தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 586

செப்டம்பர் 8, 2021

தன்னைத்தான் வெறுத்து என்னை நேசிப்பவர்களை நோக்கி என் இரக்கம் செல்லுகிறது, இதற்கிடையில், துன்மார்க்கர் மீது விதிக்கப்படும் தண்டனையானது என்னுடைய நீதியான மனநிலைக்கு துல்லியமான ஆதாரமாகவும், அதற்கும் மேலே என் உக்கிரத்திற்குச் சாட்சியமாகவும் இருக்கிறது. பேரழிவு வரும்போது எனக்கு விரோதமாக இருப்பவர்கள் பஞ்சத்திற்கும், கொள்ளை நோய்க்கும் இலக்காகிப் புலம்புவார்கள். பலவருடங்களாக என்னைப் பின்தொடர்ந்து வந்திருந்தும் எல்லாவிதமான துன்மார்க்கத்தையும் செய்தவர்களும் தங்கள் பாவத்தின் பலன்களிலிருந்து தப்ப முடியாது; அவர்களும் கூடப் பேரழிவில் விழுவார்கள், இதைப் போன்ற ஒன்றை ஆயிரம் வருடங்களில் சில தடவைகள் காணமுடிந்திருக்கிறது, அவர்கள் தொடர்ந்து பயத்திலும், பீதியிலும் வாழ்வார்கள். எனக்கு உண்மையும் உத்தமுமாக இருந்தவர்கள் என்னுடைய வல்லமையை மெச்சிக் களிகூறுவார்கள். அவர்கள் சொல்லவொண்ணா திருப்தியை அனுபவித்து நான் ஒருபோதும் மனிதகுலத்திற்கு தந்திடாததுமான மகிழ்ச்சியின் மத்தியில் வாழ்வார்கள். ஏனெனில் நான் மனிதர்களின் நற்கிரியைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து துர்க்கிரியைகளை அருவருக்கின்றேன். நான் முதன் முதலில் மனுகுலத்தை வழிநடத்த தொடங்கியதிலிருந்து என்னைப் போன்ற ஒத்த மனதுள்ள ஒரு கூட்ட ஜனங்களை ஆதாயப்படுத்தும்படி வாஞ்சையுடன் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில், என்னைப் போன்ற ஒத்த மனது இல்லாத ஜனங்களை நான் மறப்பதில்லை. என் இருதயத்தில் நான் அவர்களை எப்போதும் வெறுக்கிறேன். அவர்களை ஆக்கினைக்கு உள்ளாக்கித் தீர்ப்பதற்கு வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறேன், அதனைக் கண்டு நான் நிச்சயமாகவே மகிழுவேன். இப்பொழுதோ என்னுடைய நாள் வந்துவிட்டது, நான் இதற்குமேல் காத்திருக்க வேண்டியதில்லை!

என்னுடைய இறுதிக் கிரியையானது மனிதனைத் தண்டிப்பது மாத்திரம் இல்லை, ஆனால் மனிதனுக்கான இலக்கை ஆயத்தம் செய்வதும்தான். மேலும் இதனால் ஜனங்கள் என்னுடைய நியமங்களையும், செயல்களையும் ஒப்புக்கொள்ளக்கூடும். ஒவ்வொரு மனிதனும் நான் செய்தவை எல்லாம் சரி என்றும், நான் செய்தவை எல்லாம் என் மனநிலையின் வெளிப்பாடுகள் என்றும் காண நான் விரும்புகின்றேன். இது மனிதனின் செயல் அல்ல, மனிதக்குலத்தை வெளிக்கொண்டுவந்த இயற்கையுடையதும் அல்ல, ஆனால் படைப்பில் உள்ள எல்லா ஜீவராசிகளையும் போஷிக்கும் என் செயலே. நான் இல்லையென்றால் மனிதகுலம் அழிவதோடு பேரழிவு என்னும் சாட்டையடியால் பாடுபடும். எந்த மனிதனும் சந்திர, சூரியனின் அழகையோ அல்லது பசுமையான உலகத்தையோ மீண்டும் காண முடியாது. மனிதகுலம் குளிர்ந்த இரவுகளையும், இரக்கமில்லாத மரண இருளின் பள்ளத்தாக்கையும் மாத்திரமே எதிர்கொள்ளும். நானே மனுக்குலத்தின் ஒரே இரட்சிப்பு. நானே மனுக்குலத்தின் ஒரே நம்பிக்கையாக இருக்கிறேன், அதற்கும் மேலே மனிதகுலத்தின் மொத்த ஜீவிப்பும் என்னையே சார்ந்திருக்கிறது. நானின்றி ஒட்டுமொத்த மனுக்குலமும் உடனடியாக ஓர் அசைவற்ற நிலைக்கு வந்துவிடும். நானின்றி மனிதகுலம் பெரும் அழிவில் அவதியுறும், எல்லாவகையான பிசாசுகளாலும் கால்களின் கீழ் மிதிக்கப்படும், ஆனாலும் ஒருவரும் என்மீது கவனம் செலுத்துவதில்லை. நான் வேறு ஒருவரும் செய்யமுடியாத கிரியையைச் செய்திருக்கின்றேன், இதனை மனிதன் சில நற்கிரியைகள் மூலம் எனக்கு ஈடு செய்வான் என்று நம்பியிருக்கின்றேன். ஒரு சிலரால் மாத்திரமே எனக்கு ஈடு செய்ய முடிகிறது என்றாலும், நான் மனிதனின் உலகத்தில் என் பயணத்தை முடித்து என் விரிவாக்கக் கிரியையின் அடுத்த கட்டத்தைத் தொடங்குவேன். ஏனெனில் மனிதரின் மத்தியில் இத்தனை வருடமாக என் போக்குவரத்தின் வேகம் எல்லாம் பலனுள்ளதாக இருந்திருக்கிறது, நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு மக்களின் எண்ணிக்கை முக்கியமில்லை மாறாக அவர்களது நற்கிரியைகளே முக்கியம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நீங்கள் உங்கள் இலக்கிற்காக போதுமான நற்கிரியைகளை ஆயத்தப்படுத்தியிருப்பீர்கள் என நம்புகிறேன். அப்போது நான் திருப்தியாவேன், அப்படியில்லாவிட்டால், உங்களில் ஒருவனும் உங்கள்மீது விழப்போகும் பேரழிவிலிருந்து தப்பிக்க முடியாது. அந்தப் பேரழிவு என்னிலிருந்தே ஆரம்பிக்கப்படும், மேலும் அது நிச்சயமாகவே என்னாலே திட்டமிடப்படும். என் கண்களில் நீங்கள் செம்மையாய் காணப்படவில்லை என்றால், உங்களால் அந்தப் பேரழிவில் பாடுபடுவதிலிருந்து தப்பிக்க முடியாது. உபத்திரவத்தின் காலத்திலே உங்களுடைய அன்பும், விசுவாசமும் ஆழம் இல்லாமல் இருந்ததினால், அப்போது உங்களுடைய செயல்கள் முற்றிலும் பொருத்தமானது என்று கருத முடியாது, ஒன்று நீங்கள் உங்களைக் கோழையாகவோ அல்லது கடுமையாகவோ காட்டியிருப்பீர்கள். அதைப் பொறுத்தவரை நன்மையா அல்லது தீமையா என்று மாத்திரமே நான் ஒரு நியாயத்தீர்ப்பு வழங்குவேன். என் அக்கறை எல்லாம் நீங்கள் எந்த வழியில் நடக்கிறீர்கள் என்பதிலும், எப்படி உங்களை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதிலுமே தொடர்கிறது, அதன் அடிப்படையிலேயே உங்களுடைய முடிவை நான் தீர்மானிப்பேன். எனினும், என் இரக்கம் அதுவரையே நீட்டிக்கப் பட்டிருப்பதால், உபத்திரவத்தின் காலத்திலே சிறிதளவாயினும் விசுவாசத்தைக் காட்டாதவர்களுக்கு நான் நிச்சயமாக அதற்குமேல் இரங்குவதில்லை என்பதை நான் தெளிவுபடுத்தியாக வேண்டும். என்னை காட்டிக்கொடுத்த அல்லது துரோகம் செய்த யார்மீதும் நான் அதற்குமேல் என் விருப்பத்தை வைப்பதில்லை. தன் நண்பர்களின் நன்மையை விற்றுப் போடுபவர்களிடமும் நான் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. யார் அந்த நபராக இருந்தாலும் இதுவே என் நிலைப்பாடு. என் இருதயத்தை உடைப்பவர்கள் யாராயினும் என்னிடமிருந்து இரண்டாம் முறை கருணையைப் பெற முடியாது என்பதை நான் உங்களுக்கு அவசியம் சொல்ல வேண்டும். மேலும் எனக்கு உண்மையாக இருப்பவர்களோ என் இருதயத்தில் எப்போதும் நிலைத்திருப்பார்கள்.

"நீ போய்ச்சேருமிடத்திற்காக போதுமான நற்செயல்களை ஆயத்தப்படுத்து" என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க