தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 485

பரிசுத்த ஆவியானவரின் கிரியை நாளுக்கு நாள் மாறுகிறது. அவருடைய கிரியையானது அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அதிகரிக்கிறது, நாளைய வெளிப்படுத்துதல் இன்றைய வெளிப்படுத்துதலைக் காட்டிலும் அதிகமாக உள்ளது, எடுத்துவைக்கும் அடிக்கு அடி எப்போதும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தேவன் மனுஷனைப் பரிபூரணமாக்கும் செயல் இதுவே. ஜனங்களால் அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலவில்லை என்றால், அவர்கள் எந்த நேரத்திலும் வெளியே தள்ளப்படலாம். அவர்களிடம் கீழ்ப்படிதலுள்ள இருதயம் இல்லையென்றால், அவர்களால் இறுதிவரை பின்பற்ற இயலாது. முந்தைய காலம் கடந்துபோனது; இது ஒரு புதிய காலம். புதிய காலத்தில், புதிய கிரியை செய்யப்பட வேண்டும். குறிப்பாக ஜனங்கள் பரிபூரணமாக்கப்படும் கடைசி காலத்தில், தேவன் புதிய கிரியைகளை மிகவும் விரைவாகச் செய்வார், ஆகவே ஜனங்கள் தங்கள் இருதயங்களில் கீழ்ப்படிதல் இல்லாமல், தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றச் சிரமப்படுவார்கள். தேவன் எந்த விதிகளுக்கும் கட்டுப்பட்டவர் அல்ல, அவர் தனது எந்தக் கட்டத்தின் கிரியையையும் மாறாததாக பாவிப்பதில்லை. மாறாக, அவர் செய்யும் கிரியை எப்போதும் புதியதாகவும், எப்போதும் அதிகரித்துக்கொண்டேயும் இருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும், அவருடைய கிரியை மேலும் மேலும் நடைமுறையானதாக மாறுகிறது, மேலும் மனுஷனின் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப அதிகரித்தவாறு இருக்கிறது. ஜனங்கள் இதுபோன்ற கிரியையை அனுபவித்த பிறகே தங்கள் மனநிலையில் இறுதி மாற்றத்தை அடைய இயலும். ஜீவனைப் பற்றிய மனுஷனின் அறிவு எப்போதும் இல்லாத உயர்ந்த நிலைகளை எட்டுகிறது, ஆகவே அதேபோல, தேவனுடைய கிரியை எப்போதும் இல்லாத உயர்ந்த நிலைகளை எட்டுகிறது. இவ்விதமாக மாத்திரமே மனுஷன் பரிபூரணமாக்கப்பட்டு தேவனால் பயன்படுத்தப்படுவதற்குத் தகுதியுள்ளவனாக இயலும். தேவன் ஒருபுறம் மனுஷனின் எண்ணங்களை எதிர்கொண்டு அவற்றை நேர்மாறாக மாற்றுகிறார், மறுபுறம் மனுஷனை உயர்ந்த மற்றும் மிகவும் யதார்த்தமான நிலைக்கும், தேவன் மீதான விசுவாசத்தின் மிகவும் உயர்ந்த ராஜ்யத்திற்கும் வழிநடத்திச் செல்கிறார், இதன் மூலம் அவனால் தேவனுடைய சித்தத்தை இறுதியில் நிறைவேற்ற இயலும். வேண்டுமென்றே எதிர்க்கும் கீழ்ப்படியாத சுபாவமுள்ளவர்கள் அனைவருமே தேவனுடைய விரைவான மற்றும் பலம் கொண்ட மேம்பட்ட கிரியையின் இந்தக் கட்டத்தில் வெளியே தள்ளப்படுவார்கள்; விருப்பத்துடன் கீழ்ப்படிகிறவர்களும் மகிழ்ச்சியுடன் தங்களைத் தாழ்த்துகிறவர்களும் மாத்திரமே சாலையின் இறுதி வரை பயணிக்க இயலும். இவ்வகையான கிரியையில், நீங்கள் எல்லோரும் எவ்வாறு கீழ்ப்படிவது, உங்கள் கருத்துக்களை எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கவனக்குறைவாக இருந்தால், நீங்கள் நிச்சயமாகவே பரிசுத்த ஆவியானவரால் புறக்கணிக்கப்பட்டவராகவும், தேவனுடைய கிரியைக்கு இடையூறு செய்கிறவராகவும் மாறிப்போவீர்கள். இந்தக் கட்டக் கிரியைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பு, மனுஷனின் பழைய விதிகளும் சட்டங்களும் எண்ணற்றவையாக இருந்தன, அவன் அதையே கடைபிடித்தான். இதன் விளைவாக, அவன் தற்பெருமை கொண்டு தன்னையே மறந்துவிட்டான். இவை அனைத்தும் தேவனுடைய புதிய கிரியையை ஏற்றுக்கொள்ள விடாமல் மனுஷனைத் தடுக்கும் தடைகளாகும்; இவைதான் தேவனைப் பற்றிய மனுஷனின் அறிவின் எதிரிகள். ஜனங்கள் தங்கள் இருதயத்தில் கீழ்ப்படிதல் இல்லாமலும், சத்தியத்திற்காக ஏங்காமலும் இருப்பது ஆபத்தானது. எளிய கிரியைக்கும் வார்த்தைகளுக்கும் மாத்திரமே கீழ்ப்படிந்தால் மற்றும் ஆழமான எதையும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்றால், நீ பழைய வழிமுறைகளில் சிக்கிக்கொண்டிருக்கிறாய், பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் வேகத்துடன் உன்னால் ஈடுகொடுக்க இயலாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உண்மையான இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்” என்பதிலிருந்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 612

நியாயத்தீர்ப்பு என்றால் என்ன என்பதையும், சத்தியம் எது என்பதையும் நீ இப்போது புரிந்துகொள்கிறாயா? நீ புரிந்துகொண்டாய் என்றால்,...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 519

தேவனுடைய கிரியையை மனிதன் அனுபவித்து, தன்னையே தெரிந்துகொள்கிறான், அவனுடைய சீர்கேடான மனநிலையைச் சுத்திகரிக்கிறான், வாழ்க்கையில் உயர்வைத்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 37

முழு பிரபஞ்சத்திலும் தேவன் தமது கிரியையைச் செய்கிறார். அவரை விசுவாசிக்கிறவர்கள் அனைவரும் அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, அவருடைய...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 339

இப்போது என்னை நயங்காட்டி ஏமாற்றும் உனது மென்மையான மாம்சத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன், மேலும் உனக்கு ஒரு சிறிய எச்சரிக்கையை மட்டுமே...