கிறிஸ்தவ பாடல் | கிறிஸ்துவின் அடையாளம் அவரே தேவன் என்பதாகும்

741 |செப்டம்பர் 24, 2020

தேவன் மாம்சமாக மாறுவதால்,

அவர் தம்முடைய மாம்சத்தின் அடையாளத்தில் செயல்படுகிறவராயிருக்கிறார்;

அவர் மாம்சத்தில் வருவதால்,

அவர் மாம்சத்தில் செய்ய வேண்டிய கிரியையைச் செய்து முடிக்கிறார்.

அது தேவனுடைய ஆவியாக இருந்தாலும் அல்லது கிறிஸ்துவாக இருந்தாலும், இருவரும் தேவனே,

அவர் தாம் செய்ய வேண்டிய கிரியையைச் செய்கிறார்,

மற்றும் அவர் தாம் செய்ய வேண்டிய ஊழியத்தைச் செய்கிறார்.

அவர் தமது கிரியையை எவ்வாறு செய்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல்,

தேவனுக்குக் கீழ்ப்படியாத வகையில் அவர் செயல்பட மாட்டார்.

அவர் மனிதனிடம் எதைக் கேட்டாலும்,

எந்தவொரு கோரிக்கையும் மனிதனால் அடையக்கூடியதை விட அதிகமானது அல்ல.

அவர் செய்வதெல்லாம் தேவனுடைய சித்தத்தைச் செய்வதும்

மற்றும் அவருடைய நிர்வாகத்திற்குமே ஆகும்.

கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையானது சகல மனுஷருக்கும் மேலானது;

ஆகையால், சிருஷ்டிக்கப்பட்ட எல்லா உயிரினங்களிலும் அவர் மிக உயர்ந்த அதிகாரம் உடையர்.

இந்த அதிகாரம் அவருடைய தெய்வீகத்தன்மையாகும்,

அதாவது தேவனுடைய மனநிலை மற்றும் அவரே தேவன்,

அதுதான் அவருடைய அடையாளத்தைத் தீர்மானிக்கிறது.

ஆகையால், அவருடைய மனிதத்தன்மை எவ்வளவு சாதாரணமாக இருந்தாலும்,

அவர் தேவனுடைய அடையாளத்தைக் கொண்டிருக்கிறார் என்பது மறுக்க முடியாததாகும்;

அவர் எந்த நிலைப்பாட்டில் இருந்து பேசினாலும்,

அவர் தேவனுடைய சித்தத்திற்கு எந்த அளவுக்கு கீழ்ப்படிந்தாலும்,

அவர் தேவன் இல்லை என்று சொல்ல முடியாது.

ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள் என்பதிலிருந்து

மேலும் பார்க்க

தேவனிடம் நெருங்கி உங்கள் விசுவாசத்தை அதிகரிப்பது எப்படி என்பதை அறிய விரும்புகிறீர்களா? எங்களுடன் சேர்ந்து இதை தெரிந்து கொள்ள எங்களை தொடர்பு கொள்ளவும்.

ஒரு பதிலை விட்டுச்செல்லவும்

1 கருத்து

  1. Solomon paul சொல்கிறார்:

    Praise the lord…god bless you…

பகிர்க

ரத்து செய்க