கிறிஸ்தவ பாடல் | தேவன் பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிறார் (Tamil Subtitles)

மார்ச் 25, 2021

பூமியில், மனிதர்களின் இருதயங்களில் நிலைத்திருக்கும் நடைமுறைத் தேவன் அவரே;

பரலோகத்தில், எல்லா சிருஷ்டிகளுக்கும் எஜமானன் தேவனே.

தேவன் மலைகள் மீதேறி, ஆறுகளை கடந்து சென்றுள்ளார்,

மனிதர்களின் உள்ளேயும் வெளியேயும் அவர் அலைந்திருக்கிறார்.

நடைமுறைத் தேவனை வெளிப்படையாக எதிர்க்கத் தைரியம் கொண்டவர் யார்?

சர்வவல்லவரின் ராஜ்யபாரத்திலிருந்து விலகிச்செல்லத் துணிந்தவர் யார்?

ஒரு சந்தேகத்தின் நிழலுக்கு அப்பால்,

பரலோகத்தில் தேவன் இருக்கிறார் என்று சொல்லத் துணிந்தவர் யார்?

மேலும், நான் பூமியில் இருக்கிறேன் என்று மறுக்கமுடியாமல்

கூறுவதற்கு தைரியம் கொண்டவர் யார்?

தேவன் வசிக்கும் இடங்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் வெளிப்படுத்தும்

திறன் கொண்டவர் மனிதர்களில் ஒருவரும் இல்லை.

தேவன் பரலோகத்தில் இருக்கும்போதெல்லாம், அவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவன்,

தேவன் பூமியில் இருக்கும்போதெல்லாம், அவரே நடைமுறைத் தேவன் என்பதனால் இருக்குமா?

நிச்சயமாக தேவன் நடைமுறைத் தேவனா இல்லையா என்பதை

எல்லா சிருஷ்டிகளையும் அவர் ஆளுகை செய்கிறவராக இருப்பதாலோ

அல்லது மனித உலகின் துன்பங்களை தேவன் அனுபவிப்பதன் மூலமோ தீர்மானிக்க முடியாது.

தேவன் பரலோகத்தில் இருக்கிறார், ஆனால் அவர் பூமியிலும் இருக்கிறார்;

சிருஷ்டியின் எண்ணற்ற பொருட்களின் மத்தியில் தேவன் இருக்கிறார்,

ஆனால் ஜனங்களிடையேயும் நான் இருக்கிறேன்.

மனிதர்கள் ஒவ்வொரு நாளும் தேவனைத் தொடலாம்;

மேலும், அவர்கள் ஒவ்வொரு நாளும் தேவனைப் பார்க்க முடியும்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க