கிறிஸ்தவ பாடல் | பூமியின் கிழக்கில் தேவன் தமது மகிமையோடு தோன்றியுள்ளார் | Gospel Choir

ஏப்ரல் 21, 2023

பிரபஞ்சம் முழுவதும் தேவன் தமது கிரியையைச் செய்கிறார்,

கிழக்கில், இடிமுழக்கங்கள் முடிவில்லாமல் தோன்றி,

எல்லா நாடுகளையும் மதங்களையும் அசைக்கின்றன.

எல்லா மனிதர்களையும் நிகழ்காலத்திற்கு இட்டுச் சென்றது தேவனுடைய சத்தம்.

எல்லா மனிதர்களையும் அவரது சத்தத்தால் ஜெயங்கொண்டு,

இந்தப் பிரவாகத்திற்குள் விழச் செய்கிறார்.

அவருக்கு முன்பாக கீழ்ப்படியச் செய்வார்.

ஏனென்றால், அவர் நீண்ட காலமாக

அவரது மகிமையை பூமியெங்கிலும் இருந்து

மீட்டெடுத்து கிழக்கில் புதிதாக வெளியிட்டார்.

அவரது மகிமையைக் காண விரும்பாதோர் யார்?

அவரது வருகையை ஆவலுடன் எதிர்பார்க்காதோர் யார்?

அவர் மீண்டும் தோன்றுவதற்கு தாகம் கொள்ளாதோர் யார்?

அவரது அழகை எண்ணி ஏங்காதோர் யார்?

வெளிச்சத்திற்கு வராதோர் யார்?

கானானின் செழுமையை நோக்காதோர் யார்?

மீட்பர் திரும்புவதற்கு ஏங்காதோர் யார்?

வல்லமையில் பெரியவரை வணங்காதோர் யார்?

தேவனது சத்தம் பூமியெங்கும் பரவுகிறது.

அவர் தேர்ந்தெடுத்த ஜனங்களை எதிர்கொண்டு,

அவர்களிடம் அதிக வார்த்தைகளைப் பேசுவார்.

மலைகளையும் ஆறுகளையும் உலுக்கும் வலிமையான இடியைப் போல,

தேவன் தம் வார்த்தைகளை முழுப் பிரபஞ்சத்துக்கும்

மனிதகுலத்துக்கும் பேசுகிறார்.

எனவே, தேவனுடைய வாயில் உள்ள வார்த்தைகள்

மனிதனின் பொக்கிஷமாகிவிட்டன.

மக்கள் அவருடைய வார்த்தைகளைப் போஷித்துக்காப்பாற்றுகிறார்கள்.

கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மின்னல் ஒளிர்கிறது.

தேவனுடைய வார்த்தைகளை, மனிதன் விட்டுகொடுக்க வெறுக்கிறான்,

அதே நேரத்தில் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாதவனாகவும் இருக்கிறான்.

எனினும், அவற்றில் இன்னும் அதிகமாகச் சந்தோஷப்படுகிறான்.

தேவனுடைய வருகையைக்

குழந்தை பிறந்தது போல் கொண்டாடி

மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

அவரது சத்தத்தின் மூலம்,

தேவன் எல்லா மனிதர்களையும் தம் முன் கொண்டு வருவார்.

அதன்பின்னர், தேவன் மனித இனத்திற்குள் முறையாக நுழைவார்,

இதன்மூலம் அவர்கள் அவரைத் தொழுதுகொள்ள வருவார்கள்.

அவரது மகிமையின் பிரகாசத்தையும் வாயின் வார்த்தைகளையும் கொண்டு

தேவன் எல்லா மனிதர்களையும் அவருக்கு முன்பாக வரவைத்து

கிழக்கில் இருந்து மின்னல் பிரகாசிப்பதைக் காணச்செய்வார்.

தேவன் கிழக்கிலுள்ள “ஒலிவ மலையில்” இறங்கியிருப்பதையும் காண்பார்கள்

யூதர்களின் குமாரனாக அல்லாமல்

கிழக்கின் மின்னலாக அவர் ஏற்கனவே நீண்ட காலமாகப்

பூமியில் இருப்பதை அவர்கள் காண்பார்கள்.

தேவன் மனிதகுலத்தின் மத்தியிலிருந்து புறப்பட்டுச் சென்று,

பின்னர் மனிதர்களிடையே மகிமையுடன் மீண்டும் தோன்றியுள்ளார்.

எண்ணற்ற யுகங்களுக்கு முன்பே வணங்கப்பட்டவர் தேவனே.

இஸ்ரவேலர்களால் எண்ணற்ற யுகங்களுக்கு

முன்பே கைவிடப்பட்ட குழந்தை அவரே.

அதுமட்டுமல்லாமல், தற்போதைய யுகத்தின் எல்லா மகிமையும் உள்ள,

சர்வவல்லமையுள்ள தேவன் அவரே!

அனைவரும் அவரது சிங்காசனத்திற்கு முன்பாக வந்து

அவரது மகிமையின் முகத்தைக் காணட்டும்,

அவரது சத்தத்தைக் கேட்கட்டும், அவரது கிரியைகளைப் பார்க்கட்டும்.

இதுதான் தேவனது முழுமையான சித்தமாகும்.

இது அவரது திட்டத்தின் முடிவு மற்றும் உச்சக்கட்டம் மற்றும்

அவரது ஆளுகையின் நோக்கம் ஆகும்.

அதாவது ஒவ்வொரு தேசமும் தேவனை வணங்க வேண்டும்,

ஒவ்வொரு நாவும் அவரை அறிக்கை செய்ய வேண்டும்,

ஒவ்வொரு மனிதனும் அவர் மீது விசுவாசம் கொள்ள வேண்டும்,

ஒவ்வொரு ஜனமும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்,

ஒவ்வொரு மனிதனும் அவர் மீது விசுவாசம் கொள்ள வேண்டும்,

ஒவ்வொரு ஜனமும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்,

ஒவ்வொரு மனிதனும் அவர் மீது விசுவாசம் கொள்ள வேண்டும்,

ஒவ்வொரு ஜனமும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்!

ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள் என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க