தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 354

முதலில், நான் உங்களுக்கு அதிக சத்தியங்களை வழங்க விரும்பினேன், ஆனால் சத்தியத்தை நோக்கிய உங்கள் சிந்தை மிகவும் உணர்ச்சியற்றதாகவும் அலட்சியமாகவும் இருப்பதால் நான் இதை தவிர்க்க வேண்டியிருந்தது; எனது முயற்சிகள் வீணாகப் போவதை நான் விரும்பவுமில்லை, ஜனங்கள் எனது வார்த்தைகளைப் பற்றிக் கொண்டாலும், எல்லா விதங்களிலும் என்னை எதிர்ப்பதை, என்னை அவதூறு செய்வதை மற்றும் என்னைத் தூஷிப்பதைப் பார்ப்பதற்கு நான் விரும்பவுமில்லை. உங்கள் சிந்தை மற்றும் உங்கள் மனிதத்தன்மை காரணமாக, மனிதகுலத்தின் மத்தியில் என் சோதனை கிரியையாக செயல்படுகின்ற என் வார்த்தைகளின் மிக முக்கியமான பகுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன், சிறிய பகுதியை மட்டுமே உங்களுக்கு வழங்குகிறேன். நான் செய்த தீர்மானங்களும், திட்டமும் உங்கள் தேவைகளுக்குப் பொருந்துகின்றன என்பதையும், மேலும், மனிதகுலத்தின் மீதான எனது அணுகுமுறை சரியானது என்பதையும் இப்போதுதான் நான் மெய்யாகவே உறுதிப்படுத்தினேன். எனக்கு முன்பாக உங்களின் பல ஆண்டுகால நடத்தை முன்னெப்போதும் பெற்றிராத பதிலொன்றை எனக்கு வழங்கியுள்ளது, இந்தப் பதிலுக்கான கேள்வி: "சத்தியம் மற்றும் மெய்யான தேவன் முன் மனிதனின் சிந்தை என்ன?" நான் மனிதனுக்கு அர்ப்பணித்த முயற்சிகள், மனிதன் மீதான என் அன்பின் சாராம்சத்தை நிரூபிக்கின்றன, மற்றும் எனக்கு முன்பாக மனிதனின் ஒவ்வொரு செயலும் சத்தியத்தை நோக்கிய அருவருப்பினையும் என் மீதான எதிர்ப்பினையும் காட்டுகிறது. எல்லா நேரங்களிலும், என்னைப் பின்பற்றும் எல்லோரையும் குறித்து நான் அக்கறை கொண்டுள்ளேன், ஆயினும், எந்தவொரு நேரத்திலும் என்னைப் பின்பற்றுவோர் எனது வார்த்தைகளை பெற்றுக் கொள்ள முடிவதில்லை; அவர்களால் எனது ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதற்குக் கூட முடியாதுள்ளனர். இதுவே எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது. எனது சிந்தை நேர்மையானதாகவும், எனது வார்த்தைகள் மென்மையானவையாகவும் இருக்கின்றபோதும், என்னை எவராலும் எப்போதும் புரிந்துகொள்ள முடிவதில்லை, மேலும் என்னை எவராலும் எப்போதும் ஏற்றுக்கொள்ளவும் முடிவதில்லை. ஒவ்வொருவரும் அவரவர் சொந்த யோசனைகளுக்கு ஏற்ப நான் அவர்களுக்கு கையளித்த வேலையை செய்ய முயற்சி செய்கிறார்கள்; அவர்கள் என் நோக்கங்களை நாடுவதில்லை, நான் அவர்களிடம் என்ன கேட்கிறேன் எனவும் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் எனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் வேளையில், இன்னும் எனக்கு விசுவாசமாக ஊழியம் செய்ததாக அவர்கள் கூறுகின்றனர். அநேகர், அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது அவர்கள் கடைப்பிடிக்க முடியாத சத்தியங்களைச் சத்தியங்களே அல்ல என நம்புகின்றார்கள். அத்தகைய ஜனங்களிடம், என் சத்தியங்கள் மறுக்கப்பட்டு, ஒதுக்கிவிடப்படுபவையாக ஆகின்றன. அதே நேரத்தில், ஜனங்கள் வார்த்தையில் என்னை தேவனாக அங்கீகரிக்கின்றனர், ஆயினும் என்னைச் சத்தியம், வழி அல்லது ஜீவனாக இல்லாத வெளியாள் ஒருவர் எனவும் நம்புகின்றனர். இந்தச் சத்தியம் ஒருவருக்கும் தெரியாது: என் வார்த்தைகள் எப்போதும் மாறாத சத்தியமாய் இருக்கின்றன. நான் மனிதனுக்கு ஜீவனை அளிப்பதுடன் மனிதகுலத்தின் ஒரே வழிகாட்டியாகவும் இருக்கிறேன். எனது வார்த்தைகளின் மதிப்பும் அர்த்தமும் மனிதகுலத்தினால் அவை அங்கீகரிக்கப்படுகின்றனவா அல்லது ஏற்றுக்கொள்ளப்படுகின்றனவா என்பதனால் அல்ல, ஆனால் வார்த்தைகளின் சாராம்சத்தினாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. இவ்வுலகிலுள்ள ஒரு மனிதர் கூட எனது வார்த்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் கூட, எனது வார்த்தைகளின் மதிப்பும் மனிதகுலத்திற்கு அவற்றின் உதவியும் எந்த மனிதனாலும் மதிப்பிடப்பட முடியாதது. ஆகவே, என் வார்த்தைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும், மறுதலிக்கும், அல்லது முற்றிலும் வெறுக்கும் அநேக ஜனங்களை எதிர்கொள்ளும் போது, என் நிலைப்பாடு இது மாத்திரமே: காலமும் உண்மைகளும் எனது சாட்சிகளாகி எனது வார்த்தைகளே சத்தியம், வழி மற்றும் ஜீவன் எனக் காட்டட்டும். நான் கூறியவை எல்லாம் சரி எனவும், இதுவே மனிதனுக்குத் தரப்பட வேண்டும் எனவும், மேலும், மனிதன் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவை காட்டட்டும். என்னைப் பின்பற்றும் அனைவருக்கும் இந்த உண்மையை நான் தெரியப்படுத்துவேன்: எனது வார்த்தைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதோர், எனது வார்த்தைகளைக் கடைபிடிக்க முடியாதோர், எனது வார்த்தைகளினால் இலக்கைக் கண்டறிய முடியாதோர் மற்றும் எனது வார்த்தைகளின் நிமித்தமான இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள முடியாதோர், எனது வார்த்தைகளினால் கண்டிக்கப்பட்டோர், மேலும், எனது இரட்சிப்பை இழந்தோர் ஆகிய இவர்களிடமிருந்து எனது கோல் என்றும் விலகிச் செல்லாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "உங்களின் செய்கைகளை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்" என்பதிலிருந்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 167

பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனுஷனால் கூட தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. இதுபோன்ற மனுஷனால் தேவனைப்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 122

தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்களின் ஆரம்பக் கிரியையானது ஆவியினால் நேரடியாகச் செய்யப்பட்டது, மாம்சத்தால் அல்ல. ஆனாலும், தேவனுடைய...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 23

இயேசு தம்முடைய மனுவுருவாதலில் முற்றிலும் உணர்ச்சிக்கு இடம் கொடுக்காதிருந்தபோதிலும், அவர் எப்போதும் தம்முடைய சீஷர்களை ஆறுதல்படுத்தினார்,...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 601

தேவன் மனிதர்களைப் படைத்து பூமியில் வைத்தார், மற்றும் அவர் அதுமுதற்கொண்டு அவர்களை வழிநடத்தினார், அவர் அவர்களை இரட்சித்து மனுக்குலத்திற்கு...