கிறிஸ்தவ பாடல் | தேவனின் வழிப்படுத்துதலை மனுக்குலம் இழந்ததன் விளைவுகள்
அக்டோபர் 11, 2020
மனுக்குலம் சமூக அறிவியலைக் கண்டுபிடித்தது முதல்,
மனிதனின் மனம் அறிவியலாலும் அறிவாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
அறிவியலும் அறிவும் மனுக்குலத்தை ஆட்சி செய்யும் கருவிகளாக மாறியுள்ளன.
மேலும் தேவனைத் தொழுதுகொள்வதற்கு மனுஷனுக்கு போதுமான இடமோ,
தேவனைத் தொழுதுகொள்வதற்கான சாதகமான சூழ்நிலைகளோ இல்லை.
தேவனுடைய நிலை மனிதனின் இருதயத்தின் அடியில் எப்போதும் மூழ்கிப்போய்விட்டது.
மனுஷனுடைய இருதயத்தில் தேவன் இல்லாமல், அவனுடைய உள் உலகம் இருண்டதாகவும்,
நம்பிக்கையற்றதாகவும் மேலும் வெறுமையானதாகவும் காணப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பல சமூக விஞ்ஞானிகளும், வரலாற்றாசிரியர்களும் மற்றும் அரசியல்வாதிகளும்
மனுஷர்களின் இருதயங்களையும் மனதையும் நிரப்புவதற்காக சமூக அறிவியல் கோட்பாடுகள்,
மனித பரிணாம வளர்ச்சிக் கொள்கைகள்,
மற்றும் தேவன் மனுஷனை சிருஷ்டித்தார் என்ற
உண்மைக்கு முரணான பிற கோட்பாடுகளை வெளிப்படுத்தும் நிலைக்கு வந்துள்ளனர்.
தேவனே சகலத்தையும் சிருஷ்டித்தார் என்று நம்புகிறவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது,
அதேநேரத்தில் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை நம்புகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
பெரும்பாலானவர்கள் பழைய ஏற்பாட்டுக் காலத்திலுள்ள தேவனுடைய கிரியை மற்றும்
அவருடைய வார்த்தைகளின் பதிவுகளைப்
புராணங்களாகவும் புராணக்கதைகளாகவும் கருதுகிறார்கள்.
தேவன் ஜீவிக்கிறார் மற்றும் எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறார்
என்ற நம்பிக்கையைக் குறித்தும்
தேவனுடைய மேன்மையையும் மகத்துவத்தையும் குறித்தும்,
ஜனங்கள் அலட்சியத்துடன் காணப்படுகிறார்கள்.
மனுக்குலத்தின் ஜீவியமும், நாடுகளின் மற்றும் தேசங்களின் தலைவிதியும்
அவர்களுக்கு ஒருபோதும் முக்கியமானதாக இல்லை.
புசித்துக் குடித்து, இன்பத்தை நாடுவதில் மாத்திரமே அக்கறை கொண்ட
ஒரு வெற்று உலகில் மனுஷன் வாழ்கிறான். …
தேவன் இன்று எங்கு தனது கிரியையைச் செய்கிறார் என்பதை நாடியோ
அல்லது அவர் மனுஷனுடைய தலைவிதியை
எவ்வாறு அடக்கி ஆள்கிறார் மற்றும் ஒழுங்குபடுத்துகிறார் என்பதை நாடியோ
கொஞ்சப்பேர் தங்களை ஒப்புக்கொடுக்கின்றனர்.
மனுஷனுக்குத் தெரியாமலே, மனித நாகரிகமானது
மனிதனின் ஆசைகளைத் துண்டிக்கக்கூடியதாக மாறுகிறது.
மேலும் இதுபோன்ற உலகில் வாழ்வதில், ஏற்கனவே மரணித்தவர்களைக் காட்டிலும்
குறைவாகவே சந்தோஷமாக காணப்படுவதாகக் கருதும் பலரும் உள்ளனர்.
மிகவும் நாகரிகமாக இருக்கும் நாடுகளைச்
சேர்ந்த மக்கள் கூட இதுபோன்ற மனவருத்தங்களை வெளிப்படுத்துகிறார்கள்.
தேவனுடைய வழிகாட்டுதல் இல்லாமல்,
ஆட்சியாளர்களும் சமூகவியலாளர்களும் மனித நாகரிகத்தைப்
பாதுகாக்க எவ்வளவு மூளையைக் கசக்கினாலும்,
அதில் பிரயோஜனமில்லை.
யாரும் மனுஷனின் ஜீவனாக இருக்க இயலாது என்பதனால்,
மனுஷனுடைய இருதயத்திலுள்ள வெறுமையை யாராலும் நிரப்ப இயலாது.
மனுஷனுடைய இருதயத்திலுள்ள வெறுமையை யாராலும் நிரப்ப இயலாது.
எந்தவொரு சமூகக் கோட்பாடும் மனுஷனை
அவன் அவதிப்படும் வெறுமையிலிருந்து விடுவிக்க இயலாது.
"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்