திருச்சபைத் திரைப்படம் | கடைசி நாட்களின் தேவனுடைய கிரியை மத உலகில் உள்ள அனைத்து வகையான ஜனங்களையும் அம்பலப்படுத்துகிறது (சிறப்பம்சம்)

டிசம்பர் 2, 2023

ஒவ்வொரு முறையும் தேவன் மாம்சமாகி, தம்முடைய கிரியையைச் செய்வதற்காகத் தோன்றும்போது, சாத்தானுடைய பொல்லாத வல்லமைகள் மெய்யான வழியைக் கொடூரமாக எதிர்க்கின்றன மற்றும் கண்டனம் செய்கின்றன. இதனால், ஆவிக்குரிய உலகில் போர் உண்டாகி மத உலகைப் பிரிக்கவும், அம்பலப்படுத்தவும் செய்கிறது. "பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்" (மத்தேயு 10:34) (© BSI) என்று கர்த்தராகிய இயேசு கூறினார். கிருபையின் காலத்தில் கர்த்தராகிய இயேசு தோன்றிக் கிரியை செய்த போது, யூத மதம் பல பிரிவுகளாகப் பிரிந்தன. இப்போது கடைசி நாட்களில் சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றிக் கிரியை செய்வதால், மத உலகம் ஒரு மிகப்பெரிய அம்பலப்படுத்தலுக்கு உட்படுகிறது; கோதுமையும் பதரும், செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும், புத்தியுள்ள கன்னிகைகளும் புத்தியில்லாத கன்னிகைகளும், மற்றும் நல்ல ஊழியக்காரர்களும் கெட்ட ஊழியக்காரர்களும்-ஆகிய அனைவரும் தங்கள் சொந்த வகையின்படி அம்பலப்படுத்தப்படுகின்றனர். தேவனுடைய ஞானமும் அற்புதங்களும் உண்மையில் புரிந்துகொள்ள முடியாதவை!

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க