தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 514

தேவனுக்கு ஊழியம் செய்யும் ஒருவர் அவருக்காக எப்படி துன்பப்பட வேண்டும் என்பதை அறிந்துகொள்வது மட்டுமல்ல; அதற்கும் மேலாக, தேவனை விசுவாசிப்பதன் நோக்கம் தேவனை நேசிப்பதே என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். தேவன் உன்னைச் சுத்திகரிப்பதற்காகவோ அல்லது உன்னைத் துன்பப்படுத்துவதற்காகவோ பயன்படுத்துவதில்லை. மாறாக, அவருடைய கிரியைகளை நீ அறிந்துகொள்ளவும், மனித ஜீவிதத்தின் உண்மையான முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளவும், குறிப்பாக, தேவனுக்கு ஊழியம் செய்வது எளிதான காரியம் அல்ல என்பதை நீ அறிந்துகொள்ளவும் உன்னைப் பயன்படுத்துகிறார். தேவனுடைய கிரியையை அனுபவிப்பது என்பது கிருபையை அனுபவிப்பதைப் பற்றியது அல்ல. மாறாக, நீ அவரை நேசிப்பதற்காகத் துன்பப்படுவதைப் பற்றியது. நீ தேவனுடைய கிருபையை அனுபவிப்பதால், அவருடைய சிட்சையையும் நீ அனுபவிக்க வேண்டும்; இவை அனைத்தையும் நீ அனுபவிக்க வேண்டும். தேவனுடைய அறிவொளியை நீ உனக்குள் அனுபவிக்க முடியும். மேலும், அவர் உன்னை எவ்வாறு நடத்துகிறார், உன்னை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார் என்பதையும் நீ அனுபவிக்க முடியும். இதனால், உனது அனுபவம் விரிவானதாக இருக்கும். தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் கிரியையை உன் மீது நடத்தியிருக்கிறார். தேவனுடைய வார்த்தை உன்னை கையாண்டிருக்கிறது, ஆனால் அது மட்டுமல்ல; அது உனக்கு அறிவொளியை அளித்துள்ளது மற்றும் உன்னைப் பிரகாசிக்கச் செய்துள்ளது. நீ எதிர்மறையான எண்ணத்துடன் பலவீனமாக இருக்கும்போது, தேவன் உனக்காக வருந்துகிறார். இந்தக் கிரியைகள் அனைத்தும் மனிதனைப் பற்றிய அனைத்தும் தேவனுடைய திட்டங்களுக்குள் உள்ளன என்பதை உனக்குத் தெரிவிப்பதற்காகவே செய்யப்படுகின்றன. தேவனை விசுவாசிப்பது துன்பத்தை அனுபவிப்பதைப் பற்றியது அல்லது அவருக்காக எல்லா விதமான காரியங்களையும் செய்வது என்று நீ நினைக்கலாம்; தேவனை விசுவாசிப்பதன் நோக்கம் உனது மாம்சம் சமாதானமாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்லது உனது ஜீவிதத்தில் எல்லாம் சுமூகமாக நடக்க வேண்டும் என்பதற்காக அல்லது நீ வசதியாகவும் எல்லாவற்றிலும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக என்று நீ நினைக்கலாம். இருப்பினும், இவை எதுவும் தேவன் மீதுள்ள விசுவாசத்துடன் ஜனங்கள் பிணைக்க வேண்டிய நோக்கங்கள் அல்ல. இந்த நோக்கங்களுக்காக நீ விசுவாசித்தால், உனது கண்ணோட்டம் தவறானது. மேலும், நீ பரிபூரணப்படுத்தப்படுவதற்கு சாத்தியமில்லை. தேவனுடைய கிரியை, தேவனுடைய நீதியுள்ள மனநிலை, அவருடைய ஞானம், அவருடைய வார்த்தைகள் மற்றும் அவரது அதிசயமான மற்றும் புரிந்துகொள்ள முடியாத தன்மை ஆகியவை ஜனங்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களாகும். இந்தப் புரிதலைக் கொண்டிருப்பதால், தனிப்பட்ட கோரிக்கைகள், நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் அனைத்தையும் உனது இருதயத்திலிருந்து அகற்றுவதற்கு நீ இதைப் பயன்படுத்த வேண்டும். இவற்றை அகற்றுவதன் மூலம் மட்டுமே நீ தேவன் கோரிய நிபந்தனைகளை நிறைவேற்ற முடியும், இதைச் செய்வதன் மூலம்தான் நீ ஜீவனைப் பெற்று தேவனைத் திருப்திப்படுத்த முடியும். தேவனை விசுவாசிப்பதன் நோக்கம் அவரை திருப்திப்படுத்துவதும், அவர் விரும்பும் மனநிலையில் வாழ்வதும் ஆகும். இதனால் அவருடைய கிரியைகளும் மகிமையும் இந்தத் தகுதியற்ற ஜனக்கூட்டத்தின் மூலம் வெளிப்படும். தேவனை விசுவாசிப்பதற்கான சரியான கண்ணோட்டம் இதுதான். மேலும், நீ நாட வேண்டிய இலக்கு இதுவே ஆகும். தேவனை விசுவாசிப்பது குறித்து உனக்குச் சரியான கண்ணோட்டம் இருக்க வேண்டும். மேலும், நீ தேவனுடைய வார்த்தைகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். நீ தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துக் குடிக்க வேண்டும், நீ சத்தியத்தின்படி ஜீவிக்க வேண்டும், குறிப்பாக அவருடைய நடைமுறைக் கிரியைகளையும், பிரபஞ்சம் முழுவதிலும் அவர் செய்கிற அதிசயிக்கத்தக்க கிரியைகளையும், அத்துடன் மாம்சத்தில் அவர் செய்கிற நடைமுறைக் கிரியைகளையும் உன்னால் காண முடியும். ஜனங்கள் தங்களது நடைமுறை அனுபவங்களின் மூலம், தேவன் தம்முடைய கிரியையை எவ்வாறு செய்கிறார் என்பதையும், அவரது சித்தம் அவர்களை நோக்கி என்ன செய்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இவை அனைத்தின் நோக்கமும் ஜனங்களின் கேடு நிறைந்த சாத்தானுக்குரிய மனநிலையை அகற்றுவதாகும். உனக்குள் இருக்கும் அசுத்தத்தையும் அநீதியையும் வெளியேற்றிவிட்டு, உனது தவறான நோக்கங்களைத் தள்ளிவிட்டு, தேவன் மீதான உண்மையான விசுவாசத்தை வளர்த்துக் கொண்டால் மட்டுமே—உண்மையான விசுவாசத்தினால் மட்டுமே நீ தேவனை உண்மையாக நேசிக்க முடியும். தேவன்மீது நீ வைத்திருக்கும் விசுவாசத்தின் அஸ்திபாரத்தில் மட்டுமே நீ தேவனை உண்மையாக நேசிக்க முடியும். தேவனை விசுவாசியாமல் அவரை நேசிக்க முடியுமா? நீ தேவனை விசுவாசிப்பதால், அதைப் பற்றி நீ குழப்பமடைய முடியாது. தேவன் மீதான விசுவாசம் அவர்களுக்கு ஆசீர்வாதத்தைத் தரும் என்பதைக் கண்டவுடன் சிலர் பெலன் நிறைந்தவர்களாக மாறிவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் சுத்திகரிப்புகளை அனுபவிக்க வேண்டியிருப்பதைக் கண்டவுடன் அவர்களது முழு பெலனையும் இழந்துவிடுகிறார்கள். அதுதான் தேவனை விசுவாசிப்பது என்பதா? இறுதியில், உனது விசுவாசத்தில் நீ தேவனுக்கு முன்பாக முழுமையான மற்றும் முற்றிலுமான கீழ்ப்படிதலை அடைய வேண்டும். நீ தேவனை விசுவாசிக்கிறாய், ஆனால் உனக்கு இன்னும் அவரிடம் முன்வைப்பதற்கு கோரிக்கைகள் உள்ளன. நீ கைவிட முடியாத பல மதக் கருத்துக்களைக் கொண்டுள்ளாய், உனது தனிப்பட்ட ஆர்வங்களை உன்னால் கைவிட முடியவில்லை, இருப்பினும் நீ மாம்சத்தின் ஆசீர்வாதங்களைத் தேடுகிறாய், தேவன் உனது மாம்சத்தை மீட்க வேண்டும் என விரும்புகிறாய், உனது ஆத்துமாவை அவர் இரட்சிக்க வேண்டும் என விரும்புகிறாய்—இவையே தவறான கண்ணோட்டம் கொண்ட ஜனங்களின் நடத்தைகள் ஆகும். மத நம்பிக்கையுள்ளவர்கள் தேவன்மீது விசுவாசம் வைத்திருந்தாலும், அவர்கள் தங்களது மனநிலையினை மாற்றிக்கொள்ள முற்படுவதில்லை, தேவனைப் பற்றிய அறிவைப் பின்தொடர்வதில்லை. மாறாக, தங்களது மாம்சத்தின் ஆர்வங்களை மட்டுமே தேடுகிறார்கள். உங்களில் பலருக்கு பல்வேறு வகைகளைச் சேர்ந்த மத நம்பிக்கைகள் உள்ளன; இது தேவன் மீதான உண்மையான விசுவாசம் அல்ல. தேவனை விசுவாசிப்பதற்கு, ஜனங்கள் அவருக்காக துன்பப்படத் தயாராக இருக்கும் ஒரு இருதயத்தையும் தங்களைத் தாங்களே அர்ப்பணிக்கும் விருப்பத்தையும் கொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஜனங்கள் நிறைவேற்றாவிட்டால், தேவன் மீது அவர்கள் வைத்திருக்கும் விசுவாசம் தவறானது, மேலும் அவர்களுடைய மனநிலையில் மாற்றத்தை அடைய முடியாது. சத்தியத்தை உண்மையாகப் பின்தொடர்ந்து தேவனைப் பற்றிய அறிவைத் தேடி, ஜீவிதத்தைத் தொடரும் மனிதர்கள் மட்டுமே தேவனை உண்மையாக விசுவாசிக்கிறார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்பதிலிருந்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 481

பேதுரு தேடியதெல்லாம் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றதுதான். அவன் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற முயன்றான். துன்பங்களையும் இன்னல்களையும்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மதக் கருத்துக்களை வெளிப்படுத்துதல் | பகுதி 284

தேவனுடைய கிரியை எப்போதும் முன்னோக்கியே நகர்கிறது, மேலும் அவருடைய கிரியையின் நோக்கம் மாறாவிட்டாலும், அவர் கிரியை செய்யும் முறை தொடர்ந்து...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 349

மனிதகுலம் இன்று இருக்கும் இடத்தை அடைய பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றைக் கடந்துள்ளது, ஆயினும் ஆரம்பத்தில் நான் சிருஷ்டித்த மனிதகுலம்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 38

அந்த நேரத்தில், எல்லா மனுஷரையும் மீட்பதற்கான கிரியையாக இயேசுவின் கிரியை இருந்தது. அவரை விசுவாசித்த அனைவரின் பாவங்களும் மன்னிக்கப்பட்டன; நீ...