தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 446

பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது ஜனங்களை நேர்மறையான முன்னேற்றத்தை அடைய அனுமதிக்கிறது, அதேசமயம் சாத்தானின் கிரியையானது அவர்களை எதிர்மறையாகவும், பின்வாங்கவும், தேவனுக்கு விரோதமாக கலகம்பண்ணவும் எதிர்க்கவும், தேவன் மீதான விசுவாசத்தை இழக்கவும், தன் கடமையைச் செய்வதில் மிகவும் பலவீனமாகவும் ஆக்குகிறது. பரிசுத்த ஆவியானவரின் அறிவூட்டலில் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு விஷயமும் மிகவும் இயற்கையானதாய் இருக்கின்றது; இது உன்மீது வலிந்து திணிக்கப்படுவதில்லை. நீ அதற்குக் கீழ்ப்படிந்தால், நீ சமாதானம் பெற்றிருப்பாய்; நீ அவ்வாறு செய்யாவிட்டால், பிற்பாடு நீ கடிந்துகொள்ளப்படுவாய். பரிசுத்த ஆவியானவரின் அறிவூட்டுதலுடன், நீ செய்யும் எதுவும் இடையூறு செய்யப்படவோ அல்லது கட்டாயப் படுத்தப்படவோ மாட்டாது; நீ விடுவிக்கப்படுவாய், உன் செயல்களில் பயிற்சி பெற ஒரு பாதை இருக்கும், மற்றும் நீ எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் ஆளாகமாட்டாய், ஆனால் தேவனுடைய சித்தத்தின்படி செயல்படக் கூடியவனாய் இருப்பாய். சாத்தானின் கிரியையானது நீ பல விஷயங்களில் குறுக்கிடக் காரணமாகின்றது; இது உன்னை ஜெபிக்க மனவிருப்பம் அற்றவனாக்குகிறது, தேவனுடைய வார்த்தைகளைப் புசிக்கவும் பானம்பண்ணவும் உன்னை மிகவும் சோம்பேறியாக்குகின்றது, மற்றும் சபை வாழ்வை வாழ மனவிருப்பம் அற்றவனாக்குகின்றது, மற்றும் ஆவிக்குரிய வாழ்விலிருந்து உன்னை அந்நியப்படுத்துகின்றது. பரிசுத்த ஆவியானவரின் கிரியை உன் அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடுவதில்லை மற்றும் உன் சாதாரண ஆவிக்குரிய வாழ்வில் குறுக்கிடுவதில்லை. நீ பல விஷயங்களை அவை நிகழும் வேளையில் பகுத்தறிய இயலாதிருக்கின்றாய், ஆயினும் சில நாட்களுக்குப் பின்பு, உன் இருதயம் மிகுந்த பிரகாசமாகவும் உன் மனம் மிகுந்த தெளிவாகவும் ஆகின்றது. ஆவியானவரின் விஷயங்களைப் பற்றி நீ கொஞ்சம் உணர்ந்தறிதலைக் கொண்டிருக்கின்றாய், மற்றும் ஓர் எண்ணம் தேவனிடத்திலிருந்தா அல்லது சாத்தானிடத்திலிருந்தா, எவரிடமிருந்து வந்துள்ளது என்பதை நீ மெதுவாகப் பகுத்தறிய முடியும். உன்னைச் சில விஷயங்கள் தெளிவாகவே தேவனை எதிர்க்கவும் மற்றும் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்யவும் வைக்கின்றன, அல்லது தேவனுடைய வார்த்தைகளைக் கடைபிடிப்பதில் இருந்து உன்னைத் தடுக்கின்றன; இந்த விஷயங்கள் யாவும் சாத்தானிடமிருந்து வருகின்றன. சில விஷயங்கள் வெளிப்படையானவைகளாய் இருப்பதில்லை, மற்றும் அவை என்னவென்று இந்த நேரத்தில் உன்னால் சொல்ல முடியாது; பின்னர், நீ அவற்றின் வெளிப்பாடுகளைக் காணலாம், மற்றும் அதன்பின்னர் பகுத்துணருதலைச் செயல்படுத்தலாம். எந்த விஷயங்கள் சாத்தானிடமிருந்து வருகின்றன மற்றும் எவை பரிசுத்த ஆவியானவரால் ஆணையிடப்படுகின்றன என்பதை நீ தெளிவாகப் பகுத்துணர முடிந்தால், அதன்பின்பு நீ அவ்வளவு சுலபமாய் உன் அனுபவங்களில் வழிதவறிச் செல்லும்படி வழிநடத்தப்பட மாட்டாய். சில நேரங்களில், உன் நிலை நன்றாக இராதபோது, அதன்பின்பு நீ உன்னைச் செயல்துடிப்பற்ற நிலையில் இருந்து வெளியே கொண்டுவரும் குறிப்பிட்ட சிந்தனைகளைக் கொண்டிருப்பாய். உன் நிலை சாதகமற்றதாக இருக்கும்போது கூட, உன் சில எண்ணங்கள் பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்து வரக்கூடும் என்பதை இது காண்பிக்கிறது. நீ செயல்துடிப்பற்றவனாக இருக்கும்போது, உன் எண்ணங்கள் அனைத்தும் சாத்தானால் அனுப்பப்படுகின்றன; அது உண்மையாக இருந்தால், நீ எப்போது ஒரு நேர்மறையான நிலைக்கு மாற முடியும்? ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செயல்துடிப்பற்ற நிலையில் இருந்ததால், உன்னைப் பரிபூரணப்படுத்தப் பரிசுத்த ஆவியானவர் ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறார்; அவர் உன்னைத் தொடுகிறார் மற்றும் உன்னைச் செயலற்ற நிலையில் இருந்து வெளிக்கொண்டு வருகின்றார், மேலும் நீ ஒரு இயல்பான நிலைக்குள் நுழைகிறாய்.

பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்னவாக இருக்கின்றது மற்றும் சாத்தானின் கிரியை என்னவாக இருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதினால், நீ இவற்றை, உன் அனுபவங்களின் போது உன் சொந்த நிலையுடன் ஒப்பிடமுடியும், மற்றும் இந்த வழியில் உன் அனுபவங்களின் கொள்கையுடன் தொடர்புடைய இன்னும் அதிகமான பல சத்தியங்கள் இருக்கும். கொள்கையைப் பற்றிய இந்த சத்தியங்களை புரிந்துகொண்டதினால், நீ உனது உண்மை நிலையை வெற்றிகொள்ளக் கூடியவனாக இருப்பாய், ஜனங்கள் மற்றும் நிகழ்வுகளிடையே வேறுபடுத்திக் காணக்கூடியவனாக நீ இருப்பாய், மற்றும் நீ பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற்றுக் கொள்வதில் இவ்வளவு முயற்சியைச் செலவழிக்க வேண்டியதில்லை. நிச்சயமாக, இது உன் நோக்கங்கள் சரியாக இருப்பதற்கும், தேடுவதற்கும் பயிற்சி செய்வதற்குமான உன் விருப்பத்தைச் சார்ந்துள்ளது. இது போன்ற மொழி—கொள்கைகளுடன் தொடர்புடைய மொழி—உன் அனுபவங்களில் இடம்பெற வேண்டும். இது இல்லாமல், உன் அனுபவங்கள் சாத்தானின் குறுக்கீடு மற்றும் மதியீனமான அறிவு ஆகியவற்றினால் நிறைந்ததாக இருக்கும். பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு கிரியை செய்கின்றார் என்பதை நீ புரிந்துகொள்ளவில்லை என்றால், தேவனிடம் எப்படி ஜெபிப்பது அல்லது நீ எப்படி பிரவேசிக்க வேண்டும் என்பது உனக்குப் புரியவில்லை, சாத்தான் எவ்வாறு மக்களை வஞ்சிக்கவும் தடை செய்யவும் கிரியை செய்கின்றான் என்பதை நீ புரிந்துகொள்ளவில்லை என்றால், சாத்தானை நிராகரித்து உங்கள் சாட்சியில் உறுதியாக நிற்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியாது. பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு செயல்படுகின்றார், சாத்தான் எவ்வாறு செயலாற்றுகின்றான் என்பவை ஜனங்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும், மேலும், இவை தேவனிடத்தில் ஜனங்களுக்கு இருக்கும் விசுவாசத்தில் அனுபவிக்கப்பட வேண்டிய விஷயங்கள் ஆகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் சாத்தானின் கிரியையும்” என்பதிலிருந்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: வேதாகமத்தைப் பற்றிய மறைபொருட்கள் | பகுதி 278

யூதர்கள் யாவரும் பழைய ஏற்பாட்டைப் படித்து ஒரு முன்னணையில் ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என்ற ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை அறிந்திருந்தார்கள்....

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 497

தேவன் ஜனங்களுக்குள் செய்யும் செயலின் ஒவ்வொரு படியிலும், அது வெளிப்புறமாக ஜனங்களுக்கிடையேயான செயல்பாடுகளாக, மனுஷர்களின் ஏற்பாட்டினால் அல்லது...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 162

"மனுஷனாக அவதரித்த தேவனின் கிரியைகளுக்கும், கடந்த கால தீர்க்கதரிசிகளும் மற்றும் அப்போஸ்தலர்களும் செய்தவற்றிற்கும் வித்தியாசம் என்ன? தாவீது...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 396

ஆவிக்குரிய ஜீவிதம் எத்தகைய ஜீவிதம்? ஆவிக்குரிய ஜீவிதம் என்பது உன் இருதயம் முழுவதுமாக தேவனிடம் திரும்பியிருக்கிறதும், தேவனுடைய அன்பைக்...