தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 399

செப்டம்பர் 12, 2023

இன்றைய பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் இயங்குவியல் ஆகும், மேலும் இந்தக் காலகட்டத்தில் மனிதனுக்கான பரிசுத்த ஆவியானவரின் தொடர்ச்சியான பிரகாசம் என்பது பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் போக்கு ஆகும். இன்று, பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் போக்கு என்னவாக இருக்கிறது? இது இன்று தேவனுடைய கிரியையிலும், ஒரு இயல்பான ஆவிக்குரிய ஜீவிதத்திலும் ஜனங்களை தலைமையேற்று நடத்துவதாகும். ஓர் இயல்பான ஆவிக்குரிய ஜீவிதத்தில் பிரவேசிப்பதற்கு பல படிகள் உள்ளன:

1. முதலில், நீ தேவனுடைய வார்த்தைகளுக்குள் உன் இருதயத்தை ஊற்ற வேண்டும். நீ கடந்த காலங்களின் தேவனுடைய வார்த்தைகளைப் பின்பற்றக்கூடாது, அவற்றைப் படிக்க அல்லது இன்றைய வார்த்தைகளுடன் ஒப்பிடக் கூடாது. மாறாக, தேவனுடைய தற்போதைய வார்த்தைகளில் உன் இருதயத்தை முழுமையாக ஊற்ற வேண்டும். இன்று தேவனுடைய வார்த்தைகளை, ஆவிக்குரிய புத்தகங்களை அல்லது கடந்த காலத்தில் பிரசங்கிக்கப்பட்ட பிற விவரங்களை இன்னும் படிக்க விரும்பும் ஜனங்களும் பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளைப் பின்பற்றாதவர்களும் இருந்தால், அவர்களே ஜனங்களில் மிகவும் முட்டாள்தனமானவர்கள். அத்தகையவர்களை தேவன் வெறுக்கிறார். இன்று நீ பரிசுத்த ஆவியானவரின் ஒளியை ஏற்கத் தயாராக இருந்தால், இன்று உன் இருதயத்தை தேவனுடைய வார்த்தைகளில் முழுமையாக ஊற்றிவிடு. நீ அடைய வேண்டிய முதல் விஷயம் இதுதான்.

2. இன்று தேவன் பேசும் வார்த்தைகளுடைய அஸ்திபாரத்தின் அடிப்படையில் நீ ஜெபிக்க வேண்டும், தேவனுடைய வார்த்தைகளில் பிரவேசிக்க வேண்டும் மற்றும் தேவனோடு உரையாட வேண்டும் மற்றும் நீ எந்தத் தரங்களை அடைய விரும்புகிறாய் என்பதை நிலைநாட்டி உன் தீர்மானங்களை தேவனுக்கு முன்பாகச் செய்ய வேண்டும்.

3. பரிசுத்த ஆவியானவரின் இன்றைய கிரியையின் அஸ்திபாரத்தின் அடிப்படையில் நீங்கள் சத்தியத்தினுள் ஆழமாகப் பிரவேசிப்பதைப் பின்தொடர வேண்டும். கடந்த காலத்தின் காலாவதியான வார்த்தைகளையும் கோட்பாடுகளையும் பிடித்துக் கொள்ளாதீர்கள்.

4. நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் தொடப்பட நாட வேண்டும், தேவனுடைய வார்த்தைகளுக்குள் பிரவேசிக்க வேண்டும்.

5. இன்று பரிசுத்த ஆவியானவர் நடந்த பாதையில் நீங்கள் பிரவேசிப்பதைப் பின்தொடர வேண்டும்.

பரிசுத்த ஆவியானவரால் தொடப்படுகிறதை நீங்கள் எவ்வாறு தேடுகிறீர்கள்? தேவனுடைய தற்போதைய வார்த்தைகளில் ஜீவிப்பதும், தேவனுடைய எதிர்பார்ப்புகளின் அஸ்திபாரத்தில் ஜெபிப்பதுமே முக்கியமான விஷயங்களாக இருக்கின்றன. இவ்வாறு ஜெபித்ததால், பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உன்னைத் தொடுவார். இன்று தேவன் பேசின வார்த்தைகளின் அஸ்திபாரத்தின் அடிப்படையில் நீ நாடவில்லை என்றால், அது பயனற்றதாக இருக்கும். "தேவனே! நான் உம்மை எதிர்க்கிறேன், நான் உமக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறேன்; நான் மிகவும் கீழ்ப்படியாதவன் மற்றும் என்னால் உம்மை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது. தேவனே, நீர் என்னை இரட்சிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், கடைசிவரையில் உமக்கு ஊழியம் செய்ய நான் விரும்புகிறேன். உமக்காக மரிக்க நான் விரும்புகிறேன். நீர் என்னை நியாயந்தீர்த்து, என்னை சிட்சியும், எனக்கு எந்தப் புகாரும் இல்லை. நான் உம்மை எதிர்க்கிறேன் எனவே நான் இறப்பதற்குத் தகுதியானவன், அதனால் என் மரணத்தில் உமது நீதியுள்ள மனநிலையை எல்லா ஜனங்களும் காணக்கூடும்," என்று ஜெபித்து நீ தேவனிடம் சொல்ல வேண்டும். இவ்வாறு நீ உன் இருதயத்திலிருந்து ஜெபிக்கும்போது, தேவன் உனக்குச் செவிகொடுப்பார் மற்றும் உனக்கு வழிகாட்டுவார். இன்று நீ பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளின் அஸ்திபாரத்தில் ஜெபிக்கவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் உன்னைத் தொடுவதற்கு எந்தச் சாத்தியக்கூறும் இல்லை. நீ தேவனுடைய சித்தத்தின்படியும், இன்று தேவன் செய்ய வாஞ்சையாய் இருப்பதன் அடிப்படையிலும் ஜெபித்தால், நீ சொல்வாய்: "தேவனே! உமது ஆணைகளை ஏற்றுக் கொள்ளவும், உமது ஆணைகளுக்கு உண்மையாக இருக்கவும் நான் விரும்புகிறேன். என் வாழ்நாள் முழுவதையும் உமது மகிமைக்காக அர்ப்பணிக்க நான் தயாராக இருக்கிறேன், இதனால் நான் செய்யும் சகல காரியங்களிலும் என்னால் தேவனுடைய ஜனங்களுடைய தரங்களை அடைய முடியும். என் இருதயம் உம்மால் தொடப்படட்டும். உம்முடைய ஆவியானவர் எப்பொழுதும் என்னைப் பிரகாசிப்பிக்க வேண்டும் என்றும், நான் செய்யும் சகல காரியங்களிலும் சாத்தானுக்கு அவமானத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும், இறுதியில் உம்மால் நான் ஆதாயம் செய்யப்பட வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்." நீ இவ்வாறு ஜெபித்தால், தேவனுடைய சித்தத்தை மையமாகக் கொண்ட வழியில் ஜெபித்தால், பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாய் உன்னில் கிரியை செய்வார். உன் ஜெபங்களின் வார்த்தைகளின் எண்ணிக்கை எத்தனை என்பது முக்கியமல்ல—தேவனுடைய சித்தத்தை நீ புரிந்துகொள்கிறாயா இல்லையா என்பதே முக்கியம். உங்கள் அனைவருக்கும் பின்வரும் அனுபவம் இருந்திருக்கலாம்: சில நேரங்களில், ஒரு கூட்டத்தில் ஜெபிக்கும்போது, பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் இயங்குவியல் உச்சத்தை எட்டுகிறது, இதனால் அனைவரின் பெலனும் உயருகிறது. சிலர் ஜெபிக்கும்போது மிகவும் அதிகமாக அழுகிறார்கள் மற்றும் கண்ணீர் விடுகிறார்கள், தேவனுக்கு முன்பாக மனஸ்தாபம் கொள்கிறார்கள், சிலர் தங்கள் தீர்மானத்தைக் காட்டுகிறார்கள் மற்றும் பொருத்தனைகள் செய்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையால் அடைய வேண்டிய விளைவு இதுதான். இன்று, எல்லா ஜனங்களும் தங்கள் இருதயங்களை தேவனுடைய வார்த்தைகளில் முழுமையாக ஊற்றுவது முக்கியம். முன்பு பேசிய வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டாம். நீ இன்னும் முன்பு வந்ததையே பிடித்துக் கொண்டிருந்தால், பரிசுத்த ஆவியானவர் உனக்குள் செயல்பட மாட்டார். இது எவ்வளவு முக்கியமானது என்பதைக் காண்கிறாயா?

இன்று, பரிசுத்த ஆவியானவர் நடந்து செல்லும் பாதையை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? மேலே உள்ள பல காரியங்கள் பரிசுத்த ஆவியானவரால் இன்றும் எதிர்காலத்திலும் நிறைவேற்றப்பட வேண்டியவையாகும். அவை பரிசுத்த ஆவியானவரால் எடுக்கப்பட்ட பாதைகளாக இருக்கின்றன. அவை மனிதனால் பின்தொடர வேண்டிய பிரவேசமாக இருகின்றன. ஜீவனுக்குள் நீங்கள் பிரவேசிக்கும் போது, குறைந்தபட்சம் நீங்கள் உங்கள் இருதயத்தை தேவனுடைய வார்த்தைகளுக்குள் ஊற்ற வேண்டும் மற்றும் தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் ஏற்றுக்கொள்ளும் திறனிருக்க வேண்டும். உங்கள் இருதயம் தேவனுக்காக ஏங்க வேண்டும், நீங்கள் சத்தியத்தில் ஆழமான பிரவேசத்தை மற்றும் தேவனால் எதிர்பார்க்கப்படும் குறிக்கோள்களையும் பின்பற்றுவதற்காக ஏங்க வேண்டும். நீ இந்த பெலனைக் கொண்டிருக்கும்போது, நீ தேவனால் தொடப்பட்டிருக்கிறாய் மற்றும் உன் இருதயம் தேவனிடம் திரும்பத் தொடங்கியிருக்கிறது என்பவற்றை இது காட்டுகிறது.

ஜீவனுக்குள் பிரவேசிப்பதற்கான முதல் படியானது உங்கள் இருதயத்தை தேவனுடைய வார்த்தைகளில் முழுமையாக ஊற்றுவதாகும், இரண்டாவது படியானது பரிசுத்த ஆவியானவரால் தொடப்படுவதை ஏற்றுக்கொள்ளுவதாகும். பரிசுத்த ஆவியானவரால் தொடப்படுவதை ஏற்றுக்கொள்வதன் மூலம் அடைய வேண்டிய விளைவு என்னவாக இருக்கிறது? இது மிகவும் ஆழமான உண்மைக்காக ஏங்க, அதைத் தேட, ஆராய முடிவதும், தேவனுடன் நேர்மறையான முறையில் ஒத்துழைக்கும் திறனுடன் இருப்பதுமாகும். இன்று, நீங்கள் தேவனுடன் ஒத்துழைக்கிறீர்கள், அதாவது உங்கள் பின்தொடர்தலுக்கு, உங்கள் ஜெபங்களுக்கு மற்றும் தேவனுடைய வார்த்தைகளை நீங்கள் தொடர்புகொள்வதற்கு ஒரு குறிக்கோள் உள்ளது, மேலும் தேவனுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உங்கள் கடமையை நீங்கள் செய்கிறீர்கள், இதுவே நீங்கள் தேவனுடன் ஒத்துழைப்பதாகும். தேவனைக் கிரியை செய்ய அனுமதிப்பதைப் பற்றி மட்டுமே நீ பேசி, ஆனால் நீ எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஜெபிக்கவோ தேடவோ இல்லை என்றால், இதை ஒத்துழைப்பு என்று அழைக்க முடியுமா? உங்களிடம் ஒத்துழைப்பின் எந்த தடயமும் இல்லாமல் மற்றும் ஒரு குறிக்கோளைக் கொண்ட பிரவேசத்துக்கான நடைமுறை இல்லாமல் இருக்கிறது என்றால், நீங்கள் ஒத்துழைக்கவில்லை என்பதாகும். "எல்லாம் தேவனுடைய முன்குறித்தலைப் பொறுத்தது. இவை அனைத்தும் தேவனாலேயே செய்யப்படுகின்றன. தேவன் அதைச் செய்யவில்லை என்றால், மனிதனால் எப்படி அது சாத்தியமாகும்?" என்று சிலர் சொல்கிறார்கள். தேவனுடைய கிரியை இயல்பானது, சிறிதளவும் இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல, மற்றும் உன் உற்சாகமுள்ள தேடுதல் மூலம் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் செயல்படுகிறார், ஏனென்றால், தேவன் மனிதனை நிர்பந்திப்பதில்லை—தேவன் கிரியை செய்ய அவருக்கு நீ வாய்ப்பளிக்க வேண்டும், நீ பின்தொடரவில்லை அல்லது பிரவேசிக்கவில்லை என்றால், மற்றும் உன் இருதயத்தில் சிறிதளவு ஏக்கமும் இல்லை என்றால், கிரியை செய்ய தேவனுக்கு வாய்ப்பில்லை. தேவனால் தொடப்படும்படிக்கு நீங்கள் எந்தப் பாதையினால் தேட முடியும்? ஜெபத்தின் மூலமாக, தேவனிடம் நெருங்கி வருவதால் மட்டுமே அது முடியும். ஆனால் மிக முக்கியமாக, அது தேவன் பேசும் வார்த்தைகளின் அஸ்திபாரத்தில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீ அடிக்கடி தேவனால் தொடப்படும்போது, நீ மாம்சத்தால் அடிமைப்படுத்தப்படுவதில்லை: கணவன், மனைவி, குழந்தைகள் மற்றும் பணம் ஆகிய அவை அனைத்தும் உன்னை விலங்கிட முடியாது மற்றும் நீ சத்தியத்தைப் பின்பற்றவும், தேவனுக்கு முன்பாக ஜீவிக்கவும் மட்டுமே விரும்புவாய். இந்த நேரத்தில், நீ சுதந்திர உலகில் ஜீவிக்கும் ஒருவனாக இருப்பாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க