தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 127
மனுஷனுடைய மாம்சம் சாத்தானால் சீர்கேடடைந்திருக்கிறது. இது மிகவும் ஆழமாக குருடாக்கப்பட்டு இருந்திருக்கிறது மற்றும் ஆழமாகப்...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
நீண்ட காலமாகவே, தேவனை விசுவாசிக்கும் ஜனங்கள் எல்லோரும் ஓர் அழகான சென்றடையும் இடத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர், மேலும் அனைத்து தேவனுடைய விசுவாசிகளும் திடீரென நல்லதிர்ஷ்டம் தங்களுக்கு வரும் என்று நம்புகிறார்கள். வெகு சீக்கிரத்தில், தாங்கள் பரலோகத்தில் ஏதோ ஓர் இடத்தில் சமாதானமாக அமர்வதைக் காண்போம் என்று அவர்கள் எல்லோரும் நம்புகிறார்கள். ஆனால், அவர்களுடைய அழகான எண்ணங்களுடன், பரலோகத்தில் இருந்து கீழே பொழியும் இத்தகைய நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவும் அல்லது அங்கே ஓர் இருக்கையில் அமரவும் கூட தகுதி பெற்றிருக்கிறார்களா இல்லையா என்பதை இந்த ஜனங்கள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்று நான் கூறுகிறேன். தற்போது நீங்கள், உங்களைப் பற்றிய சிறந்த அறிவைக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் கடைசி நாட்களின் பேரழிவுகளில் இருந்தும் மற்றும் துன்மார்க்கரைத் தண்டிக்கும்போது சர்வவல்லவரின் கரத்தில் இருந்தும் தப்பிக்கும் நம்பிக்கையுடன் இன்னும் இருக்கிறீர்கள். இனிய கனவுகளைக் கொண்டிருப்பதும் தாங்கள் விருப்பத்துக்கேற்ற பொருட்களை விரும்புவதும் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட எல்லா ஜனங்களின் பொதுவான அம்சம் போலவும், மேலும் அது எந்த ஒரு தனி நபரின் அதியற்புதமான ஆலோசனை அல்ல என்பது போலவும் தோன்றுகிறது. அப்படியிருந்தும், உங்களுடைய இந்த ஆடம்பரமான ஆசைகளுக்கு மட்டுமல்லாமல் உங்கள் ஆசீர்வாதங்களை அடையும் ஆர்வத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே இன்னும் நான் விரும்புகிறேன். உங்கள் மீறுதல்கள் எண்ணற்றவையாகவும், உங்கள் கலகத்தன்மை வளர்ந்துகொண்டே போவதையும் கருத்தில் கொள்கையில், இந்த விஷயங்கள் உங்களுடைய அழகான எதிர்கால வரைபடங்களுக்கு எவ்வாறு பொருத்தமாக இருக்க முடியும்? உன்னை எதுவும் கட்டுப்படுத்தாமல், நீ விரும்பிய வண்ணமே தவறுகளை செய்ய விரும்பி, ஆனால் அதே வேளையில் இன்னும் நீ உன் கனவுகள் உண்மையாக வேண்டும் என்று விரும்பினால், அந்த மயக்கத்திலேயே தொடர்வாயாக மேலும் ஒருபோதும் விழிக்காதே என்று நான் உன்னை வற்புறுத்துகிறேன்—ஏனெனில் உன்னுடையது ஒரு வெற்றுக் கனவு மேலும் நீதியுள்ள தேவனின் முன்னிலையில், அவர் உனக்காக ஒரு விதிவிலக்கை அளிக்க மாட்டார். நீ உன் கனவுகள் நனவாக வேண்டும் என்று மட்டும் விரும்பினால், பின்னர் ஒருபோதும் கனவு காணாதே; மாறாக, எப்போதும் சத்தியத்தையும் உண்மைகளையும் மட்டுமே எதிர்கொள். நீ இரட்சிக்கப்பட இது மட்டுமே ஒரே வழி. உறுதியான வகையில், இந்த முறைக்கான படிகள் என்ன?
முதலில், உன்னுடைய எல்லா மீறுதல்களையும் நோக்கிப்பார், மற்றும் உன்னிடமுள்ள சத்தியத்துக்கு இணங்காத எந்த நடத்தையையும் சிந்தனைகளையும் ஆராய்ந்து பார்.
இந்த ஒரு விஷயத்தை நீ எளிதாகச் செய்யலாம், மேலும் எல்லா புத்தியுள்ள ஜனங்களும் இதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். இருப்பினும், மீறுதல் மற்றும் சத்தியம் என்றால் என்ன என்று ஒருபோதும் அறியாதவர்கள் விதிவிலக்கு, ஏனெனில் அடிப்படை நிலையில், அவர்கள் புத்தியுள்ள ஜனங்கள் அல்லர். நேர்மையான, எந்த நிர்வாகக் கட்டளைகளையும் கடுமையான முறையில் மீறாத, மற்றும் தங்கள் மீறுதல்களை எளிதாக அறிந்துகொள்ளக் கூடிய தேவனால் அங்கீகரிக்கப்பட்ட ஜனங்களிடம் நான் பேசுகிறேன். நான் உங்களிடத்தில் கோரும் இந்த ஒரு விஷயம் நிறைவேற்றுவதற்கு எளிதாக இருந்தாலும், நான் உங்களிடத்தில் வேண்டுவது இந்த ஒரு விஷயத்தை மட்டுமல்ல. எதுவாக இருந்தாலும், இந்தத் தேவையைப் பற்றி நீங்கள் தனிமையில் சிரிக்க மாட்டீர்கள், மேலும் குறிப்பாக அதை நீங்கள் தாழ்வாகப் பார்க்கமாட்டீர்கள் அல்லது இலேசானதாகக் கருதமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அதைத் தீவிரமாகக் கருதவேண்டும், மேலும் அதைப் புறந்தள்ளக் கூடாது.
இரண்டாவதாக, உன்னுடைய ஒவ்வொரு மீறுதல்களுக்கும் கீழ்ப்படியாமைகளுக்கும் தொடர்பான ஒரு சத்தியத்தை நீ தேட வேண்டும், பின் இந்தச் சத்தியங்களைப் பயன்படுத்தி அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். அதன் பின்னர், உன்னுடைய மீறுதல் நடவடிக்கைகளையும் கீழ்ப்படியாத எண்ணங்களையும் செயல்களையும் சத்தியத்தைக் கடைப்பிடித்துப் பதிலீடு செய்.
மூன்றாவதாக, நீ ஒரு நேர்மையான நபராக இருக்க வேண்டும், எப்போதும் தந்திரமுள்ளவனாகவும் தொடர்ந்து ஏமாற்றும் ஒருவனாகவும் இருக்கக் கூடாது. (இங்கே நான் மீண்டும் உங்களை ஒரு நேர்மையான நபராக இருக்கும்படி கேட்கிறேன்.)
இந்த மூன்று காரியங்களையும் உன்னால் நிறைவேற்ற முடிந்தால், அதன்பின் நீ அதிர்ஷ்டசாலிகளில் ஒருவனாக—கனவுகள் நனவாகப்பெற்று நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறும் ஒரு நபராக இருக்கிறாய். ஒருவேளை நீங்கள் இந்த கவனத்தைக் கவராத மூன்று தேவைகளையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளலாம், அல்லது ஒருவேளை அவற்றைப் பொறுப்பற்ற தன்மையில் கையாளலாம். எதுவாக இருந்தாலும், உங்கள் கனவுகளை நனவாக்குவதும் உங்கள் இலட்சியங்களை நடைமுறைப்படுத்துவதும் என் நோக்கமே தவிர உங்களைக் கேலி செய்வதோ அல்லது உங்களை முட்டாள் ஆக்குவதோ இல்லை.
என் கோரிக்கைகள் எளிமையாக இருக்கலாம், ஆனால் நான் உங்களிடம் கூறுவது ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதுபோல் அவ்வளவு எளிதானது அல்ல. நீங்கள் செய்வதெல்லாம் இதைப் பற்றி சாதாரணமாகப் பேசுவதும் அல்லது வெற்று, ஆரவார அறிக்கைகள் மூலம் உளறித்திரிவதுமாக இருந்தால், பின் உங்கள் வரைபடங்களும் உங்கள் விருப்பங்களும் எப்போதும் ஒரு வெற்றுப்பக்கமாக மட்டுமே இருக்கும். உங்களில் பல ஆண்டுகளாகத் துன்பப்பட்டும் கடுமையாக உழைத்தும் பலன் எதுவும் இன்றி இருப்போருக்காக நான் இரக்கம் கொள்ள மாட்டேன். மாறாக, என் கோரிக்கைகளை நிறைவேற்றாதவர்களுக்குப் பிரதிபலன்கள் அல்ல, தண்டனை அளிப்பேன், அதைவிட எவ்வித இரக்கமும் காட்ட மாட்டேன். பல ஆண்டுகளாகப் பின்பற்றும் ஒருவராக இருந்து, எதுவாக இருந்தாலும் கடினமாக உழைத்திருக்கிறீர்கள் என்றும், மேலும் ஒரு சேவை செய்பவராக தேவனின் வீட்டில் இருந்ததற்காக மட்டும் உங்களுக்கு ஒரு கிண்ணம் சாதம் அளிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம். உங்களில் பெரும்பான்மையோர் இவ்விதமாகவே சிந்திக்கிறீர்கள் என்று நான் கூறுவேன், ஏனெனில் எவ்வாறு விஷயங்களைச் சாதகமாக்கிக்கொள்வது மற்றும் நீங்கள் சாதகமாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற கொள்கையை எப்போதும் பின்பற்றினீர்கள். இவ்வாறு, நான் இப்போது உங்களிடம் எல்லாத் தீவிரத்துடனும் கூறுகிறேன்: உன் கடின உழைப்பு எவ்வளவு பாராட்டத்தக்கது, உன் தகுதிகள் எவ்வளவு கவர்ச்சிகரமானது, நீ எவ்வளவு நெருக்கமாக என்னைப் பின் தொடர்கிறாய், நீ எவ்வளவு புகழ்பெற்றவனாக இருக்கிறாய், அல்லது உன் மனப்பான்மையை நீ எவ்வளவு தூரம் மேம்படுத்தி இருக்கிறாய் என்று நான் கவலைப்பட மாட்டேன்; என்னுடைய கோரிக்கைகளை நீ நிறைவுசெய்யாத வரையில், உன்னால் என் பாராட்டைப் பெற முடியாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக உங்களுடைய எல்லா எண்ணங்களையும் கணக்கீடுகளையும் தள்ளுபடி செய்துவிடுங்கள், மேலும் என்னுடைய கோரிக்கைகளைத் தீவிரமாகக் கருதத் தொடங்குங்கள்; இல்லாவிட்டால், என்னுடைய கிரியையை ஒரு முடிவுக்குக் கொண்டுவர நான் உங்கள் அனைவரையும் சாம்பலாக மாற்றிவிடுவேன் மேலும், மிக மோசமான வகையில் ஆண்டாண்டான என் கிரியை மற்றும் துன்பத்தை ஒன்றுமில்லாமல் மாற்றிவிடுவேன், ஏனெனில் என்னுடைய சத்துருக்களையும் தீமையின் துர்நாற்றம் வீசும் மற்றும் சாத்தானின் தோற்றத்தையும் கொண்ட அந்த ஜனங்களையும் என் ராஜ்யத்துக்குள் என்னால் கொண்டுவர முடியாது அல்லது அவர்களை அடுத்த யுகத்துக்குக் கொண்டுசெல்ல முடியாது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மீறுதல்கள் மனுஷனை நரகத்திற்கு வழிநடத்தும்" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
மனுஷனுடைய மாம்சம் சாத்தானால் சீர்கேடடைந்திருக்கிறது. இது மிகவும் ஆழமாக குருடாக்கப்பட்டு இருந்திருக்கிறது மற்றும் ஆழமாகப்...
ராஜ்யத்தில், எண்ணற்ற படைக்கப்பட்ட வஸ்துக்கள் புத்துயிர் பெற மற்றும் அவற்றின் உயிர் சக்தியை மீண்டும் பெறத் தொடங்குகின்றன. பூமியின் நிலையில்...
முன்னோக்கிச் செல்லும்போது, தேவனின் வார்த்தைகளைப் பேசுவது என்பதே நீ பேசுவதன் கொள்கையாக இருக்க வேண்டும். சாதாரணமாக, நீங்கள் ஒன்றாக வரும்போது,...
அந்த நேரத்தில், இயேசுவுடைய கிரியையின் ஒரு பகுதி பழைய ஏற்பாட்டிற்கும், மோசேயின் நியாயப்பிரமாணங்களுக்கும், நியாயப்பிரமாணத்தின் காலத்தில்...