கிறிஸ்தவ பாடல் | மாம்சமான தேவன் இரட்சிப்பின் கிரியைக்கு மிகவும் பொருத்தமானவராக இருக்கிறார் (Tamil Subtitles)

ஜூன் 21, 2021

கடைசி நாட்களில், தேவன் மாம்சத்தில் தோன்றி

தமது நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறார்.

நேரடியாக நியாயந்தீர்க்கப்படுவது சாத்தானுடைய ஆவி அல்லாமல்,

சீர்கெட்டுப்போன மாம்சத்தைக் கொண்ட மனுஷனாக இருக்கிறபடியால்,

நியாயத்தீர்ப்பு ஆவிக்குரிய உலகில் செய்யப்படாமல்,

மனுஷரின் உலகத்திலே செய்யப்படுகிறது.

நியாயத்தீர்ப்பானது தேவனுடைய ஆவியானவரால் நேரடியாக செய்யப்பட்டிருந்தால்,

அது அரவணைக்கக் கூடியதாய் இருந்திருக்காது.

அந்த கிரியையை மனுஷன் ஏற்றுக்கொள்வது கடினமானதாக இருந்திருக்கும்,

ஏனெனில் ஆவியானவரால் மனுஷனிடம் நேருக்கு நேர் முகமுகமாய் வரமுடியாது.

அதன் பலன்கள் உடனடியாக கிடைக்காது,

மேலும் மனுஷனால் தேவனின் புண்படுத்த இயலாத மனநிலையை

மிகவும் தெளிவாகப் பார்க்கவும் முடியாது.

மனுஷனின் மாம்ச சீர்கேட்டை நியாயந் தீர்ப்பதற்கான

கிரியையைச் செய்வதற்கு மாம்சத்தில் வந்த

தேவனை விட சிறந்தவர் வேறு யாருமில்லை.

மனுஷனின் மாம்ச சீர்கேட்டை நியாயந் தீர்ப்பதற்கான

கிரியையைச் செய்வதற்கு மாம்சத்தில் வந்த

தேவனை விட சிறந்தவர் வேறு யாருமில்லை.

மாம்சத்திலுள்ள தேவன் மனுக்குலத்தின் சீர்கேட்டை நியாயந்தீர்த்தால் மாத்திரமே,

சாத்தானை முழுமையாக தோற்கடிக்க முடியும்.

மனிதனைப்போல சாதாரண மனிதத்தன்மையைக் கொண்ட

அவரால் மனிதனின் அநீதியை நேரடியாக நியாயந்தீர்க்க முடியும்.

இது அவருடைய உள்ளார்ந்த பரிசுத்தத்தையும்

மற்றும் அவருடைய அபூர்வத் தன்மையையும் குறிப்பிடுகிறது.

தேவன் ஒருவர் மாத்திரமே மனுஷனை

நியாயந்தீர்க்கும் இடத்தில் இருக்கிறார்,

ஏனெனில் அவர் சத்தியத்தையும் நீதியையும் கொண்டிருக்கிறார்.

இவையல்லாமல் நியாயந்தீர்க்க ஒருவரும் தகுதியானவர்கள் அல்ல.

இக்கிரியை தேவனுடைய ஆவியானவரால் செய்யப்பட்டிருந்தால்,

அது சாத்தான் மீதான ஜெயத்தைக் குறிக்காது.

சாவுக்குரிய மனிதனைவிட ஆவியானவர் மிகவும் உயர்ந்தவர்.

அவர் பரிசுத்தமானவர் மற்றும் மாம்சத்தின் மீது வெற்றிசிறந்தவர்.

இந்தக் கிரியையை ஆவியானவர் நேரடியாகச் செய்திருந்தால்,

மனுஷனுடைய சகல கீழ்ப்படியாமையையும் அவரால் நியாயந்தீர்க்க முடியாது,

மேலும் மனுஷனுடைய சகல அநீதியையும் வெளிப்படுத்த முடியாது.

மனுஷனின் மாம்ச சீர்கேட்டை நியாயந் தீர்ப்பதற்கான

கிரியையைச் செய்வதற்கு மாம்சத்தில் வந்த

தேவனை விட சிறந்தவர் வேறு யாருமில்லை.

மனுஷனின் மாம்ச சீர்கேட்டை நியாயந் தீர்ப்பதற்கான

கிரியையைச் செய்வதற்கு மாம்சத்தில் வந்த

தேவனை விட சிறந்தவர் வேறு யாருமில்லை.

நியாயத்தீர்ப்பானது தேவனைப் பற்றிய

மனுஷனுடைய கருத்துக்கள் மூலமாக செய்யப்படுவதால்,

மனுஷனிடம் ஆவியானவரைப் பற்றிய எந்தக் கருத்துக்களும் கிடையாது,

ஆகையால், மனுஷனுடைய அநீதியை ஆவியானவரால் காண்பிக்க முடியாது,

மேலும் அநீதியை முழுமையாக வெளிப்படுத்தவும் முடியாது.

மாம்சமான தேவன் அவரை அறியாத எவருக்கும் சத்துருவாக இருக்கிறார்.

மனுஷனின் கருத்துக்களையும் அவரை எதிர்ப்பதையும் நியாயந்தீர்ப்பதன் மூலம்,

மனுக்குலத்தின் கீழ்ப்படியாமை அவர் வெளிப்படுத்துகிறார்.

ஆவியானவரின் கிரியைக் காட்டிலும் மாம்சத்தில் அவர் செய்த கிரியையின்

பலன்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன.

ஆகையால், நியாயத்தீர்ப்பு ஆவியானவரால் நேரடியாக செய்யப்படுவதில்லை,

மாறாக அது மாம்சமான தேவனின் கிரியையாயிருக்கிறது.

மனுஷனின் மாம்ச சீர்கேட்டை நியாயந் தீர்ப்பதற்கான

கிரியையைச் செய்வதற்கு மாம்சத்தில் வந்த

தேவனை விட சிறந்தவர் வேறு யாருமில்லை.

மனுஷனின் மாம்ச சீர்கேட்டை நியாயந் தீர்ப்பதற்கான

கிரியையைச் செய்வதற்கு மாம்சத்தில் வந்த

தேவனை விட சிறந்தவர் வேறு யாருமில்லை.

மாம்சத்திலுள்ள தேவனை மனுஷனால் காணவும், தொட்டுணரவும் முடியும்.

மாம்சத்திலுள்ள தேவனால் மனுஷனை முழுமையாக ஜெயங்கொள்ள முடியும்.

மாம்சத்திலுள்ள தேவனுடனான தனது உறவில், மனுஷன் எதிர்ப்பிலிருந்து கீழ்ப்படிதலுக்கும்,

துன்புறுத்துதலிலிருந்து ஏற்றுக்கொள்ளுதலுக்கும்,

கருத்துக்களிலிருந்து அறிவுக்கும் மற்றும்

புறக்கணிப்பதிலிருந்து அன்புக்கும் முன்னேறுகிறான்.

இவைதான் மாம்சமான தேவனுடைய கிரியையின் பலன்களாகும்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நீங்கள் பிரார்த்தனையில் நகர்த்தபடவில்லை என்றால், பிஸியான வேலையின் காரணமாக தேவனை நெருங்க உங்களுக்கு நேரமில்லை என்றால் என்ன செய்வது? எங்கள் ஆன்லைன் கூட்டுறவில் சேருங்கள்.

ஒரு பதிலை விட்டுச்செல்லவும்

பகிர்க

ரத்து செய்க