கிறிஸ்தவ பாடல் | தேவனின் ஆடுகள் அவருடைய சத்தத்தைக் கேட்கின்றன (Tamil Subtitles)

355 |மே 17, 2021

நாட்கள் முடிவுக்கு வரும்;

இந்த உலகில் உள்ள அனைத்தும்ஒன்றும் இல்லாத நிலைக்கு வரும்,

மேலும் அனைத்தும் புதிதாகப் பிறக்கும்.

இதை நினைவில் கொள்ளுங்கள்!தெளிவின்மை இருக்கவே கூடாது!

வானமும் பூமியும் ஒழிந்துபோகும்,

ஆனால் தேவனுடைய வார்த்தைகளோஒழிந்துபோவதில்லை!

தேவன் உங்களை மீண்டும்ஒருவிசை அறிவுறுத்துகிறார்:

வீணாக ஓடாதீர்கள்! விழித்தெழுங்கள்!மனந்திரும்புங்கள், இரட்சிப்பு சமீபித்திருக்கிறது!

தேவன் ஏற்கனவே உங்களிடையேதோன்றியிருக்கிறார்,

அவரது சத்தம் தொனித்திருக்கிறது.

பரிசுத்த ஆவியானவர்திருச்சபைகளிடத்தில் பேசுகிறார்;

காதுள்ளவர்கள் அனைவரும் கேட்க வேண்டும்!

ஜீவிக்கிறவர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ள வேண்டும்!

வெறுமனே அவற்றை புசித்துக் குடிக்க வேண்டும்,சந்தேகப்படக் கூடாது.

தேவனின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து,அவற்றிற்குச் செவிசாய்க்கும் அனைவரும்

பெரும் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள்!

தேவனின் சத்தம் உங்களுக்கு முன்பாகதொனித்திருக்கிறது;

ஒவ்வொரு நாளும் அது புத்தம் புதிதாக இருக்கிறது.

நீ தேவனைப் பார்க்கிறாய்,தேவன் உன்னைப் பார்க்கிறார்;

தேவன் உன்னிடம் தொடர்ந்து பேசுகிறார்,உன்னுடன் முகமுகமாய் நேரே வருகிறார்.

ஆயினும்கூட, நீ அவரை நிராகரிக்கிறாய்,அவரை அறியாதிருக்கிறாய்.

தேவனின் ஆடுகள் அவரது சத்தத்துக்குசெவி கொடுக்கிறது,

ஆனாலும் நீங்கள் தயங்குகிறீர்கள்!நீங்கள் தயங்குகிறீர்கள்!

உங்கள் இருதயமானது உணர்ந்து குணப்படாமல்,

உங்கள் கண்கள் சாத்தானால்குருடாக்கப்பட்டுவிட்டன,

தேவனுடைய மகிமையான முகத்தைஉங்களால் காண முடியாது—

நீங்கள் எவ்வளவு பரிதாபகரமானவர்களாகஇருக்கிறீர்கள்! எவ்வளவு பரிதாபகரமானவர்கள்!

தேவனின் ஆடுகள் அவருடைய சத்தத்தைக் கேட்கின்றன.

தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்னால் உள்ள

ஏழு ஆவிகளும் பூமியின் எல்லா மூலைகளுக்கும்அனுப்பப்பட்டுள்ளன

மேலும் தேவன் அவரது தூதனைதிருச்சபைகளிடத்தில் பேச அனுப்புவார்.

தேவன் நீதியுள்ளவராகவும்உண்மையுள்ளவராகவும் இருக்கிறார்;

மனுஷனுடைய இருதயத்தின் ஆழமான பகுதிகளைஆராயும் தேவன் அவரே.

பரிசுத்த ஆவியானவர்திருச்சபைகளிடத்தில் பேசுகிறார்;

காதுள்ளவர்கள் அனைவரும் கேட்க வேண்டும்!

ஜீவிக்கிறவர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ள வேண்டும்!

வெறுமனே அவற்றை புசித்துக் குடிக்க வேண்டும்,சந்தேகப்படக் கூடாது.

தேவனின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து,அவற்றிற்குச் செவிசாய்க்கும் அனைவரும்

பெரும் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள்!

தேவனின் முகத்தை ஆர்வத்துடன் தேடும் யாவருக்கும்,

புதிய வெளிச்சம் மற்றும் அறிவொளி உண்டாயிருக்கும்.

தேவனின் வார்த்தைகள்எந்த நேரத்திலும் உனக்குத் தோன்றும்,

அவை உனது ஆவியின் கண்களைத் திறக்கும்,

இதன்மூலம் நீ ஆவிக்குரிய ராஜ்யத்தின்அனைத்து இரகசியங்களையும் காணமுடியும்,

மேலும் ராஜ்யமானதுமனுஷரிடையே இருப்பதையும் நீ காண்பாய்.

அடைக்கலத்திற்குள் பிரவேசித்துவிடு,

எல்லா கிருபையும் ஆசீர்வாதங்களும்உன் மீது இருக்கும்;

பஞ்சமோ வாதையோ மிருகமோ உன்னைத் தொடாது,அவற்றால் உனக்கு தீங்கு செய்யவும் முடியாது.

நீ தேவனுடன் செல்வாய்,அவருடன் நடப்பாய்,அவருடன் மகிமைக்குள் பிரவேசிப்பாய்!

பரிசுத்த ஆவியானவர்திருச்சபைகளிடத்தில் பேசுகிறார்;

காதுள்ளவர்கள் அனைவரும் கேட்க வேண்டும்!

ஜீவிக்கிறவர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ள வேண்டும்!

வெறுமனே அவற்றை புசித்துக் குடிக்க வேண்டும்,சந்தேகப்படக் கூடாது.

தேவனின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து,அவற்றிற்குச் செவிசாய்க்கும் அனைவரும்

பெரும் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள்!

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்துபுதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

தேவனிடம் நெருங்கி உங்கள் விசுவாசத்தை அதிகரிப்பது எப்படி என்பதை அறிய விரும்புகிறீர்களா? எங்களுடன் சேர்ந்து இதை தெரிந்து கொள்ள எங்களை தொடர்பு கொள்ளவும். 👇 👇

ஒரு பதிலை விட்டுச்செல்லவும்

பகிர்க

ரத்து செய்க