தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 309
பலர் தேவனுடைய பலதரப்பட்ட மற்றும் மாறுபட்ட கிரியையை அறியாததனால் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அளவிடும் சிறிதளவு அறிவு மற்றும்...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
ஜனங்களைப் பரிபூரணமாக்க தேவன் யதார்த்தத்தையும் உண்மைகளின் தோற்றத்தையும் பயன்படுத்துகிறார், தேவனின் வார்த்தைகள் அவர் ஜனங்களைப் பரிபூரணப்படுத்துவதன் ஒரு பகுதியை நிறைவேற்றுகின்றன, இதுவே வழிகாட்டுதலின் கிரியை மற்றும் வழியைத் திறப்பது ஆகும். அதாவது, தேவனின் வார்த்தைகளில் நீ நடைமுறையின் பாதையையும் தரிசனங்களின் அறிவையும் கண்டுபிடிக்க வேண்டும். இந்தக் காரியங்களைப் புரிந்துகொள்வதன் மூலம், மனிதன் ஒரு பாதையையும் தரிசனத்தையும் தனது உண்மையான நடைமுறையில் கொண்டிருப்பான், மேலும் தேவனின் வார்த்தைகளின் மூலம் அவனால் வெளிச்சத்தைப் பெற முடியும். இவை தேவனிடமிருந்து வந்தவை என்பதையும், அதிகம் புரிந்துகொள்ள முடியும் என்பதையும் அவனால் புரிந்துகொள்ள முடிகிறது. புரிந்து கொண்ட பிறகு, மனிதன் உடனடியாக இந்த யதார்த்தத்திற்குள் நுழைய வேண்டும், மேலும் தேவனின் வார்த்தைகளை அவனது நிஜ வாழ்க்கையில் தேவனைத் திருப்திப்படுத்தப் பயன்படுத்த வேண்டும். தேவன் எல்லாவற்றிலும் உன்னை வழிநடத்துவார், மேலும் உனக்கு நடைமுறையான பாதையைத் தருவார், மேலும் அவர் குறிப்பாக அருமையானவர் என்பதை உன்னை உணர வைப்பார், மேலும் உன்னில் தேவனுடைய ஒவ்வொரு கட்ட கிரியையும் உன்னைப் பரிபூரணமாக்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதைக் காண உன்னை அனுமதிப்பார். நீ தேவனின் அன்பைக் காண விரும்பினால், நீ உண்மையிலேயே தேவனின் அன்பை அனுபவிக்க விரும்பினால், நீ யதார்த்தத்திற்குள் ஆழமாகச் செல்ல வேண்டும், நீ நிஜ வாழ்க்கையில் ஆழமாகச் செல்ல வேண்டும், மேலும் தேவன் செய்கின்ற அனைத்தும் அன்பும் இரட்சிப்பும்தான் என்பதைக் காண வேண்டும், அவர் செய்கின்றவை எல்லாம் அசுத்தமானதை விட்டுவிட ஜனங்களுக்கு உதவுவதற்கும், தேவனின் சித்தத்தை நிறைவேற்ற இயலாத மனிதனுக்குள் உள்ள காரியங்களைச் சுத்திகரிப்பதற்கும் ஆகும். மனிதனுக்கு வழங்குவதற்கு தேவன் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். நிஜ வாழ்க்கையின் சூழ்நிலைகளை ஜனங்கள் அனுபவிக்க அவர் ஏற்பாடு செய்கிறார், மேலும் தேவனின் அநேக வார்த்தைகளை ஜனங்கள் புசித்துப் பானம்பண்ணினால், அவர்கள் உண்மையில் அவற்றைக் கடைபிடிக்கும்போது, தேவனின் அநேக வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களால் தங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்துச் சிரமங்களையும் தீர்க்க முடியும். அதாவது, நீ யதார்த்தத்திற்குள் ஆழமாகச் செல்ல தேவனின் வார்த்தைகளைக் கொண்டிருக்க வேண்டும். நீ தேவனின் வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணாமலும் தேவனுடைய கிரியை இல்லாமலும் இருந்தால், நிஜ வாழ்க்கையில் உனக்குப் பாதை இருக்காது. நீ ஒருபோதும் தேவனின் வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணவில்லை என்றால், உனக்கு ஏதாவது நேர்ந்தால் நீ குழப்பமடைவாய். தேவனை நேசிக்க வேண்டும் என்பதை மட்டுமே நீ அறிவாய், ஆனால் நீ எந்த வேறுபாட்டிற்கும் தகுதியற்றவன் மற்றும் நடைமுறைக்குறிய பாதையைக் கொண்டிருக்கவில்லை. நீ தடுமாறிக் குழப்பமடைகிறாய், சில சமயங்களில் மாம்சத்தைத் திருப்திப்படுத்துவதன் மூலம் நீ தேவனைத் திருப்திப்படுத்தலாம் என்று கூட நம்புகிறாய். இவை அனைத்தும் தேவனின் வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணாமல் இருப்பதன் விளைவாகும். அதாவது, நீ தேவனின் வார்த்தைகளின் உதவியின்றி இருந்து, யதார்த்தத்திற்குள் மட்டுமே இருந்தால், உன்னால் அடிப்படையில் நடைமுறைக்குறிய பாதையைக் கண்டுபிடிக்க இயலாது. இது போன்றவர்களுக்கு தேவனை விசுவாசிப்பதன் அர்த்தம் என்னவென்று வெறுமனே புரிவதில்லை, தேவனை நேசிப்பதன் அர்த்தம் என்ன என்பதும் அவர்களுக்குப் புரிவதில்லை. தேவனுடைய வார்த்தைகளின் வெளிச்சம் மற்றும் வழிகாட்டுதலைப் பயன்படுத்தி, நீ அடிக்கடி ஜெபிக்கிறாய், ஆராய்கிறாய் மற்றும் தேடுகிறாய் என்றால், இதன் மூலம் நீ கடைப்பிடிக்க வேண்டியதைக் கண்டுபிடித்து, பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, உண்மையிலேயே தேவனுடன் ஒத்துழைத்து, தடுமாற்றமாகவும் குழப்பமாகவும் இல்லாமல் இருக்கிறாய் என்றால், பின்னர் நீ நிஜ வாழ்க்கையில் ஒரு பாதையைப் பெற்றிருப்பாய், மேலும் தேவனை உண்மையிலேயே திருப்திப்படுத்துவாய். நீ தேவனைத் திருப்திப்படுத்தியிருக்கும்போது, உனக்குள் தேவனின் வழிநடத்துதல் இருக்கும், மேலும் நீ குறிப்பாக தேவனால் ஆசீர்வதிக்கப்படுவாய், இது உனக்கு இன்ப உணர்வைத் தரும். நீ தேவனைத் திருப்திப்படுத்தியிருப்பதால் நீ குறிப்பாகக் கவுரவிக்கப்பட்டவனாய் உணருவாய், நீ குறிப்பாக உனக்குள்ளே பிரகாசமாக இருப்பாய், உன் இருதயத்தில் நீ தெளிவாகவும் சமாதானத்துடனும் இருப்பாய். உன் மனசாட்சி ஆறுதலடைந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடும், உன் சகோதர சகோதரிகளைப் பார்க்கும்போது நீ உனக்குள்ளே இனிமையாக உணருவாய். தேவனின் அன்பை அனுபவிப்பதன் அர்த்தம் இதுதான், இது மட்டுமே உண்மையிலேயே தேவனை அனுபவிப்பது ஆகும். தேவனின் அன்பை ஜனங்கள் அனுபவிப்பது அனுபவத்தின் மூலம் அடையப்படுகிறது. கஷ்டங்களை அனுபவிப்பதன் மூலமும், சத்தியத்தைக் கடைபிடிப்பதை அனுபவிப்பதன் மூலமும், அவர்கள் தேவனின் ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். தேவன் உன்னை உண்மையிலேயே நேசிக்கிறார் என்று நீ சொன்னால், ஜனங்களுக்காக தேவன் உண்மையிலேயே ஒரு பெரிய கிரயத்தைச் செலுத்தியுள்ளார், அவர் பொறுமையாகவும் கனிவாகவும் பல வார்த்தைகளை பேசியுள்ளார், மற்றும் எப்போதும் ஜனங்களை இரட்சிக்கிறார், இந்த வார்த்தைகளை நீ உச்சரிப்பது தேவனின் இன்பத்தின் ஒரே ஒரு பக்கம் மட்டுமே ஆகும். ஆனாலும், ஜனங்கள் தங்கள் நிஜ வாழ்க்கையில் சத்தியத்தைக் கடைபிடிப்பதே அதிக சந்தோஷமும் உண்மையான சந்தோஷமும் ஆகும். அதன் பிறகு அவர்கள் தங்கள் இருதயங்களில் சமாதானமாகவும் தெளிவாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குள்ளாகப் பெரிதாக அசைக்கப்பட்டதை உணர்கிறார்கள் மற்றும் தேவன் மிகவும் அன்பானவர் என்று உணர்கிறார்கள். நீ செலுத்திய கிரயம் நியாயமானதை விட அதிகம் என்பதை நீ உணருவாய். உன் முயற்சிகளில் ஒரு பெரிய கிரயத்தைச் செலுத்தியுள்ளதால், நீ குறிப்பாக உனக்குள்ளே பிரகாசமாக இருப்பாய். நீ உண்மையிலேயே தேவனின் அன்பை அனுபவித்து வருகிறாய் என்பதை நீ உணருவாய், மேலும் தேவன் ஜனங்களில் இரட்சிப்பின் கிரியையைச் செய்துள்ளார் என்பதையும், ஜனங்களைச் சுத்திகரிப்பது என்பது தூய்மைப்படுத்துவதாகும் என்பதையும் நீ புரிந்துகொள்வாய். அவர்கள் தேவனை உண்மையிலேயே நேசிக்கிறார்களா என்று அவர்களைச் சோதிக்க தேவன் முயற்சிக்கிறார். நீ எப்பொழுதும் இந்த வழியில் சத்தியத்தைக் கடைபிடித்தால், நீ படிப்படியாக தேவனின் பெரும்பாலான கிரியைகளைப் பற்றிய தெளிவான அறிவை வளர்த்துக் கொள்வாய், அந்நேரத்தில் நீ தேவனின் வார்த்தைகள் உனக்கு முன்பாக படிகத்தைப் போலத் தெளிவாக இருப்பதை நீ உணர்ந்து கொள்வாய். உன்னால் பல உண்மைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தால், எல்லா விஷயங்களையும் கடைப்பிடிப்பது எளிது என்றும், நீ எந்தவொரு பிரச்சினையையும் சமாளிக்கலாம் மற்றும் எந்தவொரு சோதனையையும் சமாளிக்க முடியும் என்றும் நீ உணர்ந்து கொள்வாய், மேலும் உனக்கு எதுவும் ஒரு பிரச்சனையல்ல என்பதை நீ கண்டு கொள்வாய், இது பெரிதும் உன்னைச் சுதந்திரமாக்கி விடுவிக்கும். இந்த நேரத்தில், நீ தேவனின் அன்பை அனுபவிப்பாய், மேலும் தேவனின் உண்மையான அன்பு உன் மீது வந்திருக்கும். தரிசனங்களைக் கொண்டவர்களையும், சத்தியம் உடையவர்களையும், அறிவுள்ளவர்களையும், அவரை உண்மையாக நேசிப்பவர்களையும் தேவன் ஆசீர்வதிக்கிறார். ஜனங்கள் தேவனின் அன்பைக் காண விரும்பினால், அவர்கள் நிஜ வாழ்க்கையில் சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், அவர்கள் வலியைத் தாங்கிக்கொள்ளவும், தேவனைத் திருப்திப்படுத்தத் தாங்கள் விரும்புவதைக் கைவிடவும் தயாராக இருக்க வேண்டும், மேலும் அவர்களின் கண்களில் கண்ணீர் இருந்தபோதிலும், அவர்களால் தேவனின் இருதயத்தை இன்னும் திருப்திப்படுத்த முடிய வேண்டும். இந்த வழியில், தேவன் நிச்சயமாக உன்னை ஆசீர்வதிப்பார், மேலும் இது போன்ற கஷ்டங்களை நீ சகித்தால், அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்றியிருக்கும். நிஜ வாழ்க்கையின் மூலமாகவும், தேவனின் வார்த்தைகளை அனுபவிப்பதன் மூலமாகவும், ஜனங்கள் தேவனின் அருமையைக் காண முடிகிறது, மேலும் அவர்கள் தேவனின் அன்பை ருசித்திருந்தால் மட்டுமே அவரை உண்மையாக நேசிக்க அவர்களால் முடியும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை நேசிப்பவர்கள் என்றென்றும் அவருடைய வெளிச்சத்திற்குள் வாழ்வார்கள்” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பலர் தேவனுடைய பலதரப்பட்ட மற்றும் மாறுபட்ட கிரியையை அறியாததனால் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அளவிடும் சிறிதளவு அறிவு மற்றும்...
மனித விதியின் மீது தேவன் ராஜரீகத்தைக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையை யாராலும் மாற்ற முடியாது தேவனுடைய அதிகாரத்தின் கீழ், ஒவ்வொரு நபரும்...
தேவனை உண்மையாக விசுவாசிக்கிறவர்கள் தேவனின் வார்த்தையைக் கடைப்பிடிக்க விரும்புபவர்களாகவும், சத்தியத்தைக் கடைப்பிடிக்க விரும்புபவர்களாகவும்...
பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது ஜனங்களை நேர்மறையான முன்னேற்றத்தை அடைய அனுமதிக்கிறது, அதேசமயம் சாத்தானின் கிரியையானது அவர்களை...