தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 33
கிரியையின் இந்த இறுதிக் கட்டத்தில், வார்த்தையின் மூலம் முடிவுகள் அடையப்படுகின்றன. வார்த்தையின் மூலம், மனுஷன் பல மறைபொருட்களையும், கடந்த...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
பெரும்பாலான ஜனங்களின் தேவன் மீதான விசுவாசத்தின் சாராம்சம் மத நம்பிக்கையே ஆகும். அவர்களால் தேவனை நேசிக்க இயலாது, மேலும் இயந்திர மனிதனைப் போல மட்டுமே தேவனைப் பின்பற்ற முடியும், தேவனுக்காக உண்மையிலேயே ஏங்கவோ அல்லது அவரைத் தொழுதுகொள்ளவோ முடியாது. அவர்கள் வெறுமனே அவரை அமைதியாகப் பின்பற்றுகிறார்கள். பலர் தேவனை விசுவாசிக்கிறார்கள், ஆனால் தேவனை நேசிப்பவர்கள் மிகக் குறைவு, அவர்கள் பேரழிவிற்குப் பயப்படுவதால் மட்டுமே, அவர்கள் தேவனை "வணங்குகிறார்கள்", இல்லையென்றால் தேவன் உயர்ந்தவர் மற்றும் வலிமைமிக்கவர் என்பதால் அவர்கள் அவரைப் "போற்றுகிறார்கள்". ஆனால் அவர்களின் பயபக்தியிலும் புகழ்ச்சியிலும், அன்போ உண்மையான ஏக்கமோ இல்லை. அவர்களின் அனுபவங்களில் அவர்கள் சத்தியத்தை மிகச்சிறிய அளவில் இல்லையெனில் சில அற்பமான மறைபொருட்களை நாடுகிறார்கள். பெரும்பாலான ஜனங்கள் வெறுமனே பின்பற்றுகிறார்கள், கலங்கிய நீரில் ஆசீர்வாதத்தை மீனைப்போல பிடிக்கிறார்கள். அவர்கள் சத்தியத்தைத் தேடுவதும் இல்லை, அவர்கள் தேவனின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக உண்மையிலேயே தேவனுக்குக் கீழ்ப்படிவதுமில்லை. தேவன்மீது உள்ள எல்லா ஜனங்களுடைய விசுவாசத்தின் வாழ்க்கையும் அர்த்தமற்றது, அதற்கு மதிப்பு இல்லை, அதில் அவர்களின் தனிப்பட்ட கருத்துகளும் நோக்கங்களும் உள்ளன. அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவதற்காகவேயன்றி தேவனை நேசிப்பதற்காக தேவனை விசுவாசிக்கவில்லை. பலர் தங்கள் விருப்பப்படி நடக்கிறார்கள். அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள், தேவனின் ஆர்வங்களையும் அல்லது அவர்கள் செய்வது தேவனின் சித்தத்திற்கு ஏற்ப இருக்கிறதா என்றும் ஒருபோதும் ஆலோசிக்க மாட்டார்கள். அத்தகையவர்களால் உண்மையான விசுவாசத்தைக்கூட அடைய முடியாது, தேவன் மீதான அன்பையும் அடைய முடியாது. தேவனின் சாராம்சம் மனிதன் நம்புவதற்காக மட்டுமல்ல, இன்னும், அது மனிதனால் நேசிக்கப்பட வேண்டும். ஆனால் தேவனை விசுவாசிக்கிறவர்களில் பலரால் இந்த "ரகசியத்தை" கண்டுபிடிக்க முடியாது. ஜனங்கள் தேவனை நேசிக்கத் துணிவதும் இல்லை, அவரை நேசிக்க முயற்சிப்பதும் இல்லை. தேவனைக் குறித்து அன்புகூர அதிகம் உண்டு என்று அவர்கள் ஒருபோதும் கண்டுபிடித்திருக்கவில்லை. தேவன் மனிதனை நேசிக்கும் தேவன் என்றும், மனிதனால் நேசிக்கப்பட வேண்டிய தேவன் என்றும் அவர்கள் ஒருபோதும் கண்டுபிடித்திருக்கவில்லை. தேவனின் அருமை அவருடைய கிரியையில் வெளிப்படுத்தப்படுகிறது. ஜனங்கள் அவருடைய கிரியையை அனுபவிக்கும் போது மட்டுமே அவர்களால் அவருடைய அருமையைக் கண்டறிய முடியும். அவர்களின் உண்மையான அனுபவங்களில் மட்டுமே தேவனின் அருமையை அவர்களால் புரிந்துகொள்ள முடியும். நிஜ வாழ்க்கையில் அதைக் கடைபிடிக்காமல், தேவனின் அருமையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. தேவனைப் பற்றி நேசிக்க அநேகம் இருக்கிறது, ஆனால் உண்மையில் அவருடன் ஐக்கியப்படாமல் ஜனங்களால் அதைக் கண்டுபிடிக்க இயலாது. அதாவது, தேவன் மாம்சமாக மாறவில்லை என்றால், ஜனங்களால் அவருடன் உண்மையாக ஐக்கியப்பட இயலாது, அவர்களால் உண்மையில் அவருடன் ஐக்கியப்பட முடியாவிட்டால், அவர்களால் அவருடைய கிரியையை அனுபவிக்கவும் முடியாது. எனவே தேவன் மீதான அவர்களுடைய அன்பு மிகவும் பொய் மற்றும் கற்பனையால் கறைபடுத்தப்படுகிறது. பரலோகத்தில் உள்ள தேவன் மீதான அன்பு பூமியிலுள்ள தேவன் மீதான அன்பைப் போல உண்மையானதல்ல, ஏனென்றால் ஜனங்கள் தங்களின் கண்களால் பார்த்ததையும் அவர்கள் தனிப்பட்ட முறையில் அனுபவித்ததையும் விட, பரலோகத்தில் தேவனைப் பற்றிய அறிவு அவர்களின் கற்பனைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தேவன் பூமிக்கு வரும்போது, அவருடைய உண்மையான கிரியைகளையும் அவருடைய அருமையையும் ஜனங்களால் காண முடிகிறது, மேலும் அவருடைய நடைமுறை மற்றும் இயல்பான மனநிலையை அவர்கள் அனைவராலும் காண முடிகிறது, இவை அனைத்தும் பரலோகத்தில் உள்ள தேவனைக்குறித்த அறிவை விட ஆயிரக்கணக்கான மடங்கு உண்மையானவை. ஜனங்கள் பரலோகத்திலுள்ள தேவனை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், இந்த அன்பைக் குறித்து உண்மையானது எதுவுமில்லை, அது மனிதனின் கருத்துக்களால் நிறைந்துள்ளது. அவர்கள் பூமியிலுள்ள தேவன்மீது எவ்வளவு குறைவாக அன்பு வைத்திருந்தாலும், இந்த அன்பு உண்மையானது. அதில் கொஞ்சம் மட்டுமே இருந்தாலும், அது இன்னும் உண்மையானது. தேவன் உண்மையான கிரியையின் மூலம் ஜனங்கள் அவரை அறிந்துகொள்ளச் செய்கிறார், இந்த அறிவின் மூலம் அவர் அவர்களின் அன்பைப் பெறுகிறார். இது பேதுருவைப் போன்றது, அவர் இயேசுவோடு வாழ்ந்திருக்காவிட்டால், இயேசுவை வணங்குவது அவருக்கு சாத்தியமில்லை. ஆகவே, இயேசுவுடனான ஐக்கியத்தின் அடிப்படையில் இயேசுவிடம் அவர் கொண்டிருந்த விசுவாசமும் கட்டப்பட்டது. மனிதனை தம்மை நேசிக்க வைப்பதற்காக, தேவன் மனிதர்களிடையே வந்திருந்து மனிதனுடன் சேர்ந்து வாழ்கிறார், மேலும் அவர் மனிதனைப் பார்க்கவும் அனுபவிக்கவும் வைக்கும் எல்லாமே தேவனுடைய யதார்த்தமாகும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை நேசிப்பவர்கள் என்றென்றும் அவருடைய வெளிச்சத்திற்குள் வாழ்வார்கள்” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
கிரியையின் இந்த இறுதிக் கட்டத்தில், வார்த்தையின் மூலம் முடிவுகள் அடையப்படுகின்றன. வார்த்தையின் மூலம், மனுஷன் பல மறைபொருட்களையும், கடந்த...
முற்றிலும் அவநம்பிக்கை கொண்ட தங்கள் குழந்தைகளையும் உறவினர்களையும் சபைக்குள் இழுத்துக்கொண்டு வருபவர்கள் அதிக சுயநலம் கொண்டவர்கள், மேலும்...
நமது முழுச் சரீரமும் தேவனிடமிருந்து வந்துள்ளதாலும் மற்றும் அது தேவனுடைய ராஜரீகத்தின் காரணமாகவே ஜீவிப்பதாலும், மனித இனத்தின்...
தேவனை விசுவாசிக்கிற ஒருவராக, எல்லாவற்றிலும் அவரையல்லாமல் வேறு யாருக்கும் நீங்கள் விசுவாசமாக இருக்கக்கூடாது, எல்லாவற்றிலும் அவருடைய...