தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய மனநிலை மற்றும் தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் | பகுதி 258

செப்டம்பர் 9, 2021

இந்த உலகில் நீ அழுதுகொண்டே பிறந்த கணம் முதல் நீ உனது கடமையை நிறைவேற்றத் தொடங்குகிறாய். தேவனுடைய திட்டத்திற்காகவும், அவருடைய முன்குறித்தலுக்காகவும், உனது கடைமையைச் செய்கிறாய் மற்றும் உன்னுடைய ஜீவிதப் பயணத்தை நீ தொடங்குகின்றாய். உனது பின்னணி எதுவாக இருந்தாலும், உனக்கு முன் எத்தகைய பயணம் இருந்தாலும், ஒருவராலும் பரலோகத்தின் திட்டங்களிலிருந்தும் ஏற்பாடுகளிலிருந்தும் தப்ப முடியாது. ஒருவராலும் தங்கள் தலைவிதியைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால், சர்வத்தையும் ஆளுகிறவராகிய தேவன் மட்டுமே இத்தகைய கிரியையைச் செய்ய வல்லவராயிருக்கிறார். மனிதன் தோன்றிய நாள் முதல், தேவன் எப்பொழுதும் இவ்வாறு கிரியை செய்து, பிரபஞ்சத்தை நிர்வகித்து, எல்லாவற்றிற்குமான மாற்ற விதிகளையும் அவற்றின் இயக்கத்தின் பாதையையும் கட்டளையிட்டு வருகிறார். எல்லாவற்றையும் போலவே, மனிதன் அமைதியாகவும் அறியாமலும் தேவனிடமிருந்து வரும் மதுரத்தாலும், மழையாலும் மற்றும் பனித்துளியாலும் போஷிக்கப்படுகிறான்; எல்லாவற்றையும் போலவே தேவனுடைய கரத்திலுள்ள திட்டத்தின்படி அவனை அறியாமலேயே ஜீவிக்கிறான். மனிதனுடைய இருதயமும் ஆவியும் தேவனுடைய கரத்தில் வைக்கப்பட்டுள்ளன. மனித ஜீவிதத்தின் அனைத்தும் தேவனுடைய கண்களால் பார்க்கப்படுகின்றன. நீ இதை விசுவாசிக்கின்றாயா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஜீவனுள்ளவையானாலும் ஜீவனற்றவையானாலும், தேவனுடைய எண்ணங்களுக்கு ஏற்ப எல்லா காரியங்களும் மாறும், மாற்றம் பெரும், புதுப்பிக்கப்படும் மற்றும் மறைந்துவிடும். இதுவே தேவன் எல்லாவற்றையும் ஆளுகை செய்யும் முறையாகும்.

இரவு அமைதியாக நெருங்கும்போது, மனிதன் அதை அறியாதிருக்கிறான், ஏனெனில், இரவு எப்படி நெருங்குகிறது, எங்கிருந்து வருகிறது என்பதை மனிதனுடைய இருதயத்தால் அறிந்துகொள்ள முடியாது. இரவு அமைதியாக மறையும்போது, மனிதன் பகலின் வெளிச்சத்தை வரவேற்கிறான். ஆனால் வெளிச்சம் எங்கிருந்து வந்தது என்பதையும், அது இரவின் இருளை எவ்வாறு விரட்டியது என்பதையும் அவன் அறியாதிருக்கிறான். பகல் மற்றும் இரவின் இந்த தொடர்ச்சியான மாற்றங்கள் மனிதனை ஒரு காலக் கட்டத்திலிருந்து இன்னொரு காலக் கட்டத்திற்கு, ஒரு வரலாற்றுச் சூழலில் இருந்து அடுத்த வரலாற்றுச் சூழலுக்கு அழைத்துச் செல்கின்றன. அதே நேரத்தில், ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவனுடைய கிரியை மற்றும் ஒவ்வொரு காலத்துக்குமான அவருடைய திட்டம் மேற்கொள்ளப்படுவதை இந்த மாற்றங்கள் உறுதி செய்கின்றன. இந்தக் காலகட்டங்களில் மனிதன் தேவனோடு சேர்ந்து நடந்து வந்திருக்கிறான், ஆனாலும் தேவன் எல்லா பொருட்களின் மற்றும் உயிரினங்களின் தலைவிதியை ஆளுகிறார் என்பதையும், எல்லாவற்றையும் தேவன் எவ்வாறு திட்டமிடுகிறார், வழிநடத்துகிறார் என்பதையும் அவன் அறியாதிருக்கிறான். இது மனிதனை ஆதிகாலம் முதல் இன்று வரை தவிர்த்திருக்கிறது. ஏனெனில், தேவனுடைய செயல்கள் மறைக்கப்பட்டிருப்பதாலோ அல்லது அவருடைய திட்டம் இன்னும் நிறைவேற்றப்படாததாலோ அல்ல, மனிதனுடைய இருதயமும் ஆவியும் தேவனிடமிருந்து வெகு தூரத்தில் இருப்பதால், தேவனைப் பின்தொடர்ந்தபோதும் சாத்தானுக்கு ஊழியம் செய்வதிலேயே மனிதன் இருக்கின்றான்—அதை இன்னும் அறியாமல் இருக்கின்றான். தேவனுடைய அடிச்சுவடுகளையும் தோற்றத்தையும் ஒருவரும் தீவிரமாக நாடுவதில்லை; மேலும், தேவனுடைய பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் இருக்கவும் ஒருவரும் தயாராக இல்லை. மாறாக, இந்த உலகத்திற்கும் துன்மார்க்கமான மனிதகுலம் பின்பற்றும் வாழ்க்கை விதிகளுக்கும் ஏற்ப, பொல்லாங்கனான சாத்தானின் சீர்கேட்டைச் சார்ந்திருக்க விரும்புகிறார்கள். இந்நிலையில், மனிதனுடைய இருதயமும் ஆவியும் சாத்தானுக்கு காணிக்கையாகவும் உணவுப்பொருளாகவும் மாறிவிட்டன. மேலும், மனித இருதயமும் ஆவியும் சாத்தான் வசிக்கக்கூடிய இடமாகவும் அதன் பொருத்தமான விளையாட்டு மைதானமாகவும் மாறிவிட்டன. இவ்வாறாக, மனிதன் அறியாமலேயே மனிதனாக இருப்பதற்கான நியமங்களையும் மனித இருப்புக்கான மதிப்பு மற்றும் அதன் பொருளைப் பற்றிய தனது புரிதலையும் இழக்கிறான். படிப்படியாக, மனிதனுடைய இருதயத்திலிருந்து தேவனுடைய பிராமணங்களும், தேவனுக்கும் மனிதனுக்குமான உடன்படிக்கையும் மங்கிவிடுகிறது மற்றும் அவன் தேவனைத் தேடுவதையும் தேவனிடம் கவனம் செலுத்துவதையும் நிறுத்துகிறான். காலப்போக்கில், தேவன் ஏன் தன்னை சிருஷ்டித்தார் என்று மனிதன் புரிந்துகொள்வதே இல்லை, தேவனுடைய வாயின் வார்த்தைகளையும் தேவனிடமிருந்து வரும் எதையும் மனிதன் புரிந்துகொள்வதில்லை. அதன் பின், தேவனுடைய விதிகளையும் ஆணைகளையும் மனிதன் எதிர்க்கத் தொடங்குகிறான். அதனால் அவனுடைய இருதயமும் ஆவியும் அழிந்து போகின்றன. தேவன் தாம் முதலில் சிருஷ்டித்த மனிதனை இழக்கிறார். மனிதன் தான் ஆதியில் கொண்டிருந்த வேரை இழக்கிறான். இதுவே மனித இனத்தின் துக்கமாயிருக்கிறது. உண்மையில், ஆதிகாலம் முதல் இப்போது வரை, தேவன் மனிதகுலத்திற்கு ஒரு சோக நாடகத்தையே அரங்கேற்றியுள்ளார். அதில் கதாநாயகனும் மனிதனே பாதிக்கப்பட்டவனும் மனிதனே. எனினும், இந்த சோக நாடகத்தின் இயக்குனர் யார் என்று ஒருவராலும் கூற இயலாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க