தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 352

நான் சொன்னது போல், என்னைப் பின்தொடர்பவர்கள் பலர், ஆனால் என்னை உண்மையாக நேசிப்பவர்கள் சிலரே. ஒருவேளை சிலர், "நான் உம்மை நேசிக்காவிட்டால் நான் இவ்வளவு பெரிய விலைக்கிரயம் செலுத்தியிருப்பேனா? நான் உம்மை நேசிக்காவிட்டால் நான் இந்த நிலை வரையிலும் பின்பற்றி வந்திருப்பேனா?" என்று கூறலாம். நிச்சயமாக, உன்னிடம் பல காரணங்கள் உள்ளன, உன் அன்பு, நிச்சயமாக, மிகச் சிறந்தது, ஆனால் என் மீதான உன் அன்பின் சாராம்சம் என்ன? "அன்பு" அது அழைக்கப்படுவது போலவே, தூய்மையான மற்றும் களங்கமில்லாத ஓர் உணர்ச்சியைக் குறிக்கிறது. அங்கு நீங்களோ உங்கள் மனதை நேசிக்கவும், உணரவும், சிந்தனைமிக்கதாய் இருக்கவும் பயன்படுத்துகிறீர்கள். அன்பில் எந்த நிபந்தனைகளும் இல்லை, தடைகளும் இல்லை, இடைவெளியும் இல்லை. அன்பில் எந்த சந்தேகமும் இல்லை, வஞ்சகமும் இல்லை, தந்திரமும் இல்லை. அன்பில் வர்த்தகம் இல்லை மற்றும் தூய்மையற்றது எதுவும் இல்லை. நீ நேசித்தால், நீ ஏமாற்றவோ, குறைகூறவோ, துரோகம் செய்யவோ, கலகம் செய்யவோ, பெற்றுக்கொள்ள நிர்பந்திக்கவோ, எதையாவது பெற்றிடவோ அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறவோ முயலமாட்டாய். நீ நேசித்தால், நீ மகிழ்ச்சியுடன் உன்னை அர்ப்பணிப்பாய், மகிழ்ச்சியுடன் கஷ்டங்களை அனுபவிப்பாய். நீ என்னுடன் ஒத்துப்போவாய், எனக்காக உன்னிடம் உள்ள அனைத்தையும் கைவிடுவாய், உன் குடும்பம், உன் எதிர்காலம், உன் இளமை மற்றும் உன் திருமணம் என அனைத்தையும் கைவிடுவாய். இல்லையென்றால், உன் அன்பு அன்பாகவே இருக்காது, வஞ்சகமும் துரோகமுமாய் இருக்கும்! எத்தகையது உன்னுடைய அன்பு? அது உண்மையான அன்பா? அல்லது பொய்யானதா? நீ எவ்வளவு கைவிட்டிருக்கிறாய்? நீ எவ்வளவு வழங்கியிருக்கிறாய்? உன்னிடமிருந்து நான் எவ்வளவு அன்பைப் பெற்றுள்ளேன்? உனக்குத் தெரியுமா? உங்கள் இருதயங்கள் பொல்லாப்பினாலும், துரோகத்தாலும் வஞ்சகத்தாலும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறு இருப்பதால், உங்கள் அன்பு எவ்வளவு தூய்மையற்றதாயிருக்கிறது? நீங்கள் ஏற்கனவே எனக்காகப் போதுமானதை விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள். என் மீதான உங்கள் அன்பு ஏற்கனவே போதுமானது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் உங்கள் வார்த்தைகளும் செயல்களும் ஏன் எப்போதும் கலகத்தனமாகவும் வஞ்சகமாகவும் இருக்கின்றன? நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள், ஆனால் நீங்கள் என் வார்த்தையை ஏற்கவில்லை. இது அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள், ஆனால் நீங்கள் என்னை விலக்கிவைக்கிறீர்கள். இது அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள், ஆனால் நீங்கள் என்னை விசுவாசிக்கவில்லை. இது அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள், ஆனால் உங்களால் நான் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இது அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள், ஆனாலும் நான் யார் என்பதற்கேற்ப என்னை நடத்துவதில்லை, மேலும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எனக்குக் காரியங்களைக் கடினமாக்குகிறீர்கள். இது அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள், ஆனாலும் நீங்கள் என்னை முட்டாளாக்கி ஒவ்வொரு காரியத்திலும் என்னை ஏமாற்ற முயற்சிக்கிறீர்கள். இது அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் எனக்கு ஊழியம் செய்கிறீர்கள், ஆனால் நீங்கள் எனக்குப் பயப்படுவதில்லை. இது அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் எல்லா வகையிலும் எல்லாவற்றிலும் என்னை எதிர்க்கிறீர்கள். இதெல்லாம் அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் அதிகம் அர்ப்பணித்திருக்கிறீர்கள், அது உண்மைதான், ஆனாலும் நான் உங்களிடம் கேட்பதை நீங்கள் ஒருபோதும் கடைபிடிப்பதில்லை. இதை அன்பாகக் கருத முடியுமா? நீங்கள் கவனமாகக் கணக்கிட்டுச் செயல்படுவது எனக்கான அன்பின் சிறிதளவு அடையாளமும் உங்களுக்குள் இல்லை என்பதைக் காட்டுகிறது. பல ஆண்டுகளான என் கிரியைக்குப் பிறகும், நான் வழங்கிய பல வார்த்தைகளுக்குப் பிறகும், நீங்கள் உண்மையில் எவ்வளவு பெற்றுக் கொண்டீர்கள்? கவனமாகத் திரும்பிப் பார்ப்பதற்கு இது தகுதியற்றதா? நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்: நான் என்னிடம் அழைப்பவர்கள் அனைவரும் ஒருபோதும் சீர்கெடுக்கப்படாதவர்கள் அல்ல; மாறாக, நான் தெரிந்துகொள்பவர் அனைவரும் என்னை உண்மையாக நேசிப்பவர்கள் ஆவர். ஆகையால், உங்கள் சொற்களிலும் செயல்களிலும் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், மேலும் உங்கள் நோக்கங்களையும் எண்ணங்களையும் எல்லை மீறாதபடி அவற்றை ஆராய வேண்டும். கடைசி நாட்களில், என் கோபம் உங்களிடமிருந்து விலகி இருக்கும்படிக்கு, எனக்கு முன் உங்கள் அன்பைச் செலுத்த உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்” என்பதிலிருந்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 9

ஜனங்கள் தேவனுக்கு அஞ்சுகிறார்களா, தீமையைத் தவிர்க்கிறார்களா என்பதைச் சோதிக்க தேவன் பல்வேறு சோதனைகளைப் பயன்படுத்துகிறார் ஒவ்வொரு...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 100

பூமியில் இயேசு வாழ்ந்த வாழ்க்கை மாம்சத்தின் ஒரு இயல்பான வாழ்க்கையாகும். அவர் தமது மாம்சத்தின் இயல்பான மனிதத்தன்மையில் வாழ்ந்தார். அவருடைய...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 172

பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தில் இருக்கும் கிரியையானது, அது தேவனின் சொந்தக் கிரியை அல்லது பயன்படுத்தப்படும் ஜனங்களின் கிரியை என எதுவாக...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 319

நீங்கள் அனைவரும் தேவனுக்கு முன்பாக வெகுமதியைப் பெறவும் மற்றும் தேவனால் தயவைப் பெறவும் விரும்புகிறீர்கள். எல்லோரும் தேவனை விசுவாசிக்கத்...