தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 404

செப்டம்பர் 12, 2023

தேவனுடைய வார்த்தைகள் வெளிவருகையில், நீ உடனடியாக அவற்றைப் பெற்று, அவற்றைப் புசிக்கவும் குடிக்கவும் வேண்டும். நீ எவ்வளவு புரிந்துகொண்டாலும் பரவாயில்லை, நீ வேகமாகப் பிடித்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், அவருடைய வார்த்தைகளை புசிப்பதும் குடிப்பதும், தெரிந்துகொள்வதும் மற்றும் கடைபிடிப்பதுமேயாகும். இது உன்னால் செய்யக்கூடிய ஒன்றுதான். உனது வளர்ச்சி எவ்வளவு பெரியதாக மாறும் என்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்; அவருடைய வார்த்தைகளைப் புசிப்பதிலும் குடிப்பதிலும் கவனம் செலுத்து. இதில் தான் மனுஷன் ஒத்துழைக்க வேண்டும். உனது ஆவிக்குரிய வாழ்க்கை முக்கியமாக தேவனின் வார்த்தைகளைப் புசிப்பது மற்றும் குடிப்பது மற்றும் அவற்றைக் கடைபிடிப்பது என்ற யதார்த்தத்திற்குள் நுழைய முயற்சிப்பதாகும். வேறு எதிலும் கவனம் செலுத்துவது உனது வேலையல்ல. திருச்சபையின் தலைவர்களால் அவர்களின் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வழிகாட்ட இயல வேண்டும், இதனால் தேவனின் வார்த்தைகளைப் புசிக்கவும் குடிக்கவும் அவர்களுக்குத் தெரியும். ஒவ்வொரு திருச்சபையின் தலைவரின் பொறுப்பும் இதுதான். அவர்கள் இளைஞராகவோ அல்லது முதியவராகவோ இருந்தாலும், அனைவரும் தேவனின் வார்த்தைகளைப் புசிப்பதையும் குடிப்பதையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருத வேண்டும், மேலும் அவருடைய வார்த்தைகளை அவர்கள் இதயங்களில் வைத்திருக்க வேண்டும். இந்த யதார்த்தத்திற்குள் நுழைவது என்பது ராஜ்யத்தின் யுகத்திற்குள் நுழைவதைக் குறிக்கிறது. இன்று, பெரும்பாலான ஜனங்கள் தேவனின் வார்த்தைகளைப் புசிக்காமலும், குடிக்காமலும் வாழ முடியாது என்று உணர்கிறார்கள், நேரத்தைப் பொருட்படுத்தாமல் அவருடைய வார்த்தைகள் புதியவை என்று உணர்கிறார்கள். இதன் பொருள் அவர்கள் சரியானப் பாதையில் செல்லத் தொடங்கியுள்ளனர் என்பதேயாகும். தேவன் தனது கிரியையைச் செய்வதற்கும் மனுஷனுக்கு வழங்குவதற்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். எல்லோரும் தேவனுடைய வார்த்தைகளுக்காக ஏங்கும்போது, தாகமாக இருக்கும்போது, மனிதகுலம் அவருடைய வார்த்தைகளின் உலகத்திற்குள் நுழைகிறது.

தேவன் மிகவும் அதிகமாகப் பேசியுள்ளார். நீ எவ்வளவு தெரிந்துக் கொண்டாய்? நீ எவ்வளவு நுழைந்திருக்கிறாய்? ஒரு திருச்சபைத் தலைவர் தனது சகோதர சகோதரிகளை தேவனின் வார்த்தைகளின் நிஜத்திற்குள் வழிநடத்தவில்லை என்றால், அவர்கள் தங்கள் கடமையில் இருந்து விலகியிருப்பார்கள், மேலும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியிருப்பார்கள்! உனது புரிதல் ஆழமானதாக இருந்தாலும் அல்லது மேலோட்டமாக இருந்தாலும், உனது புரிதலின் அளவைப் பொருட்படுத்தாமல், அவருடைய வார்த்தைகளை எப்படிப் புசிக்கலாம், குடிக்கலாம் என்பதை நீ அறிந்திருக்க வேண்டும், அவருடைய வார்த்தைகளில் நீ அதிக கவனம் செலுத்த வேண்டும், மேலும் அவற்றைப் புசிப்பது மற்றும் குடிப்பதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். தேவன் இவ்வளவு பேசியிருப்பதால், நீ அவருடைய வார்த்தைகளைப் புசிக்காமலும் குடிக்காமலும், அல்லது தேட முயற்சிக்காமலும், அல்லது அவருடைய வார்த்தைகளைக் கடைபிடிக்காமலும் இருந்தால், அதை தேவன் மீதான விசுவாசம் என்று சொல்ல முடியாது. நீ தேவனை நம்புவதால், நீ அவருடைய வார்த்தைகளைப் புசிக்கவும் குடிக்கவும், அவருடைய வார்த்தைகளை அனுபவிக்கவும் வேண்டும், அவருடைய வார்த்தைகளின்படி வாழவும் வேண்டும். இதை மட்டுமே தேவ நம்பிக்கை என்று அழைக்க முடியும்! நீ உனது வாயால் தேவனை நம்புகிறாய் என்று கூறினால், அவருடைய வார்த்தைகளில் எதையும் கடைபிடிக்கவோ அல்லது எந்த யதார்த்தத்தையும் உருவாக்கவோ முடியவில்லை என்றால், அது தேவனை நம்புவது என்று அழைக்கப்படுவதில்லை. மாறாக, "பசியினைப் போக்க போஜனத்தைத் தேடுவதைப் போன்றது." சிறிதளவு உண்மைநிலையைக்கூட சுதந்தரிக்காமல் அற்பமான சாட்சியங்கள், பயனற்ற விஷயங்கள், மற்றும் மேலோட்டமான விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுவது: இவை தேவன் மேலுள்ள நம்பிக்கையை உள்ளடக்கவில்லை. மேலும் தேவன் மேல் நம்பிக்கை வைப்பதற்கானச் சரியான வழியைப் புரிந்துக்கொள்ளவில்லை. ஏன் நீங்கள் தேவனுடைய வார்த்தைகளை முடிந்தவரைப் புசிக்கவும் குடிக்கவும் வேண்டும்? நீங்கள் அவருடைய வார்த்தைகளைப் புசிக்காமலும், குடிக்காமலும் வெறும் பரலோகத்தை மட்டும் தேடுவது, தேவன் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையாகுமா? தேவனை நம்புகிறவர் எடுக்கவேண்டிய முதற்படி என்ன தெரியுமா? எந்தப் பாதையின் மூலம் தேவன் மனுஷனைப் பூரணப்படுத்துகிறார் தெரியுமா? தேவனுடைய வார்த்தையைப் புசிக்காமல், குடிக்காமல் நீங்கள் பூரணமாக இருக்க முடியுமா? தேவனுடைய வார்த்தைகள் உங்களின் யதார்த்தமாக சேவை செய்யாமல் அவருடைய ராஜ்யத்தின் நபராகக் கருத முடியுமா? தேவனை நம்புவதன் அர்த்தம் என்ன? தேவனை விசுவாசிப்பவர்கள் குறைந்தபட்சம் வெளிப்புறத்திலாவது நன்றாக நடந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொண்டவர்களாய் இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் அவருடைய வார்த்தைகளிலிருந்து நீங்கள் ஒருபோதும் விலகிச் செல்ல முடியாது. தேவனை அறிவது, அவரது உள்நோக்கங்களை நிறைவேற்றுவது என அனைத்தும் அவர் வார்த்தைகளின் மூலம் அடையப்படுகின்றன. இனிவரும் நாட்களில் ஒவ்வொரு தேசமும், இனமும், மதமும், துறையும் தேவனுடைய வார்த்தையினால் சுதந்தரிக்கப்படும். தேவன் நேரிடையாகப் பேசுவார், எல்லா ஜனங்களும் தேவனின் வார்த்தைகளைத் தங்கள் கரங்களில் கொண்டிருப்பர். இதன் மூலம் மனுக்குலம் பரிபூரணமாகும். உள்ளேயும், வெளியேயும் தேவனுடைய வார்த்தைகள் முழுவதுமாய் பரவும்: மனுக்குலத்தார் தேவனுடைய வார்த்தைகளைத் தங்கள் வாயால் பேசுவர், தேவனின் வார்த்தைகளின்படி நடப்பர், அவர்கள் உள்ளே தேவனின் வார்த்தைகளை வைத்திருப்பார்கள், மீதமிருப்போர் உள்ளேயும் வெளியேயும் தேவ வார்த்தைகளுக்குள் மூழ்கியிருப்பார்கள். இவ்விதமாய் மனுக்குலத்தார் பரிபூரணப்படுத்தப்படுவர். தேவனின் உள்நோக்கங்களை நிறைவேற்ற விரும்புவோர் மற்றும் அவருக்கு சாட்சியாக இருக்கக்கூடியவர்கள், தேவனின் வார்த்தைகளை அவர்களின் யதார்த்தமாகக் கொண்டவர்கள் ஆவர்.

வார்த்தையின் யுகத்திற்குள்—தேவனின் ஆயிரவருட அரசாட்சிக்குள்—நுழைதல் என்னும் கிரியை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுமுதல் தேவனின் வார்த்தைகள் பற்றிய ஐக்கியத்தில் ஈடுபட பழகிக் கொள்ளுங்கள். தேவனின் வார்த்தைகளைப் புசிப்பதாலும், குடிப்பதாலும் அனுபவிப்பதாலும் மட்டுமே உங்களால் தேவனின் வார்த்தைகளின்படி வாழ முடியும். மற்றவர்களை நம்பவைக்க நீ சில நடைமுறை அனுபவங்களை உருவாக்க வேண்டும். தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்தின்படி உன்னால் வாழ முடியாவிட்டால், ஒருவரும் மாற்றப்பட மாட்டார்கள்! தேவனால் பயன்படுத்தப்படும் அனைவரும் தேவனின் வார்த்தைப்படி வாழ முடியும். உன்னால் இந்த யதார்த்தத்தை உருவாக்க முடியவில்லை என்றால் மற்றும் தேவனுக்கு சாட்சியாக இருக்க முடியவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் உன்னில் செயல்படவில்லை என்பதையும், நீ தேவனில் பூரணப்படவில்லை என்பதையும் இது காட்டுகிறது. இதுவே தேவனின் வார்த்தைகளின் முக்கியத்துவம். தேவனின் வார்த்தைகளுக்காகத் தாகம் கொள்ளும் இதயத்தை நீ கொண்டிருக்கிறாயா? தேவனின் வார்த்தைகளுக்காகத் தாகம் கொண்டிருப்பவர்கள், சத்தியத்திற்காகத் தாகம் கொள்கிறார்கள், மற்றும் இது போன்ற ஜனங்கள் மட்டுமே தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். எதிர்காலத்தில், தேவன் அனைத்து மதத்தினருக்கும் அனைத்து இனத்தவருக்கும் மேலும் பல வார்த்தைகளைக் கூறுவார். அவர் முதலாவது உங்கள் மத்தியில் தனது குரலைப் பேசி, உங்களைப் பரிபூரணப்படுத்துவார், பின்பு புறஜாதியினரை ஜெயங்கொள்ளும்படியாக அவர்கள் மத்தியில் தனது குரலைப் பேசுவார். அவருடைய வார்த்தைகளின் மூலம், அனைவரும் உண்மையோடும் முற்றிலுமாகவும் நம்பவைக்கப்படுவார்கள். தேவனின் வார்த்தைகள் மற்றும் அவரின் வெளிப்பாடுகளின் மூலம் மனுஷனின் சீர்கெட்ட மனநிலை குறைகிறது. அவன் மனிதனின் தோற்றத்தைப் பெறுகிறான், மற்றும் அவனுடைய கலகத்தனமான மனநிலை குறைகிறது. இந்த வார்த்தைகள் மனுஷன் மீது அதிகாரத்தைச் செயல்படுத்தி, தேவனின் வெளிச்சத்திற்குள் மனுஷனை ஆட்கொள்ளும். தேவன் தற்போதைய யுகத்தில் மேற்கொள்ளும் கிரியையையும், அவரின் கிரியையின் திருப்புமுனைகளையும் அவருடைய வார்த்தைகளுக்குள்ளே கண்டடையலாம். நீ அவரின் வார்த்தைகளை வாசிக்கவில்லை என்றால், உனக்கு எதுவும் புரியாது. அவருடைய வார்த்தைகளை நீயே புசிப்பதன் மூலம் மற்றும் குடிப்பதன் மூலம், மற்றும் உனது சகோதர சகோதரிகளுடனும் ஐக்கியமாய் இருப்பதன் மூலமும் உனது சொந்த அனுபவங்களின் மூலமும், நீ தேவனின் வார்த்தைகள் பற்றிய முழு அறிவைப் பெறுவாய். அப்போதுதான் உன்னால் அவற்றின் யதார்த்தத்தின்படி உண்மையாக வாழ முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க