தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 206

முந்தைய இரண்டு யுகங்களின் கிரியைகளில் ஒரு படிநிலை இஸ்ரவேலில் செய்து முடிக்கப்பட்டது, மற்றொன்று யூதேயாவில் செய்து முடிக்கப்பட்டது. பொதுவாகச் சொன்னால், இந்த கிரியையின் எந்தக் கட்டமும் இஸ்ரவேலுக்கு வெளியே செய்யப்படவில்லை, ஒவ்வொன்றும் முதலில் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் மீதே செய்யப்பட்டது. இதன் பலனாக, யேகோவா தேவன் இஸ்ரவேலருக்கு மட்டுமே தேவன் என்று இஸ்ரவேலர் நம்புகிறார்கள். இயேசு, சிலுவையில் அறையப்படும் கிரியையைச் செய்த யூதேயாவில் அவர் கிரியைப் புரிந்ததால், யூதர்கள் அவரை யூத ஜனங்களின் மீட்பராகக் கருதுகிறார்கள். அவர் யூதர்களுக்கு மட்டுமே ராஜா, வேறு எந்த ஜனங்களுக்கும் இல்லை என்றும், அவர் ஆங்கிலேயர்களை மீட்கும் கர்த்தர் இல்லை, அமெரிக்கர்களை மீட்கும் கர்த்தரும் இல்லை, ஆனால் இஸ்ரவேலரை மீட்கும் கர்த்தர் என்றும்; அவர் இஸ்ரவேலில் மீட்டது யூதர்களையே என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில், தேவன் எல்லாவற்றிற்கும் எஜமானர். அவரே சகல சிருஷ்டிகளின் தேவன். அவர் இஸ்ரவேல் புத்திரருக்கு மட்டுமோ, யூதர்களுக்கு மட்டுமோ தேவனாக இல்லை; அவர் சகல சிருஷ்டியின் தேவனாக இருக்கிறார். அவருடைய கிரியையின் முந்தைய இரண்டு கட்டங்கள் இஸ்ரவேலில் நடந்தன, இது ஜனங்களிடையே சில கருத்துக்களை உருவாக்கியது. யேகோவா இஸ்ரவேலில் தம்முடைய கிரியையைச் செய்தார் என்றும், இயேசு தாமே யூதேயாவில் தம்முடைய கிரியையைச் செய்தார் என்றும், மேலும், அவர் கிரியை செய்வதற்காக மாம்சமானார் என்றும்—எதுவாக இருந்தாலும், இந்தக் கிரியை இஸ்ரவேலுக்கு அப்பால் பரவவில்லை என்றும் அவர்கள் நம்புகிறார்கள். தேவன் எகிப்தியர்களிடமோ அல்லது இந்தியர்களிடமோ கிரியையை நடப்பிக்கவில்லை; அவர் இஸ்ரவேலரிடத்தில் மட்டுமே கிரியை செய்தார். இவ்வாறு ஜனங்கள் பல்வேறு கருத்துக்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள், மேலும் தேவனின் கிரியையை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் சித்தரிக்கிறார்கள். தேவன் கிரியை செய்யும் போது, தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களிடமும், இஸ்ரவேலிலும் அவர் அவ்வாறு செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்; இஸ்ரவேலரைத் தவிர, தேவன் வேறு யாரிடத்திலும் கிரியை செய்வதில்லை, அவருடைய கிரியைக்கு இதைவிட பெரிய நோக்கம் இல்லை என்கின்றனர். மனுவுருவான தேவனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் அவர்கள் குறிப்பாக கண்டிப்புடன் இருக்கிறார்கள், மேலும் அவரை இஸ்ரவேலின் எல்லைகளுக்கு அப்பால் செல்ல அனுமதிப்பதில்லை. இவை அனைத்தும் மனித கருத்துக்கள் இல்லையா? தேவன் வானத்தையும் பூமியையும் எல்லாவற்றையும் சிருஷ்டித்தார், சகல சிருஷ்டிகளையும் சிருஷ்டித்தார், அதனால் அவர் தனது கிரியையை இஸ்ரவேலுக்கு மட்டும் என்று எப்படி வரையறைப்படுத்த முடியும்? அப்படியானால், சகல சிருஷ்டிகளையும் அவர் சிருஷ்டித்ததன் நோக்கம் என்ன? அவர் உலகம் முழுவதையும் சிருஷ்டித்தார், மேலும் இஸ்ரவேலில் மட்டுமல்ல, அவர் தனது ஆறாயிரம் ஆண்டு ஆளுகைத் திட்டத்தைப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரிடமும் நிறைவேற்றியுள்ளார். அவர்கள் சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ரஷ்யாவில் ஜீவிக்கிறார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு மனிதரும் ஆதாமின் சந்ததியினராய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். அவர்களில் ஒருவராலும் சிருஷ்டிப்பின் எல்லையிலிருந்து தப்ப முடியாது, அவர்களில் ஒருவர் கூட "ஆதாமின் சந்ததியினர்" என்ற அடையாளத்திலிருந்து தங்களைப் பிரிக்க முடியாது. அவர்கள் அனைவரும் தேவனின் சிருஷ்டிகள், அவர்கள் அனைவரும் ஆதாமின் சந்ததியினர், அவர்கள் அனைவரும் ஆதாம் மற்றும் ஏவாளின் சீர்கெட்ட சந்ததியினரும் ஆவர். தேவனின் சிருஷ்டியாக இருப்பது இஸ்ரவேலர் மட்டுமல்ல, சகல ஜனங்களும்தான்; இதில் சிலர் சபிக்கப்பட்டிருக்கிறார்கள், மேலும் சிலர் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள், அவ்வளவுதான். இஸ்ரவேலரைப் பற்றி ஏற்றுக்கொள்ளக் கூடிய பல காரியங்கள் உள்ளன; தொடக்கத்தில் தேவன் அவர்கள் மீது கிரியைப் புரிந்தார், ஏனென்றால் அவர்கள் குறைவாக சீர்கெட்டவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் ஒப்பிட சீனர்கள் தகுதியற்றவர்கள்; அவர்கள் மிகவும் கீழ்த்தரமானவர்கள். ஆகவே, தேவன் ஆரம்பத்தில் இஸ்ரவேல் ஜனங்களிடையே கிரியை செய்தார், அவருடைய இரண்டாம் கட்டக் கிரியை யூதேயாவில் மட்டுமே நிறைவேற்றப்பட்டது—இது மனிதர்களிடையே நிறைய கருத்துக்களுக்கும் விதிகளுக்கும் வழிவகுத்தது. உண்மையில், தேவன் மனிதக் கருத்துக்களின்படி செயல்பட வேண்டுமானால், அவர் இஸ்ரவேலரின் தேவனாக மட்டுமே இருப்பார், இதனால் அவர் தனது கிரியையை புறஜாதியின தேசங்களுக்கு இடையே விரிவுபடுத்த இயலாது, ஏனெனில் அவர் இஸ்ரவேலரின் தேவனாக மட்டுமே இருப்பார், மேலும் சகல சிருஷ்டிகளின் தேவனாக இருக்க மாட்டார். யேகோவாவின் பெயர் புறஜாதியின தேசங்களுக்கு நடுவில் பிரசித்திப்படுத்தப்படும், அது புறஜாதியின தேசங்களுக்கும் பரப்பப்படும் என்று தீர்க்கதரிசனங்கள் கூறின. இந்தத் தீர்க்கதரிசனம் ஏன் உரைக்கப்பட்டது? தேவன் இஸ்ரவேலரின் தேவனாக மட்டுமே இருந்தால், அவர் இஸ்ரவேலில் மட்டுமே கிரியை புரிவார். மேலும், அவர் இந்த கிரியையைப் பரப்ப மாட்டார் மற்றும் அத்தகைய தீர்க்கதரிசனத்தை அவர் உரைக்கமாட்டார். அவர் இந்தத் தீர்க்கதரிசனத்தை உரைத்தது முதற்கொண்டே, அவர் நிச்சயமாக தனது கிரியையைப் புறஜாதி தேசங்கள் நடுவிலும், அனைத்து தேசங்களிலிலும் மற்றும் அனைத்து நாடுகளிலும் பரப்புவார். அவர் இதைச் சொன்னதால், அவர் அதைச் செய்ய வேண்டும்; இது அவருடைய திட்டம், ஏனென்றால் அவரே வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் சிருஷ்டித்த கர்த்தராக இருக்கிறார், மேலும் அவரே சகல சிருஷ்டிகளுக்கும் தேவன். அவர் இஸ்ரவேலர்கள் நடுவிலோ அல்லது யூதேயா முழுவதிலுமோ கிரியை செய்தாலும், அவர் செய்யும் கிரியை முழு பிரபஞ்சத்தின் கிரியையாகவும், மற்றும் முழு மனிதகுலத்தின் கிரியையாகவும் இருக்கிறது. சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில்—ஒரு புறஜாதியின தேசத்தில்—அவர் செய்கிற கிரியை இன்னும் சகல மனித குலத்தின் கிரியையாக இருக்கிறது. பூமியில் அவரது கிரியைக்கு இஸ்ரவேல் அடித்தளமாக இருக்கக்கூடும்; அதேபோல், புறஜாதியின தேசங்களுக்கு நடுவிலான அவருடைய கிரியைக்குச் சீனாவும் அடித்தளமாக இருக்க முடியும். "புறஜாதி தேசங்களுக்கு நடுவில் யேகோவாவின் நாமம் பிரசித்திப்படுத்தப்படும்" என்ற தீர்க்கதரிசனத்தை அவர் இப்போது நிறைவேற்றவில்லையா? சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் அவர் செய்கிற இந்தக் கிரியைதான் புறஜாதியின தேசங்களுக்கு நடுவில் அவரது கிரியையின் முதல் படியாகும். மனுவுருவான தேவன் இந்தத் தேசத்தில் கிரியை செய்ய வேண்டும், மற்றும் இந்தச் சபிக்கப்பட்ட ஜனங்களுக்கு நடுவிலும் கிரியை செய்ய வேண்டும் என்பது குறிப்பாக மனித கருத்துக்களுடன் முரண்படுகிறது; இவர்கள் அனைவரையும் விட கீழ்த்தரமான ஜனங்கள், அவர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை, ஆரம்பத்தில் இவர்கள் யேகோவாவால் கைவிடப்பட்டார்கள். ஜனங்கள் மற்றவர்களால் கைவிடப்படக் கூடும், ஆனால் அவர்கள் தேவனால் கைவிடப்பட்டால், அந்தஸ்தில்லாதவர்களாகவும், பாக்கியமற்றவர்களாகவும் அவர்களைவிட வேறு யாரும் இருக்கமாட்டார்கள். தேவனின் ஒரு சிருஷ்டியைப் பொறுத்தவரை, சாத்தானால் பிடிக்கப்பட்டிருப்பது அல்லது ஜனங்களால் கைவிடப்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது—ஆனால் ஓர் உயிரினம் சிருஷ்டிகரால் கைவிடப்படுவது என்பதன் அர்த்தம் அவர்களுக்கு இதைவிட குறைந்த அந்தஸ்து இருக்க முடியாது என்பதாகும். மோவாபின் சந்ததியினர் சபிக்கப்பட்டார்கள், அவர்கள் இந்த பின்தங்கிய தேசத்தில் பிறந்தார்கள்; எந்த சந்தேகமுமின்றி, இருளின் ஆதிக்கத்தின் கீழுள்ள சகல ஜனங்களிலும், மோவாபின் சந்ததியினர் மிகவும் தாழ்ந்த அந்தஸ்தைக் கொண்டுள்ளனர். இந்த ஜனங்கள் இதற்கு முன் தாழ்ந்த நிலையில் இருந்ததால், அவர்கள் மீது செய்யப்படும் கிரியை மனித கருத்துக்களை உடைத்தெறிவதற்கு சிறந்தவையாகும், மேலும் தேவனின் ஆறாயிரம் ஆண்டு ஆளுகைத் திட்டம் முழுவதற்கும் இது மிகவும் பயனளிக்கிறது. இந்த ஜனங்களுக்கு நடுவில் இத்தகைய கிரியை செய்வது மனித கருத்துக்களை உடைத்தெறிவதற்கான சிறந்த வழியாகும், இதன் மூலம் தேவன் ஒரு யுகத்தைத் தொடங்குகிறார்; இதன் மூலம் அவர் அனைத்து மனிதக் கருத்துக்களையும் உடைத்தெறிகிறார்; இதன் மூலம் அவர் கிருபை யுகத்தின் முழு கிரியையையும் முடிவுக்குக் கொண்டு வருகிறார். அவரது முதல் கிரியை யூதேயாவில், இஸ்ரவேலின் எல்லைக்குள், செய்யப்பட்டது; புதிய யுகத்தைத் தொடங்க, புறஜாதியினத்தாருக்கு நடுவில் அவர் எந்த கிரியையும் செய்யவில்லை. கிரியையின் இறுதிக் கட்டம் புறஜாதியினத்தாருக்கு நடுவில் மட்டுமல்லாமல், சபிக்கப்பட்டவர்களிடையேயும் கூட அதிகமாகச் செய்யப்படுகிறது. இந்த ஒரு காரணம் சாத்தானை அவமானப்படுத்த மிகவும் தகுதியான சான்றாகும், மற்றும் இவ்வாறு, பிரபஞ்சத்தில் உள்ள சகல சிருஷ்டிகளின் தேவனாகவும், எல்லாவற்றிற்கும் கர்த்தராகவும், ஜீவனுள்ள அனைத்துக்கும் தொழுதுகொள்வதற்குரிய பொருளாகவும் தேவன் "ஆகுகிறார்".

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கர்த்தரே சகல சிருஷ்டிகளின் தேவன்” என்பதிலிருந்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மதக் கருத்துக்களை வெளிப்படுத்துதல் | பகுதி 283

தேவனின் கிரியையில் எப்போதும் புதிய முன்னேற்றங்கள் இருப்பதால், புதிய கிரியை வரும்போது, பழையதாகி வழக்கத்தில் இல்லாமல் போகிற கிரியை உண்டு....

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய மனநிலை மற்றும் தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் | பகுதி 238

எனது திட்டமிடப்பட்ட கிரியை ஒரு கணம் கூட இயங்குவதில் நிறுத்தம் இன்றி முன்னோக்கி விரைகிறது. ராஜ்யத்தின் காலத்திற்கு நகர்ந்து, என் ஜனங்களாக...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 152

மனுஷன் மத்தியில் தேவனுடைய கிரியை என்பது மனுஷனிடமிருந்து பிரிக்க முடியாததாக இருக்கின்றது, ஏனென்றால் மனிதனே இந்தக் கிரியையின் இலக்காக...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 612

நியாயத்தீர்ப்பு என்றால் என்ன என்பதையும், சத்தியம் எது என்பதையும் நீ இப்போது புரிந்துகொள்கிறாயா? நீ புரிந்துகொண்டாய் என்றால்,...