தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 466

உங்கள் விசுவாசம் மிகவும் உண்மையானது என்றாலும், உங்களில் எவராலும் என்னைப் பற்றிய ஒரு முழுமையான விவரத்தையும் கொடுக்க முடியாது, நீங்கள் காணும் அனைத்து உண்மைகளுக்கும் எவராலும் முழு சாட்சியம் அளிக்க முடியாது. இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்: இன்று, உங்களில் பெரும்பாலோர் உங்கள் கடமைகளைக் கைவிடுவது, அதற்கு பதிலாக மாம்சத்தைப் பின்தொடர்வது, மாம்சத்தைத் திருப்திப்படுத்துவது, பேராசையுடன் மாம்சத்தை அனுபவிப்பது என்று இருக்கிறீர்கள். உங்களிடம் கொஞ்சம் சத்தியம் உள்ளது. அப்படியானால், நீங்கள் கண்ட எல்லாவற்றிற்கும் நீங்கள் எவ்வாறு சாட்சியமளிக்க முடியும்? நீங்கள் என்னுடைய சாட்சிகளாக இருக்க முடியும் என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா? இன்று நீ கண்ட எல்லாவற்றிற்கும் உன்னால் சாட்சியமளிக்க முடியாத ஒரு நாள் வந்தால், நீ சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களின் செயல்பாட்டை இழந்திருப்பாய், மேலும் நீ இதுவரை ஜீவிப்பதற்கு எந்த அர்த்தமும் இருக்காது. நீ மனிதனாக இருக்கத் தகுதியற்றவனாய் இருப்பாய். நீ மனிதனாக இருக்க மாட்டாய் என்று கூட சொல்லலாம்! நான் உங்களிடம் அளவிட முடியாத கிரியையைச் செய்துள்ளேன், ஆனால் நீ தற்போது எதையும் கற்றுக்கொள்ளாமல், எதிலும் விழிப்புணர்வில்லாமல், உன் உழைப்பை வீணாக்கியிருப்பதால், எனது கிரியையை விஸ்தரிக்க வேண்டிய நேரம் வரும் பொழுது, நீ புரிந்துகொள்ளும் தன்மை இல்லாமல் வெறித்து, வாயடைத்து, முற்றிலும் உபயோகமற்று இருப்பாய். அது உன்னை எல்லா நேரத்திலும் பாவியாக உருவாக்காது? அந்த நேரம் வரும் பொழுது, நீ ஆழமாக மனஸ்தாபப்படவில்லையா? நீ மனவருத்தத்தில் மூழ்க மாட்டாயா? இன்று எனது கிரியைகள் அனைத்தும் சோம்பலாகவும் மற்றும் சலிப்பாகவும் செய்யப்படவில்லை, ஆனால் எனது வருங்காலக் கிரியைக்கு ஓர் அடித்தளத்தை அமைப்பதாகும். நான் ஒரு முட்டுக்கட்டைக்குள்ளாகி விட்டேன் என்பதல்ல, மேலும் புதியவற்றைக் கொண்டு வர வேண்டும் என்பதாகும். நான் செய்யும் கிரியையை நீ புரிந்துகொள்ள வேண்டும்; இது தெருவில் விளையாடும் ஒரு குழந்தையால் செய்யப்பட்ட ஒன்று அல்ல, ஆனால் இது என் தந்தையின் பிரதிநிதித்துவத்தில் செய்யப்படும் கிரியை ஆகும். இதையெல்லாம் நானே செய்யவில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்; மாறாக, நான் என் தந்தையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். இதற்கிடையில், உங்கள் வேலை உறுதியாக பின்பற்றுவதும், கீழ்ப்படிவதும், மாறுவதும், மற்றும் சாட்சியளிப்பதும் ஆகும். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், என்னில் நீங்கள் ஏன் விசுவாசம் கொள்ள வேண்டும்; இது நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வி ஆகும். என் பிதா அவருடைய மகிமையின் நிமித்தமாக உலகைச் சிருஷ்டித்த தருணத்திலிருந்து உங்கள் அனைவரையும் எனக்காக முன்குறித்தார். எனது கிரியையின் நிமித்தம், அவருடைய மகிமையின் நிமித்தம், அவர் உங்களை முன்குறித்தார். என் பிதாவினால்தான் நீங்கள் என்னில் விசுவாசம் கொள்கிறீர்கள்; என் பிதாவின் தீர்க்கதரிசனத்தின் காரணமாகவே நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள். இவை எதுவும் உங்கள் சொந்த விருப்பப்படி இல்லை. அதைவிட முக்கியமானது என்னவென்றால், எனக்கு சாட்சியமளிக்கும் நோக்கத்திற்காக, என் பிதா எனக்கு வழங்கியவர் நீங்கள்தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். அவர் எனக்கு உங்களைக் கொடுத்ததால், நான் உங்களுக்கு வழங்கிய வழிகளையும் அதேபோல் நான் உங்களுக்குப் போதிக்கும் வழிகளையும் மற்றும் வார்த்தைகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டும், ஏனென்றால் என் வழிகளைக் கடைப்பிடிப்பது உங்கள் கடமையாகும். என் மீதான உங்கள் விசுவாசத்தின் மூல நோக்கம் இதுதான். ஆகையால், நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன்: நீங்கள் என் வழிகளைக் கடைப்பிடிக்க என் பிதா எனக்கு வழங்கிய ஒரே ஜனங்களாக இருக்கிறீர்கள். எனினும், நீங்கள் என்னில் மட்டுமே விசுவாசம் கொள்கிறீர்கள்; நீங்கள் என்னுடையவர்கள் அல்ல, ஏனென்றால் நீங்கள் இஸ்ரவேல் குடும்பத்தார் அல்ல, அதற்குப் பதிலாக பழைய சர்ப்பத்தைப் போன்றவர்கள். நான் உங்களிடம் கேட்பதெல்லாம் எனக்காகச் சாட்சியம் அளியுங்கள் என்பதுதான், ஆனால் இன்று நீங்கள் என்னுடைய வழிகளில் கட்டாயமாக நடக்க வேண்டும். இவை அனைத்தும் எதிர்கால சாட்சியங்களின் நிமித்தமாக இருக்கிறது. நீங்கள் என் வழிகளைக் கேட்கும் மனிதராக மட்டுமே செயலாற்றினால், நீங்கள் பெறுமதி இல்லாமல் இருப்பீர்கள், என் பிதா உங்களை எனக்கு வழங்கியதன் முக்கியத்துவம் இழக்கப்படும். உங்களிடம் நான் வலியுறுத்திச் சொல்வது இதுதான்: நீங்கள் என் வழிகளில் நடக்க வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனைப் பற்றிய உன் புரிதல் என்ன?” என்பதிலிருந்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 481

பேதுரு தேடியதெல்லாம் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றதுதான். அவன் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற முயன்றான். துன்பங்களையும் இன்னல்களையும்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 102

தேவன் தமது முதல் மனுஷரூபமெடுத்தலில் மாம்சமாகியதன் கிரியையை முடிக்கவில்லை; மாம்சத்தில் தேவன் செய்ய வேண்டிய அவசியமான கிரியையின் முதல்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 521

பேதுருவின் அனுபவங்களில் ஓர் உச்சக்கட்டம் இருந்தது, அவருடைய உடல் கிட்டத்தட்ட முற்றிலுமாக உடைந்துவிட்டபோது, இயேசு இன்னும் அவருக்குள் ஊக்கத்தை...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 483

நீங்கள் ஏன் தேவனை விசுவாசிக்கிறீர்கள்? இந்தக் கேள்வியால் பெரும்பாலான மக்கள் குழப்பமடைந்துள்ளனர். நடைமுறையிலான தேவன் மற்றும் பரலோகத்திலுள்ள...