கிறிஸ்தவ பாடல் | மனிதனின் ஜீவிதத்திற்காக தேவன் எல்லாத் துன்பங்களையும் சகித்துக் கொள்கிறார்

அக்டோபர் 27, 2020

மனித ஜீவிதத்தின் தோற்றம் மற்றும்

தொடர்ச்சியை ஆளும் ரகசியங்களை இதுவரை யாரும் பார்த்ததில்லை.

இவை அனைத்தையும் புரிந்துகொண்ட ஒரே ஒருவரான தேவன், தன்னிடமிருந்து எல்லாவற்றையும்

பெற்ற பின்னரும் நன்றியற்று காணப்படும் மனிதர்கள் அவருக்குக் கொடுக்கும்

காயங்களையும் அடிகளையும் மவுனமாக சகித்துக்கொள்கிறார்.

ஜீவிதம் தரும் அனைத்தையும் மனிதன் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்கிறான்.

அதைப் போலவே வழக்கமான முறையில், மனிதன் தேவனையும் மறக்கிறான்,

தேவைக்கு மாத்திரம் பயன்படுத்திவிட்டு துரோகம் செய்கிறான்.

தேவனுடைய சித்தம் உண்மையிலேயே அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததா?

தேவனுடைய கரத்தின் கிரியையான மனிதன்

உண்மையிலேயே அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவனா?

தேவனுடைய சித்தம் நிச்சயமாக முக்கியத்துவம் வாய்ந்தது தான்;

எனினும், அவர் கரத்தால் சிருஷ்டிக்கப்பட்ட

இந்த ஜீவன் அவருடைய திட்டத்துக்காக உள்ளது.

எனவே, மனித இனத்தின் மீதான வெறுப்பால் தேவன் தனது திட்டத்தை வீணடிக்க முடியாது.

அவருடைய சித்தத்திற்காகவும் தாம் கொடுத்த சுவாசத்திற்காகவும்

தேவன் எல்லா வேதனைகளையும் சகித்துக்கொள்கிறார் தேவன் எல்லா வேதனைகளையும் சகித்துக்கொள்கிறார்.

இது மனிதனுடைய மாம்சத்திற்காக அல்ல, அவனுடைய ஜீவனுக்காகவே.

மனிதனுடைய மாம்சத்தையல்ல, தாம் சுவாசித்த

ஜீவனை திரும்பப் பெறுவதற்காகவே அவர் அவ்வாறு செய்கிறார்.

இது அவருடைய திட்டம். இது அவருடைய திட்டம்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க