தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 19
யேகோவா அவரது கிரியைகளை நடத்திய இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்னர் மனிதன் எதையும் அறியவில்லை. மேலும் வெள்ளத்தால் உலகம் அழிக்கப்படுவதற்கு...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
பேதுரு ஒரு பரிபூரணப்படுத்தப்பட்ட மனிதனாக இருந்தான். சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவித்த பின்னரே, தேவன் மீதான தூய அன்பைப் பெற்று, அவன் முழுமையாக பரிபூரணப்படுத்தப்பட்டான். அவன் நடந்த பாதை பரிபூரணமாக்கப்படுவதற்கான பாதையாக இருந்தது. அதாவது, தொடக்கத்திலிருந்தே, பேதுரு நடந்துவந்த பாதை சரியானதாக இருந்தது. தேவனை விசுவாசிப்பதற்கான அவனது உந்துதல் சரியானதாக இருந்தது, எனவே அவன் பரிபூரணமாக்கப்பட்ட ஒருவனாக மாறினான் மற்றும் மனிதன் இதற்கு முன்பு நடந்திராத ஒரு புதிய பாதையில் அவன் நடந்தான். ஆயினும், தொடக்கத்திலிருந்தே பவுல் நடந்துவந்த பாதை கிறிஸ்துவுக்கு எதிரானப் பாதையாக இருந்தது. பரிசுத்த ஆவியானவர் தான் பவுலைப் பயன்படுத்த விரும்பினார். தம்முடைய கிரியைகளுக்காக பவுலுடைய வரங்களையும், எல்லா தாலந்துகளையும் பயன்படுத்திக் கொள்ள அவன் விரும்பியதாலேயே, கிறிஸ்துவுக்காக பல தசாப்தங்களாக பவுல் கிரியை செய்தான். அவன் வெறுமனே பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனிதன். இயேசு அவனுடைய மனிதத்தன்மையைப் பார்த்ததனால் அவன் பயன்படுத்தப்படவில்லை, ஆனால் அவனுடைய வரங்களின் நிமித்தமாகப் பயன்படுத்தப்பட்டான். பவுல் தாக்கப்பட்டதால் அவனால் இயேசுவுக்காக கிரியை செய்ய முடிந்தது. அவ்வாறு செய்வதில் தமக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்று அவன் அவ்வாறு செய்யவில்லை. பரிசுத்த ஆவியானவருடைய அறிவொளி மற்றும் வழிகாட்டுதலின் காரணமாக அவனால் அத்தகைய கிரியையைச் செய்ய முடிந்தது. அவன் செய்த கிரியையானது எந்த வகையிலும் அவனது நாட்டத்தையோ அல்லது அவனது மனிதத்தன்மையையோ குறிக்கவில்லை. பவுலின் கிரியை ஒரு ஊழியரின் கிரியையைக் குறிக்கிறது. அதாவது அவன் ஒரு அப்போஸ்தலனின் கிரியையைச் செய்தான். பேதுருவோ வேறுபட்டவன்: அவனும் சில கிரியைகளைச் செய்தான். இது பவுலின் கிரியையைப் போல பெரியதல்ல. ஆனால் தனது சொந்த பிரவேசத்தைப் பின்பற்றும்போது அவன் கிரியை செய்தான். அவனுடைய கிரியை பவுலின் கிரியையிலிருந்து வேறுபட்டதாக இருந்தது. தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையைச் செய்வதே பேதுருவின் கிரியையாக இருந்தது. அவன் ஒரு அப்போஸ்தலனின் பாத்திரத்தில் கிரியை செய்யவில்லை, ஆனால் தேவன் மீதான அன்பைப் பின்பற்றி கிரியை செய்தான். பவுலின் கிரியையின் போக்கில் அவனது தனிப்பட்ட பின்தொடர்தலும் இருந்தது: அவனுடைய பின்தொடர்தலானது எதிர்காலத்திற்கான நம்பிக்கைகள் மற்றும் ஒரு நல்ல இலக்குக்கான அவனது விருப்பத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. அவன் தனது கிரியையின் போது சுத்திகரிப்பையும் ஏற்கவில்லை, கத்தரித்து கிளைநறுக்கப்படுவதையும் கையாளப்படுவதையும் ஏற்கவில்லை. அவன் செய்த கிரியை எவ்வளவாக தேவனுடைய விருப்பத்தை பூர்த்திசெய்யும் வரை, அவன் செய்ததெல்லாம் தேவனுக்குப் பிரியமாக இருக்கும் வரை, ஒரு வெகுமதி இறுதியில் அவனுக்குக் காத்திருக்கும் என்று அவன் நம்பினான். அவனது கிரியையில் தனிப்பட்ட அனுபவங்கள் எதுவும் இல்லை—அது அனைத்தும் அதன் சொந்த நலனுக்கானவை மற்றும் மாற்றத்தைத் தேடும் பயணத்தில் மேற்கொள்ளப்பட்டவை அல்ல. அவனது கிரியையில் உள்ள அனைத்தும் ஒரு பரிவர்த்தனையாக இருந்தது. அதில் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமை அல்லது கீழ்ப்படிதல் எதுவும் இல்லை. பவுலின் கிரியையின் போது, அவனது பழைய மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவனது கிரியை வெறுமனே மற்றவர்களுக்குச் சேவை செய்வதாக இருந்தது மற்றும் அவனது மனநிலையில் ஏதும் மாற்றங்களைக் கொண்டு வர முடியாமல் இருந்தது. பவுல் பரிபூரணமாக்கப்படாமல் அல்லது கையாளப்படாமல் நேரடியாக தனது கிரியையைச் செய்தான். அவன் வெகுமதியால் தூண்டப்பட்டான். பேதுரு வித்தியாசமானவனாக இருந்தான்: அவன் கிளைநறுக்கப்படுதல் மற்றும் கையாளுதலுக்கு உட்பட்டவன் மற்றும் சுத்திகரித்தலுக்கு உட்பட்டவன். பேதுருவின் கிரியையின் நோக்கமும் உந்துதலும் அடிப்படையில் பவுலின் நோக்கங்களுக்கு வேறுபட்டவையாக இருந்தன. பேதுரு பெரிய அளவிலான கிரியையைச் செய்யவில்லை என்றாலும், அவனுடைய மனநிலை பல மாற்றங்களைச் சந்தித்தது. அவன் தேடியது சத்தியமும், உண்மையான மாற்றமும் ஆகும். அவனது கிரியை அந்தக் கிரியைக்காக மட்டும் மேற்கொள்ளப்படவில்லை. பவுல் அதிகக் கிரியை செய்த போதிலும், அது பரிசுத்த ஆவியானவருடைய கிரியையாக இருந்தது. இந்தக் கிரியையில் பவுல் ஒத்துழைத்த போதிலும், அவன் அதை அனுபவிக்கவில்லை. பேதுரு மிகக் குறைவான கிரியையைச் செய்தான். ஏனெனில், பரிசுத்த ஆவியானவர் அவன் மூலமாக அவ்வளவாக கிரியையைச் செய்யவில்லை. அவர்களுடைய கிரியையின் அளவு அவர்கள் பரிபூரணமாக்கப்பட்டிருந்தார்களா என்பதைத் தீர்மானிக்கவில்லை. ஒருவருடைய பின்பற்றுதல் வெகுமதிகளைப் பெறுவதற்கானதும், மற்றவர்களுடையது தேவனுடைய ஒரு நிறைவான அன்பை அடைவதற்கானதும், தேவனுடைய ஒரு சிருஷ்டியாக தனது கடமையை நிறைவேற்றுவதும், தேவனுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு அழகான ரூபத்தில் ஜீவிப்பதும் ஆகும். வெளிப்புறமாக அவை வேறுபட்டவை மற்றும் அவற்றின் சாராம்சங்களும் வேறுபட்டவையாக இருந்தன. அவர்கள் எவ்வளவு கிரியை செய்தார்கள் என்பதன் அடிப்படையில் அவர்களில் யார் பரிபூரணமாக்கப்பட்டார்கள் என்று உன்னால் தீர்மானிக்க முடியாது. தேவனை நேசிப்பவருடைய சாயலில் வாழ்பவனாகவும், தேவனுக்குக் கீழ்ப்படிந்த ஒருவனாகவும், கையாளுதலையும் கிளைநறுக்கப்படுதலையும் ஏற்றுக்கொண்ட ஒருவனாகவும், தேவனுடைய சிருஷ்டியாக தனது கடமையை நிறைவேற்றிய ஒருவனாகவும் இருக்க பேதுரு முயன்றான். அவனால் தன்னை தேவனுக்காக அர்ப்பணிக்கவும், தன்னை முழுவதுமாக தேவனுடைய கைகளில் வைக்கவும், மரிக்கும் வரை அவருக்குக் கீழ்ப்படியவும் முடிந்தது. அதைத்தான் அவன் செய்யத் தீர்மானித்தான் மற்றும், அதைத்தான் அவன் நிறைவேற்றினான். கடைசியாக அவனுடைய முடிவு பவுலின் முடிவுக்கு வேறுபட்டதற்கு இதுவே அடிப்படை காரணம். பேதுருவில் பரிசுத்த ஆவியானவர் செய்த கிரியை அவனை பரிபூரணப்படுத்துவதற்காகும். பரிசுத்த ஆவியானவர் பவுலில் செய்த கிரியை அவனைப் பயன்படுத்துவதற்காகும். ஏனென்றால், அவர்களுடைய சுபாவங்களும், பின்பற்றுவதற்கான அவர்களுடைய பார்வைகளும் ஒரே மாதிரியாக இல்லை. இருவரிடமும் பரிசுத்த ஆவியானவருடைய கிரியை இருந்தது. பேதுரு இந்தக் கிரியையை தன்னிலே அப்பியாசப்படுத்திக் கொண்டான், மற்றவர்களுக்கும் அதை வழங்கினான். இதற்கிடையில், பவுல் பரிசுத்த ஆவியானவருடைய முழு கிரியையையும் மற்றவர்களுக்கு மட்டுமே வழங்கினான், அதிலிருந்து எதையும் தனக்கெனப் பெறவில்லை. இவ்வாறு, பரிசுத்த ஆவியானவருடைய கிரியையை அவன் பல ஆண்டுகளாக அனுபவித்தபின், பவுலில் ஏற்பட்ட மாற்றங்கள் இல்லாதவைகளுக்கு நெருக்கமாக இருந்தன. அவன் இன்னும் இயல்பான நிலையில் இருந்தான். அவன் இன்னும் முந்தைய பவுலாகவே இருந்தான். பல வருட கிரியையின் கஷ்டங்களைத் தாங்கியப் பின்னர், அவன் "கிரியை" செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டான். அவன் சகிப்புத்தன்மையைக் கற்றுக்கொண்டான். ஆனால் அவனது பழைய சுபாவமான அவனது கடுமையான போட்டி மற்றும் கூலிப்படையின் சுபாவம் அவனுடன் இன்னமும் இருந்தது. பல வருடங்கள் கிரியை செய்த பின்னும், அவன் தனது சீர்கேடான மனநிலையை அறிந்திருக்கவில்லை அல்லது தனது பழைய மனநிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை. அது அவனுடைய கிரியையில் இன்னும் தெளிவாகத் தெரிந்தது. அவனிடம் இன்னும் அதிகமான கிரியை அனுபவம் இருந்தது. ஆனால் இதுபோன்ற சிறிய அனுபவம் மட்டுமே அவனை மாற்ற இயலாமல் மற்றும் இருப்பு அல்லது அவனது நோக்கத்தின் முக்கியத்துவம் குறித்த அவனது கருத்துக்களை மாற்ற முடியாமல் இருந்தது. அவன் கிறிஸ்துவுக்காக பல ஆண்டுகள் கிரியை செய்தாலும், கர்த்தராகிய இயேசுவை மீண்டும் ஒருபோதும் துன்புறுத்தவில்லை என்றாலும், அவனுடைய இருதயத்தில் தேவனைப் பற்றிய அறிவில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதன் பொருள் என்னவென்றால், அவன் தன்னை தேவனுக்காக அர்ப்பணிப்பதற்காகக் கிரியை செய்யவில்லை, மாறாக அவன் தனது எதிர்கால இலக்குக்காக கிரியை செய்ய நிர்பந்திக்கப்பட்டான். தொடக்கத்தில், அவன் கிறிஸ்துவைத் துன்புறுத்தினான், கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியவில்லை. அவன் இயல்பாகவே கிறிஸ்துவை எதிர்த்த ஒரு கலகக்காரனாகவும், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையைப் பற்றி அறியாத ஒருவனாகவும் இருந்தான். அவனுடைய கிரியை ஏறக்குறைய முடிந்ததும், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையை அவன் அறிந்திருக்கவில்லை. பரிசுத்த ஆவியானவருடைய சித்தத்திற்கு சிறிதளவேனும் கவனம் செலுத்தாமல், தனது சொந்த குணாதிசயத்திற்கு ஏற்ப தனது சொந்த விருப்பப்படியே செயல்பட்டான். எனவே அவனுடைய சுபாவம் கிறிஸ்துவுக்கு விரோதமாக இருந்தது. அவன் சத்தியத்திற்குக் கீழ்ப்படியவில்லை. இது போன்ற ஒருவன், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையால் கைவிடப்பட்டவன், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையை அறியாதவன், கிறிஸ்துவை எதிர்த்தவன்—அத்தகைய மனிதன் எவ்வாறு இரட்சிக்கப்படுவான்? மனிதனை இரட்சிக்க முடியுமா இல்லையா என்பது அவன் எவ்வளவு கிரியை செய்கிறான், எவ்வளவு அர்ப்பணிக்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல, மாறாக, பரிசுத்த ஆவியானவருடைய கிரியையை அவன் அறிந்திருக்கிறானா இல்லையா, அவனால் சத்தியத்தைக் கடைபிடிக்க முடியுமா இல்லையா மற்றும் பின்பற்றுவதைப் பற்றிய அவனது கருத்துக்கள் சத்தியத்துடன் ஒத்துப்போகின்றனவா இல்லையா என்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
யேகோவா அவரது கிரியைகளை நடத்திய இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்னர் மனிதன் எதையும் அறியவில்லை. மேலும் வெள்ளத்தால் உலகம் அழிக்கப்படுவதற்கு...
தேவனின் 6,000 ஆண்டுக்கால நிர்வாகக் கிரியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: நியாயப்பிரமாணத்தின் காலம், கிருபையின் காலம் மற்றும்...
ஜனங்கள் அனுபவத்தின் அடிப்படையில் தேவனை வரையறுக்க முனைகிறார்கள் தேவனை அறிவது என்ற தலைப்பைப் பற்றி பேசும் போது, நீங்கள் ஏதாவது...
அவருடைய கிரியையின் போது ஓடிப் போவோரிடமான தேவனுடைய மனநிலை எல்லா இடங்களிலும் அதுபோன்றவர்கள் இருக்கிறார்கள்: தேவனுடைய வழியைப் பற்றி அவர்கள்...