்திருக்க முடிந்தால் மற்றும் தனிப்பட்ட லாபத்தைத் தொடரவோ அல்லது தங்கள் சொந்த வாய்ப்புகளைப் (ஒரு மாம்ச அர்த்தத்தில்) பற்றி சிந்திக்கவோ முடியாவிட்டால், ஆனால் மாறாக ஜீவனில் பிரவேசிக்கும் சுமையைத் தாங்கி, சத்தியத்தைத் தொடர தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து, மற்றும் தேவனின் கிரியைக்கு அர்ப்பணித்திடு-உன்னால் இதனை செய்ய முடிந்தால், நீ தொடரும் குறிக்கோள்கள் சரியாக இருக்கும், மற்றும் தேவனுடனான உனது உறவு இயல்பானதாக இருக்கும். தேவனுடனான உறவை சரியானதாக்குவது ஒருவரின் ஆவிக்குரிய பயணத்தில் நுழைவதற்கான முதல் படி என்று அழைக்கப்படலாம். மனுஷனின் தலைவிதி தேவனின் கரங்களில் இருந்தாலும், தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், அது மனுஷனால் மாற்ற முடியாது என்றாலும், நீ தேவனால் பரிபூரணமாக்கப்படக்கூடுமா அல்லது அவரால் அடைய முடியுமா என்பது தேவனுடனான உனது உறவு இயல்பானதா என்பதைப் பொறுத்தது ஆகும். உன்னில் பலவீனமான அல்லது கீழ்ப்படியாத சில பகுதிகள் இருக்கலாம்-ஆனால் உனது பார்வைகளும் உனது நோக்கங்களும் சரியானதாக இருக்கும்வரை மற்றும் தேவனுடனான உனது உறவு சரியானதாக மற்றும் இயல்பானதாக இருக்கும்வரை, பின்னர் நீ தேவனால் பரிபூரணமாக்கப்பட தகுதி பெறுகிறாய். நீ தேவனுடன் சரியான உறவைக் கொண்டிருக்கவில்லை என்றால், மற்றும் மாம்சத்திற்காகவோ அல்லது உனது குடும்பத்தினருக்காகவோ செயல்பட்டால், நீ எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அது ஒன்றுக்கும் பிரயோஜனப்படாது. தேவனுடனான உனது உறவு இயல்பானதாக இருந்தால், மற்றவை அனைத்தும் சரியாக நடைபெறும். தேவன் வேறொன்றையும் பார்ப்பதில்லை, ஆனால் தேவன் மீதான உனது விசுவாசத்தில் உனது பார்வைகள் சரியானதா என்பதை மட்டுமே பார்க்கிறார்: நீ யாரை விசுவாசிக்கிறாய், யார் பொருட்டு நீ விசுவாசிக்கிறாய், மற்றும் ஏன் விசுவாசிக்கிறாய். உன்னால் இந்த விஷயங்களைத் தெளிவாகக் காண முடிந்தால் மற்றும் உனது பார்வைகளை நன்கு வெளிப்படுத்தி கடைபிடித்தால், அப்போது நீ உனது வாழ்வில் முன்னேற்றம் அடைவாய், மேலும் சரியான பாதையில் நுழைவதற்கும் உனக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். தேவனுடனான உனது உறவு இயல்பானதல்ல, தேவன் மீதான உனது விசுவாசத்தின் பார்வைகள் மாறுபட்டவை என்றால், மற்றவை அனைத்தும் வீணாகிவிடும், நீ எவ்வளவு திடமாக விசுவாசித்தாலும், நீ எதையும் பெற மாட்டாய். தேவனுடனான உனது உறவு இயல்பானதாக மாறிய பின்னரே, நீ மாம்சத்தை கைவிட்டால், ஜெபித்தால், துன்பப்ப்பட்டால், சகித்துக்கொண்டால், ஒப்புவித்தால், உனது சகோதர சகோதரிகளுக்கு உதவினால், தேவனுக்காக உன்னை அதிகமாக பிரயோகித்தால், மற்றும் பலவற்றை செய்தால் நீ அவரால் புகழப்படுவாய். நீ செய்யும் செயலுக்கு மதிப்பு மற்றும் முக்கியத்துவம் உள்ளதா என்பது உனது நோக்கங்கள் சரியானதா, உனது பார்வைகள் சரியானதா என்பதைப் பொறுத்தது ஆகும். இப்போதெல்லாம், ஒரு கடிகாரத்தைப் பார்ப்பதற்குத் தலையை சாய்ப்பது போல் பலர் தேவனை விசுவாசிக்கிறார்கள்—அவர்களின் கண்ணோட்டங்கள் கோணலாக உள்ளன, மேலும் அவர்கள் ஒரு திருப்புமுனையால் சரிசெய்யப்பட வேண்டும். இந்தப் பிரச்சனைத் தீர்க்கப்பட்டால், அனைத்தும் சரியாகிவிடும்; இல்லையென்றால், அனைத்தும் ஒன்றும் இல்லாததாகிவிடும். சிலர் எனது சமுகத்தில் நன்றாக நடந்துகொள்கிறார்கள், ஆனால் எனது முதுகுக்குப் பின்னால், அவர்கள் செய்வதெல்லாம் என்னை எதிர்ப்பதுதான். இது வக்கிரம் மற்றும் வஞ்சகத்தின் வெளிப்பாடு, மற்றும் இந்த வகை மனுஷன் சாத்தானின் வேலைக்காரன்; அவன் தேவனை சோதிக்க வந்திருக்கும் சாத்தானின் பொதுவான உருவகம். எனது கிரியைக்கும் எனது வார்த்தைகளுக்கும் உன்னால் ஒப்புக்கொடுக்க முடிந்தால் மட்டுமே நீ ஓர் சரியான மனுஷன். உன்னால் தேவனுடைய வார்த்தைகளைப் புசிக்கவும் பானம்பண்ணவும் முடியும் வரை; நீ செய்யும் அனைத்தும் தேவனுக்கு முன்பாக இலட்சணமுள்ளவையாக இருக்கும் வரை மற்றும் நீ செய்யும் அனைத்திலும் நீ நியாயமுள்ளவனாகவும், நேர்மையுள்ளவனாகவும் இருக்கும்வரை; நீ வெட்கக்கேடான காரியங்களை செய்யாத வரை, அல்லது மற்றவர்களின் வாழ்க்கைக்குத் தீங்கு விளைவிக்கும் விஷயங்களைச் செய்யாத வரை; நீ வெளிச்சத்தில் வாழும் வரை மற்றும் உன்னை சாத்தான் சுரண்ட அனுமதிக்காத வரை, தேவனுடனான உனது உறவு சரியானதாக இருக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடனான உனது உறவு எப்படி உள்ளது?” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க