தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 146
தேவனின் கிரியையை அறிவது எளிதான காரியம் அல்ல. நீ உன் பின்தொடர்தலில் தரங்களையும் நோக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும், மெய்யான வழியை எவ்வாறு...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
மனுஷனின் கிரியையானது அவனது அனுபவத்தையும் மனுஷத்தன்மையையும் குறிக்கிறது. மனுஷன் எதை வழங்குகிறானோ அதுவும், அவன் செய்யும் கிரியையும் அவனைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மனுஷனின் நுண்ணறிவு, மனுஷனின் பகுத்தறிவு, மனுஷனின் தர்க்கம் மற்றும் அவனது செழிப்பான கற்பனை ஆகிய அனைத்தும் அவனது கிரியையில் சேர்க்கப்பட்டுள்ளன. மனுஷனின் அனுபவத்தால் குறிப்பாக அவனது கிரியையைக் குறிக்க முடிகிறது, மேலும் ஒரு நபரின் அனுபவங்கள் அவனது கிரியையின் கூறுகளாகின்றன. மனுஷனின் கிரியையால் அவனது அனுபவத்தை வெளிப்படுத்த முடியும். சிலர் எதிர்மறையாக அனுபவிக்கும் போது, அவர்கள் பேசும் பெரும்பாலான மொழி எதிர்மறை கூறுகளைக் கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களின் அனுபவம் நேர்மறையாக இருந்து, அவர்கள் குறிப்பாக நேர்மறையான அம்சத்தில் ஒரு பாதையைக் கொண்டிருந்தால், அவர்களின் பேச்சு மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது, மேலும் ஜனங்கள் அவர்களிடமிருந்து நேர்மறையான காரியங்களைப் பெறவும் முடியும். ஒரு ஊழியக்காரன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எதிர்மறையாக மாறினால், அவனுடைய பேச்சும் எப்போதும் எதிர்மறையான கூறுகளைக் கொண்டிருக்கும். இந்த வகையான பேச்சு மனச்சோர்வை ஏற்படுத்துகிறது, மற்றவர்கள் அவனது பேச்சுக்குப் பிறகு தங்களை அறியாமலேயே மனச்சோர்வடைந்து போவார்கள். தலைவரின் நிலையைப் பொறுத்து பின்பற்றுபவர்களின் நிலை மாறுகிறது. ஓர் ஊழியக்காரன் அவனது அகத்தில் எப்படி இருந்தாலும், அதையேதான் அவன் வெளிப்படுத்துகிறான், மேலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை பெரும்பாலும் மனுஷனின் நிலைக்கு ஏற்ப மாறுகிறது. அவர் ஜனங்களின் அனுபவத்திற்கு ஏற்ப கிரியை செய்கிறார், அவர்களைக் கட்டாயப்படுத்துவதில்லை, ஆனால் அவர்களின் அனுபவத்தின் இயல்பான போக்கிற்கு ஏற்ப ஜனங்களிடம் கோரிக்கைகளை வைக்கிறார். மனுஷனின் பேச்சு தேவனின் வார்த்தையிலிருந்து வேறுபடுகிறது என்பதே இதன் அர்த்தம். ஜனங்களின் பேச்சானது அவர்களின் தனிப்பட்ட நுண்ணறிவுகளையும் அனுபவத்தையும் தெரிவிக்கிறது, தேவனுடைய கிரியையின் அடிப்படையில் அவர்களின் நுண்ணறிவுகளையும் அனுபவத்தையும் வெளிப்படுத்துகிறது. தேவன் கிரியை செய்தபின் அல்லது பேசியபின், அவர்கள் எதை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது எதில் பிரவேசிக்க வேண்டும் என்பதைக் கண்டுபிடிப்பதும், பின்னர் அதைப் பின்பற்றுபவர்களுக்கு வழங்குவதும் அவர்களின் பொறுப்பு ஆகும். எனவே, மனுஷனின் கிரியை அவனது பிரவேசித்தலையும் நடைமுறையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நிச்சயமாக, இத்தகைய கிரியை மனுஷ பாடங்கள் மற்றும் அனுபவம் அல்லது சில மனுஷ எண்ணங்களுடன் கலக்கப்படுகிறது. பரிசுத்த ஆவியானவர் எப்படிக் கிரியை செய்தாலும், அதாவது மனுஷன் மீதோ அல்லது மாம்சமாகிய தேவன் மீதோ, ஊழியக்காரர்கள் எப்போதுமே அவர்கள் என்னவாக இருக்கிறார்களோ அதை வெளிப்படுத்துகிறார்கள். பரிசுத்த ஆவியானவர்தான் கிரியை செய்கிறார் என்றாலும், மனுஷன் இயல்பாகவே என்னவாக இருக்கிறான் என்பதை அது அடிப்படையாகக் கொண்டிருக்கிறது, ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் அடித்தளமின்றி கிரியை செய்வதில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிரியையானது ஒன்றும் இல்லாத நிலையிலிருந்து வருவதில்லை, ஆனால் எப்போதும் உண்மையான சூழ்நிலைகள் மற்றும் உண்மையான நிலைமைகளுக்கு ஏற்ப செய்யப்படுகிறது. இவ்வாறாக மட்டுமே மனுஷனின் மனநிலையை மாற்ற முடியும் மற்றும் அவனது பழைய கருத்துகளையும் பழைய எண்ணங்களையும் மாற்ற முடியும். மனுஷன் வெளிப்படுத்துவது என்னவென்றால், அவன் பார்ப்பது, அனுபவிப்பது, கற்பனை செய்யக்கூடியது ஆகியவைதான். அது கோட்பாடுகள் அல்லது கருத்துகளாக இருந்தாலும் கூட அது மனுஷனின் சிந்தனையால் அடையக்கூடியதுதான். மனுஷனின் கிரியையானது அந்தக் கிரியையின் அளவைப் பொருட்படுத்தாமல், மனுஷனுடைய அனுபவத்தின் அளவையும், மனுஷன் எதைப் பார்க்கிறானோ அதையும், அல்லது மனுஷனால் கற்பனை செய்யவோ அல்லது எண்ணவோ முடியாததையும் மீறாததாக இருக்கிறது. தேவன் தாம் என்னவாக இருக்கிறாரோ அதை மட்டுமே வெளிப்படுத்துகிறார், இது மனுஷனால் அடைய முடியாதது—அதாவது மனுஷனின் சிந்தனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. எல்லா மனுஷரையும் வழிநடத்தும் தமது கிரியையை அவர் வெளிப்படுத்துகிறார், இது மனுஷ அனுபவத்தின் விவரங்களுடன் தொடர்பில்லாததாக இருக்கிறது, ஆனால் அதற்குப் பதிலாக அவருடைய சொந்த நிர்வாகத்துடன் தொடர்புடையாதாகும். மனுஷன் அவனது அனுபவத்தைத்தான் வெளிப்படுத்துகிறான், அதே சமயம் தேவன் தாம் இருப்பதை வெளிப்படுத்துகிறார், இது அவருடைய உள்ளார்ந்த மனநிலை, மனுஷனால் இதை அடையமுடியாது. மனுஷனின் அனுபவம் என்பது தேவனுடைய வெளிப்பாட்டின் அடிப்படையில் பெறப்பட்ட அவனது நுண்ணறிவு மற்றும் அறிவு ஆகியவை ஆகும். இத்தகைய நுண்ணறிவும் அறிவும் மனுஷனின் இருப்பு என்று அழைக்கப்படுகின்றன, அவற்றின் வெளிப்பாட்டின் அடிப்படையானது மனுஷனின் உள்ளார்ந்த மனநிலை மற்றும் திறமை ஆகியவையாக இருக்கின்றன—இதனால்தான் அவை மனுஷனின் இருப்பு என்றும் அழைக்கப்படுகின்றன. மனுஷனால் அவன் அனுபவிப்பதையும் பார்ப்பதையும் பேச முடிகிறது. அவர்கள் அனுபவிக்காத, பார்த்திராத, அல்லது அவர்களின் சிந்தனையை அடைய முடியாதவற்றை யாராலும் பேச முடியாது, அவை அவர்களுக்குள் இல்லாத விஷயங்களாகும். மனுஷன் வெளிப்படுத்துவது அவனது அனுபவத்திலிருந்து வந்ததில்லை என்றால், அது அவனது கற்பனை அல்லது கோட்பாடாகத்தான் இருக்கும். சுருக்கமாகக் கூறுவதானால், அவனது வார்த்தைகளில் எந்த எதார்த்தமும் இல்லை. நீ ஒருபோதும் சமுதாய விஷயங்களுடன் தொடர்பு கொள்ளாவிட்டால், உன்னால் சமூகத்தின் சிக்கலான உறவுகளைத் தெளிவாகப் பேச முடியாது. உனக்குக் குடும்பம் இல்லையென்றால், மற்றவர்கள் குடும்பப் பிரச்சினைகளைப் பற்றி பேசினால், அவர்கள் சொன்னவற்றில் பெரும்பாலானவற்றை உன்னால் புரிந்து கொள்ள முடியாது. எனவே, மனுஷன் பேசுவதும், அவன் செய்யும் கிரியையும் அவனது உள்ளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பைப் பற்றிய தனது புரிதலை ஒருவன் பேசி, உனக்கு அதில் எந்த அனுபவமும் இல்லை என்றால், நீ அவனுடைய அறிவை மறுக்கத் துணிவதில்லை, அதில் நூறு சதவிகிதம் நம்பிக்கையுடனும் இருக்கத் துணிவதுமில்லை. ஏனென்றால், அவர்களின் பேச்சு நீ அனுபவிக்காத ஒன்றாகவும், நீ அறியாத ஒன்றாகவும் இருக்கிறது, உன் மனதால் அதை கற்பனை செய்து பார்க்க முடியாது. அவர்கள் அறிந்ததிலிருந்து, நீ செய்ய வேண்டியது எதிர்காலத்தில் சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவிப்பதற்கான பாதையில் செல்வதே ஆகும். ஆனால் இந்தப் பாதை கோட்பாட்டு அறிவில் ஒன்றாக மட்டுமே இருக்க முடியும்; இந்தப் பாதையால் உனது சொந்தப் புரிதலின் இடத்தை நிரப்ப முடியாது, உனது அனுபவத்தின் இடத்தையும் நிரப்ப முடியாது. அவர்கள் சொல்வது மிகவும் சரியானதுதான் என்று நீ நினைக்கிறாய், ஆனால் உனது சொந்த அனுபவத்தில், இது பல வழிகளில் சாத்தியமற்றது என்று நீ கருதுகிறாய். நீ காது கொடுத்துக் கேட்கும் சில விஷயங்களை நீ முற்றிலும் சாத்தியமற்றதாக உணர்கிறாய்; அந்த நேரத்தில் நீ அதைப் பற்றிய கருத்துக்களை மனதில் கொள்கிறாய், நீ அதை ஏற்றுக்கொண்டாலும், நீ அதைத் தயக்கத்துடன் மட்டுமே செய்கிறாய். ஆனால் உனது சொந்த அனுபவத்தில், நீ கருத்துக்களைப் பெற்ற அறிவானது உனது நடைமுறைக்கான வழிமுறையாக மாறுகிறது, மேலும் நீ நடைமுறைப்படுத்தும் போது, நீ காது கொடுத்துக் கேட்ட வார்த்தைகளின் உண்மையான மதிப்பு மற்றும் அர்த்தத்தை நீ புரிந்துகொள்கிறாய். நீ உனது சொந்த அனுபவத்தைப் பெற்ற பிறகு, நீ அனுபவித்தவற்றைப் பற்றி நீ கொண்டிருக்க வேண்டிய அறிவைப் பற்றி பேசலாம். மேலும், யாருடைய அறிவு உண்மையானது மற்றும் நடைமுறைக்குரியது என்பதையும், யாருடைய அறிவு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பயனற்றது என்பதையும் உன்னால் வேறுபடுத்திப் பார்க்க முடியும். எனவே, நீ கூறும் அறிவானது சத்தியத்துடன் ஒத்துப்போகிறதா என்பது பெரும்பாலும் அதில் உனக்கு நடைமுறை அனுபவம் உள்ளதா என்பதைப் பொறுத்து இருக்கிறது. உனது அனுபவத்தில் சத்தியம் இருக்கும் இடத்தில், உனது அறிவானது நடைமுறையானதாகவும் மற்றும் மதிப்புமிக்கதாகவும் இருக்கும். உனது அனுபவத்தின் மூலம், உன்னால் விவேகத்தையும் நுண்ணறிவையும் பெற முடியும், உனது அறிவை ஆழப்படுத்த முடியும், மேலும் நீ உன்னை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது பற்றிய உனது ஞானத்தையும் பொது அறிவையும் அதிகரிக்கவும் முடியும். சத்தியத்தைக் கொண்டிருக்காத ஜனங்கள் வெளிப்படுத்தும் அறிவானது, அது எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அது கோட்பாடாகத்தான் இருக்கிறது. மாம்ச விஷயங்களைப் பொறுத்தவரை இந்த வகை நபர் மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கலாம், ஆனால் ஆவிக்குரிய விஷயங்களில் அத்தகைய தனித்தன்மை இருப்பதில்லை. ஏனென்றால், அத்தகையவர்களுக்கு ஆவிக்குரிய விவகாரங்கள் எதிலும் அனுபவம் இருப்பதில்லை. இவர்கள் ஆவிக்குரிய விவகாரங்களில் தெளிவு இல்லாதவர்கள், ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள். நீ எந்த வகையான அறிவை வெளிப்படுத்தினாலும், அது உனதாக இருக்கும் வரை, அது உனது தனிப்பட்ட அனுபவமாகவும் உனது உண்மையான அறிவாகவும் இருக்கிறது. கோட்பாட்டைப் பற்றி மட்டுமே பேசும் ஜனங்கள்—சத்தியமோ யதார்த்தமோ இல்லாதவர்கள்—விவாதிப்பது அவர்களுடையதாக இருக்கிறது என்றும் அழைக்கப்படலாம், ஏனென்றால் அவர்கள் தங்கள் கோட்பாட்டிற்கு ஆழ்ந்த சிந்தனையின் மூலமாக மட்டுமே வந்தடைந்திருக்கிறார்கள், மேலும் அது அவர்களின் ஆழ்ந்த சிந்தனையின் விளைவும் ஆகும். ஆயினும்கூட அது வெறும் கோட்பாடு மட்டும்தான், கற்பனையைத் தவிர வேறில்லை!
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
தேவனின் கிரியையை அறிவது எளிதான காரியம் அல்ல. நீ உன் பின்தொடர்தலில் தரங்களையும் நோக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும், மெய்யான வழியை எவ்வாறு...
தேவனை உண்மையாக விசுவாசிக்கிறவர்கள் தேவனின் வார்த்தையைக் கடைப்பிடிக்க விரும்புபவர்களாகவும், சத்தியத்தைக் கடைப்பிடிக்க விரும்புபவர்களாகவும்...
கடைசி நாட்களின் கிறிஸ்து ஜீவனைக் கொண்டுவருகிறார், மேலும் சத்தியத்தின் நீடித்த மற்றும் நித்திய வழியைக் கொண்டுவருகிறார். இந்தச் சத்தியம்தான்...
தேவன் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கிரியையை, மனிதன் அவரைப் பற்றிய அறிவைப் பெறுவதற்காகவும், அவருடைய சாட்சியின் பொருட்டும்...