தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 338
கடந்த காலத்தைப் பற்றி சிந்தியுங்கள்: எப்போது உங்களை நோக்கி என் பார்வை கோபமாகவும், என் குரல் கண்டிப்பாகவும் இருந்தது? அற்ப விஷயங்களைப்...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
இப்போது நீ பேதுரு எடுத்தத் துல்லியமான பாதையைத் தெளிவாகக் காண முடியும். நீ பேதுருவின் பாதையைத் தெளிவாகக் காண முடிந்தால், இன்று செய்யப்படும் கிரியையைப் பற்றி நீ உறுதியாக இருப்பாய், எனவே நீ குறைகூறவோ அல்லது செயலற்றவனாக இருக்கவோ அல்லது எதற்கும் ஏங்கவோ மாட்டாய். அந்த நேரத்தில் நீ பேதுருவின் மனநிலையை அனுபவிக்க வேண்டும். அவர் துக்கத்தால் பாதிக்கப்பட்டார். அவர் இனியும் ஓர் எதிர்காலத்தையோ அல்லது எந்த ஆசீர்வாதங்களையுமோ கேட்கவில்லை. அவர் ஆதாயம், மகிழ்ச்சி, புகழ் அல்லது அதிர்ஷ்டத்தை உலகில் நாடவில்லை. அவர் மிகவும் அர்த்தமுள்ள வாழ்க்கையை மட்டுமே வாழ முயன்றார், இது தேவனின் அன்பிற்காகத் திருப்பிச் செலுத்துவதோடு அவர் தேவனுக்கு மிகவும் விலையேறப்பெற்றதாக இருந்ததை அர்ப்பணிப்பதுமாக இருந்தது. பின்னர் அவர் இருதயத்தில் திருப்தி அடைந்திருப்பார். அவர் அடிக்கடி இயேசுவிடம், "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, நான் முன்னர் உம்மை நேசித்தேன், ஆனால் நான் உம்மை ஒருபோதும் நேசிக்கவில்லை. நான் உம்மை நம்புகிறேன் என்று சொன்னாலும், நான் உம்மை உண்மையான இருதயத்துடன் நேசிக்கவில்லை. நான் உம்மை மட்டுமே பார்த்தேன், உம்மை வணங்கினேன், உம்மைத் தவறவிட்டேன், ஆனால் நான் உம்மை ஒருபோதும் நேசிக்கவில்லை, உம்மிடம் உண்மையாகவே விசுவாசம் வைத்திருக்கவில்லை" என்று ஜெபம் செய்தார். அவர் தனது தீர்மானத்தை எடுக்க தொடர்ந்து ஜெபித்தார், இயேசுவின் வார்த்தைகளால் அவர் எப்போதும் ஊக்கமடைந்து அவைகளிலிருந்து உந்துதலைப் பெற்றார். பின்னர், ஓர்அனுபவத்தின் காலத்திற்குப் பிறகு, இயேசு அவரைச் சோதித்தார், மேலும் அவருக்காக ஏங்கும்படி அவரைத் தூண்டினார். "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே! நான் எப்படி உம்மை விட்டுப் பிரிவேன், உம் மீது ஏக்கமாக இருக்கிறேன். உம் அன்பை ஈடுசெய்ய முடியாதபடி அதிகமாகப் பின்தங்கியுள்ளேன். விரைவில் என்னை அழைத்துச் செல்லும்படி நான் உம்மிடம் கெஞ்சுகிறேன். உமக்கு நான் எப்போது தேவைப்படுவேன்? நீர் எப்போது என்னை அழைத்துச் செல்வீர்? உமது முகத்தை நான் எப்போது பார்ப்பேன்? இந்த உடலில் இனி வாழவோ, தொடர்ந்து சீர்கேடானவற்றைச் செய்யவோ நான் விரும்பவில்லை, மேலும் கிளர்ச்சி செய்யவும் விரும்பவில்லை. என்னிடம் உள்ள அனைத்தையும் என்னால் முடிந்தவரை விரைவில் அர்ப்பணிக்க நான் தயாராக இருக்கிறேன், மேலும் உம்மை இன்னும் வருத்தப்படுத்த நான் விரும்பவில்லை" என்று அவர் சொன்னார். அவர் இப்படித்தான் ஜெபம் செய்தார், ஆனால் இயேசு அவரிடம் எதைப் பரிபூரணப்படுத்துவார் என்று அப்போது அவருக்குத் தெரியாது. அவருடைய சோதனையின் வேதனையின்போது, இயேசு மீண்டும் அவருக்குக் காட்சியளித்து, "பேதுரு, நான் உன்னைப் பரிபூரணமாக்க விரும்புகிறேன், அதாவது நீ பழத்தின் ஒரு பகுதியைப் போல மாறுகிறாய், இது உன்னை நான் பரிபூரணபடுத்தும் செயல்முறையாகும், அதில் நான் மகிழுவேன். நீ உண்மையிலேயே எனக்குச் சாட்சியளிக்க முடியுமா? நான் உன்னிடம் செய்யச் சொல்வதை நீ செய்திருக்கிறாயா? நான் பேசிய வார்த்தைகளில் நீ வாழ்ந்திருக்கிறாயா? ஒரு காலத்தில் நீ என்னை நேசித்திருக்கிறாய், ஆனால் நீ என்னை நேசித்திருந்தாலும், நீ என்னை வாழ்ந்து காட்டியிருக்கிறாயா? நீ எனக்காக என்ன செய்திருக்கிறாய்? நீ என் அன்பிற்குத் தகுதியற்றவன் என்பதை நீ அடையாளம் கண்டுகொள்கிறாய், ஆனால் நீ எனக்காக என்ன செய்திருக்கிறாய்?" என்று கூறினார். அவர் இயேசுவுக்காக ஒன்றும் செய்திருந்ததில்லை என்பதைக் கண்ட பேதுரு, தேவனுக்கு உயிரைக் கொடுப்பதாக அவர் முன்பு செய்த சத்தியத்தை நினைவு கூர்ந்தார். எனவே, அவர் இனிமேலும் குறைகூறவில்லை, அன்றிலிருந்து அவருடைய ஜெபங்கள் மிகவும் சிறப்பாக மாறின. "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே! நான் ஒரு முறை உம்மை விட்டு விலகிவிட்டேன், நீரும் ஒரு முறை என்னை விட்டு விலகிவிட்டீர். நாம் நேரத்தைத் தனியாகவும் நேரத்தை ஒன்றாகவும் செலவிட்டிருக்கிறோம். ஆனாலும் நீர் எல்லாவற்றையும் விட என்னை அதிகமாக நேசிக்கிறீர். நான் உமக்கு எதிராக மீண்டும் மீண்டும் கலகம் செய்தேன், உம்மைப் பலமுறை வருத்தப்படுத்தினேன். இதுபோன்ற விஷயங்களை நான் எப்படி மறக்க முடியும்? நான் எப்போதும் மனதில் வைத்திருக்கிறேன், நீர் என்னிடம் செய்த கிரியையையும், நீர் என்னிடம் ஒப்படைத்ததையும் ஒருபோதும் மறக்க மாட்டேன். நீர் என்னிடம் செய்த கிரியைக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். நான் என்ன செய்ய முடியும் என்பதை நீர் அறிவீர், மேலும் நான் என்ன பங்கு வகிக்க முடியும் என்பதையும் நீர் மேலும் அறிவீர். உமது திட்டங்களுக்கு ஒப்புக்கொடுக்க விரும்புகிறேன், என்னிடம் உள்ள அனைத்தையும் உம்மிடம் அர்ப்பணிப்பேன். உமக்காக நான் என்ன செய்ய முடியும் என்பதை நீர் மட்டுமே அறிவீர். சாத்தான் என்னை மிகவும் முட்டாளாக்கினாலும், நான் உமக்கு எதிராகக் கலகம் செய்தாலும், அந்த மீறுதல்களுக்காக நீர் என்னை நினைவில் கொள்ளவில்லை என்றும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு நீர் என்னை நடத்துவதில்லை என்றும் நான் விசுவாசிக்கிறேன். எனது முழு வாழ்க்கையையும் உமக்காக அர்ப்பணிக்க விரும்புகிறேன். நான் எதுவும் கேட்கவில்லை, எனக்கு வேறு நம்பிக்கைகளும் திட்டங்களும் இல்லை. உமது நோக்கத்தின்படி மட்டுமே செயல்படவும், உம் விருப்பங்களைச் செய்யவும் விரும்புகிறேன். உம்முடைய கசப்பான கோப்பையிலிருந்து நான் பானம்பண்ணுவேன், நீர் கட்டளையிடுவதற்கு நான் உம்முடையவன்" என்று அவர் ஜெபித்தார்.
நீங்கள் நடந்து செல்லும் பாதை குறித்து நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் நீங்கள் எடுக்கும் பாதை, தேவன் பரிபூரணமாக்குவது எது, உங்களுக்கு ஒப்படைக்கப்பட்டவை எவை என்பதைப் பற்றி நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். ஒரு நாள், ஒருவேளை, நீங்கள் சோதிக்கப்படுவீர்கள், அந்த நேரம் வரும்போது, நீங்கள் பேதுருவின் அனுபவங்களிலிருந்து தூண்டுதலைப் பெற முடிந்தால், நீங்கள் உண்மையிலேயே பேதுருவின் பாதையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை இது காண்பிக்கும். பேதுருவின் உண்மையான விசுவாசம், அன்பு மற்றும் அவர் தேவனிடத்தில் உண்மையுள்ளவராக இருப்பதற்கும் தேவனால் பாராட்டப் பெற்றார். அவருடைய நேர்மைக்காகவும், அவருடைய இருதயத்தில் தேவனுக்காக ஏங்குவதற்காகவும் தேவன் அவரை பரிபூரணமாக்கினார். நீ உண்மையிலேயே பேதுருவைப் போலவே அன்பும் விசுவாசமும் கொண்டிருந்தால், நிச்சயமாக இயேசு உன்னை பரிபூரணமாக்குவார்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுரு இயேசுவை எப்படி அறிந்துகொண்டார்” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
கடந்த காலத்தைப் பற்றி சிந்தியுங்கள்: எப்போது உங்களை நோக்கி என் பார்வை கோபமாகவும், என் குரல் கண்டிப்பாகவும் இருந்தது? அற்ப விஷயங்களைப்...
தேவனுடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய விரும்பும் ஒருவருக்கான சரியான மனப்பான்மை மற்றும் பயிற்சி தேவனுடைய அதிகாரம் மற்றும் மனித விதியின் மீது...
இப்போது எனது ஆவியானவர் மாபெரும் கிரியையைச் செய்கிற நேரமாகும், புறஜாதியார் தேசங்களிடையே நான் எனது கிரியையைத் தொடங்கும் நேரமாகும். அதற்கும்...
தேவனின் மனநிலை என்பது அனைவருக்கும் மிகச்சுருக்கமாகத் தெரியும் ஒரு காரியமாகும், மேலும், அது யாரும் ஏற்றுக்கொள்வதற்கு எளிதானதல்ல, ஏனென்றால்...