தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 120
மேலோட்டமான மற்றும் நுட்பமான கண்ணோட்டங்களின் மூலம் தேவனுடைய அதிகாரத்தைப் புரிந்துகொள்ளுதல் தேவனுடைய அதிகாரம் தனித்துவமானது. இது தேவனுடைய...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
"பவுல் மிகப்பெரிய கிரியையைச் செய்தான், அவன் திருச்சபைகளுக்காக பெரும் பாரங்களைச் சுமந்து, அவற்றுக்கு மிக அதிகப் பங்களிப்புகளைச் செய்துள்ளான். பவுலின் பதின்மூன்று நிருபங்கள் கிருபையின் காலத்தின் 2,000 ஆண்டுகளை உறுதிப்படுத்தின. அவை நான்கு சுவிசேஷங்களுக்கு அடுத்தபடியாக உள்ளன. அவனுடன் யாரை ஒப்பிட முடியும்? யோவானின் வெளிப்பாட்டை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. அதேசமயம் பவுலின் நிருபங்கள் ஜீவனை அளிக்கின்றன. அவன் செய்த கிரியை திருச்சபைகளுக்கு பயனளித்தது. இதுபோன்ற விஷயங்களை வேறு யார் சாதித்திருக்க முடியும்? பேதுரு என்ன கிரியை செய்தான்?" என்று சிலர் சொல்கிறார்கள். மனிதன் மற்றவர்களை அளவிடும்போது, அவர்களுடைய பங்களிப்புக்கு ஏற்ப அவ்வாறு செய்கிறான். தேவன் மனிதனை அளவிடும்போது, மனிதனின் சுபாவத்திற்கு ஏற்ப அவர் அவ்வாறு செய்கிறார். ஜீவனைத் தேடுபவர்களில், பவுல் தனது சொந்த சாராம்சத்தை அறியாத ஒருவன். அவன் எந்த வகையிலும் தாழ்மையானவனோ அல்லது கீழ்ப்படிதலுள்ளவனோ அல்ல. தேவனுக்கு எதிரான அவனது சாராம்சத்தை அவன் அறிந்திருக்கவில்லை. எனவே, அவன் விரிவான அனுபவங்களுக்கு ஆளாகாத ஒருவன். சத்தியத்தைக் கடைபிடிக்காத ஒருவன். பேதுருவோ வித்தியாசமானவன். தேவனுடைய ஒரு சிருஷ்டியாக அவனது குறைபாடுகள், பலவீனங்கள் மற்றும் அவனது சீர்கேடான மனநிலை ஆகியவற்றை அவன் அறிந்திருந்தான். எனவே அவன் தனது மனநிலையை மாற்றும் ஒரு நடைமுறைப் பாதையைக் கொண்டிருந்தான். அவன் கோட்பாட்டை மட்டுமே கொண்டிருந்து எந்த யதார்த்தமும் இல்லாதவர்களில் ஒருவனல்ல. மாறும் மனிதர்கள் இரட்சிக்கப்பட்ட புதிய மனிதர்கள். அவர்கள் சத்தியத்தைப் பின்பற்றத் தகுதி உள்ளவர்கள். மாறாதவர்கள் இயற்கையாகவே வழக்கற்றுப் போனவர்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இரட்சிக்கப்படாதவர்கள். அதாவது தேவனால் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்கள். அவர்கள் எவ்வளவு பெரிய கிரியை செய்தாலும் அவர்கள் தேவனால் நினைவுகூரப்பட மாட்டார்கள். இதை நீ உன் சொந்த நாட்டத்துடன் ஒப்பிடும்போது, நீ இறுதியில் பேதுரு போன்ற அல்லது பவுல் போன்ற மனிதனாக இருக்கிறாயா என்பதைச் சுயமாக அறிய வேண்டும். நீ தேடுவதில் இன்னும் சத்தியம் இல்லை என்றால், இன்றும் நீ பவுலைப் போலவே திமிர்பிடித்தவனாகவும், இழிவானவனாகவும் இருந்தால், அவனைப் போலவே அகந்தையாகவும் பெருமையாகவும் இருந்தால், நீ தோல்வியுற்ற ஒரு சீர்கெட்டவன் என்பதில் சந்தேகமில்லை. நீ பேதுருவைப் போலவே தேடுவாயானால், நீ நடைமுறைகளையும் உண்மையான மாற்றங்களையும் நாடி, திமிர்பிடித்தவனாகவோ, பிடிவாதமுள்ளவனாகவோ இல்லாமல், உன் கடமையைச் செய்ய முற்பட்டால், நீ ஜெயத்தை அடையக்கூடிய தேவனுடைய ஒரு சிருஷ்டியாக இருப்பாய். தனது சொந்த சாராம்சம் அல்லது சீர்கேடு என்னவென்று பவுலுக்கு தெரியாது. அவனுடைய கீழ்ப்படியாமையை அவன் அறியாதிருந்தான். அவன் ஒருபோதும் கிறிஸ்துவை இழிவுபடுத்தியதைக் குறிப்பிடவில்லை. அதற்கான அதிக வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை. அவன் ஒரு சுருக்கமான விளக்கத்தை மட்டுமே வழங்கினான் மற்றும் அவனது இருதயத்தில் ஆழமாக, அவன் தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படியவில்லை. அவன் தமஸ்குவுக்குச் செல்லும் பாதையில் விழுந்தாலும், அவன் தனக்குள்ளே ஆழமாகப் பார்க்கவில்லை. அவன் தொடர்ந்து கிரியை செய்வதில் திருப்தி அடைந்தான். அவன் தன்னை அறிந்துகொள்வதையும் தனது பழைய மனநிலையை மாற்றுவதையும் பிரச்சனைகளில் மிக முக்கியமானதாகக் கருதவில்லை. வெறுமனே சத்தியத்தைப் பேசுவதில் திருப்தி அடைந்தான். தனது மனசாட்சிக்கு ஒரு அடிமையைப் போல மற்றவர்களுக்காகத் தன்னை வழங்கித் திருப்தி அடைந்தான் மற்றும் தன்னை ஆறுதல்படுத்தவும், கடந்த கால பாவங்களுக்காகத் தன்னை மன்னிக்கவும் இயேசுவின் சீஷர்களை இனி துன்புறுத்தாமல் இருப்பதில் திருப்தி அடைந்தான். அவன் பின்பற்றிய குறிக்கோளானது எதிர்கால கிரீடம் மற்றும் நிரந்தரமற்ற கிரியைகளைத் தவிர வேறொன்றுமில்லை. அவன் பின்பற்றிய குறிக்கோளானது ஏராளமான கிருபையாகும். அவன் போதுமான சத்தியத்தைத் தேடவில்லை. முன்பு புரிந்து கொள்ளாத சத்தியத்தில் ஆழமாக முன்னேற அவன் முயலவில்லை. ஆகவே, தன்னைப் பற்றிய அவனது அறிவு பொய்யானது என்று கூறலாம் மற்றும் அவன் சிட்சையையோ நியாயத்தீர்ப்பையோ ஏற்கவில்லை. அவனால் கிரியை செய்ய முடிந்தது என்பது அவன் தனது சொந்த சுபாவம் அல்லது சாராம்சத்தைப் பற்றிய அறிவைக் கொண்டிருந்தான் என்று அர்த்தமாகாது. அவனது கவனம் வெளிப்புற நடைமுறைகளில் மட்டுமே இருந்தது. மேலும் அவன் பாடுபட்டது, மாற்றத்துக்கானது அல்ல, அது அறிவுக்கானது. அவனுடைய கிரியையானது முற்றிலுமாக தமஸ்குவுக்குச் செல்லும் பாதையில் இயேசு தோன்றியதன் விளைவாகும். இது அவன் முதலில் செய்யத் தீர்மானித்த ஒன்றல்ல அல்லது அவனது பழைய மனநிலையைக் கத்தரித்து சுத்தம் செய்து கொண்டபின் ஏற்பட்ட கிரியையும் அல்ல. அவன் எவ்வாறு கிரியை செய்திருந்தாலும், அவனுடைய பழைய மனநிலை மாறவில்லை. ஆகவே அவனது கிரியை அவனது கடந்தகால பாவங்களை நிவர்த்தி செய்யவில்லை. ஆனால் அவனது கிரியை அக்கால திருச்சபைகளில் ஒரு குறிப்பிட்ட பங்கைக் கொண்டிருந்தது. இதுபோன்ற ஒருவனுக்கு, அவனது பழைய மனநிலை மாறவில்லை—அதாவது, இரட்சிப்பைப் பெறாத மற்றும் சத்தியம் இல்லாமல் இருந்த ஒருவனால்—கர்த்தராகிய இயேசுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களில் ஒருவனாக அவன் முற்றிலுமாக மாற இயலாது. அவன் இயேசு கிறிஸ்துவின் மீது அன்பும் பயபக்தியும் நிறைந்த ஒருவனும் அல்ல, சத்தியத்தைத் தேடுவதில் திறமையானவனும் அல்ல, மனுவுருவாதலின் இரகசியத்தைத் தேடிய ஒருவனும் அல்ல. அவன் போலியான வாதம் செய்வதில் திறமையானவனாக மட்டுமே இருந்தான். அவன் தன்னை விட உயர்ந்த அல்லது சத்தியம் பெற்ற எவருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டான். தனக்கு முரணான அல்லது தன்னுடன் பகைமை கொண்ட மனிதர்கள் அல்லது உண்மைகள் மீது அவன் பொறாமை கொண்டான். ஒரு சிறந்த காட்சியை முன்வைத்து ஆழ்ந்த அறிவைக் கொண்ட திறமையான மனிதர்களையே அவன் விரும்பினான். மெய்யான வழியைத் தேடும், சத்தியத்தைத் தவிர வேறொன்றையும் கவனித்துக்கொள்ளாத ஏழை ஜனங்களுடன் பழகுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதற்குப் பதிலாக மத அமைப்புகளின் மூத்த மனிதர்களுடனும், கோட்பாடுகளை மட்டுமே பேசும், ஏராளமான அறிவைப் பெற்ற மனிதர்களுடனும் தன்னை இணைத்துக்கொண்டான். பரிசுத்த ஆவியானவருடைய புதிய கிரியையைப் பற்றி அவனுக்கு எந்த அன்பும் இல்லை. பரிசுத்த ஆவியானவருடைய புதிய கிரியையின் செயல்பாட்டில் அக்கறைகொள்ளவில்லை. மாறாக, பொதுவான சத்தியங்களை விட உயர்ந்த அந்த விதிகளையும் உபதேசங்களையும் அவன் விரும்பினான். அவனது உள்ளார்ந்த சாராம்சத்திலும், அவன் தேடியவை முழுவதிலும், சத்தியத்தைப் பின்பற்றிய ஒரு கிறிஸ்தவன் என்றும் தேவனுடைய வீட்டில் உண்மையுள்ள ஊழியக்காரன் என்றும் அழைக்கப்படுவதற்கு அவன் தகுதியற்றவன். ஏனென்றால் அவனுடைய மாய்மாலம் அதிகமாக இருந்தது, அவனுடைய கீழ்ப்படியாமை மிகப் பெரியது. அவன் கர்த்தராகிய இயேசுவின் ஊழியக்காரனாக அறியப்பட்டாலும், பரலோகராஜ்யத்தின் வாசலில் பிரவேசிப்பதற்கு அவன் ஒருபோதும் தகுதியுடையவன் அல்ல. ஏனென்றால் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை அவன் செய்த செயல்களை நீதியுள்ளவை என்று சொல்ல முடியாது. அவன் மாயத்தனமாக அநீதியைச் செய்தவனாக ஆனால் கிறிஸ்துவுக்காக கிரியை செய்தவனாக மட்டுமே பார்க்கப்படலாம். அவனைப் பிசாசு என்று அழைக்க முடியாது என்றாலும், அவனை அநீதியைச் செய்த மனிதன் என்று அழைக்கலாம். அவன் அதிகக் கிரியை செய்தான். ஆனாலும் அவன் செய்த கிரியையின் அளவு குறித்து தீர்மானிக்காமல் அதன் தரம் மற்றும் சாராம்சத்தின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு மட்டுமே இந்த விஷயத்தின் அடிப்படையை அடைய முடியும். அவன் எப்போதுமே விசுவாசித்தான்: "நான் கிரியை செய்ய வல்லவன், பெரும்பாலான ஜனங்களை விட நான் சிறந்தவன். வேறு யாரைக் காட்டிலும் கர்த்தருடைய பாரத்தைச் சுமக்கக்கூடிய ஒருவனாக என்னைக் கருதுகிறேன். யாரும் என்னைப் போல ஆழமாக மனந்திரும்புவதில்லை, ஏனென்றால், பெரிய ஒளி என் மீது பிரகாசித்தது. நான் பெரிய ஒளியைக் கண்டேன், எனவே என் மனந்திரும்புதல் மற்றவர்களை விட ஆழமானது." அந்த நேரத்தில், அவன் தனது இருதயத்திற்குள் நினைத்தது இதுதான். பவுல் தனது கிரியையின் முடிவில், "நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினான். அவனது போராட்டம், கிரியை மற்றும் போக்கு முற்றிலுமாக நீதியின் கிரீடத்திற்காகவே இருந்தது மற்றும் அவன் தீவிரமாக முன்னேறவில்லை. அவன் தனது கிரியையில் முழுமையடையவில்லை என்றாலும், அவனது தவறுகளைச் சமாளிப்பதற்காகவும், அவனது மனசாட்சியின் குற்றச்சாட்டுகளைச் சமாளிப்பதற்காகவும் அவனது கிரியை வெறுமனே செய்யப்பட்டது என்று கூறலாம். அவன் தனது கிரியையை முடிப்பான் என்றும், தனது போக்கை முடித்துக்கொள்வான், விரைவில் தனது போராட்டத்தைப் போராடி முடிப்பான் என்று மட்டுமே நம்பினான். இதனால் அவன் தனது நீண்டகால நீதியின் கிரீடத்தை விரைவில் பெற முடியும் என்று நம்பினான். கர்த்தராகிய இயேசுவை அவருடைய அனுபவங்களாலும் உண்மையான அறிவினாலும் சந்திக்காமல், தனது கிரியையை சீக்கிரம் முடிப்பதன் மூலம் கர்த்தராகிய இயேசுவைச் சந்திக்கும் போது, தான் செய்த கிரியையின் பலன்களை அவன் பெற வேண்டும் என்பதற்காக அவன் ஏங்கினான். அவன் தனது கிரியையை தன்னை ஆறுதல்படுத்தவும், எதிர்காலக் கிரீடத்திற்கு ஈடாக வைக்கவும் பயன்படுத்தினான். அவன் தேடியது சத்தியமோ தேவனோ அல்ல, கிரீடம் மட்டுமே. அத்தகைய நாட்டம் எவ்வாறு தரமானதாக இருக்கும்? அவனது உந்துதல், அவனது கிரியை, அவன் செலுத்திய விலைக்கிரயம் மற்றும் அவனது முயற்சிகள் அனைத்தையும்—அவனது அற்புதமானக் கற்பனைகள் அனைத்தையும் நிரப்பியது. அவன் தனது சொந்த ஆசைகளுக்கு ஏற்ப முற்றிலுமாக கிரியை செய்தான். அவனது முழு கிரியையிலும், அவன் செலுத்திய விலைக்கிரயத்தில் சிறிதளவு விருப்பமும் இல்லை. அவன் வெறுமனே ஒரு ஒப்பந்தம் செய்வதில் ஈடுபட்டிருந்தான். அவனது கடமையைச் செய்வதற்காக அவனது முயற்சிகள் விருப்பத்துடன் செய்யப்படவில்லை. ஆனால் ஒப்பந்தத்தின் நோக்கத்தை அடைவதற்காக விருப்பத்துடன் செய்யப்பட்டன. அத்தகைய முயற்சிகளுக்கு ஏதாவது மதிப்பு இருக்கிறதா? அவனது அசுத்தமான முயற்சிகளை யாரேனும் பாராட்டுவார்களா? இத்தகைய முயற்சிகளில் யாருக்கு ஆர்வம் இருக்கிறது? அவனது கிரியை எதிர்காலத்திற்கான கனவுகள் நிறைந்ததாகவும், அற்புதமான திட்டங்கள் நிறைந்ததாகவும் இருந்தன. மனித மனநிலையை மாற்றுவதற்கான பாதையை அது கொண்டிருக்கவில்லை. அவனது தயவு மிகவும் பாசாங்கானதாகும். அவனது கிரியை ஜீவனை வழங்கவில்லை. ஆனால் அது ஒரு நாகரிகத்தின் மோசடியாகும். அது ஒரு ஒப்பந்தமாகும். இத்தகையக் கிரியையால் மனிதனை எவ்வாறு மெய்யான கடமையை மீட்டெடுக்கும் பாதையில் செலுத்த முடியும்?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
மேலோட்டமான மற்றும் நுட்பமான கண்ணோட்டங்களின் மூலம் தேவனுடைய அதிகாரத்தைப் புரிந்துகொள்ளுதல் தேவனுடைய அதிகாரம் தனித்துவமானது. இது தேவனுடைய...
தேவனை நேசிப்பவர்கள் சத்தியத்தை நேசிப்பவர்களாவர், மேலும் சத்தியத்தை நேசிப்பவர்கள் அதை அதிகமாகக் கடைப்பிடிக்கும் போது, அவர்கள் அதை அதிகமாகக்...
கிரியையின் இந்த இறுதிக் கட்டத்தில், வார்த்தையின் மூலம் முடிவுகள் அடையப்படுகின்றன. வார்த்தையின் மூலம், மனுஷன் பல மறைபொருட்களையும், கடந்த...
ராஜ்யத்தில், எண்ணற்ற படைக்கப்பட்ட வஸ்துக்கள் புத்துயிர் பெற மற்றும் அவற்றின் உயிர் சக்தியை மீண்டும் பெறத் தொடங்குகின்றன. பூமியின் நிலையில்...