தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய மனநிலை மற்றும் தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் | பகுதி 261

செப்டம்பர் 9, 2021

இந்த உலகத்திலுள்ள அனைத்துமே சர்வவல்லவருடைய எண்ணங்களினாலும், அவருடைய கண்களுக்குக் கீழும் சடுதியில் மாறுகின்றன. மனிதகுலம் கேட்டிராத காரியங்கள் திடீரென்று வருகின்றன, தொன்றுதொட்டு மனுக்குலம் வைத்திருந்த காரியங்கள் அவர்களை அறியாமலேயே அவர்கள் கைவசமிருந்து நழுவிப்போகவும் செய்கின்றன. சர்வவல்லவருடைய உறைவிடத்தை யாருமே கண்டுபிடிக்க முடியாது. அதேபோல சர்வவல்லவருடைய உயர்வையும் அவருடைய ஜீவ ஆற்றலின் மேன்மையையும் காண முடியாது. மனிதர்கள் புரிந்துகொள்ள முடியாதவைகளை அவர் புரிநந்துகொள்கிறார் என்பதிலே அவர் உயர்ந்தவராய் இருக்கின்றார். மனிதகுலத்தினால் கைவிடப்பட்டவராய் அவர் இருந்தும் மனுக்குலத்தை அவர் இரட்சிக்கிறார் என்பதிலே அவர் பெரியவராய் இருக்கின்றார். அவருக்கு ஜீவன், மரணம் என்பவைகளின் பொருள் தெரியும். அதைவிட மேலாக சிருஷ்டிக்கப்பட்ட மனுக்குலம் ஜீவிப்பதற்கான சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். மனித வாழ்க்கையின் அஸ்திபாரம் அவரே, அதுமட்டுமல்ல மனுக்குலத்தை மறுபடியும் உயிர்த்தெழச் செய்யும் இரட்சகரும் அவரே. தம்முடைய கிரியைக்காகவும், தம்முடைய திட்டத்திற்காகவும் அவர் களிப்பான இருதயங்களைத் துயரத்தினால் பாரப்படுத்தவும், துயரப்பட்டிருக்கும் இருதயங்களை மகிழ்ச்சியினால் உயர்த்தவும் செய்கின்றார்.

சர்வவல்லவர் வழங்கிய ஜீவனைவிட்டு விலகிய மனுக்குலம் ஜீவனின் நோக்கத்தைக் குறித்து அறியாமல், மரணத்தைக்குறித்து அஞ்சுகிறது. அவர்கள் உதவியோ, ஆதரவோ இல்லாமல் தவிக்கின்றார்கள். ஆனாலும் தங்கள் கண்களை மூடத் தயங்குகிறார்கள். மேலும் தங்கள் சொந்த ஆத்துமாக்களைக் குறித்து உணர்வில்லாதவர்களாய், நடைபிணங்களாய், இந்த உலகத்தில் இழிவான வாழ்க்கையை வாழ, தங்களையே வருத்திக்கொள்கின்றனர். நோக்கமில்லாமல் வாழ்கின்ற மற்றவர்களைப் போலவே நீயும், நம்பிக்கை இல்லாமல் வாழ்கின்றாய். ஆதிமுதல் இருக்கும் பரிசுத்தர் மட்டுமே தங்கள் துன்பங்களின் நடுவே வாழ்ந்துகொண்டிருக்கும், அவருடைய வருகைக்காக அதிக எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கும் ஜனங்களை இரட்சிக்க முடியும். உணர்வில்லாமல் இருப்பவர்களிடம் அப்படிப்பட்ட நம்பிக்கை இதுவரை காணப்படவில்லை. ஆனாலும் ஜனங்கள் அதற்காக அவ்வளவாய் ஏங்குகின்றனர். பெருந்துன்பத்திற்குள்ளான இந்த ஜனங்களின்மேல் சர்வவல்லவர் இரக்கமுள்ளவராய் இருக்கின்றார். அதே நேரத்தில், வெகுகாலமாய் மனிதகுலத்திடமிருந்து பதில் வர நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்ததினால், உணர்வில்லாமல் இருக்கும் இந்த ஜனங்களின்மேல் அவர் சலிப்படைந்திருக்கின்றார். நீ இனிமேலும் பசியோடும், தாகத்தோடும் இருக்காதபடி, உன்னை உணர்வடையச்செய்ய, உனக்குத் தண்ணீரையும், ஆகாரத்தையும் கொண்டுவர, உன் இருதயத்தையும், உன் ஆவியையும் தேட அவர் விரும்புகின்றார். நீ தளர்வடைந்திருக்கும்போது, இந்த உலகத்தின் நம்பிக்கையின்மையை நீ உணர ஆரம்பிக்கும்போது, நீ நம்பிக்கையை இழக்கவோ அழவோ வேண்டாம். கண்காணிப்பாளரான சர்வவல்லமையுள்ள தேவன் நீ வரும்போது உன்னை அணைத்துக்கொள்வார். அவர் உன் பக்கத்திலேயே இருந்து உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்றார், நீ அவரிடம் திரும்புவதற்காகக் காத்துக்கொண்டிருக்கின்றார். உன் நினைவு திரும்பும் நாளுக்காக அவர் காத்துக்கொண்டிருக்கின்றார். நீ அவரிடமிருந்து உருவானவன் என்று நீ உணர்ந்திட, அறியாத நேரத்தில் நீ திசை தவறிப் போனாய் என்றும், அறியாத நேரத்தில் நீ உன் உணர்வை இழந்தாய் என்றும், அறியாத நேரத்தில் உன் தகப்பனைக் கண்டடைந்தாய் என்றும் நீ அறிந்திட, சர்வவல்லவர் உனக்காக, நீ அவரிடம் திரும்பும் நாளுக்காக வெகுகாலமாய்க் காத்துக்கொண்டிருக்கின்றார். உருக்கமான ஏக்கத்தோடு அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார், உன்னுடைய பதிலுக்காக அவர் காத்துக்கொண்டிருக்கின்றார். அவருடைய கண்காணிப்பும் காத்திருப்பும் விலைமதிக்க முடியாதது. மனிதனின் இருதயத்திற்காகவும் ஆவிக்காகவுமே அவை இருக்கின்றன. ஒருவேளை அவருடைய கண்காணிப்பும் காத்திருப்பும் முடிவில்லாமல் இருக்கலாம், ஒருவேளை அவை ஒரு முடிவில் இருக்கலாம். ஆனால், உன் இருதயமும், ஆவியும் இப்பொழுது எங்குள்ளன என்பதை நீ நிச்சயமாய் அறிந்துகொள்ளவேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சர்வவல்லவரின் பெருமூச்சு” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க