தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 511

நீ தேவனை விசுவாசித்தால், நீ தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் உன் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். மேலும், நீ அனுபவிக்க வேண்டிய விஷயங்களை நீ புரிந்துகொள்ள வேண்டும். உன்னால் தேவனை அனுபவிக்க முடிந்தாலும், தேவன் உன்னை சிட்சிக்கும்போது அல்லது தேவன் உன்னைக் கையாளும் போது உன்னால் உணர முடியாமல் இருந்தால், தேவன் உன்னைக் கையாள்வதையும், உன்னை சிட்சிப்பதையும், நியாயந்தீர்ப்பதையும் மட்டுமே அனுபவித்தால்—இது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும். இந்தச் சுத்திகரிப்பின் நிகழ்வில், உன்னால் உறுதியாக நிற்க முடியும், ஆனாலும் இன்னும் போதுமானதாக இது இல்லை. நீ இன்னும் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். தேவனை நேசிப்பதன் பாடம் ஒருபோதும் நின்றுவிடாது மற்றும் அதற்கு முடிவும் இல்லை. ஜனங்கள் தேவனை விசுவாசிப்பது மிகவும் எளிமையான ஒன்று என்று பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் சில நடைமுறை அனுபவங்களைப் பெற்றவுடன், தேவனை விசுவாசிப்பது என்பது ஜனங்கள் கற்பனை செய்வது போல் எளிதல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். மனிதனைச் சுத்திகரிக்க தேவன் கிரியை செய்யும்போது, மனிதன் துன்பமடைகிறான். ஒரு மனிதனுடைய சுத்திகரிப்பு எவ்வளவு அதிகமாக இருக்குமோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனை நேசிப்பார்கள் மற்றும் தேவனுடைய வல்லமை அவர்களில் வெளிப்படும். மாறாக, மனிதர் எவ்வளவு குறைவான சுத்திகரிப்பினைப் பெறுகிறாரோ, தேவன் மீதான அவர்களுடைய அன்பும் அவ்வளவு குறைவாகவே இருக்கும் மற்றும் தேவனுடைய வல்லமை அவ்வளவு குறைவாகவே அவர்களில் வெளிப்படும். அத்தகைய ஒரு மனிதன் எவ்வளவு அதிகமான சுத்திகரிப்பு மற்றும் வலியை மற்றும் எவ்வளவு அதிகமான வேதனையை அனுபவிக்கிறானோ, அவனிடம் தேவன் மீது அவ்வளவு ஆழமான அன்பு வளரும், தேவன்மீது அவன் கொண்டுள்ள விசுவாசம் அவ்வளவு உண்மையானதாகவும் தேவனைப் பற்றிய அவனுடைய அறிவு அவ்வளவு ஆழமானதாகவும் இருக்கும். உன் அனுபவங்களில், சுத்திகரிக்கப்பட்டதற்கு அதிகமாகத் துன்பப்படுபவர்களை, கையாளப்படுபவர்களை, ஒழுங்குபடுத்தப்படுபவர்களைக் காண்பாய் மற்றும் தேவன்மீது ஆழ்ந்த அன்பும், தேவனைப் பற்றிய ஆழமான மற்றும் கூர்மையான அறிவும் கொண்டவர்களை நீ காண்பாய். கையாளப்படுவதை அனுபவிக்காதவர்களுக்கு மேலோட்டமான அறிவு இருக்கிறது, ஆனால், "தேவன் மிகவும் நல்லவர், ஜனங்கள் அவரை அனுபவிக்கும்படிக்கு அவர் அவர்களுக்குக் கிருபையை அளிக்கிறார்," என்று மட்டுமே அவர்களால் சொல்ல முடியும். ஜனங்கள் கையாளப்படுவதையும் ஒழுங்குபடுத்தப்படுவதையும் அனுபவித்திருந்தால், தேவனைப் பற்றிய உண்மையான அறிவைப் பற்றி அவர்களால் பேச முடியும். ஆகவே, மனிதனில் தேவனுடைய கிரியை எவ்வளவு அதிசயமானதாக இருக்கிறதோ அவ்வளவாக அது மதிப்புமிக்கதாக மற்றும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. உனக்கு இது எவ்வளவு அசாத்தியமானதாக இருக்கிறதோ மற்றும் உன் கருத்துக்களுடன் எவ்வளவாக பொருந்தாமல் இருக்கிறதோ, அவ்வளவாக தேவனுடைய கிரியையால் உன்னை ஜெயங்கொள்ளவும், உன்னை ஆதாயப்படுத்தவும், உன்னைப் பரிபூரணமாக்கவும் முடியும். தேவனுடைய கிரியையின் முக்கியத்துவம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது! தேவன் மனிதனை இவ்வாறு சுத்திகரிக்கவில்லை என்றால், அவர் இந்த முறையின்படி கிரியை செய்யவில்லை என்றால், அவருடைய கிரியை பயனற்றதாக மற்றும் முக்கியத்துவம் இல்லாததாக இருந்திருக்கும். தேவன் இந்தக் கூட்டத்தைத் தேர்ந்தெடுத்து ஆதாயம் செய்வார் என்றும், கடைசி நாட்களில் அவர்களை பரிபூரணமாக்குவார் என்றும் கடந்த காலத்தில் கூறப்பட்டது. இதில், அசாதாரண முக்கியத்துவம் உள்ளது. அவர் உங்களுக்குள் எவ்வளவு பெரிய கிரியையைச் செய்கிறாரோ, அவ்வளவாக தேவன் மீதான உங்கள் அன்பு ஆழமாகவும் தூய்மையாகவும் இருக்கிறது. தேவனுடைய கிரியை எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ, அவ்வளவாக மனிதனால் அவருடைய ஞானத்திலிருந்து ஏதேனும் ஒன்றைப் புரிந்துகொள்ள முடிகிறது மற்றும் அவரைப் பற்றிய மனிதனுடைய அறிவும் அவ்வளவு ஆழமானதாக இருக்கிறது. கடைசி நாட்களில், தேவனுடைய ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகம் முடிவுக்கு வரும். உண்மையில் அது எளிதாக முடிவுக்கு வந்துவிட முடியுமா? அவர் மனிதகுலத்தை ஜெயங்கொண்டதும், அவருடைய கிரியை முடிந்துவிடுமா? இது மிகவும் எளிமையானதாக இருக்க முடியுமா? இது மிகவும் எளிதானது என்றுகூட ஜனங்கள் கற்பனை செய்கிறார்கள். ஆனால் தேவன் செய்வது அவ்வளவு எளிதானதல்ல. தேவனுடைய கிரியையின் எந்தப் பகுதியை நீ குறிப்பிட விரும்பினாலும், அவை அனைத்தும் மனிதனுக்குப் புரியாதவையாக இருக்கின்றன. உன்னால் அதைப் புரிந்துகொள்ள முடிந்தால், தேவனுடைய கிரியை முக்கியத்துவம் அல்லது மதிப்பு இல்லாமல் இருக்கும். தேவன் செய்த கிரியை என்பது புரிந்துகொள்ள முடியாதது. இது உன் கருத்துக்களுக்கு முற்றிலும் எதிரானதாக மற்றும் இது உன் கருத்துக்களுக்கு மிகவும் முரண்பட்டதாக இருக்கிறது. தேவனுடைய கிரியை அர்த்தமுள்ளதாக இருப்பதை இது காட்டுகிறது. அது உன் கருத்துக்களுடன் பொருந்தக்கூடியதாக இருந்தால், அது அர்த்தமற்றதாக இருக்கும். இன்று, தேவனுடைய கிரியை மிகவும் அதிசயமானது என்று நீ உணர்கிறாய். தேவனுடைய கிரியையை எவ்வளவு அதிகமாக அதிசயமானதென்று நீ உணர்கிறாயோ, அவ்வளவு அதிகமாக தேவன் புரிந்துகொள்ள முடியாதவர் என்று நீ உணர்கிறாய் மற்றும் தேவனுடைய கிரியைகள் எவ்வளவு பெரியவை என்பதை நீ காண்கிறாய். மனிதனை ஜெயங்கொள்ள அவர் மேலோட்டமான, செயலற்ற கிரியைகளை மட்டுமே செய்து, வேறு எதுவும் செய்யவில்லை என்றால், மனிதனால் தேவனுடைய கிரியையின் முக்கியத்துவத்தைக் கண்டிருக்க முடியாது. நீ இப்போது ஒரு சிறிய சுத்திகரிப்பு பெறுகிறாய் என்றாலும், உன் ஜீவிதத்தில் உன் வளர்ச்சிக்கு இது மிகவும் பயனளிக்கிறது. எனவே, நீங்கள் இத்தகைய கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டியது மிக அவசியமாக இருக்கிறது. இன்று, நீ ஒரு சிறிய சுத்திகரிப்பு பெறுகிறாய், ஆனால் அதன் பிறகு நீ உண்மையாகவே தேவனுடைய கிரியைகளைக் காண முடியும். இறுதியில், நீ சொல்வாய்: "தேவனுடைய கிரியைகள் மிகவும் அதிசயமானவை!" இவை உன் இருதயத்தில் உள்ள வார்த்தைகளாக இருக்கும். சிறிது காலம் தேவனுடைய சுத்திகரிப்பினை அனுபவித்த பின்னர் (ஊழியக்காரர்களின் சோதனை மற்றும் சிட்சையின் காலத்திற்குப் பின்னர்), இறுதியாக சிலர் சொன்னார்கள்: "தேவனை விசுவாசிப்பது மிகவும் கடினம்!" "மிகவும் கடினம்" என்ற வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தியிருப்பது, தேவனுடைய கிரியைகள் புரிந்துகொள்ள முடியாதவை என்பதையும், தேவனுடைய கிரியை மிகுந்த முக்கியத்துவத்தையும் மதிப்பையும் கொண்டுள்ளது என்பதையும், அவருடைய கிரியை மனிதனால் பொக்கிஷமாகக் காத்துக்கொள்ளப்படுவதற்கு மிகவும் தகுதியானது என்பதையும் காட்டுகிறது. நான் இவ்வளவு கிரியைகளைச் செய்த பிறகும், உன்னிடம் சிறிதளவு அறிவும் இல்லை என்றால், என் கிரியைக்கு மதிப்பு இருக்க முடியுமா? "தேவனுக்கு ஊழியம் செய்வது மிகவும் கடினம், தேவனுடைய கிரியைகள் மிகவும் அற்புதமானவை, தேவன் உண்மையாகவே ஞானமுள்ளவர்! தேவன் மிகவும் அழகானவர்!" என்று இது உன்னைச் சொல்ல வைக்கும். ஒரு காலகட்ட அனுபவத்திற்குப் பிறகு, நீ அத்தகைய வார்த்தைகளைச் சொல்ல முடிந்தால், நீ தேவனுடைய கிரியையை உனக்குள் பெற்றிருக்கிறாய் என்பதை இது நிரூபிக்கிறது. ஒரு நாள், நீ வெளிநாட்டில் சுவிசேஷத்தைப் பரப்புகையில், "தேவன் மீதான உன் விசுவாசம் எவ்வாறாக இருக்கிறது?" என்று ஒருவர் உன்னிடம் கேட்டால், "தேவனுடைய கிரியைகள் மிகவும் அற்புதமானவை!" என்று உன்னால் சொல்ல முடியும். உன் வார்த்தைகள் உண்மையான அனுபவங்களைப் பற்றி பேசுவதை அவர்கள் உணருவார்கள். உண்மையாகவே இது சாட்சி பகருவதாக இருக்கிறது. தேவனுடைய கிரியை ஞானத்தால் நிறைந்தது என்று நீ கூறுவாய், உன்னில் அவர் செய்த கிரியை உன்னை உண்மையாகவே சமாதானப்படுத்தி உன் இருதயத்தை ஜெயங்கொண்டது. நீ அவரை எப்போதும் நேசிப்பாய், ஏனென்றால் அவர் மனிதகுலத்தின் அன்பிற்கு தகுதியானவர்! இந்த விஷயங்களை உன்னால் பேச முடியும் என்றால், உன்னால் ஜனங்களின் இருதயங்களை அசைக்க முடியும். இவை அனைத்தும் சாட்சி பகருகிறவைகளாக இருக்கின்றன. உண்மையாகவே உன்னால் மாபெரும் சாட்சி கொடுக்க முடியுமானால், ஜனங்களை கண்ணீர் சிந்த வைக்க முடியுமானால், உண்மையாகவே நீ தேவனை நேசிக்கிறாய் என்பதை இது காட்டுகிறது. ஏனென்றால், தேவனை நேசிப்பதற்கு உன்னால் சாட்சியளிக்க முடிகிறது மற்றும் உன் மூலமாக, தேவனுடைய கிரியைகளால் சாட்சி கொடுக்க முடிகிறது. உன் சாட்சியின் மூலம், மற்றவர்கள் தேவனுடைய கிரியையை நாடுவதற்கும், தேவனுடைய கிரியையை அனுபவிப்பதற்கும், அவர்கள் அனுபவிக்கும் எந்தச் சூழலிலும் அவர்கள் உறுதியாக நிற்குமாறும் செய்யப்படுகிறார்கள். சாட்சி அளிப்பதற்கான ஒரே உண்மையான வழி இதுதான். இப்போது உன்னிடம் எதிர்பார்க்கப்படுவதும் இதுவே. தேவனுடைய கிரியை மிகவும் மதிப்புமிக்கது மற்றும் ஜனங்கள் பொக்கிஷமாகக் காத்துக்கொள்ள தகுதியானது என்பதை நீ காண வேண்டும். தேவன் மிகவும் விலைமதிப்பற்றவர் மற்றும் தாராளமானவர். பேசுவது மட்டுமல்லாமல், அவரால் ஜனங்களை நியாயந்தீர்க்கவும், அவர்களுடைய இருதயங்களைச் சுத்திகரிக்கவும், அவர்களுக்கு இன்பம் தரவும், அவர்களை ஆதாயப்படுத்தவும், ஜெயங்கொள்ளவும், அவர்களைப் பரிபூரணமாக்கவும் முடியும். தேவன் மிகவும் அன்பானவர் என்பதை உன் அனுபவத்திலிருந்து நீ காண்பாய். எனவே, நீ இப்போது தேவனை எவ்வளவாக நேசிக்கிறாய்? உண்மையாகவே இந்த விஷயங்களை உன் இருதயத்திலிருந்து உன்னால் சொல்ல முடியுமா? உன் இருதயத்தின் ஆழத்திலிருந்து இந்த வார்த்தைகளை உன்னால் வெளிப்படுத்த முடிந்தால், உன்னால் சாட்சி கொடுக்க முடியும். உன் அனுபவம் இந்த நிலையை அடைந்தவுடன், தேவனுக்கு உன்னால் சாட்சி கொடுக்க முடியும் மற்றும் நீ தகுதி பெறுவாய். உன் அனுபவத்தில் இந்த நிலையை நீ அடையவில்லை என்றால், நீ இன்னும் வெகுதொலைவில் இருப்பாய். சுத்திகரிப்பு செயல்பாட்டின் போது ஜனங்கள் பலவீனங்களைக் காண்பிப்பது இயல்பானது. ஆனால் சுத்திகரிப்புக்குப் பிறகு, "தேவன் அவருடைய கிரியையில் மிகவும் ஞானமுள்ளவர்!" என்று உன்னால் சொல்ல முடியும். இந்த வார்த்தைகளின் நடைமுறைப் புரிதலை உன்னால் உண்மையாகவே அடைய முடிந்தால், அது நீ மதிக்க வேண்டிய ஒன்றாக மாறும் மற்றும் உன் அனுபவத்திற்கு மதிப்பு இருக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்பதிலிருந்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 603

சகோதரர்கள் மற்றும் சகோதரிகளில் எப்போதும் தங்கள் எதிர்மறையான எண்ணங்களை வெளிப்படுத்துபவர்கள் சாத்தானின் சேவகர்கள், அவர்கள் திருச்சபையைத்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 511

நீ தேவனை விசுவாசித்தால், நீ தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் உன் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்ற...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 302

மனிதனின் சீர்கெட்ட மனநிலையின் வெளிப்பாடானது அவனுடைய மந்தமான மனசாட்சி, அவனுடைய தீங்கிழைக்கும் சுபாவம் மற்றும் அவனுடைய ஆரோக்கியமற்ற உணர்வு...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 156

மனிதனுடைய ஆர்வத்தை பூர்த்தி செய்ய சாத்தான் விஞ்ஞானத்தின் பெயரை, அறிவியலை ஆராய்ந்து மர்மங்களை ஆராய மனிதனுடைய விருப்பத்தைப் பயன்படுத்துகிறது....