தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 172
பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தில் இருக்கும் கிரியையானது, அது தேவனின் சொந்தக் கிரியை அல்லது பயன்படுத்தப்படும் ஜனங்களின் கிரியை என எதுவாக...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
ஜனங்களுடைய வெளிப்புற மனநிலையை தேவன் கையாளுதல் கூட அவருடைய கிரியையின் ஒரு பகுதியாக இருக்கிறது, உதாரணமாக, அவர்கள் வாழ்க்கை முறை மற்றும் பழக்கங்கள், அவர்களது வழிமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள், வெளிப்புற நடைமுறைகள் மற்றும் உணர்ச்சிகர ஆவல்கள் போன்ற மக்களின் வெளிப்புற, இயல்புக்கு மாறான மனிதத் தன்மை இவற்றைக் கையாள்வதும் தேவனுடைய செயலின் ஒரு பகுதியாகும். ஆனால் ஜனங்கள் சத்தியத்தை நடைமுறைப்படுத்தி அவர்களுடைய மனநிலைகளை மாற்றவேண்டும் என்று அவர் கேட்கும்போது, அது அவர்களுக்குள் இருக்கும் நோக்கங்களும் கருத்துகளும் கையாளப்படுகின்றவற்றை முதன்மையாய்க் குறிக்கிறது. உன்னுடைய வெளிப்புற மனநிலையை மாத்திரம் கையாளுவது கடினமல்ல; நீ விரும்பிப் புசிக்கும் உணவைத் தவிர்க்க கேட்டுக்கொள்வது போன்று அது எளிதானது. ஆனால் உனக்குள் இருக்கும் உள்ளார்ந்த கருத்துக்களுடன் தொடர்புடையவற்றை விட்டுவிடுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்கு ஜனங்கள் மாம்சத்திற்கு எதிர்த்து நிற்பதும் ஒரு விலைக்கிரயத்தை செலுத்துவதும் மற்றும் தேவனுக்கு முன்பாக பாடு அனுபவிப்பதும் தேவையாயிருக்கிறது. இது குறிப்பாக ஜனங்களுடைய நோக்கங்களுடன் இவ்வாறு இருக்கிறது. ஜனங்கள் தேவனில் விசுவாசம் வைக்க ஆரம்பித்ததிலிருந்து பல தவறான நோக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள். நீ சத்தியத்தை நடைமுறைப்படுத்தாதபோது, உன்னுடைய நோக்கங்கள் அனைத்தும் சரியானவை என்றே நீ நினைப்பாய், ஆனால் ஏதாவது ஒன்று உனக்கு நிகழும்போது, உனக்குள் பல தவறான நோக்கங்கள் இருப்பதை நீ காண்பாய். இப்படியாக, தேவன் ஜனங்களைப் பரிபூரணப்படுத்துகிறபோது, தேவனைக் குறித்த அறிவை தடைசெய்யும் பல எண்ணங்கள் அவர்களுக்குள் இருப்பதை அவர்கள் உணரும்படி செய்கிறார். உன் நோக்கங்கள் தவறானவை என்று நீ அறிந்துகொள்ளும்போது, உன்னால் நீ கொண்டிருக்கும் கருத்துகள் மற்றும் நோக்கங்களின்படி பயிற்சி செய்வதை நிறுத்த முடிந்தால், தேவனுக்கு சாட்சியமளித்து, உனக்கு நேரிடும் எல்லாவற்றின் மத்தியிலும் உன் நிலையில் நிலைத்திருக்கவும் கூடுமானால், மாம்சத்திற்கு விரோதமாக கலகம் செய்துள்ளாய் என்பதை இது நிரூபிக்கிறது. நீ மாம்சத்திற்கு எதிர்த்து நிற்கும்போது, கண்டிப்பாக உனக்குள் ஒரு யுத்தம் எழுவது தவிர்க்க முடியாதது. சாத்தான், ஜனங்களை அதைப் பின்பற்ற வைக்க முயற்சிப்பான், அவர்களை மாம்சத்தின் கருத்துக்களைப் பின்பற்றப் பண்ணவும் மற்றும் மாம்சத்தின் நலன்களை நிலைநிறுத்தச் செய்யவும் முயற்சிப்பான்—ஆனால் தேவனுடைய வார்த்தைகள் ஜனங்களை உள்ளாக பிரகாசிப்பித்து ஒளியூட்டும், இந்த நேரத்தில் தேவனையா, அல்லது சாத்தானையா யாரைப் பின்பற்றுவது என்பது உன்னைப் பொறுத்ததாகும். தேவன், ஜனங்களுக்கு உள்ளிருக்கும் காரியங்களைக் கையாள, தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றதாக இல்லாத எண்ணங்கள் மற்றும் கருத்துகள் ஆகியவற்றைக் கையாள சத்தியத்தை முதன்மையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று அவர்களைக் கேட்கிறார். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களின் இருதயங்களைத் தொட்டு அவர்களைப் பிரகாசிப்பித்து ஒளியூட்டுகிறார். ஆகவே சம்பவிக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் பின்னாக ஒரு யுத்தம் இருக்கிறது: ஜனங்கள் ஒவ்வொருமுறையும் சத்தியத்தை நடைமுறைப்படுத்தும்போதும், அல்லது தேவனுக்கான அன்பை நடைமுறைப்படுத்தும்போதும் ஒரு பெரிய யுத்தம் நடக்கிறது. மாம்சத்தில் எல்லாம் நன்றாக இருப்பதாகத் தோன்றினாலும், அவர்களுடைய இருதயங்களின் ஆழங்களில் உண்மையில், ஒரு வாழ்வா-சாவா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்—இந்தத் தீவிர யுத்தத்திற்கு பிறகுதான், மிகப் பெரிய அளவிலான தீவிர சிந்தனைக்குப் பிறகே வெற்றி அல்லது தோல்வி தீர்மானிக்கப்படும். ஒருவருக்கு சிரிப்பதா அல்லது அழுவதா என்றே தெரியாது. ஏனென்றால் ஜனங்களுக்குள் இருக்கும் பெரும்பாலான நோக்கங்கள் தவறானவை, இல்லையென்றால் தேவனுடைய அநேக செயல்கள் அவர்கள் கொண்டிருக்கும் கருத்துகளிலிருந்து மாறுபட்டவை, ஜனங்கள் சத்தியத்தை நடைமுறைப்படுத்தும்போது, சம்பவங்களுக்குப் பின்னாக ஒரு பெரிய யுத்தம் நடக்கிறது. இந்தச் சத்தியத்தை நடைமுறைப்படுத்திய பிறகு, இக்காட்சிகளுக்குப் பின்னால் முடிவாக, தேவனைத் திருப்திப்படுத்தும் வகையில் ஜனங்கள் தங்கள் மனதை மாற்றுவதற்கு முன்பு அளவிடமுடியாத அளவிற்குக் கவலையின் கண்ணீரை வடித்திருப்பார்கள். இந்த யுத்தத்தின் காரணமாக ஜனங்கள் வருத்தங்களையும் புடமிடப்படுதலையும் சகிக்கின்றனர்; இது உண்மையான பாடு. உன்மீது யுத்தம் வரும்போது, உண்மையில் உன்னால் தேவன் பட்சமாக நிற்க முடிந்தால், உன்னால் தேவனைத் திருப்திப்படுத்த இயலும். சத்தியத்தை நடைமுறைப்படுத்துகிறபோது, ஒருவர் உள்ளாகப் பாடுகளை அனுபவிப்பது தவிர்க்க முடியாதது. அவர்கள் சத்தியத்தை நடைமுறைப்படுத்தும்போது, ஜனங்களுக்குள் எல்லாமே சரியாக இருந்தால், பிறகு அவர்கள் தேவனால் பரிபூரணப்படுத்தப்பட வேண்டிய அவசியமிருக்காது, அங்கே யுத்தம் இருக்காது, மற்றும் அவர்கள் பாடனுபவிக்க மாட்டார்கள். அதேனென்றால் தேவனால் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்றதல்லாத பல காரியங்கள் ஜனங்களுக்குள் இருப்பதாலும், மாம்சத்தின் கலகத்தனமான மனநிலை அதிகமாய் இருப்பதாலும், ஜனங்கள் மாம்சத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கான பாடத்தை அதிக ஆழமாகப் படிக்க வேண்டியது அவசியம். இதுதான் தேவன் மனுஷனைத் தம்முடன் அனுபவிக்கச் சொன்ன துன்பமும் பாடும் ஆகும். நீங்கள் சிரமங்களை எதிர்கொள்ளும்போது, விரைந்து சென்று தேவனிடம், "ஓ தேவனே! நான் உம்மைத் திருப்திப்படுத்த விரும்புகிறேன், உம் இருதயத்தைத் திருப்தியாக்க இறுதி துன்பத்தைத் தாங்க விரும்புகிறேன், எவ்வளவு அதிக பின்னடைவுகளை எதிர்கொண்டாலும், நான் இன்னும் உம்மைத் திருப்திப்படுத்தவேண்டும். நான் என் வாழ்க்கை முழுவதையும் விட்டுக்கொடுக்க நேர்ந்தாலும், உம்மைத் திருப்திபடுத்தியே ஆக வேண்டும்!" என்று ஜெபம் செய்யுங்கள். இந்தத் தீர்மானத்தோடு, நீ இப்படியாக ஜெபிக்கும்போது, உன்னுடைய சாட்சியில் உன்னால் நிலைத்து நிற்க இயலும். ஒவ்வொருமுறை அவர்கள் சத்தியத்தை நடைமுறைப்படுத்தும்போது, ஒவ்வொருமுறையும் புடமிடப்படுதலின் வழியாய் செல்லும்போதும், ஒவ்வொருமுறை பரீட்சிக்கப்படும்போதும், தேவனுடைய செயல் அவர்கள்மேல் வரும் ஒவ்வொருமுறையும், மக்கள் அதிகமான வேதனையைச் சகிக்கவேண்டியிருக்கும். இவை அனைத்துமே ஜனங்களுக்கான ஒரு சோதனையாகும், ஆகவே, அவர்கள் எல்லாருக்குள்ளும் ஒரு யுத்தம் உண்டு. இதுவே அவர்கள் செலுத்தும் உண்மையான கிரயம். தேவனுடைய வார்த்தைகளை அதிகமாக வாசிப்பதும், அதிகமாக ஓடுவதும் இக்கிரயத்தின் ஒரு பகுதியாகும். இதுவே ஜனங்கள் செய்ய வேண்டியதாகும், இது அவர்களுடைய கடமையும், அவர்கள் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புமாகும், ஆனால் ஜனங்கள் தங்களுக்குள் ஒதுக்கப்படவேண்டியவற்றை ஒதுக்கியாகவேண்டும். நீ அப்படிச் செய்யாவிட்டால், உன் வெளிப்புற பாடுகள் எவ்வளவு அதிகமாயினும், நீ எவ்வளவுதான் ஓடியலைந்தாலும், அத்தனையும் வீணாயிருக்கும்! அதாவது, உனக்குள் நடக்கும் மாற்றங்கள் மட்டுமே உன் புறம்பான பாடுகளுக்கு மதிப்பு உண்டா என்பதைத் தீர்மானிக்கும். உனது உள்ளான மனநிலை மாற்றப்பட்டு, நீ சத்தியத்தை நடைமுறைப்படுத்தினால், உன் புறம்பான பாடுகள் அனைத்தும் தேவனின் அங்கீகாரத்தைப் பெறும்; உன்னுடைய உள்ளான மனநிலையில் எந்த மாற்றமும் இல்லையென்றால், புறம்பாக நீ எவ்வளவு பாடுகளைச் சகித்துக் கொண்டாலும் அல்லது வெளியில் எவ்வளவுதான் ஓடினாலும், தேவனிடமிருந்து அங்கீகாரம் கிடைக்காது—தேவனால் உறுதிப்படுத்தப்படாத எந்த பாடும் வீணாகவே போகும். நீ செலுத்திய கிரயத்தை தேவன் அங்கீகரிக்கிறாரா இல்லையா என்பது உனக்குள் ஏற்படும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா இல்லையா, மற்றும் நீ சத்தியத்தை நடைமுறைப்படுத்துகிறாயா இல்லையா மற்றும் தேவனுடைய சித்தம், தேவனுடைய அறிவு, தேவனிடமான விசுவாசம் ஆகிவற்றைத் திருப்திப்படுத்தும்படி உங்கள் சொந்த நோக்கங்கள் மற்றும் கருத்துகளுக்கு எதிர்த்து நிற்கிறீர்களா என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். நீ எவ்வளவு ஓடுகிறாய் என்பது பொருட்டல்ல, உன் சொந்த நோக்கங்களுக்கு எதிர்த்து நிற்க ஒருபோதும் அறியாதிருந்து, புறம்பான செயல்கள் மற்றும் உணர்ச்சிப்பூர்வ ஆர்வத்தை மட்டுமே தேடி, உன் ஜீவனுக்கு ஒருபோதும் கவனம் செலுத்தாமல் இருந்தால், உன்னுடைய பாடுகள் அத்தனையும் வீணாயிருந்திருக்கும். குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில், நீ ஏதாவது ஒன்றைச் சொல்ல விரும்பியும், அதைக் கூறுவது சரியானது அல்ல என்றும், அதைக் கூறுவது உன் சகோதர சகோதரிகளுக்கு பயனைத் தராது, அவர்களைப் புண்படுத்தும் என்றும் உள்ளாக உணர்ந்தால், உள்ளே வேதனைப்படுவதை விரும்பி, அவ்வார்த்தைகள் தேவனுடைய சித்தத்திற்கு ஏற்றதாக இருக்காது என்பதால் அதைக் கூறாமல் விட்டுவிடுவாய். இந்த நேரத்தில் உனக்குள் ஒரு யுத்தம் நடைபெறும், ஆனால், நீ வேதனையை அநுபவிக்க மனதாய், நீ நேசிப்பதை விட்டுக் கொடுப்பாய். தேவனைத் திருப்திப்படுத்தும்படியாய்ப் பாடு அநுபவிக்க நீ மனதாயிருப்பாய், மேலும் உள்ளே வேதனையை அநுபவித்தாலும், மாம்சத்திற்கேற்றபடி நடக்க மாட்டாய், தேவனின் இருதயமும் திருப்திப்பட்டிருக்கும், மற்றும் நீயும் உள்ளே ஆறுதல்படுத்தப்படுவாய். இதுவே உண்மையில் கிரயம் செலுத்துவதாகும், தேவன் விரும்பும் கிரயமுமாகும். நீ இவ்வழியில் நடைமுறைப்படுத்தினால், தேவன் நிச்சயமாக உன்னை ஆசீர்வதிப்பார்; உன்னால் இதை அடைய இயலாவிட்டால், நீ எவ்வளவு அதிகமாகப் புரிந்து கொண்டாலும், அல்லது நீ எவ்வளவு நன்றாகப் பேசினாலும், அதனால் எந்தப் பயனும் இல்லை! தேவனை நேசிக்கும் பாதையில், சாத்தானுடனான தேவனுடைய யுத்தத்தில் உன்னால் அவர் பக்கம் நிற்க இயன்று, சாத்தானின் பக்கமாக நீ திரும்பாதிருந்தால், நீ தேவனுக்கான அன்பை அடைந்திருப்பாய்; உன்னுடைய சாட்சியில் நீ உறுதியாக நின்றிருப்பாய்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை நேசிப்பது மட்டுமே தேவனை உண்மையாக விசுவாசிப்பதாகும்” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தில் இருக்கும் கிரியையானது, அது தேவனின் சொந்தக் கிரியை அல்லது பயன்படுத்தப்படும் ஜனங்களின் கிரியை என எதுவாக...
இன்று, சீனாவில் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களில் அவர்களின் கலகத்தனமான மனநிலையை வெளிப்படுத்தவும், அவர்களின் அனைத்து அசிங்கங்களையும்...
தேவன், சாத்தானைத் தோற்கடிக்க மனுஷ நிர்வகித்தலைப் பயன்படுத்துகிறார். ஜனங்களைச் சீரழிப்பதன் மூலம், சாத்தான் அவர்களின் தலைவிதியை நெருக்கி,...
இரட்சகர் கடைசி நாட்களில் வந்து, இன்னும் இயேசு என்று அழைக்கப்பட்டு, மீண்டும் யூதேயாவில் பிறந்து அங்கே அவருடைய கிரியையைச் செய்திருந்தால்,...