தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 403

செப்டம்பர் 12, 2023

முன்னோக்கிச் செல்லும்போது, தேவனின் வார்த்தைகளைப் பேசுவது என்பதே நீ பேசுவதன் கொள்கையாக இருக்க வேண்டும். சாதாரணமாக, நீங்கள் ஒன்றாக வரும்போது, தேவனின் வார்த்தைகளைப் பற்றிய ஐக்கியத்தில் ஈடுபட வேண்டும், தேவனின் வார்த்தைகளை உங்கள் உரையாடல்களின் உள்ளடக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும், இந்த வார்த்தைகளைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், அவற்றை எவ்வாறு கடைபிடிக்கிறீர்கள், பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பற்றி பேச வேண்டும். தேவனின் வார்த்தைகளுக்கு நீ இசைந்து இருக்கும்வரை பரிசுத்த ஆவியானவர் உன்னைப் பிரகாசிக்கச் செய்வார். தேவனின் வார்த்தைகளின் உலகத்தை அடைய மனுஷனின் ஒத்துழைப்பு தேவை. நீ இதில் நுழையவில்லை என்றால், தேவனுக்கு கிரியை செய்ய வழி இருக்காது; நீ உனது வாயை மூடிக்கொண்டு, அவருடைய வார்த்தைகளைப் பற்றி பேசாவிட்டால், அவரிடம் உன்னைப் பிரகாசிக்கச் செய்ய வழி இருக்காது. நீ வேறுவிதமாக ஆக்கிரமிக்கப்படாத போதெல்லாம், தேவனின் வார்த்தைகளைப் பற்றி பேசு, வெறும் வெட்டி அரட்டையில் ஈடுபடாதே! உனது வாழ்வு தேவனின் வார்த்தைகளால் நிரம்பட்டும்—அப்போதுதான் நீ பக்தியுள்ள விசுவாசியாக இருப்பாய். உனது ஐக்கியம் மேலோட்டமாக இருந்தாலும் பரவாயில்லை. ஆழமற்ற தன்மை இல்லாமல் ஆழம் இருக்க முடியாது. ஒரு செயல்முறை இருக்க வேண்டும். உனது பயிற்சியின் மூலம், பரிசுத்த ஆவியானவரின் பிரகாசத்தையும், மேலும் தேவனுடைய வார்த்தைகளை எவ்வாறு திறம்பட புசிப்பது, குடிப்பது என்பதையும் நீ புரிந்துகொள்வாய். ஆய்வின் இடைவெளிக்குப் பிறகு, நீ தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் நுழைவாய். நீ ஒத்துழைக்கத் தீர்மானித்தால் மட்டுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையை உன்னால் பெற முடியும்.

தேவனின் வார்த்தைகளைப் புசித்தல் மற்றும் குடித்தல் போன்ற கொள்கைகளில் ஒன்று அறிவுடன் தொடர்புடையது, மற்றொன்று பிரவேசத்துடன் தொடர்புடையது. எந்த வார்த்தைகளை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்? தரிசனங்களுடன் தொடர்புடைய சொற்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் (அதாவது, தேவனின் கிரியை இப்போது எந்த யுகத்தில் நுழைந்துள்ளது, தேவன் இப்போது எதனை அடைய விரும்புகிறார், மனுஷ ரூபமெடுத்தல் என்றால் என்ன, மற்றும் பல; இவை அனைத்தும் தரிசனங்களுடன் தொடர்புடையவை). மனுஷன் நுழைய வேண்டிய பாதையின் பொருள் என்ன? மனுஷன் கடைபிடிக்க வேண்டிய, நுழைய வேண்டிய தேவனின் வார்த்தைகளை இது குறிக்கிறது. மேற்கூறியவை தேவனின் வார்த்தைகளைப் புசித்தல் மற்றும் குடித்தலின் இரண்டு அம்சங்களாகும். இப்போதிலிருந்து, தேவனுடைய வார்த்தைகளை இந்த வழியில் புசியுங்கள். தரிசனங்களைப் பற்றிய அவருடைய வார்த்தைகளைப் பற்றி உங்களுக்குத் தெளிவான புரிதல் இருந்தால், எல்லா நேரத்திலும் தொடர்ந்து வாசித்து கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் இருதயத்தை தேவனை நோக்கி எப்படித் திருப்புவது, தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தை எவ்வாறு அமைதிப்படுத்துவது, மாம்சத்தை எப்படி அடக்குவது போன்ற பல வார்த்தைகளைப் புசிப்பதும் குடிப்பதும் முதன்மையானது. இந்த விஷயங்களை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். தேவனின் வார்த்தைகளை எப்படிப் புசிப்பது மற்றும் குடிப்பது என்று தெரியாமல், உண்மையான ஐக்கியம் என்பது சாத்தியமில்லை. தேவனின் வார்த்தைகளை எப்படிப் புசிப்பது மற்றும் குடிப்பது என்று உங்களுக்குத் தெரிந்தவுடன், முக்கியமானது எது என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், ஐக்கியமானது விடுதலையாக மாறும், எந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டாலும், நீங்கள் யதார்த்தத்துடன் ஐக்கியப்படவும் அதனைப் புரிந்துக் கொள்ளவும் முடியும். தேவனின் வார்த்தைகளுடன் ஐக்கியப்பட்டிருக்கும்போது, உனக்கு எந்த யதார்த்தமும் இல்லை என்றால், முக்கியமானது எது என்பதை நீ புரிந்து கொள்ளவில்லை, இது தேவனின் வார்த்தைகளைப் புசிக்கவும் குடிக்கவும் உனக்குத் தெரியவில்லை என்பதைக் காட்டுகிறது. சிலருக்கு தேவனின் வார்த்தைகளை வாசிப்பது சோர்வடையச் செய்வதைக் காணலாம், இது சாதாரண நிலை அல்ல. இயல்பானது எதுவென்றால் தேவனின் வார்த்தைகளை வாசிப்பதில் ஒருபோதும் சோர்வடையாமல் இருப்பது, எப்போதும் அவற்றிற்காகத் தாகம்கொள்வது, மற்றும் எப்போதும் தேவனுடைய வார்த்தைகளை நன்மை செய்வதாகக் கண்டறிவது ஆகும். இப்படித் தான் உண்மையிலேயே நுழைந்த ஒருவர் தேவனின் வார்த்தைகளைப் புசிக்கவும் குடிக்கவும் செய்கிறார். தேவனின் வார்த்தைகள் நடைமுறைக்கு அப்பாற்பட்டவையாக இருப்பதாக மற்றும் மனுஷன் துல்லியமாக நுழைய வேண்டியது இதற்குள் தான் என்று நீ உணர்ந்தால்; அவருடைய வார்த்தைகள் மனுஷனுக்குப் பெரிதும் உதவிகரமாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதாக மற்றும் அவை மனுஷனின் வாழ்வின் ஏற்பாடாக இருப்பதாக நீ உணர்ந்தால்—பரிசுத்த ஆவியானவர் இந்த உணர்வை உங்களுக்குத் தருகிறார், உங்களை ஏவுகிறவர் பரிசுத்த ஆவியானவரே. பரிசுத்த ஆவியானவர் உன்னில் கிரியை புரிகிறார் என்பதையும், தேவன் உன்னிடமிருந்து விலகிச் செல்லவில்லை என்பதையும் இது நிரூபிக்கிறது. சிலர், தேவன் எப்பொழுதும் பேசுவதைப் பார்த்து, அவருடைய வார்த்தைகளால் சோர்வடைந்து, அவற்றை வாசித்தாலும் இல்லாவிட்டாலும் எந்த விளைவும் ஏற்படாது என்று நினைக்கிறார்கள்—இது ஒரு சாதாரண நிலை அல்ல. யதார்த்தத்திற்குள் நுழைய தாகம் கொண்ட ஒரு இருதயம் அவர்களுக்கு இல்லை, அத்தகைய நபர்கள் பரிபூரணமடைவதற்குத் தாகம் கொண்டிருக்க மாட்டார்கள் மற்றும் முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள். தேவனின் வார்த்தைகளுக்கு நீ தாகம் கொள்ளாததை நீ காணும்போதெல்லாம், நீ ஒரு சாதாரண நிலையில் இல்லை என்பதை இது காட்டுகிறது. கடந்த காலங்களில், தேவன் உன்னிடமிருந்து விலகிவிட்டாரா என்பதை நீ உள்ளுக்குள் அமைதியாக இருக்கிறாயா, மற்றும் நீ இன்பத்தை அனுபவித்தாயா என்பதை வைத்து நீ தீர்மானிக்க முடியும். தேவனின் வார்த்தைகளுக்கு நீ தாகமாக இருக்கிறாயா, அவருடைய வார்த்தைகள் உனது யதார்த்தமாக இருக்கிறதா, நீ விசுவாசமுடையவனா, தேவனுக்காக உன்னால் முடிந்த அனைத்தையும் உன்னால் செய்ய முடிகிறதா என்பதே இப்போது முக்கியமானது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்தால் மனுஷன் தீர்மானிக்கப்படுகிறான். தேவன் தம்முடைய வார்த்தைகளை மனிதகுலம் முழுவதற்கும் வழிநடத்துகிறார். நீ அவற்றைப் படிக்கத் தயாராக இருந்தால், அவர் உன்னைப் பிரகாசமாக்குவார், ஆனால் நீ தயாராக இல்லையென்றால், அவர் அவ்வாறு செய்ய மாட்டார். நீதிக்காக பசியும் தாகமும் உள்ளவர்களை தேவன் பிரகாசமாக்குகிறார், தன்னைத் தேடுகிறவர்களை அவர் பிரகாசமாக்குகிறார். தேவனுடைய வார்த்தைகளை வாசித்த பிறகும் தேவன் அவர்களைப் பிரகாசிக்கவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் நீ இந்த வார்த்தைகளை எவ்விதமாக வாசித்தாய்? குதிரையின் முதுகில் அமர்ந்திருக்கும் ஒரு மனுஷன் பூக்களைப் பார்ப்பதைப் போல நீ அவருடைய வார்த்தைகளைப் படித்தால், மற்றும் யதார்த்தத்திற்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை என்றால், தேவன் உன்னை எவ்வாறு பிரகாசிக்கச் செய்வார்? தேவனின் வார்த்தைகளைப் பொக்கிஷமாகக் கருதாத ஒருவனை அவரால் எப்படிப் பரிபூரணப்படுத்த முடியும்? நீ தேவனின் வார்த்தைகளைப் பொக்கிஷமாகக் கருதாவிட்டால், உனக்கு சத்தியமும் இருக்காது யதார்த்தமும் இருக்காது. அவருடைய வார்த்தைகளை நீ பொக்கிஷமாகக் கருதினால், நீ சத்தியத்தைக் கடைபிடிக்க முடியும், அப்போதுதான் நீ யதார்த்தத்தைப் பெறுவாய். இதனால்தான் நீ அலுவலாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், சூழ்நிலைகள் பாதகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நீ சோதிக்கப்பட்டாலும், சோதிக்கப்படாவிட்டாலும் நீ எல்லா நேரங்களிலும் தேவனின் வார்த்தைகளைப் புசிக்கவும் குடிக்கவும் வேண்டும். மொத்தத்தில், தேவனின் வார்த்தைகள் மனுஷனின் ஜீவிதத்திற்கான அடித்தளமாகும். அவருடைய வார்த்தைகளிலிருந்து யாரும் விலகிச் செல்ல முடியாது, ஆனால் அவர்கள் தினமும் புசிக்கும் மூன்று வேளை போஜனங்களைப் போலவே அவருடைய வார்த்தைகளையும் புசிக்க வேண்டும். தேவனால் பரிபூரணமாக்கப்பட்டு ஆதாயப்படுத்தப்படுவது அவ்வளவு சுலபமா? தற்போது நீ புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும், தேவனின் கிரியையைப் பற்றிய புரிதல் உனக்கு இருந்தாலும் இல்லையென்றாலும், நீ தேவனின் வார்த்தைகளை முடிந்தவரை புசிக்கவும் குடிக்கவும் வேண்டும். இதுதான் முனைப்புடன் உட்பிரவேசிப்பதாகும். தேவனின் வார்த்தைகளை வாசித்த பிறகு, நீ உட்பிரவேசிக்கக்கூடியவற்றைக் கடைபிடிக்க துரிதப்படுத்து, உன்னால் முடியாத தருணத்திற்கு இப்போதைக்கு ஒதுக்கு. ஆரம்பத்தில் உன்னால் புரிந்து கொள்ள முடியாத தேவனின் வார்த்தைகள் பல இருக்கலாம், ஆனால் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒருவேளை ஒரு வருடம் கழித்து உனக்குப் புரியும். இது எப்படிச் சாத்தியம்? ஏனென்றால், ஓரிரு நாட்களில் தேவனால் ஜனங்களைப் பரிபூரணப்படுத்த முடியாது. பெரும்பாலும், நீ அவருடைய வார்த்தைகளைப் படிக்கும்போது, உனக்குச் சரியான வழியும் புரியாமல் போகலாம்; அந்த நேரத்தில், அவை வெறும் உரையாகத் தெரியுமே தவிர வேறெதுவாகவும் தெரியாது; நீ அவற்றைப் புரிந்துகொள்வதற்கு முன்பு அவற்றை ஒரு முறை அனுபவிக்க வேண்டும். தேவன் இவ்வளவு பேசியதால், அவருடைய வார்த்தைகளைப் புசிக்கவும் குடிக்கவும் நீ உன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும், பின்னர், நீ உனக்குத் தெரியாமலேயே, புரிந்துகொள்வாய், உனக்குத் தெரியாமலேயே பரிசுத்த ஆவியானவர் உன்னைப் பிரகாசிக்கச் செய்வார். பரிசுத்த ஆவியானவர் மனுஷனைப் பிரகாசிக்கச் செய்யும்போது, அது பெரும்பாலும் மனுஷனுக்குத் தெரியாமலேயே நடக்கிறது. நீ தாகமாக இருந்து, தேடும்போது அவர் உன்னைப் பிரகாசிக்கச் செய்து, வழிநடத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் செயல்படும் கொள்கை என்பது நீ புசிக்கும், குடிக்கும் தேவனின் வார்த்தைகளை மையமாகக் கொண்டுள்ளது. தேவனின் வார்த்தைகளுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்காதவர்கள் மற்றும் அவருடைய வார்த்தைகளுக்கு எப்போதும் மாறுபட்ட மனப்பான்மையைக் கொண்டிருப்பவர்கள்—அவர்களின் குழப்பமான சிந்தனையில், அவருடைய வார்த்தைகளை வாசித்தாலும் இல்லையென்றாலும் எந்த வித்தியாசமும் ஏற்படாது என்று நம்புகின்றனர்—இவர்கள் யதார்த்தத்தைக் கொண்டிராதவர்கள். அத்தகைய நபரில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையோ அல்லது அவருடைய பிரகாசத்தையோ காண முடியாது. இது போன்ற ஜனங்கள் திரு. நங்குவோ உவமையைப் போல எவ்வித முயற்சியும் எடுக்காமல் நிஜமானத் தகுதிகள் இல்லாமல் பாசாங்கு செய்கிறார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க