தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 478

கையாளுதல் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றை அனுபவிப்பதன் மூலம் பேதுரு பரிபூரணமாக்கப்பட்டான். அவன், "நான் எப்போதுமே தேவனுடைய விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். நான் செய்யும் எல்லாவற்றிலும் நான் தேவனுடைய விருப்பத்தை பூர்த்தி செய்ய மட்டுமே முயல்கிறேன். நான் சிட்சிக்கப்பட்டாலும், நியாயந்தீர்க்கப்பட்டாலும், அவ்வாறு செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினான். பேதுரு தனக்குரிய அனைத்தையும் தேவனுக்குக் கொடுத்தான், அவனுடைய கிரியை, வார்த்தைகள் மற்றும் முழு ஜீவிதத்தையும் தேவனை நேசிப்பதற்காகவே கொடுத்தான். அவன் பரிசுத்தத்தைத் தேடிய ஒருவன். அவன் எவ்வளவு அதிகமாக அனுபவித்தானோ, அவனுடைய இருதயத்திற்குள் தேவன் மீதுள்ள அன்பு அவ்வளவு அதிகமாக இருந்தது. இதற்கிடையில், பவுல் வெளிப்புறக் கிரியைகளை மட்டுமே செய்தான். அவன் கடினமாக உழைத்தாலும், அவனுடைய உழைப்பு அவனது கிரியையைச் சரியாகச் செய்வதற்கும், அதனால் வெகுமதியைப் பெறுவதற்கும் உரியதாகும். தனக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது என்று தெரிந்திருந்தால், அவன் தனது கிரியையை கைவிட்டிருப்பான். பேதுரு அக்கறை காட்டியது அவனுடைய இருதயத்திற்குள் இருக்கும் உண்மையான அன்பாகும். அது நடைமுறைக்குரியது மற்றும் அடையக்கூடியது ஆகும். அவன் ஒரு வெகுமதியைப் பெறுவானா என்பது பற்றி அவன் கவலைப்படவில்லை. ஆனால் அவனது மனநிலையை மாற்ற முடியுமா என்பது பற்றி கவலைப்பட்டான். பவுல் எப்போதும் கடினமாக உழைப்பதைப் பற்றி அக்கறை காட்டினான். வெளிப்புறக் கிரியை மற்றும் பக்தி பற்றியும், சாதாரண ஜனங்கள் அனுபவிக்காதக் கோட்பாடுகளைப் பற்றியும் அக்கறை காட்டினான். தனக்குள்ளான ஆழமான மாற்றங்கள் மீதோ அல்லது தேவன் மீதான உண்மையான அன்பின் மீதோ அவன் அக்கறைகொள்ளவில்லை. உண்மையான அன்பையும் தேவனைப் பற்றிய உண்மையான அறிவையும் அடைவதற்காகவே பேதுருவின் அனுபவங்கள் இருந்தன. அவனுடைய அனுபவங்கள் தேவனோடு நெருங்கிய உறவைப் பெறுவதற்கும், நடைமுறையில் ஜீவிப்பதற்கும் உரியதாகும். பவுலின் கிரியையானது இயேசுவால் அவனிடம் ஒப்படைக்கப்பட்டதாலும், அவன் ஏங்கியவற்றைப் பெறுவதற்காகவும் அதைச் செய்தான். ஆனால் தன்னைப் பற்றியும் தேவனைப் பற்றியும் அவன் அறிந்த அறிவுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவனது கிரியை சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிப்பதற்கானதாகும். பேதுரு தேடியது தூய அன்பு மற்றும் பவுல் தேடியது நீதியின் கிரீடம் ஆகும். பேதுரு பரிசுத்த ஆவியானவருடைய பல வருட கிரியைகளை அனுபவித்தான். கிறிஸ்துவைப் பற்றிய நடைமுறை அறிவையும், தன்னைப் பற்றிய ஆழமான அறிவையும் கொண்டிருந்தான். எனவே, தேவன் மீதான அவனது அன்பு தூய்மையானது. பல வருட சுத்திகரிப்பு இயேசுவையும் ஜீவனையும் பற்றிய அவனது அறிவை உயர்த்தியிருந்தது. அவனுடைய அன்பு நிபந்தனையற்ற அன்பு. அது ஒரு தன்னிச்சையான அன்பு. அதற்குப் பதிலாக அவன் எதுவும் கேட்கவில்லை. அவன் எந்த நன்மைகளையும் எதிர்பார்க்கவில்லை. பவுல் பல ஆண்டுகளாக கிரியை செய்தான், ஆனாலும் அவன் கிறிஸ்துவைப் பற்றிய அதிக அறிவைக் கொண்டிருக்கவில்லை, தன்னைப்பற்றிய அறிவும் பரிதாபகரமாக குறைவானதாகவே இருந்தது. வெறுமனே கிறிஸ்துவின் மீது அவனுக்கு அன்பு இல்லை. அவனுடைய கிரியையும், அவன் ஓடிய ஓட்டமும் இறுதி விருதைப் பெறுவதற்கானவையே. அவன் தேடியது மிகச்சிறந்த கிரீடம், தூய்மையான அன்பு அல்ல. அவன் சுறுசுறுப்பாக தேடவில்லை, ஆனால் செயலற்ற முறையில் தேடினான். அவன் தனது கடமையைச் செய்யவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர் அவரைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்பட்டது. எனவே, அவன் தேவனுடைய தகுதிவாய்ந்த சிருஷ்டி என்பதை அவனது நாட்டம் நிரூபிக்கவில்லை. தேவனுடைய தகுதிவாய்ந்த சிருஷ்டியாக இருந்த பேதுரு தான் தன்னுடைய கடமையைச் செய்தான். தேவனுக்கு பங்களிப்பு செய்பவர்கள் அனைவருக்கும் வெகுமதி கிடைக்க வேண்டும் என்றும், எவ்வளவு அதிகமான பங்களிப்பு இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக தேவனுடைய தயவை அவர்கள் பெற வேண்டும் என்றும் மனிதன் கருதுகிறான். மனிதனின் பார்வையின் சாராம்சம் பரிவர்த்தனைக்குரியதாகும். அவன் தேவனுடைய ஒரு சிருஷ்டியாக தனது கடமையைச் செய்ய தீவிரமாக முயற்சிப்பதில்லை. தேவனைப் பொறுத்தவரையில், ஜனங்கள் தேவன் மீதான உண்மையான அன்பையும் தேவனுக்கான கீழ்ப்படிதலையும் எவ்வளவு அதிகமாக நாடுகிறார்களோ, அதாவது தேவனுடைய ஒரு சிருஷ்டியாக தங்கள் கடமையைச் செய்ய எவ்வளவு அதிகமாக முற்படுகிறார்களோ அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற முடிகிறது. தேவனுடைய பார்வை என்னவென்றால், மனிதன் தனது மெய்யான கடமையையும் அந்தஸ்தையும் மீட்டெடுக்க வேண்டும். மனிதன் தேவனுடைய ஒரு சிருஷ்டி. ஆகவே மனிதன் தேவனிடம் எந்தவொரு கோரிக்கைகளையும் முன்வைத்து தன்னை மீறி நடக்கக் கூடாது மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டியாக தன் கடமையைச் செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்யக்கூடாது. பவுலின் மற்றும் பேதுருவின் இலக்குகள் தேவனுடைய சிருஷ்டிகளாக தங்கள் கடமையைச் செய்ய முடியுமா என்பதைப் பொறுத்து அளவிடப்பட்டன. அவர்களின் பங்களிப்பின் அளவிற்கு ஏற்ப அளவிடப்படவில்லை. அவர்களுடைய இலக்குகள் தொடக்கத்திலிருந்தே அவர்கள் தேடியவற்றின்படி தீர்மானிக்கப்படுகின்றன. அவர்கள் எவ்வளவு கிரியை செய்தார்கள் என்பதன் அடிப்படையிலோ அல்லது மற்றவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையிலோ தீர்மானிக்கப்படவில்லை. எனவே, தேவனுடைய சிருஷ்டியாக ஒருவரின் கடமையைத் தீவிரமாகச் செய்ய முற்படுவது ஜெயத்துக்கான பாதையாகும். தேவன் மீதான உண்மையான அன்பின் பாதையைத் தேடுவது மிகவும் சரியான பாதையாகும். ஒருவரின் பழைய மனநிலையில் மாற்றங்களைத் தேடுவது, தேவன் மீதான தூய்மையான அன்பைத் தேடுவது ஆகியவை ஜெயத்துக்கான பாதையாகும். அத்தகைய ஜெயத்துக்கான பாதை மெய்யான கடமையை மீட்டெடுப்பதற்கான பாதை மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் மெய்யான தோற்றம் ஆகும். இது மீட்புக்கான பாதை மற்றும் இது தொடக்கத்தில் இருந்து இறுதி வரை தேவனுடைய எல்லாக் கிரியைகளின் நோக்கமாகும். மனிதனுடைய நாட்டமானது தனிப்பட்ட ஆடம்பரக் கோரிக்கைகள் மற்றும் பகுத்தறிவற்ற ஏக்கங்கள் ஆகியவற்றால் களங்கப்பட்டால், அதனால் வரும் விளைவு மனிதனின் மனநிலையில் உள்ள மாற்றங்களாக இருக்காது. இது மீட்பின் கிரியைக்கு முரணானது. இது சந்தேகத்திற்கு இடமின்றி பரிசுத்த ஆவியானவரால் செய்யப்பட்ட கிரியை அல்ல. எனவே இந்த வகையான நாட்டம் தேவனால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை இது நிரூபிக்கிறது. தேவனால் அங்கீகரிக்கப்படாத ஒரு நாட்டத்திற்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மதக் கருத்துக்களை வெளிப்படுத்துதல் | பகுதி 291

இன்று உன்னை ஜெயங்கொள்வதன் நோக்கம், தேவன் உனது தேவன் என்றும் மற்றவர்களின் தேவன் என்றும், மிக முக்கியமாக அவர் தம்மை நேசிக்கும் அனைவருக்கும்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 318

தேவன் மீதான உன் விசுவாசம், சத்தியத்தின் மீதான உன் நாட்டம், உன்னை நீயே தொடர்பு கொள்ளும் விதம் அனைத்தும் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 511

நீ தேவனை விசுவாசித்தால், நீ தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் உன் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்ற...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 591

இன்று, பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தை அடைவதற்கு முன்பு, ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவது மற்றும் பரிபூரணமாக்கப்படுவது ஆகியவையே மனிதன் பின்பற்ற...