தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 402

செப்டம்பர் 12, 2023

வாழ்வின் நாட்டம் என்பது அவசரப்பட வேண்டிய ஒன்றல்ல; நம் வாழ்வின் வளர்ச்சி என்பது ஓரிரு நாட்களில் நடந்துவிடாது. தேவனின் கிரியை இயல்பானது மற்றும் நடைமுறைக்குரியது, மேலும் அது கட்டாயமாக ஒரு செயல்முறைக்கு உள்ளாகும். சிலுவையில் அறையப்பட்ட தனது கிரியையை நிறைவு செய்வதற்கு மனுஷ ரூபமெடுத்த இயேசுவுக்கு முப்பத்து மூன்றரை ஆண்டுகள் ஆனது—ஆகவே மனுஷனைச் சுத்திகரித்து, அவனுடைய வாழ்வை மாற்றியமைப்பது, மிகவும் கடினமான வேலையா? தேவனை வெளிக்கொணரும் ஒரு சாதாரண மனுஷனை உருவாக்குவதென்பது எளிதான காரியமல்ல. சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் பிறந்தவர்கள், மோசமானத் திறமை வாய்ந்தவர்கள் மற்றும் தேவனின் வார்த்தைகள் மற்றும் கிரியை நீண்டகாலத்திற்குத் தேவைப்படும் ஜனங்களுக்கு இது குறிப்பாகப் பொருந்தும். எனவே முடிவுகளைப் பார்க்க பொறுமையிழக்காதீர்கள். தேவனின் வார்த்தைகளைப் புசிப்பதிலும் குடிப்பதிலும் நீ ஆர்வமுடன் இருக்க வேண்டும், மேலும் தேவனின் வார்த்தைகளில் அதிக முயற்சி எடுக்க வேண்டும். நீ அவருடைய வார்த்தைகளை வாசித்து முடித்ததும், அவற்றை நீ உண்மையாகக் கடைபிடிக்க முடியும், தேவனுடைய வார்த்தைகளில் அறிவு, நுண்ணறிவு, விவேகம் மற்றும் ஞானம் ஆகியவற்றில் வளர வேண்டும். இதன் மூலம், நீ உனக்கே தெரியாமல் மாறிவிடுவாய். தேவனின் வார்த்தைகளைப் புசிப்பது, குடிப்பது, அவற்றை வாசிப்பது, அவற்றை அறிந்து கொள்வது, அவற்றை அனுபவிப்பது மற்றும் அவற்றைக் கடைபிடிப்பது ஆகியவற்றை நீ உனது கொள்கையாக எடுத்துக் கொள்ள முடிந்தால், நீ உனக்கே தெரியாமல் முதிர்ச்சியடைவாய். தேவனின் வார்த்தைகளைப் படித்த பிறகும் அவற்றைக் கடைப்பிடிக்க முடியவில்லை என்று சொல்பவர்களும் உண்டு. உனக்கு என்ன அவசரம்? நீ ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டும்போது, நீ அவருடைய வார்த்தைகளைக் கடைபிடிக்க முடியும். நான்கு அல்லது ஐந்து வயது குழந்தை தனது பெற்றோரை ஆதரிக்கவோ கனப்படுத்தவோ முடியாது என்று கூறுமா? உனது தற்போதைய நிலை எவ்வளவு பெரியது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். உன்னால் கடைபிடிக்க முடிந்தவற்றைக் கடைபிடி, தேவனின் நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் ஒருவனாக இருப்பதைத் தவிர்த்து விடு. தேவனின் வார்த்தைகளைப் புசி, குடி. இனிமேல் அதனை உனது கொள்கையாக எடுத்துக் கொள். தற்போதைக்கு தேவன் உன்னைப் பரிபூரணப்படுத்த முடியுமா என்பது பற்றிக் கவலைப்படாதே. அதை இன்னும் ஆராய வேண்டாம். தேவனின் வார்த்தைகள் உன்னிடம் வரும்போது அவற்றைப் புசித்துக் குடி, மேலும் தேவன் உன்னைப் பரிபூரணப்படுத்துவதில் உறுதியாக இருப்பார். இருப்பினும், அவருடைய வார்த்தைகளை நீ புசிப்பதற்கும் குடிப்பதற்கும் ஒரு கொள்கை உள்ளது. கண்மூடித்தனமாக அவ்வாறு செய்ய வேண்டாம். தேவனின் வார்த்தைகளைப் புசிப்பதிலும் குடிப்பதிலும், ஒருபுறம், நீ தெரிந்து கொள்ள வேண்டிய சொற்களைத் தேடு—அதாவது, தரிசனங்களுடன் தொடர்புடையவற்றைத் தேடு—மறுபுறம், நீ எதை நிஜமாகக் கடைபிடிக்க வேண்டும் என்று தேடு—அதாவது நீ எதற்குள் நுழைய வேண்டும் என்று தேடு. ஒரு அம்சம் அறிவோடு தொடர்புடையது, மற்றொன்று நுழைவதோடு தொடர்புடையது. நீ எதைத் தெரிந்து கொள்ள வேண்டும் மற்றும் நீ எதைக் கடைபிடிக்க வேண்டும் என இரண்டையும் நீ புரிந்துகொண்டவுடன் தேவனின் வார்த்தைகளை எப்படிப் புசிப்பது மற்றும் குடிப்பது என்று உனக்குத் தெரியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க