தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 358

மிக விரைவில் எனது கிரியை முடிவடையும், மேலும் ஒன்றாக இருந்த பல ஆண்டுகள் தாங்கமுடியாத நினைவாக மாறிவிட்டது. நான் இடைவிடாமல் எனது வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறேன், தொடர்ந்து எனது புதிய கிரியைகளை வெளிப்படுத்தியிருக்கிறேன். நிச்சயமாக, நான் செய்யும் கிரியையின் ஒவ்வொரு சிறு விஷயத்திற்கும் எனது ஆலோசனையானது அவசியமான ஓர் அங்கமாக இருக்கிறது. எனது ஆலோசனையின்றி, நீங்கள் அனைவரும் வழிதப்பி அலைந்து திரிந்து, நீங்களே உங்களை முழுமையாக இழந்துபோனவர்களாக இருப்பதைக் கூட காண்பீர்கள். எனது கிரியையானது இப்போது முடிவடைய இருக்கிறது, அது தன் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. நான் இன்னும் ஆலோசனை வழங்கும் கிரியையைச் செய்ய விரும்புகிறேன், அதாவது, நீங்கள் கேட்கும் விஷயங்களுக்கான அறிவுரைகளை வழங்க விரும்புகிறேன். நான் அனுபவித்த வேதனையை நீங்கள் வீணடிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன், மேலும், நான் எடுத்துள்ள கவனமுள்ள அக்கறையை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்றும், மேலும் மனுஷராக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதன் அஸ்திபாரமாக எனது வார்த்தைகளை நீங்கள் கருதுவீர்கள் என்றும் நான் நம்புகிறேன். அவை நீங்கள் கேட்க விரும்பும் வார்த்தைகளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நீங்கள் அவற்றை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறீர்களோ இல்லையோ, அல்லது அவற்றை அசௌகரியத்துடன் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடிகிறது என்றாலும், நீங்கள் அவற்றைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், உங்கள் சாதாரண மற்றும் அக்கறையற்ற மனநிலைகளும் நடத்தைகளும் என்னைத் தீவிரமாக வருத்தப்படுத்தும், உண்மையில் என்னை வெறுப்புகொள்ள வைக்கும். நீங்கள் அனைவரும் எனது வார்த்தைகளை மீண்டும் மீண்டும்—ஆயிரக்கணக்கான முறை—வாசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன், மேலும் நீங்கள் அவற்றை இருதயத்தில் அறிந்து கொள்வீர்கள் என்றும் கூட நான் நம்புகிறேன். இவ்வாறாக மட்டுமே உங்களைப் பற்றிய எனது எதிர்பார்ப்புகளை உங்களால் தோல்வியடையச் செய்ய இயலாது. இருப்பினும், நீங்கள் யாரும் இப்போது இப்படி ஜீவிப்பதில்லை. இதற்கு மாறாக, நீங்கள் அனைவரும் ஒரு மோசமான ஜீவிதத்தில் மூழ்கியிருக்கிறீர்கள், உங்கள் இருதயம் திருப்தியடையும் அளவிற்குப் புசித்துக் குடிக்கும் ஒரு ஜீவிதத்தில் மூழ்கியிருக்கிறீர்கள், மேலும் உங்கள் இருதயத்தையும் ஆத்துமாவையும் வளப்படுத்த நீங்கள் யாரும் என் வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. இந்த காரணத்திற்காக, மனுக்குலத்தின் உண்மையான முகம் பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன்: மனுஷனால் எந்த நேரத்திலும் எனக்குத் துரோகம் செய்ய முடியும், எனது வார்த்தைகளுக்கு ஒருவராலும் முற்றிலும் விசுவாசமாக இருக்க முடியாது.

"மனுஷனானவன் இனியும் தனது தோற்றத்தைக் கொண்டிராத வகையில் சாத்தானால் மிகவும் சீர்கெடுக்கப்பட்டுவிட்டான்." பெரும்பான்மையான ஜனங்கள் இப்போது இந்த வாக்கியத்தை ஓரளவிற்கு அங்கீகரிக்கின்றனர். நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், நான் குறிப்பிடும் "அங்கீகாரம்" என்பது மெய்யான அறிவுக்கு மாறாக ஒரு வகையான மேலோட்டமான ஒப்புதலாக மட்டுமே இருக்கிறது. உங்களில் எவராலும் உங்களையே துல்லியமாக மதிப்பீடு செய்யவோ அல்லது உங்களையே முழுமையாக ஆராயவோ முடியாது என்பதால், நீங்கள் எனது வார்த்தைகளுக்கு ஒன்றுக்கும் மேலான அர்த்தத்தைக் கொண்டவர்களாகவே இருக்கிறீர்கள். ஆனால் இந்த நேரத்தில், உங்களுக்குள் இருக்கும் ஒரு மிக மோசமான பிரச்சனையை விளக்க நான் உண்மைகளைப் பயன்படுத்துகிறேன். அந்த பிரச்சினைதான் துரோகம். நீங்கள் அனைவரும் "துரோகம்" என்ற வார்த்தையை நன்கு அறிந்திருக்கிறீர்கள், ஏனென்றால் கணவன் தன் மனைவிக்குத் துரோகம் செய்வது, மனைவி தன் கணவனுக்குத் துரோகம் செய்வது, மகன் தன் தந்தைக்குத் துரோகம் செய்வது, மகள் தன் தாய்க்குத் துரோகம் செய்வது, அடிமை தன் எஜமானனுக்குத் துரோகம் செய்வது, நண்பர்கள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்வது, உறவினர்கள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்வது, விற்பனையாளர்கள் வாங்குபவர்களுக்குத் துரோகம் செய்வது போன்ற இன்னொருவருக்குத் துரோகம் செய்யும் விஷயத்தைப் பெரும்பாலானவர்கள் செய்திருக்கிறார்கள். இந்த எடுத்துக்காட்டுகள் அனைத்தும் துரோகத்தின் சாராம்சத்தைக் கொண்டுள்ளன. சுருக்கமாக, துரோகம் என்பது ஒரு வாக்குறுதியை மீறும், தார்மீகக் கொள்கைகளை மீறும் அல்லது மனுஷ நெறிமுறைகளுக்கு எதிராகச் செயல்படும், மனுஷத்தன்மையின் இழப்பை நிரூபிக்கும் ஒரு நடத்தை ஆகும். பொதுவாக, இந்த உலகில் பிறந்த ஒரு மனுஷனாக, நீ சத்தியத்திற்குத் துரோகம் செய்யும் ஒரு செயலைச் செய்திருப்பாய், நீ வேறொரு நபருக்குத் துரோகம் செய்ததையோ அல்லது இதற்கு முன்பு பல முறை நீ மற்றவர்களுக்குத் துரோகம் செய்ததையோ நினைவில் வைத்திருக்கிறாயா இல்லையா என்பது முக்கியமில்லை. நீ உனது பெற்றோருக்கோ நண்பர்களுக்கோ துரோகம் செய்யும் திறன் கொண்டவன் என்பதால், நீ மற்றவர்களுக்கும் துரோகம் செய்யும் திறன் கொண்டவனாகத்தான் இருக்கிறாய், மேலும் நீ எனக்குத் துரோகம் செய்வதற்கும் நான் வெறுக்கிற காரியங்களைச் செய்வதற்கும் திறன் கொண்டவனாக இருக்கிறாய். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், துரோகம் என்பது வெறும் மேலோட்டமான ஒழுக்கக்கேடான நடத்தை இல்லை, ஆனால் சத்தியத்துடன் முரண்படும் ஒரு விஷயமாக இருக்கிறது. இதுவே எனக்கு எதிரான மனுக்குலத்தின் எதிர்ப்பிற்கும் கீழ்ப்படியாமைக்கும் மூல காரணமாக இருக்கிறது. இதனால்தான் நான் அதைப் பின்வரும் அறிக்கையில் சுருக்கமாகக் கூறியிருக்கிறேன்: துரோகம் என்பது மனுஷனின் சுபாவமாக இருக்கிறது, மேலும் இந்தச் சுபாவமானது ஒவ்வொருவனும் என்னுடன் உடன்படுவதற்கான பெரிய சத்துருவாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (1)" என்பதிலிருந்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: வேதாகமத்தைப் பற்றிய மறைபொருட்கள் | பகுதி 280

நான் மனுஷர்களிடையே அதிகமான கிரியை செய்திருக்கிறேன், அந்த நேரத்தில் நான் பல வார்த்தைகளையும் வெளிப்படுத்தியுள்ளேன். இந்த வார்த்தைகள்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 394

தேவன் மீதுள்ள விசுவாசத்தில், மக்களிடம் இருக்கும் மிகப்பெரிய தவறு என்னவென்றால், அவர்கள் உதட்டளவில் மட்டுமே விசுவாசிக்கிறார்கள், அவர்களின்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 10

தேவனுக்கு பயப்படாமல் தீமையைத் தவிர்க்காமல் இருப்பது தேவனை எதிர்ப்பதாகும் இந்த நாட்களில் நீங்கள் தேவனை நேருக்கு நேர் பார்க்கிறீர்கள்,...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 477

பேதுரு இயேசுவைப் பின்பற்றத் தொடங்கியபின் இயற்கையான வெளிப்பாடுகள் நிகழ்ந்தாலும், இயற்கையாகவே, அவன் தொடக்கத்திலிருந்தே பரிசுத்த...