தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 547

தேவனைப் புரிந்து கொள்ளாதவர்கள் ஒருபோதும் தேவனுக்குக் முழுமையாகக் கீழ்ப்படிய முடியாது. இது போன்றவர்கள் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளாவர். அவர்கள் மிகவும் பேராவலுள்ளவர்கள், அவர்களில் அதிகமான கலகங்கள் உள்ளன. எனவே, அவர்கள் தேவனிடமிருந்து தங்களைத் தூர விலக்குகிறார்கள், அவருடைய ஆழ்ந்த சோதனையை ஏற்கத் தயாராக இல்லை. இது போன்றவர்களை எளிதில் பூரணப்படுத்த முடியாது. சிலர் தேவனின் வார்த்தைகளைப் புசித்துப் பானம் பண்ணுவதிலும், அவற்றை ஏற்றுக்கொள்வதிலும் தேர்ந்தெடுக்கிறவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கருத்துக்களுடன் ஒத்துப்போகின்ற தேவனுடைய வார்த்தைகளின் சில பகுதிகளை ஏற்றுக்கொள்கிறார்கள், ஒத்துப்போகாத பகுதிகளைப் புறக்கணிக்கிறார்கள். இது தேவனுக்கு எதிரான மிகவும் அப்பட்டமான கலகமும் எதிர்ப்பும் அல்லவா? யாராவது தேவனைப் பற்றி ஒரு சிறிய புரிதலைக் கூட பெறாமல் பல ஆண்டுகளாக நம்பினால், அவர்கள் ஓர் அவிசுவாசி. தேவனின் ஆழ்ந்த சோதனையை ஏற்கத் தயாராக இருப்பவர்கள் அவரைப் பற்றிய புரிதலைத் பின்தொடர்பவர்கள், அவருடைய வார்த்தைகளை ஏற்கத் தயாராக இருப்பவர்கள் ஆவர். அவர்கள் தேவனின் சுதந்திரத்தையும் ஆசீர்வாதங்களையும் பெறுவார்கள், மேலும் அவர்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தங்கள் இருதயத்தில் அவருக்கு இடம் அளிக்காதவர்களை தேவன் சபிக்கிறார், அத்தகையவர்களை அவர் சிட்சிக்கிறார் மற்றும் கைவிடுகிறார். நீ தேவனை நேசிக்கவில்லை என்றால் அவர் உன்னைக் கைவிடுவார், நான் சொல்வதை நீ கேட்கவில்லை என்றால், தேவனின் ஆவியானவர் உன்னைக் கைவிடுவார் என்று நான் உறுதியளிக்கிறேன். நீ நம்பவில்லை என்றால் முயற்சி செய்துபார்! இன்று நடைமுறைக்கான பாதையை நான் உனக்குத் தெளிவுபடுத்துகிறேன், ஆனால் நீ அதை நடைமுறைப்படுத்துவாயா என்பதை நீதான் முடிவு செய்ய வேண்டும். நீ அதை நம்பவில்லை என்றால், நீ அதை நடைமுறைப்படுத்தவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் உனக்குள் செயல்படுகிறாரா இல்லையா என்பதை நீயே காண்பாய்! நீ தேவனைப் புரிந்துகொள்வதைத் தொடரவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் உனக்குள் கிரியை செய்ய மாட்டார். தம்முடைய வார்த்தைகளைப் பின்தொடர்ந்து அவற்றைப் பொக்கிஷமாகக் கருதுபவர்களில் தேவன் கிரியை செய்கிறார். தேவனின் வார்த்தைகளை நீ எவ்வளவு அதிகமாகப் பொக்கிஷமாகக் கருதுகிறாயோ, அவ்வளவு அதிகமாக அவருடைய ஆவி உன்னிடத்தில் கிரியை செய்வார். ஒரு மனிதன் தேவனின் வார்த்தைகளை எவ்வளவு அதிகமாகப் பொக்கிஷமாகக் கருதுகிறானோ, அவ்வளவு அதிகமாக தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கான அவர்களின் வாய்ப்பும் அதிகம். தம்மை உண்மையாக நேசிப்பவர்களை தேவன் பரிபூரணப்படுத்துகிறார், மேலும், அவருக்கு முன்பாக எவருடைய இருதயங்கள் அமைதியாக இருக்கின்றனவோ அவர்களை அவர் பரிபூரணப்படுத்துகிறார். தேவனின் எல்லாக் கிரியைகளையும் பொக்கிஷமாகக் கருதுவது, தேவனின் பிரகாசத்தைப் பொக்கிஷமாகக் கருதுவது, தேவனின் சமூகத்தைப் பொக்கிஷமாகக் கருதுவது, தேவனின் கவனிப்பையும் பாதுகாப்பையும் பொக்கிஷமாகக் கருதுவது, தேவனின் வார்த்தைகள் எவ்வாறு உன் யதார்த்தமாகின்றன, உன் வாழ்க்கைக்கு எவ்வாறு வழங்குகின்றன என்பதைப் பொக்கிஷமாகக் கொள்வது என இவை அனைத்தும் தேவனின் இருதயத்துடன் சிறந்த முறையில் இசைந்து போகின்றன. தேவனின் கிரியையை நீ பொக்கிஷமாகக் கருதினால், அதாவது, அவர் உன்மீது செய்த எல்லா கிரியைகளையும் நீ பொக்கிஷமாகக் கருதினால், அவர் உன்னை ஆசீர்வதிப்பார், உன்னுடைய அனைத்தையும் பெருகச் செய்வார். தேவனின் வார்த்தைகளை நீ பொக்கிஷமாகக் கொள்ளாவிட்டால், அவர் உன்னிடத்தில் செயல்பட மாட்டார். ஆனால் அவர் உன் விசுவாசத்திற்காக அற்பமான கிருபையை மட்டுமே வழங்குவார், அல்லது மிகக்குறைந்த செல்வத்தையும், உன் குடும்பத்தினரையும் மிகக் குறைந்த பாதுகாப்போடு ஆசீர்வதிப்பார். தேவனின் வார்த்தைகளை உன் யதார்த்தமாக்க நீ கடும் முயற்சி செய்ய வேண்டும், மேலும் அவரைத் திருப்திப்படுத்தவும் அவருடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் இருக்க வேண்டும்; அவருடைய கிருபையை அனுபவிக்க மட்டுமே நீ பாடுபடக்கூடாது. தேவனின் கிரியையைப் பெறுவது, பரிபூரணத்தை அடைவது, தேவனுடைய சித்தத்தைச் செய்பவர்களாக மாறுவதை விட விசுவாசிகளுக்கு வேறு எதுவும் அதிக முக்கியமில்லை. இது நீ தொடர வேண்டிய இலக்காக இருக்கிறது.

கிருபையின் யுகத்தில் மனிதன் பின்தொடர்ந்த அனைத்தும் இப்போது வழக்கற்றுப் போய்விட்டன, ஏனென்றால், தற்போது உயர்ந்த தரம் வாய்ந்த பின்தொடர்தல் உள்ளது; பின்தொடரப்படுவது மிகவும் உயர்ந்ததாகவும், மேலும் அதிகமாக நடைமுறைக்கு ஏற்றவாறும் உள்ளது. பின்தொடரப்படுவது உள்ளாக மனிதனுக்கு என்ன தேவை என்பதைச் சிறப்பாகப் பூர்த்தி செய்ய முடியும். கடந்த காலங்களில், தேவன் இன்று ஜனங்கள் மீது கிரியை செய்வது போல அப்போது கிரியை செய்யவில்லை; அவர் இன்று இந்த அளவிற்குப் பேசுவதைப் போல அப்போது அவர்களிடம் பேசவில்லை, அப்போது அவர்களிடமான அவரின் தேவைகளும் அவருடைய இப்போதைய தேவைகளைப் போல அதிகமானவை அல்ல. தேவன் இந்த விஷயங்களை உன்னிடம் பேசுகிறார் என்பது இப்போது தேவனின் இறுதி நோக்கம் உன் மீது, இந்த ஜனக்குழுவின் மீது கவனம் செலுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. நீ உண்மையிலேயே தேவனால் பரிபூரணப்படுத்தப்பட விரும்பினால், அதை உன் மைய இலக்காகப் பின்பற்று. நீ சுற்றித் திரிந்து, உன்னை ஒப்புக்கொடுத்து, ஒரு செயல்பாட்டைச் செய்கிறாயா, அல்லது தேவனின் கட்டளைகளைப் பெற்றிருக்கிறீர்களா என்பது முக்கியமல்ல, இந்தக் குறிக்கோள்களை அடைவதற்கு எப்போதும் நோக்கம் பரிபூரணப்படுத்தப்பட வேண்டும், தேவனின் சித்தத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். தேவன் மூலமாகப் பரிபூரணப்படுத்தப்படுவதை அல்லது ஜீவப்பிரவேசத்தைப் பின்தொடர்வதில்லை என்றும், மாம்ச அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே அவர்கள் பின்தொடர்கிறார்கள் என்று யாராவது சொன்னால், அவர்கள் மனிதர்களில் குருடரானவர்கள். ஜீவிதத்தின் யதார்த்தத்தைப் பின்தொடராமல், ஆனால், வரப்போகும் உலகத்தில் நித்திய ஜீவனையும் மற்றும் இவ்வுலகில் பாதுகாப்பை மட்டுமே பின்தொடர்வோர், மனிதர்களில் குருடரானவர்கள். எனவே, நீ செய்யும் அனைத்தும் தேவனால் பரிபூரணப்படுத்தப்பட்டு ஆதாயம்பண்ணப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காகச் செய்யப்பட வேண்டும்.

தேவன் ஜனங்களில் செய்யும் கிரியை அவர்களின் வெவ்வேறு தேவைகளின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்குவதாகும். ஒரு மனிதனின் ஜீவிதம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு அதிகமாக அவர்களின் தேவை இருக்கிறது. மேலும், அவ்வளவாக அவர்கள் பின்தொடர்கிறார்கள். இந்த கட்டத்தில் உனக்கு எந்தப் பின்தொடர்தலும் இல்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் உன்னைக் கைவிட்டுவிட்டார் என்பதை இது நிரூபிக்கிறது. ஜீவிதத்தைத் தொடர்பவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரால் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள்; அத்தகையவர்கள் எப்போதும் பின்தொடர்கிறார்கள், எப்போதும் தங்களது இருதயத்தில் ஏக்கம் கொள்கிறார்கள். அத்தகையவர்கள் தற்போதுள்ள விஷயங்களில் ஒருபோதும் திருப்தியடைய மாட்டார்கள். பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் ஒவ்வொரு நிலையும் உன்னில் ஒரு விளைவை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் நீ மெத்தனமாக மாறினால், உனக்கு இனி தேவைகள் இல்லையென்றால், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நீ இனி ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவர் உன்னைக் கைவிடுவார். ஜனங்களுக்கு ஒவ்வொரு நாளும் தேவனின் ஆழ்ந்த சோதனை தேவைப்படுகிறது; அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் தேவனிடமிருந்து ஏராளமான ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் தேவனின் வார்த்தையைப் புசித்துப் பானம் பண்ணாமல் ஜனங்களால் சமாளிக்க முடியுமா? தேவனின் வார்த்தையைப் போதுமான அளவு புசிக்கவோ பானம் பண்ணவோ முடியாது என்று யாராவது எப்போதும் உணர்ந்தால், அவர்கள் எப்பொழுதும் அதைப் பின்தொடர்ந்தால், அதற்காகப் பசி தாகம் கொண்டால், பரிசுத்த ஆவியானவர் அவர்களில் எப்போதும் கிரியை செய்வார். ஒருவர் எவ்வளவு அதிகமாக ஏங்குகிறாரோ, அவ்வளவு நடைமுறை விஷயங்கள் அவர்களுடைய ஐக்கியத்திலிருந்து வெளிவரக்கூடும். ஒருவர் எவ்வளவு தீவிரமாகச் சத்தியத்தை நாடுகிறாரோ, அவ்வளவு விரைவாக அவர்கள் தங்களது ஜீவிதத்தில் வளர்ச்சியை அடைகிறார்கள். அது அவர்களை அனுபவத்தில் பணக்காரர்களாகவும், தேவனுடைய வீட்டில் வசிக்கும் செல்வந்தர்களாகவும் ஆக்குகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவர்களைப் பரிபூரணமாக்குகிறார்” என்பதிலிருந்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 167

பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனுஷனால் கூட தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. இதுபோன்ற மனுஷனால் தேவனைப்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 587

இந்தப் பரந்த உலகில், மீண்டும் மீண்டும் பெருங்கடல்கள் நிலங்களுக்குள் பாய்கின்றன. நிலங்கள் பெருங்கடல்களின் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன....

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 536

தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் உயிருக்கு ஆபத்தான இடங்களில் ஓங்கி அடித்து, நம்மைக் காயப்படுத்தி, பயத்தினால் நிறைந்திருக்கச் செய்கிறது. அவர்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 42

"தேவன் நம்மோடிருக்கிறார்" என்று அர்த்தமுள்ள இயேசுவின் நாமத்தால் தேவனின் மனநிலையை முழுவதுமாக பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? அந்த நாமத்தால்...