தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவன் தோன்றுதல் மற்றும் அவருடைய கிரியை | பகுதி 75

செப்டம்பர் 18, 2020

பரிசேயர்கள் இயேசுவை, ஏன் எதிர்த்தார்கள் என்பதற்கான மூலக்காரணத்தை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? பரிசேயர்களின் சாராம்சத்தை அறிய விரும்புகிறீர்களா? அவர்கள் மேசியாவைப் பற்றிய கற்பனைகளால் நிறைந்திருந்தனர். மேலும், மேசியா வருவார் என்று மட்டுமே அவர்கள் நம்பினார்கள், மாறாக ஜீவிதத்தின் சத்தியத்தைத் தேடவில்லை. ஆகவே, இன்றும் அவர்கள் மேசியாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஜீவிதத்தின் வழியைப் பற்றிய எந்த அறிவும் இல்லை, சத்தியத்தின் வழி என்னவென்றும் அறிந்திருக்கவில்லை. இதுபோன்ற முட்டாள்தனமான, பிடிவாதமான மற்றும் அறிவற்ற ஜனங்கள் தேவனின் ஆசீர்வாதத்தை எவ்வாறு பெற முடியும்? அவர்கள் மேசியாவை எவ்வாறு காண முடியும்? பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் செயல்பாட்டை அவர்கள் அறியாத காரணத்தினாலும், இயேசு பேசிய சத்தியத்தின் பாதை அவர்களுக்குத் தெரியாததாலும், மேசியாவை அவர்கள் புரிந்து கொள்ளாததாலும் அவர்கள் இயேசுவை எதிர்த்தார்கள். அவர்கள் ஒருபோதும் மேசியாவைக் கண்டிராததாலும், மேசியாவுடன் ஒருபோதும் ஐக்கியப்பட்டிராததாலும், மேசியாவின் சாராம்சத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தார்கள். ஆனால், அதே நேரத்தில், மேசியாவின் பெயரை வீணாகப் போற்றும் தவறையும் செய்தார்கள். இந்தப் பரிசேயர்கள் பொதுவாகவே பிடிவாதமானவர்கள் மற்றும் திமிர் பிடித்தவர்கள். மேலும், அவர்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியவில்லை. தேவன் மீது அவர்கள் வைத்திருந்த விசுவாசத்தின் கொள்கை என்னவென்றால்: உங்கள் பிரசங்கம் எவ்வளவுதான் ஆழ்ந்த அறிவுள்ளதாக இருந்தாலும், உங்கள் அதிகாரம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், நீங்கள் மேசியா என்று அழைக்கப்படாவிட்டால் நீங்கள் கிறிஸ்து அல்ல என்பதே. இந்தப் பார்வைகள் போலித்தனமானவை மற்றும் கேலிக்குரியவை அல்லவா? நான் உங்களிடம் மேலும் கேட்கிறேன்: இயேசுவைப் பற்றிய புரிதல் துளியளவும் உங்களிடம் இல்லாதிருந்தால், ஆரம்பகால பரிசேயர்களின் தவறுகளை நீங்களும் செய்வது உங்களுக்கு மிகவும் எளிதானதல்லவா? சத்தியத்தின் வழியை உங்களால் அறிந்துகொள்ள முடியுமா? கிறிஸ்துவை நீங்கள் எதிர்க்க மாட்டீர்கள் என்று மெய்யாகவே நீங்கள் உத்தரவாதம் அளிக்க முடியுமா? பரிசுத்த ஆவியின் கிரியையை உங்களால் பின்பற்ற இயலுமா? நீங்கள் கிறிஸ்துவை எதிர்ப்பீர்களா என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் ஏற்கனவே மரணத்தின் விளிம்பில் ஜீவிக்கிறீர்கள் என்று நான் சொல்கிறேன். மேசியாவை அறியாதவர்கள் அனைவரும் இயேசுவை எதிர்ப்பதற்கும், இயேசுவை நிராகரிப்பதற்கும், அவதூறு செய்வதற்கும் வல்லவர்களாவர். இயேசுவைப் புரிந்து கொள்ளாத ஜனங்கள் அனைவரும் அவரை நிராகரித்து அவதூறு செய்ய வல்லவர்கள். மேலும் இயேசுவின் வருகையைக் கூட சாத்தானின் வஞ்சகமாக அவர்கள் பார்க்க வல்லவர்கள். இன்னும் அதிகமான ஜனங்கள் இயேசு மாம்சத்திற்குத் திரும்பியதை குறைகூறுவார்கள். இவை அனைத்தும் உங்களை பயமுறுத்தவில்லையா? நீங்கள் எதிர்கொள்வது எல்லாம் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான அவதூறும், பரிசுத்த ஆவியானவர் திருச்சபைக்கு வழங்கும் வார்த்தைகள் அழிக்கப்படுவதும், இயேசுவால் வெளிப்படுத்தப்பட்ட அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்படும் சூழலும் ஆகும். நீங்கள் மிகவும் குழப்பமடைந்துவிட்டால், இயேசுவிடமிருந்து உங்களால் எதைப் பெற முடியும்? உங்கள் தவறுகளை நீங்கள் பிடிவாதமாக மறுத்துவிட்டால், ஒரு வெண்மேகத்தின் மீது, இயேசு மறுபடியும் மாம்சத்துக்கு திரும்பும்போது, இயேசுவின் கிரியையை நீங்கள் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன்: வெண்மேகங்களின் மீது இயேசுவின் வருகையை கண்மூடித்தனமாக எதிர்பார்த்துக் காத்திருந்தும், சத்தியத்தைப் புரிந்துக்கொள்ளாத ஜனங்கள், நிச்சயமாக பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்திப்பார்கள். மேலும், இந்த வகையான ஜனங்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள். நீங்கள் இயேசுவின் கிருபையை மட்டுமே விரும்புகிறீர்கள். பரலோகத்தின் ஆனந்த சாம்ராஜ்யத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை மட்டும் விரும்புகிறீர்கள். ஆனால் இயேசு பேசிய வார்த்தைகளுக்கு நீங்கள் ஒருபோதும் கீழ்ப்படிந்ததில்லை. இயேசு மாம்சத்தில் திரும்பி வருகையில் அவர் வெளிப்படுத்திய சத்தியத்தை ஒருபோதும் பெறவில்லை. ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பியதற்கு ஈடாக நீங்கள் எதை வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்? நீங்கள் மீண்டும் மீண்டும் பாவங்களைச் செய்து, அதன் பின் மீண்டும் மீண்டும் பாவமன்னிப்பு கேட்பது நேர்மையாகுமா? ஒரு வெண்மேகத்தின் மீது மறுபடியும் வரும் இயேசுவுக்கு பலியாக நீங்கள் எதைக் கொடுப்பீர்கள்? நீங்கள் பெருமையாகக் கருதும், உங்களுடைய ஆண்டுக்கணக்கான வேலையையா? திரும்பி வந்த இயேசு உங்களை நம்புவதற்கு நீங்கள் எதை வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்? எந்த சத்தியத்திற்கும் கீழ்ப்படியாத உங்கள் ஆணவ குணத்தையா?

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க