தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கடைசிக் காலத்தில் நியாயத்தீர்ப்பு | பகுதி 93
கடைசி நாட்களில்—அதாவது, இறுதி கிரியையான சுத்திகரித்தலின் போது—தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கிரியையின் போது உறுதியாக...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
தோல்வி, பலவீனம், நீ எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருந்த காலங்கள் போன்ற பல்வேறு அனுபவங்கள் அனைத்தும் தேவனுடைய சோதனைகள் என்று கூறலாம். ஏனென்றால், சகலமுமே தேவனிடமிருந்து வருகின்றன, எல்லா விஷயங்களும் நிகழ்வுகளும் அவருடைய கரங்களில் உள்ளன. நீ தோல்வியுற்றாலும் சரி, நீ பலவீனமாக இருந்து தள்ளாடினாலும் சரி, இவை அனைத்தும் தேவனிடம் உள்ளன, அவருடைய பிடியில் உள்ளன. தேவனுடைய பார்வையில், இது உனக்கான சோதனையாகும், அதை நீ அடையாளம் காண முடியாவிட்டால், அது சோதனையாக மாறும். ஜனங்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய இரண்டு வகையான நிலைகள் உள்ளன: ஒன்று பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வருகிறது, மற்றொன்று பெரும்பாலும் சாத்தானிடமிருந்து வருவதாக இருக்கலாம். ஒன்று, பரிசுத்த ஆவியானவர் உன்னை ஒளிரச் செய்து, உன்னை நீ அறிந்து கொள்ளவும், உன்னை நீ வெறுக்கவும், உன்னைப் பற்றி நீ வருந்தவும், தேவன் மீது உண்மையான அன்பு கொள்ளவும், அவரை திருப்திப்படுத்தும்படி உனது இருதயத்தை அமைக்கவும் உன்னை அனுமதிக்கும் ஒரு நிலை. மற்றொன்று உன்னை நீயே அறிந்திருக்கிற ஒரு நிலை, ஆனால் நீ எதிர்மறையான எண்ணத்தை கொண்டிருப்பவன் மற்றும் பலவீனமானவன். இந்த நிலை தேவனுடைய சுத்திகரிப்பு என்றும் அது சாத்தானின் சோதனை என்றும் கூறலாம். இது உனக்கான தேவனுடைய இரட்சிப்பு என்பதை நீ உணர்ந்தால், நீ இப்போது அவருக்கு கடன்பட்டிருப்பதாக பெரிதும் உணர்ந்தால், இப்போதிலிருந்து நீ அவருக்கு அதனைத் திரும்பச் செலுத்த முயற்சி செய்தால், இனிமேல் நீ அத்தகைய ஒழுக்கக்கேடான நிலைக்கு ஆளாக மாட்டாய் என்றால், நீ அவருடைய வார்த்தைகளைப் புசித்துக் குடிப்பதில் உனது முயற்சியை மேற்கொண்டால், நீ எப்போதுமே உன்னைக் குறைவாகக் கருதுகிற, ஏங்குகிற இருதயத்தை நீ கொண்டிருந்தால், இதுதான் தேவனுடைய சோதனையாகும். துன்பப்படுதல் முடிந்ததும், நீ மீண்டும் முன்னேறினாலும், தேவன் உன்னை வழிநடத்துவார், ஒளிரச் செய்வார், அறிவொளியூட்டுவார் மற்றும் உன்னைப் போஷிப்பார். ஆனால் நீ அதை அடையாளம் காணாமல் எதிர்மறையான எண்ணத்தைக் கொண்டிருந்து, வெறுமனே, உன்னை நீயே நம்பிக்கையற்ற நிலையில் கைவிட்டுவிட்டது போன்று நீ நினைத்தால், சாத்தானின் சோதனையானது உன் மீது வந்திருக்கும். யோபு சோதனைகளுக்கு உட்பட்டபோது, தேவனும் சாத்தானும் ஒருவருக்கொருவர் பந்தயம் கட்டிக்கொண்டிருந்தார்கள், யோபுவைத் துன்புறுத்த தேவன் சாத்தானை அனுமதித்தார். தேவன் யோபுவைச் சோதித்தாலும், உண்மையில் சாத்தான்தான் யோபுமீது வந்தான். சாத்தானைப் பொறுத்தவரை, அதுதான் யோபுவை சோதித்தது, ஆனால் யோபு தேவனுடைய பக்கமாக இருந்தார். அப்படி இல்லாதிருந்தால், யோபு சோதனையில் விழுந்திருப்பார். ஜனங்கள் சோதனையில் விழுந்தவுடன், அவர்கள் ஆபத்தில் விழுகிறார்கள். சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்படுவது தேவனிடமிருந்து வந்த சோதனை என்று கூறலாம், ஆனால் நீ ஒரு நல்ல நிலையில் இல்லை என்றால், அது சாத்தானிடமிருந்து வரும் சோதனை என்றும் கூறலாம். நீ தரிசனத்தைப் பற்றிய தெளிவைக் கொண்டிருக்கவில்லை என்றால், சாத்தான் உன் மீது குற்றம் சாட்டும், மேலும் தரிசனத்தைக் குறித்த அம்சத்தில் உன்னை தெளிவற்றதாகச் செய்யும். நீ அதை அறிவதற்கு முன்பு, நீ சோதனையில் விழுவாய்.
நீ தேவனுடைய கிரியையை அனுபவிக்கவில்லை என்றால், நீ ஒருபோதும் பரிபூரணப்படுத்தப்பட முடியாது. உனது அனுபவத்தில், நீ அனைத்துக் காரியங்களையும் நீ அறிந்திருக்கவும் வேண்டும். எடுத்துக்காட்டாக, கருத்துக்கள் மற்றும் அதிகப்படியான நோக்கங்களை வளர்ப்பதற்கு என்னென்ன விஷயங்கள் உன்னை வழிநடத்துகின்றன, மேலும் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க என்ன வகையான பொருத்தமான நடைமுறைகள் உன்னிடம் உள்ளன? தேவனுடைய கிரியையை உன்னால் அனுபவிக்க முடிந்தால், உன்னிடம் வளர்ச்சி இருக்கிறது என்று அர்த்தம். நீ பெலன் கொண்டவனாக மட்டுமே தோன்றினால், இது உண்மையான வளர்ச்சி அல்ல, உன்னால் உறுதியாக நிற்க முடியாது. உன்னால் தேவனுடைய கிரியையை அனுபவிக்க முடிந்தால் மட்டுமே, எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நீ அதை அனுபவித்து சிந்திக்க முடியும். நீ மேய்ப்பர்களை விட்டு வெளியேறி, தேவனை விசுவாசித்து சுதந்திரமாக ஜீவித்து, தேவனுடைய உண்மையான கிரியைகளை உன்னால் காண முடிந்தால் மட்டுமே, தேவனுடைய சித்தம் நிறைவேறும். தற்போது, பெரும்பாலான ஜனங்களுக்கு எவ்வாறு அனுபவிக்க வேண்டும் என்று தெரியவில்லை, அவர்கள் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும்போது, அதை எவ்வாறு கையாளுவது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை; அவர்களால் தேவனுடைய கிரியைகளை அனுபவிக்க இயலாது, அவர்களால் ஆவிக்குரிய ஜீவிதத்தை ஜீவிக்க முடியாது. நீ தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு உனது நடைமுறை ஜீவிதத்திற்குள் பிரவேசிக்க வேண்டும்.
சில நேரங்களில் தேவன் உனக்கு ஒரு குறிப்பிட்ட வகை உணர்வைத் தருகிறார். இந்த உணர்வு, நீ உனது உள்ளார்ந்த இன்பத்தை இழக்கவும், தேவனுடைய பிரசன்னத்தை இழக்கவும் காரணமாகிறது. அதாவது, நீ அந்தகாரத்தில் மூழ்கிவிடுகிறாய். இது ஒரு வகையான சுத்திகரிப்பாகும். எதையும் நீ செய்யும்போதெல்லாம், அது எப்போதும் உனது திட்டத்தின்படி நடக்காமல் தவறாகப் போகும் அல்லது நீ அதில் மேற்கொண்டு முன்னேற முடியாமல் போகும். இது தேவனுடைய சிட்சையாகும். சில சமயங்களில், நீ தேவனுக்குக் கீழ்ப்படியாத மற்றும் கலகத்தனமான ஒன்றைச் செய்யும்போது, அது வேறு யாருக்கும் தெரியாமல் போகலாம்—ஆனால் தேவனுக்கு அது தெரிந்திருக்கும். அவர் உன்னை விட்டுவிடமாட்டார், அவர் உன்னை சிட்சிப்பார். பரிசுத்த ஆவியானவரின் கிரியை மிகவும் விரிவானது. ஜனங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் செயலையும், அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நகர்வையும், அவர்களின் ஒவ்வொரு சிந்தனையையும் யோசனையையும் அவர் மிகவும் கவனமாகக் கண்காணிக்கிறார். இதனால் ஜனங்கள் இந்த விஷயங்களைப் பற்றிய உள் விழிப்புணர்வை அடைய முடியும். நீ ஒரு முறை ஏதாவது செய்கிறாய், அது நீ திட்டமிட்டபடி நடக்காமல் தவறாகப் போகிறது, நீ மீண்டும் ஏதாவது செய்கிறாய், அது மேலும் தவறாகப் போகிறது, படிப்படியாக நீ பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் புரிந்துகொள்வாய். பல முறை சிட்சிக்கப்படுவதன் மூலம், தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப என்ன செய்ய வேண்டும், அவருடைய சித்தத்திற்கு ஏற்ப எது இல்லை என்பதை நீ அறிவாய். இறுதியில், பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலுக்கான துல்லியமான பதில்கள் உனக்குள் இருக்கும். சில நேரங்களில், நீ கலகக்காரனாக இருப்பாய், மேலும் நீ தேவனால் உனக்குள்ளிருந்து கண்டிக்கப்படுவாய். இவை அனைத்தும் தேவனுடைய சிட்சையில் இருந்து வருகின்றன. தேவனுடைய வார்த்தையை நீ பொக்கிஷமாகக் கொள்ளாமல், அவருடைய கிரியையை நீ முக்கியமற்றதாகக் கருதினால், அவர் உன்னைப் புறந்தள்ளிவிடுவார். தேவனுடைய வார்த்தைகளை நீ எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்கிறாயோ, அவ்வளவு அதிகமாக அவர் உனக்கு அறிவொளியூட்டுவார். இப்போது, திருச்சபையில் குழம்பிய மற்றும் குழப்பமடைந்த விசுவாசத்தைக் கொண்டுள்ள சிலர் இருக்கிறார்கள், அவர்கள் நிறைய பொருத்தமற்ற காரியங்களைச் செய்கிறார்கள், ஒழுக்கமின்றி செயல்படுகிறார்கள். எனவே, பரிசுத்த ஆவியானவரின் கிரியை அவர்களில் தெளிவாகக் காண முடிவதில்லை. சிலர் பணம் சம்பாதிப்பதற்காக, சிட்சிக்கப்படுவதை கைவிட்டு, ஒரு தொழிலை நடத்த வெளியே செல்வதற்காக தங்களது கடமைகளையும் விட்டுவிடுகிறார்கள்; அத்தகைய நபர் மேலும் அதிகமான ஆபத்தில் இருக்கிறார். தற்போது அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை தங்களுக்குள் கொண்டிருக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்திலும் அவர்கள் பரிபூரணமடைவது கடினமாக இருக்கும். தங்களுக்குள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையையும் தேவனுடைய சிட்சையையும் காண முடியாத பலர் உள்ளனர். அவர்கள் தேவனுடைய சித்தத்தைப் பற்றி தெளிவற்றவர்களாக இருப்பவர்கள் மற்றும் அவருடைய கிரியையை அறியாதவர்கள் ஆவர். சுத்திகரிப்புகளுக்கு மத்தியில் நிலையாக இருக்கக்கூடியவர்கள், தேவன் என்ன செய்தாலும் அவரைப் பின்பற்றுபவர்கள், குறைந்தபட்சம் வெளியேறாதவர்கள் அல்லது பேதுரு அடைந்தவற்றில் 0.1 சதவீதத்தை அடைந்தவர்கள்கூட நன்றாகவே இருக்கிறார்கள், ஆனால் தேவன் அவர்களைப் பயன்படுத்துகிறதைப் பொறுத்தவரை அவர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. பலர் விஷயங்களை விரைவாக புரிந்துகொள்கிறார்கள், தேவன்மீது உண்மையான அன்பு வைத்திருக்கிறார்கள், பேதுருவின் நிலையையும் மிஞ்சக்கூடியவர்களாக இருக்கிறார்கள். தேவன் அவர்கள் மீது பரிபூரணத்தின் கிரியையைச் செய்கிறார். அத்தகையவர்களுக்கு சிட்சையும் அறிவொளியும் கிடைக்கும், தேவனுடைய சித்தத்திற்கு இணங்காத ஒன்றை அவர்கள் கொண்டிருந்தால், அவர்கள் அதனை உடனடியாகத் தூக்கி எறியலாம். அத்தகையவர்கள் தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் போன்றவர்கள்—அவர்களின் மதிப்பு மிகவும் அதிகம்! தேவன் பல வகையான கிரியைகளைச் செய்திருக்கிறார். ஆனால் நீ இன்னும் மணல் அல்லது கல் போன்றவன் என்றால், நீ பயனற்றவனாவாய்!
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
கடைசி நாட்களில்—அதாவது, இறுதி கிரியையான சுத்திகரித்தலின் போது—தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கிரியையின் போது உறுதியாக...
மனுஷனின் கிரியையானது அவனது அனுபவத்தையும் மனுஷத்தன்மையையும் குறிக்கிறது. மனுஷன் எதை வழங்குகிறானோ அதுவும், அவன் செய்யும் கிரியையும் அவனைப்...
தேவன் மனிதர்களைப் படைத்து பூமியில் வைத்தார், மற்றும் அவர் அதுமுதற்கொண்டு அவர்களை வழிநடத்தினார், அவர் அவர்களை இரட்சித்து மனுக்குலத்திற்கு...
ஜனங்கள் அனுபவத்தின் அடிப்படையில் தேவனை வரையறுக்க முனைகிறார்கள் தேவனை அறிவது என்ற தலைப்பைப் பற்றி பேசும் போது, நீங்கள் ஏதாவது...