தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 514
தேவனுக்கு ஊழியம் செய்யும் ஒருவர் அவருக்காக எப்படி துன்பப்பட வேண்டும் என்பதை அறிந்துகொள்வது மட்டுமல்ல; அதற்கும் மேலாக, தேவனை விசுவாசிப்பதன்...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
ராஜ்யத்தின் யுகத்தில், தேவன் புதிய யுகத்தைத் தொடங்கவும், அவர் கிரியை செய்யும் வழிமுறைகளை மாற்றவும், முழு யுகத்தின் கிரியையை மேற்கொள்ளவும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். வார்த்தையின் யுகத்தில் தேவன் இந்தக் கொள்கைகளின் மூலமாகவே கிரியையை நடப்பிக்கிறார். மனுஷன் உண்மையிலேயே மாம்சத்தில் தோன்றும் வார்த்தையான தேவனைக் காண்பதற்காகவும், மற்றும் அவருடைய ஞானத்தையும் அதிசயத்தையும் காண்பதற்காகவும் அவர் வெவ்வேறு கோணங்களில் பேசுவதற்காக மாம்ச ரூபமெடுத்தார். மனுஷனை ஆட்கொள்ளுதல், மனுஷனைப் பரிபூரணப்படுத்துதல், மனுஷனைப் புறம்பாக்குதல் போன்ற குறிக்கோள்களை அடைவதற்காகவே இதுபோன்ற கிரியை செய்யப்படுகிறது, வார்த்தையின் யுகத்தில் கிரியை செய்ய வார்த்தைகளைப் பயன்படுத்துதல் என்பதே இதன் நிஜமான அர்த்தமாகும். இந்த வார்த்தைகளின் மூலம், தேவனின் கிரியை, தேவனின் மனநிலை, மனுஷனின் சாராம்சம் மற்றும் மனுஷன் எதில் பிரவேசிக்க வேண்டும் என்பதை ஜனங்கள் அறிந்துகொள்கிறார்கள். வார்த்தைகளின் மூலம், வார்த்தையின் யுகத்தில் தேவன் செய்ய விரும்பும் கிரியை முழுமையாக பலனைத் தரும். இந்த வார்த்தைகளின் மூலம், ஜனங்கள் அம்பலப்படுத்தப்படுகிறார்கள், புறம்பாக்கப்படுகிறார்கள், சோதிக்கப்படுகிறார்கள். ஜனங்கள் தேவனின் வார்த்தைகளைப் பார்த்திருக்கிறார்கள், இந்த வார்த்தைகளைக் கேட்டிருக்கிறார்கள், இந்த வார்த்தைகள் இருப்பதை அறிந்திருக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் தேவனின் பிரசன்னம், தேவனின் சர்வ வல்லமை மற்றும் ஞானம், அதேபோல் தேவனுக்கு மனுஷன் மீதுள்ள அன்பு மற்றும் மனுஷனை இரட்சிப்பதற்கான அவரது விருப்பம் ஆகியவற்றை நம்பத் துவங்கியிருக்கிறார்கள். "வார்த்தைகள்" என்கிற சொல் எளிமையானதாகவும் சாதாரணமாகவும் இருக்கலாம், ஆனால் மனுஷ ரூபமெடுத்த தேவனின் வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகள் பிரபஞ்சத்தை உலுக்குகின்றன, அவை ஜனங்களின் இதயங்களை மாற்றுகின்றன, அவர்களின் கருத்துகளையும் பழைய மனநிலையையும் மாற்றுகின்றன, மற்றும் முழு உலகமும் காட்சியளிக்கும் விதத்தை மாற்றுகின்றன. பல யுகங்களாக, இன்றைய தேவன் மட்டுமே இவ்விதமாக கிரியைகளை மேற்கொண்டுள்ளார், அவர் மட்டுமே இவ்வாறு பேசுகிறார், மனுஷனை இவ்வாறு இரட்சிக்க வருகிறார். இந்த நேரத்திலிருந்து, மனுஷன் தேவனின் வார்த்தைகளின் வழிகாட்டுதலின் கீழ் வாழ்கிறான், அவரது வார்த்தைகளால் வழிநடத்தப்படுகிறான் மற்றும் வழங்கப்படுகிறான். தேவனின் வார்த்தைகளின் சாபங்கள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் ஜனங்கள் தேவனின் வார்த்தைகளின்படி உலகில் வாழ்கிறார்கள், மற்றும் அவருடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கீழ் வாழ இன்னும் அதிகமானவர்கள் வந்திருக்கிறார்கள். இந்த வார்த்தைகள் மற்றும் இந்த கிரியை அனைத்தும் மனுஷனின் இரட்சிப்புக்காகவும், தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவும், பழைய சிருஷ்டிப்பு உலகின் உண்மையான தோற்றத்தை மாற்றுவதற்காகவும் உள்ளன. தேவன் வார்த்தைகளைப் பயன்படுத்தி உலகைப் படைத்தார், பிரபஞ்சம் முழுவதிலும் உள்ளவர்களை வார்த்தைகளைப் பயன்படுத்தி வழிநடத்துகிறார், மேலும் அவர் வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களை ஆட்கொண்டு இரட்சிக்கிறார். இறுதியில், பழைய உலகம் முழுவதையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவர் வார்த்தைகளைப் பயன்படுத்துவார், இதனால் அவருடைய இரட்சிப்பின் திட்டம் முழுவதையும் நிறைவு செய்வார். ராஜ்யத்தின் யுகம் முழுவதும், தேவன் தம்முடைய கிரியையைச் செய்வதற்கும், தன்னுடைய கிரியையின் முடிவுகளை அடைவதற்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அவர் அதிசயங்களைச் செய்வதில்லை அல்லது அற்புதங்களைச் செய்வதில்லை, ஆனால் வார்த்தைகளின் மூலமாகவே அவருடைய கிரியையைச் செய்கிறார். இந்த வார்த்தைகளால், மனுஷன் ஊட்டமளிக்கப்படுகிறான், வழங்கப்படுகிறான், மற்றும் அறிவையும் உண்மையான அனுபவத்தையும் பெறுகிறான். வார்த்தையின் யுகத்தில், மனுஷன் விதிவிலக்காக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளான். அவன் எந்தவிதமான உடல் வலியையும் அனுபவிப்பதில்லை, தேவனுடைய வார்த்தைகளின் ஏராளமான வழங்கலை அனுபவிக்கிறான்; கண்மூடித்தனமாகத் தேடவோ அல்லது கண்மூடித்தனமாகப் பயணிக்கவோ தேவையில்லாமல், அவன் தேவன் தோன்றுவதைக் காண்கிறான், அவர் தனது சொந்த வாயால் பேசுவதைக் கேட்கிறான், அவர் வழங்குவதைப் பெறுகிறான், அவர் தனிப்பட்ட முறையில் அவருடைய கிரியையைச் செய்வதை கவனிக்கிறான். இவை கடந்த யுகங்களின் ஜனங்களால் அனுபவிக்க முடியாத விஷயங்கள், இவை ஒருபோதும் பெற முடியாத ஆசீர்வாதங்கள்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
தேவனுக்கு ஊழியம் செய்யும் ஒருவர் அவருக்காக எப்படி துன்பப்பட வேண்டும் என்பதை அறிந்துகொள்வது மட்டுமல்ல; அதற்கும் மேலாக, தேவனை விசுவாசிப்பதன்...
மனுஷனுடைய கடமையின் செயல்திறனானது, உண்மையில், மனுஷனுக்குள் ஆழமாக இருக்கும் அனைத்தையும், அதாவது மனுஷனுக்கு சாத்தியமானதை நிறைவேற்றுவதாகும்....
இன்று உன்னை ஜெயங்கொள்வதன் நோக்கம், தேவன் உனது தேவன் என்றும் மற்றவர்களின் தேவன் என்றும், மிக முக்கியமாக அவர் தம்மை நேசிக்கும் அனைவருக்கும்...
நான் பல வார்த்தைகளை வெளிப்படுத்தியுள்ளேன், மேலும் எனது சித்தத்தையும் மனநிலையையும் வெளிப்படுத்தியுள்ளேன், ஆனாலும்கூட, ஜனங்களால் என்னை...