தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 30
இன்றைய நாளின் ஜெயங்கொள்ளும் கிரியையானது மனுஷனின் முடிவு என்ன என்பதைத் தெளிவுபடுத்தும் நோக்கில் உள்ளது. இன்றைய ஆக்கினைத்தீர்ப்பும்...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
சாத்தானால் மிகவும் ஆழமாகச் சீர்கெட்டுப்போன மனுஷகுலம், தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை அறியாமல், தேவனை வணங்குவதை நிறுத்திவிட்டனர். ஆதியில், ஆதாமும் ஏவாளும் சிருஷ்டிக்கப்பட்டபோது, யேகோவாவின் மகிமையும் சாட்சியமும் எப்போதும் இருந்தன. ஆனால் சீர்கெட்டுப்போன பின், மனுஷன் மகிமையையும் சாட்சியத்தையும் இழந்தான், ஏனென்றால் எல்லோரும் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள், மேலும் அவரை வணங்குவதைக் கூட முற்றிலும் நிறுத்திவிட்டார்கள். இன்றைய ஜெயங்கொள்ளுதல் கிரியையானது எல்லா சாட்சியங்களையும் எல்லா மகிமையையும் மீட்டெடுப்பதற்கும், மற்றும் எல்லா மனுஷரையும் தேவனை வணங்க வைப்பதற்குமாகும், இதனால் சிருஷ்டிக்கப்பட்டவர்களிடையே சாட்சியம் இருக்கும்; இந்தக் கட்டத்தில் செய்ய வேண்டிய கிரியை இதுவே. மனுஷகுலம் எவ்வாறு ஜெயங்கொள்ளப்பட வேண்டும்? மனுஷனை முழுமையாக நம்ப வைக்க இந்தக் கட்டத்தின் வார்த்தைகளின் கிரியையைப் பயன்படுத்துவதன் மூலமும்; வெளிப்படுத்துதல், நியாயத்தீர்ப்பு, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் இரக்கமற்ற சாபம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவனை முற்றிலும் இணங்க வைப்பதன் மூலமும்; மனுஷனின் கலகத்தன்மையை வெளிப்படுத்துவதன் மூலமும், அவனது எதிர்ப்பை நியாயந்தீர்ப்பதன் மூலமும் அவன் மனுஷகுலத்தின் அநீதியையும் அசுத்தத்தையும் அறிந்து கொள்ளக்கூடும், இதன்மூலம் இவற்றை தேவனின் நீதியான மனநிலைக்கு ஒரு பிரதிபலிப்புப் படலமாகப் பயன்படுத்தலாம். இந்த வார்த்தைகளின் மூலம்தான் மனுஷன் ஜெயங்கொள்ளப்படுகிறான், முழுமையாக சமாதானமடைகிறான். வார்த்தைகள்தான் மனுஷகுலத்தை இறுதியாக ஜெயங்கொள்வதற்கான வழிமுறையாகும், மேலும் தேவனின் ஜெயங்கொள்ளுதலை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும் அவருடைய வார்த்தைகளின் பலமான தாக்குதலையும் மற்றும் நியாயத்தீர்ப்பையும் ஏற்க வேண்டும். இன்றைய நாளில் பேசப்படும் செயல்முறையானது துல்லியமாக ஜெயங்கொள்ளுதலின் செயல்முறையாகும். ஜனங்கள் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும்? இந்த வார்த்தைகளை எவ்வாறு புசிக்கவும் பருகவும் வேண்டும் என்பதை அறிந்து, அவற்றைப் பற்றிய புரிதலை அடைவதன் மூலம் ஜனங்கள் ஒத்துழைக்க வேண்டும். ஜனங்கள் எவ்வாறு ஜெயங்கொள்ளப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தவரை, இது அவர்களால் செய்யக்கூடிய ஒன்றல்ல. உன்னால் செய்யக்கூடியதெல்லாம், இந்த வார்த்தைகளை புசித்துப் பருகுவதன் மூலம், உன் சீர்கேடு மற்றும் அசுத்தம், உன் கலகத்தன்மை, உன் அநீதி ஆகியவற்றை அறிந்து, தேவனுக்கு முன்பாக விழுவதே ஆகும். தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொண்ட பிறகு, உங்களால் அதைக் கடைப்பிடிக்க முடியும், மேலும் உங்களுக்குத் தரிசனங்கள் இருந்து, இந்த வார்த்தைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தும், எந்தவொரு தேர்வையும் நீங்களே செய்யாவிட்டால், நீங்கள் ஜெயங்கொள்ளப்படுவீர்கள்—இது இந்த வார்த்தைகளின் விளைவாக இருக்கும். மனுஷகுலம் ஏன் சாட்சியத்தை இழந்தனர்? ஏனென்றால், தேவன் மீது யாருக்கும் விசுவாசம் இல்லை, ஏனென்றால் ஜனங்களின் மனதில் தேவனுக்கு இடமில்லை. மனுஷகுலத்தை ஜெயங்கொள்வது என்பது மனுஷகுலத்தின் விசுவாசத்தை மீட்டெடுப்பதாகும். ஜனங்கள் எப்போதுமே இம்மைக்குரிய உலகில் கண்மூடித்தனமாக ஓட விரும்புகிறார்கள், அவர்கள் பல நம்பிக்கைகளை வைத்திருக்கிறார்கள், தங்கள் எதிர்காலத்திற்காக அதிகம் விரும்புகிறார்கள், மற்றும் பல ஆடம்பரமான கோரிக்கைகளையும் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் மாம்சத்தைப் பற்றியே சிந்திக்கிறார்கள், மாம்சத்திற்காகத் திட்டமிடுகிறார்கள், தேவனை விசுவாசிப்பதற்கான வழியைத் தேடுவதில் அவர்களுக்கு அக்கறை இருப்பதில்லை. அவர்களுடைய இருதயங்கள் சாத்தானால் பறிக்கப்பட்டுள்ளன, அவர்கள் தேவன் மீதுள்ள பயபக்தியை இழந்துவிட்டார்கள், அவர்கள் சாத்தான் மீது அளவுக்கு மீறிப் பற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மனுஷன் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவன். இவ்வாறு, மனுஷன் சாட்சியை இழந்துவிட்டான், அதாவது தேவனின் மகிமையை இழந்துவிட்டான். மனுஷகுலத்தை ஜெயங்கொள்வதன் நோக்கம் தேவன் மீதான மனுஷனின் பயபக்தியின் மகிமையை மீட்டெடுப்பதாகும். இதை இவ்வாறும் சொல்லலாம்: ஜீவிதத்தைப் பின்தொடராதவர்கள் பலர் உள்ளனர்; ஜீவிதத்தைப் பின்தொடரும் சிலர் இருந்தாலும், அவர்கள் எண்ணிக்கையில் ஒரு சிலரே. ஜனங்கள் தங்கள் எதிர்காலத்தில் ஆர்வமாக உள்ளனர், அதனால் ஜீவிதத்தில் எந்தக் கவனமும் செலுத்துவதில்லை. சிலர் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்கிறார்கள், எதிர்க்கிறார்கள், அவருடைய முதுகுக்குப் பின்னால் அவரை நியாயந்தீர்க்கிறார்கள், சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில்லை. இந்த ஜனங்கள் இப்போது புறக்கணிக்கப்படுகிறார்கள்; இப்போதைக்கு, இந்த கலகக் குமாரர்களுக்கு எதுவும் செய்யப்படப் போவதில்லை, ஆனால் எதிர்காலத்தில் நீ இருளில் வாழ்வாய், அழுவாய், பற்களைக் கடித்துக்கொள்வாய். நீ வெளிச்சத்தில் ஜீவித்திருக்கும்போது அதன் விலைமதிப்பற்ற தன்மையை நீ உணர்வதில்லை, ஆனால் நீ இருள் சூழ்ந்த இரவில் ஜீவித்திருக்கும் போது அந்த விலைமதிப்பற்ற தன்மையை நீ உணருவாய், அப்போது நீ வருந்துவாய். நீ இப்போது நன்றாக இருப்பதாய் உணர்கிறாய், ஆனால் நீ வருந்தும் நாள் வரும். அந்த நாள் வரும்போது, இருள் இறங்கி வெளிச்சம் எங்கேயும் இல்லாதபோது, மிகவும் தாமதமாக வருத்தப்படுவாய். இன்றைய கிரியையை நீ இன்னும் புரிந்து கொள்ளாததால் தான், இப்போது உனக்கு இருக்கும் இந்த நேரத்தை நீ மதிக்கத் தவறுகிறாய். முழு பிரபஞ்சத்தின் கிரியையும் தொடங்கியவுடன், இன்று நான் சொல்லும் அனைத்தும் நிறைவேறியதும், பலர் தலையைப் பிடித்து, வேதனையால் கண்ணீர் சிந்தி அழுவார்கள். அவ்வாறு செய்யும்போது, அவர்கள் அழுதுகொண்டும் பற்களைக் கடித்துக்கொண்டும் இருளில் விழுந்துவிட்டிருப்பார்கள் அல்லவா? உண்மையிலேயே ஜீவிதத்தைப் பின்தொடர்ந்து பரிபூரணமாக்கப்பட்ட அனைவரும் பயன்படுத்தப்படலாம், அதே நேரத்தில் பயன்படுத்த தகுதியற்ற கலகக் குமாரர்கள் அனைவரும் இருளில் விழுவார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியின் கிரியையை இழந்துவிடுவார்கள், எதையும் புரிந்துகொள்ளவும் இயலாது போய்விடும். இவ்வாறு அவர்கள் தண்டனையில் மூழ்கடிக்கப்பட்டு, துன்புறுத்தப்படுவார்கள். கிரியையின் இந்தக் கட்டத்தில் நீ நன்கு தயாராக இருந்தால், உன் ஜீவிதத்தில் நீ வளர்ந்திருந்தால், நீ பயன்படுத்த தகுதியுடையவனாக இருப்பாய். நீ தயாராகாமல் இருந்தால், அடுத்தக் கட்டக் கிரியைக்கு நீ வரவழைக்கப்பட்டாலும், நீ பயன்படுத்துவற்குத் தகுதியற்றவனாக இருப்பாய்—இந்தக் கட்டத்தில் நீ தயாராக இருக்க விரும்பினாலும் உனக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்காது. தேவன் புறப்பட்டுச் சென்றிருப்பார்; இப்போது உனக்கு முன் இருக்கும் வாய்ப்பைக் கண்டுபிடிக்க உன்னால் எங்கு செல்லமுடியும்? தேவனால் தனிப்பட்ட முறையில் வழங்கப்படும் பயிற்சியைப் பெற உன்னால் எங்கு செல்ல முடியும்? அதற்குள், தேவன் தனிப்பட்ட முறையில் பேசவோ அல்லது குரல் கொடுக்கவோ மாட்டார்; உன்னால் செய்ய முடிந்ததெல்லாம் இன்று பேசப்படும் விஷயங்களைப் படிப்பது மட்டுமே ஆகும்—அப்படியானால் புரிதல் எவ்வாறு எளிதாக வரும்? இன்றைய ஜீவிதத்தை விட எதிர்காலத்தில் இருக்கும் ஜீவிதம் எவ்வாறு சிறப்பாக இருக்கும்? அந்தச் சமயத்தில், நீ அழுதுகொண்டே பற்களைக் கடித்துக்கொண்டு ஒரு நடைபிணமாய்த் துயரப்பட மாட்டாயா? உனக்கு இப்போது ஆசீர்வாதங்கள் வழங்கப்படுகின்றன, ஆனால் அவற்றை எவ்வாறு அனுபவிப்பது என்று உனக்கு தெரியவில்லை; நீ ஆசீர்வாதத்துடன் ஜீவிக்கிறாய், ஆனாலும் நீ அதை அறியாமல் இருக்கிறாய். நீ கஷ்டப்படத்தான் போகிறாய் என்பதை இது நிரூபிக்கிறது! இன்று, சிலர் எதிர்க்கிறார்கள், சிலர் கலகம் செய்கிறார்கள், சிலர் இதையும் அதையும் செய்கிறார்கள், நான் அதை வெறுமனே புறக்கணிக்கிறேன், ஆனால் நீ என்ன செய்யவிருக்கிறாய் என்று எனக்குத் தெரியாது என்று மட்டும் நினைத்திட வேண்டாம். உன் சாராம்சம் எனக்குப் புரியாததா? எனக்கு எதிராக ஏன் தொடர்ந்து மோதிக்கொண்டிருக்கிறாய்? உன் சொந்த நலனுக்காக ஜீவிதத்தையும் ஆசீர்வாதங்களையும் பின்தொடர நீ தேவனை விசுவாசிப்பதில்லையா? நீ விசுவாசிப்பது உன் சொந்த நோக்கத்திற்காக இல்லையா? தற்போதைய தருணத்தில், நான் ஜெயங்கொள்ளும் கிரியையைப் பேசுவதன் மூலம் மட்டுமே செய்து கொண்டிருக்கிறேன், இந்த ஜெயங்கொள்ளும் கிரியை முடிவுக்கு வந்ததும், உனது முடிவு தெளிவாகத் தெரியும். அதை நான் உனக்கு வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (1)" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
இன்றைய நாளின் ஜெயங்கொள்ளும் கிரியையானது மனுஷனின் முடிவு என்ன என்பதைத் தெளிவுபடுத்தும் நோக்கில் உள்ளது. இன்றைய ஆக்கினைத்தீர்ப்பும்...
நான் உங்கள் மத்தியில் அநேகக் கிரியைகளைச் செய்திருக்கிறேன் மேலும், நிச்சயமாகவே பல கூற்றுக்களையும் கூறியிருக்கின்றேன். இருந்தும் என்...
பேதுரு தேடியதெல்லாம் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றதுதான். அவன் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற முயன்றான். துன்பங்களையும் இன்னல்களையும்...
தங்கள் விசுவாசத்தில், தேவன் அவர்களுக்கு ஒரு பொருத்தமான சென்றடையும் இடத்தையும் அவர்களுக்குத் தேவையான எல்லா கிருபையையும் அளிப்பதையும், அவரைத்...