தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 14
ஜனங்களுடைய முடிவுகளைத் தீர்மானிப்பது யார்? விவாதிக்க மிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு விஷயம் உள்ளது. அதுதான் தேவன் மீதான உங்கள்...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
இன்றைக்கு, நீங்கள் தேவனில் அன்புகூரவும் அவரை அறிந்துகொள்ளவும் நாடுவதால், ஒரு பக்கம் நீங்கள் வருத்தத்தையும் புடமிடுதலையும் சகித்துக்கொள்ளவேண்டும்; இன்னொரு பக்கம் நீங்கள் ஒரு விலைக்கிரயத்தைச் செலுத்தவேண்டும். தேவனை நேசிக்கும் பாடத்தைக் காட்டிலும் அதிக ஆழமான பாடம் எதுவும் இல்லை, தேவனை நேசிப்பது எப்படி என்ற பாடத்தை ஜனங்கள் வாழ்நாள் முழுவதுமான நம்பிக்கையில் கற்றுக்கொள்கிறார்கள் என்று கூறலாம். அதாவது, நீ தேவனில் விசுவாசம் வைத்தாயானால் நீ அவரை நேசிக்க வேண்டும். நீ தேவனில் விசுவாசம் மட்டும் வைத்து ஆனால் அவரில் அன்புகூரவில்லையென்றால், மற்றும் தேவனைப் பற்றிய அறிவை அடையவில்லையென்றால், மற்றும் இருதயத்திலிருந்து வரும் உண்மையான அன்புடன் அவரை ஒருபோதும் நேசிக்கவில்லையென்றால், நீ தேவன்மேல் வைக்கும் விசுவாசம் வீண்; தேவன்மேலுள்ள விசுவாசத்தில், நீ அவரை நேசிக்கவில்லையென்றால், நீ வீணாய் உன் வாழ்க்கையை வாழ்கிறாய், உன்னுடைய முழு வாழ்க்கையுமே மற்ற எல்லாருடைய வாழ்வைக் காட்டிலும் மிகவும் தாழ்ந்ததாய் இருக்கிறது. உன்னுடைய வாழ்க்கை முழுவதுமே, நீ ஒருபோதும் தேவனை நேசிக்கவில்லையென்றால் அல்லது அவரைத் திருப்திபடுத்தவில்லையென்றால், பிறகு நீ வாழ்கிறதன் அர்த்தம் என்ன? தேவன்மேல் வைக்கும் உன்னுடைய நம்பிக்கையின் அர்த்தம் என்ன? அது ஒரு வீணான முயற்சியாகாதா? அதாவது, ஜனங்கள் தேவனில் நம்பிக்கை வைத்து அவரை நேசிக்க வேண்டுமானால், அவர்கள் ஒரு கிரயத்தைச் செலுத்தவேண்டும். ஒரு குறிப்பிட்ட வெளிப்புறமாய் ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்பட அவர்கள் முயற்சிப்பதற்குப் பதிலாக, தங்கள் இருதயங்களின் ஆழங்களில் உண்மையான நுண்ணறிவினை அவர்கள் தேட வேண்டும். பாடுவதிலும் நடனமாடுவதிலும் நீங்கள் உற்சாகமாக இருந்தாலும், சத்தியத்தை நடைமுறைப்படுத்த இயலாவிட்டால், நீங்கள் தேவனை நேசிக்கிறீர்கள் என்று கூற இயலுமா? தேவனை நேசிப்பது என்பது எல்லா காரியங்களிலும் தேவனுடைய சித்தத்தை நாடுவதாகும், மேலும் உனக்கு ஏதாவது நேரிடும்போது, தேவனுடைய சித்தத்தைத் தெரிந்து கொள்ளவும், அந்த விஷயத்தில் தேவனுடைய சித்தம் என்ன என்பதைக் காணவும் முயற்சிப்பதும், அவர் உன்னை எதை அடையும்படிக்கு கேட்கிறார் என்பதையும், மற்றும் அவரது சித்தத்தைக் குறித்து எப்படி கவனமாயிருக்கவேண்டும் என்பது குறித்தும் ஆழமாக நோக்குவதாகும். உதாரணமாக, நீ துன்பப்படவேண்டிய ஒன்று நடக்கும்போது, அந்த நேரத்தில் தேவனுடைய சித்தம் என்ன என்பதையும் மற்றும் அவரது சித்தத்தைக் குறித்து நீ எவ்வாறு கவனமாயிருக்கவேண்டும் என்பதையும் நீ புரிந்துகொள்ள வேண்டும். நீ உன்னையே திருப்திசெய்து கொள்ளக்கூடாது: முதலில் உன்னை ஒரு பக்கம் வைக்க வேண்டும். மாம்சத்தைக் காட்டிலும் இழிவானது எதுவுமில்லை. தேவனைத் திருப்திப்படுத்த நீ தேட வேண்டும்; மற்றும் உனது கடமையை நீ நிறைவேற்றியாக வேண்டும். அப்படிப்பட்ட சிந்தனைகளில், இவ்விஷயத்தில் தேவன் விசேஷித்த பிரகாசத்தை உனக்குக் கொண்டு வருவார், மேலும் உன்னுடைய இருதயமும் ஆறுதல் அடையும். பெரிதோ அல்லது சிறிதோ, ஏதாவது உனக்கு நிகழும்போது, நீ முதலாவது உன்னை ஒரு பக்கம் வைத்துவிட்டு, மாம்சத்தை எல்லாவற்றிலும் மிகவும் தாழ்ந்ததாகக் கருத வேண்டும். நீ எந்த அளவிற்கு அதிகமாக மாம்சத்தைத் திருப்திப்படுத்துகிறாயோ, அந்த அளவிற்கு அதிகமாக அது சுதந்திரம் எடுக்கிறது; இம்முறை அதை நீ திருப்தியாக்கினால், அடுத்த முறை அது இன்னும் அதிகமாகக் கேட்கும். இப்படியே நடக்கும்போது, ஜனங்கள் மாம்சத்தை இன்னும் அதிகமாக நேசிக்க ஆரம்பிப்பார்கள். மாம்சம் எப்போதுமே அளவுகடந்த ஆசைகள் கொண்டது; நீ சாப்பிடும் உணவுப்பொருட்களாக இருக்கட்டும், உடுத்தும் ஆடையாக இருக்கட்டும், பொறுமையை இழந்து முன்கோபப்படுவதாக இருக்கட்டும், உன்னுடைய சொந்த, பலவீனங்கள் மற்றும் சோம்பேறித்தனத்திற்கு தீனிபோடுகிற காரியமாக இருக்கட்டும், அது எப்போதுமே தன்னைத் திருப்திப்படுத்தும்படி கேட்கும், மற்றும் உள்ளாக சந்தோஷப்படுத்தும்படி கேட்கும். நீ எந்த அளவிற்கு அதிகமாக மாம்சத்தைத் திருப்திப்படுத்துகிறாயோ, அந்த அளவிற்கு அதன் ஆசைகள் அதிகமாக மாறி மற்றும் ஜனங்களின் மாம்சம் இன்னும் ஆழமான எண்ணங்களை உருவாக்கி, தேவனுக்குக் கீழ்ப்படியாமல், தன்னைத் தானே உயர்த்தி, தேவனின் செயல்களைக் குறித்து சந்தேகமுறும் அளவுக்கு மாம்சமானது இன்னும் அதிகமாய் ஒழுக்கக்கேடாகி விடும். நீ எந்த அளவுக்கு மாம்சத்தைத் திருப்திபடுத்துகிறாயோ, அந்த அளவுக்கு மாம்சத்தின் பலவீனங்கள் அதிகமாகும்; உன் பலவீனங்களைக் குறித்து யாரும் பரிதவிக்கவில்லை என்று எப்போதும் உணர்வாய்; தேவன் அதிகத் தொலைவு சென்றுவிட்டதாக எப்போதும் நம்பி, "தேவன் எப்படி இவ்வளவு கடுமையாக இருக்கக்கூடும்? ஏன் அவர் ஜனங்களுக்கு சற்று இளைப்பாறுதல் கொடுக்கக்கூடாது?" என்று கூறுவாய். ஜனங்கள் மாம்சத்தைத் திருப்தியாக்கி அதை அதிகம் பேணும்போது, அவர்கள் தங்களையே கெடுத்துக்கொள்கிறார்கள். நீ உண்மையாக தேவனை நேசித்து மாம்சத்தைத் திருப்திப்படுத்தாதிருந்தால், பிறகு தேவன் செய்யும் எல்லாம் மிகச் சரியானவையாகவும் நல்லதாகவும் இருப்பதை நீ காண்பாய், மற்றும் அவர் சபித்த உன் கலகம் மற்றும் உன் அநீதியின் நியாயத்தீர்ப்பு நியாயமானதென்று தோன்றும். தேவன் உன்னை சிட்சித்து, தண்டித்துத் திருத்தி, பக்குவப்படுத்தும்படியான சூழ்நிலையை எழுப்பி, தமக்கு முன்பாக வரும்படி உன்னைக் கட்டாயப்படுத்துவார்—தேவன் செய்வது ஆச்சரியமானதாக இருக்கிறது என்று எப்போதும் நீ உணர்வாய். இப்படியாக அதிக வேதனையில்லாதது போன்றும், தேவன் அதிக அன்பானவராக இருப்பதையும் நீ உணர்வாய். மாம்சத்தின் பலவீனங்களுக்கு நீ தீனிபோட்டு, தேவன் வெகு தொலைவுக்குச் சென்றுவிட்டார் என்று கூறுவாயானால், பிறகு நீ எப்போதும் வேதனையை உணர்வாய், எப்போதும் மனச்சோர்வுடன் இருப்பாய், தேவனுடைய எல்லா கிரியைகளையுங் குறித்து தெளிவற்றிருப்பாய். தேவன் மனுஷனுடைய பலவீனங்களைக் குறித்து சற்றும் பரிதவியாமல் இருப்பது போன்றும் மனுஷனுடைய வருத்தங்களை அறியாமல் இருப்பது போன்றும் தோன்றும். இப்படி நீ எப்போதும் பரிதாபமாகவும் தனிமையாகவும், பெரும் அநீதிக்கு நீ ஆளாகியிருப்பது போன்றும் உணர்வாய், இந்த நேரத்தில் குற்றஞ்சாட்டவும் தொடங்குவாய். இதுபோன்று எவ்வளவு அதிகமாக மாம்சத்தின் பலவீனங்களுக்குத் தீனி போடுகிறாயோ, அவ்வளவு அதிகமாய்த் தேவன் உங்களைவிட்டு தூரமாய்ப் போய்விட்டதாக உணர்வாய், அது தேவனுடைய கிரியைகளை மறுத்து, அவரை எதிர்க்க ஆரம்பித்து, கீழ்ப்படியாமையால் நிறைந்திருக்கும் அளவிற்கு அது மோசமாகிவிடும். இப்படியாக, நீ மாம்சத்துக்குத் தீனி போடாமல், அதற்கு எதிர்த்து நிற்க வேண்டும்: "என் கணவர் (மனைவி), பிள்ளைகள், வாய்ப்புகள், திருமணம், குடும்பம்—இவை யாவும் பொருட்டல்ல! என் இருதயத்தினுள் தேவன் மட்டுமே இருக்கிறார், மாம்சத்தை அல்ல, தேவனை திருப்திப்படுத்தவே என்னால் இயன்ற அளவுக்கு நான் முயற்சி செய்ய வேண்டும்." இந்தத் தீர்மானத்தை நீ கொண்டிருக்க வேண்டும். நீ எப்போதும் இந்தத் தீர்மானத்தைக் கொண்டிருந்தால், உன்னை ஒதுக்கி வைத்து, சத்தியத்தை நடைமுறைப்படுத்தும் போது, அதிகச் சிரமம் இல்லாமல் உன்னால் எளிதாக இதைச் செய்ய முடியும். ஒருமுறை விவசாயி ஒருவர் சாலையில் விறைத்துப்போய்க் கிடந்த பாம்பு ஒன்றைக் கண்டார். அதை விவசாயி எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டார், அந்தப் பாம்பு புத்துயிர் பெற்றபோது, விவசாயியைக் கடித்து அவர் மரணமடைந்தார். மனுஷனின் மாம்சம் இந்தப் பாம்பைப் போன்றது: அதன் சாராம்சம் அவர்களுடைய வாழ்வுக்கு ஆபத்தை விளைவிப்பதாகும்—முற்றிலுமாக அதன் போக்கில் செல்லும்போது, உங்கள் ஜீவன் இழக்கப்படுகிறது. மாம்சம் சாத்தானுக்குச் சொந்தமானது. அதனுள் அளவுக்கு மிஞ்சிய ஆசைகள் இருக்கின்றன, அது தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறது, வசதியையும் ஓய்வு நேரத்தில் கேளிக்கையையும் அனுபவிக்கவும், சோம்பேறித்தனத்தில் புரளவும் விரும்பும், குறிப்பிட்ட அளவு அதைத் திருப்திபடுத்தினபின் அது முடிவாக உன்னை விழுங்கிவிடும். அதாவது, இந்த முறை நீ அதைத் திருப்தியாக்கினால், அடுத்த முறை அது இன்னும் அதிகமாகக் கேட்கும். அதற்கு எப்போதும் அளவுக்கு மீறிய ஆசைகளும் புதிய கோரிக்கைகளும் உண்டு, மாம்சத்துக்கு நீ தீனி போடுவதை அது சாதகமாக எடுத்துக்கொண்டு, உன்னை இன்னும் அதிகமாக அதைப் போற்றவும், அதனுடைய சுகபோகத்திற்குள் வாழவும் செய்யும்—நீ அதை மேற்கொள்ளாவிட்டால், இறுதியில் உன்னை நீயே அழித்துக்கொள்வாய். தேவனுக்கு முன்பாக நீ ஜீவனை அடைய முடியுமா என்பதும் உன்னுடைய முடிவு என்னவாக இருக்கும் என்பதும், நீ மாம்சத்திற்கு விரோதமாக எப்படி உன்னுடைய எதிர்ப்பைச் செயல்படுத்துகிறாய் என்பதைப் பொறுத்ததாகும். தேவன் உன்னை இரட்சித்திருக்கிறார், தெரிந்தெடுத்திருக்கிறார் மற்றும் முன்குறித்திருக்கிறார், ஆனாலும் இன்று நீ அவரைத் திருப்திப்படுத்த மனமில்லாதிருந்தால், சத்தியத்தை நடைமுறைப்படுத்த மனமில்லாதிருந்தால், தேவனை உண்மையாய் நேசிக்கும் இருதயத்தோடு உன் சொந்த மாம்சத்திற்கு எதிர்த்து நிற்க மனமில்லாதிருந்தால், இறுதியில் உன்னை நீயே கெடுத்துக் கொள்வாய்; மற்றும் இவ்வாறு அதிகபட்ச வேதனையை சகிப்பாய். நீ எப்போதும் மாம்சத்திற்குத் தீனி போட்டால், சாத்தான் கொஞ்சம் கொஞ்சமாக உன்னை விழுங்கி, உள்ளே முழுவதும் இருளாகும் வரைக்கும் உன்னை ஜீவனற்றவனாக அல்லது ஆவியின் தொடுதல் இல்லாதவனாக விட்டுவிடுவான். நீ அந்தகாரத்தில் வசிக்கும்போது, சாத்தானால் சிறைபிடிக்கப்பட்டிருப்பாய், உன் இருதயத்தில் ஒருபோதும் தேவனைக் கொண்டிருக்க மாட்டாய், அப்போது நீ தேவன் இருப்பதை மறுதலித்து, அவரை விட்டு விலகிச்செல்வாய். இப்படியாக, ஜனங்கள் தேவனை நேசிக்க விரும்பினால், அவர்கள் வேதனையின் விலைக்கிரயத்தைச் செலுத்தவேண்டும் மற்றும் துன்பத்தைச் சகிக்க வேண்டும். வெளிப்புறமான ஆர்வமோ, பெருங்கஷ்டமோ, அதிகமான வாசிப்போ, இங்குமங்கும் அதிகமாய் ஓடுவதோ தேவையில்லை; மாறாக, அவர்கள் தங்களுக்குள் இருக்கும் அதிக ஊதாரித்தனமான எண்ணங்கள், தனிப்பட்ட விருப்பங்கள், மற்றும் தங்களின் சொந்தப் பரிசீலனைகள், கருத்துகள் மற்றும் நோக்கங்கள் ஆகிய காரியங்களை ஒதுக்கி வைக்க வேண்டும். தேவனுடைய சித்தம் அப்படிப்பட்டதாக இருக்கிறது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை நேசிப்பது மட்டுமே தேவனை உண்மையாக விசுவாசிப்பதாகும்” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
ஜனங்களுடைய முடிவுகளைத் தீர்மானிப்பது யார்? விவாதிக்க மிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு விஷயம் உள்ளது. அதுதான் தேவன் மீதான உங்கள்...
பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது பல வகையான ஜனங்கள் மற்றும் பல வகையான நிலைமைகளின் மூலம் நிறைவேற்றப்பட்டு நிறைவு செய்யப்படுகிறது. மாம்சமாகிய...
மாம்சத்தில் அவர் செய்யும் கிரியை மிகவும் முக்கியமானதாகும், இது கிரியையைப் பற்றி பேசப்படுகிறது. மேலும், கிரியையை இறுதியில் முடிப்பவர்...
பூமியில், எல்லா விதமான பொல்லாத ஆவிகளும் ஓய்வெடுப்பதற்கான இடத்தை நிரந்தரமாகத் தேடுகின்றன, மேலும் அவை உட்புகக்கூடிய மனுஷ பிரேதங்களை...