தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய மனநிலை மற்றும் தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் | பகுதி 254

ஜீவனுக்கான வழி என்பது யாரும் வைத்திருக்கக்கூடிய ஏதோ ஒன்றல்ல, யாரும் எளிதில் அடையக்கூடிய ஒன்றும் அல்ல. ஏனென்றால், ஜீவனானது தேவனிடமிருந்து மாத்திரமே வர இயலும். அதாவது, ஜீவனின் சாராம்சத்தை தேவன் மாத்திரமே வைத்திருக்கிறார், மேலும் தேவனிடம் மாத்திரமே ஜீவனுக்கான வழி உள்ளது. ஆகையால், தேவன் மாத்திரமே ஜீவனின் பிறப்பிடமாகவும், ஜீவத்தண்ணீரின் எப்போதும் பாய்ந்தோடும் ஊற்றாகவும் விளங்குகிறார். தேவன் உலகைச் சிருஷ்டித்தது முதலே, வாழ்க்கையின் முக்கிய ஆற்றல் தொடர்பான பல கிரியைகளைச் செய்துள்ளார், மனுஷனுக்கு ஜீவனைக் கொண்டுவரும் பல கிரியைகளைச் செய்துள்ளார், மேலும் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு பெரிய விலைக்கிரயத்தைச் செலுத்தியுள்ளார். ஏனென்றால், தேவன்தாமே நித்திய ஜீவனாக இருக்கிறார், மேலும் தேவன்தாமே மனிதன் உயிர்த்தெழுவதற்கான வழியாவார். தேவன் ஒருபோதும் மனிதனுடைய இருதயத்திலிருந்து விலகி இருப்பதில்லை. அவர் எப்பொழுதும் மனுஷர்கள் மத்தியிலேயே வாசம்பண்ணுகிறார். அவர் மனுஷனுடைய வாழ்க்கைக்கு உந்துசக்தியாகவும், மனித இருப்புக்கான வேராகவும், பிறப்புக்குப் பிறகு மனுஷனுடைய ஜீவியத்தின் வளமான ஆதாரமாகவும் விளங்கி வருகிறார். அவர் மனுஷனை மறுபடியும் பிறக்கச் செய்கிறார், மேலும் அவனது ஒவ்வொரு பாத்திரத்திலும் உறுதியுடன் வாழ அவனுக்கு உதவுகிறார். அவரது வல்லமைக்கும் அவரது அழிக்கமுடியாத ஜீவ ஆற்றலுக்கும் நன்றி, மனுஷன் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறான், அதில் முழுவதும் தேவனுடைய ஜீவனின் வல்லமையானது மனுஷனுடைய ஜீவியத்தின் முக்கிய ஆதாரமாகத் திகழ்ந்து வருகிறது, மேலும் எந்தச் சாதாரண மனுஷனும் செலுத்தாத விலைக்கிரயத்தை தேவன் செலுத்தியுள்ளார். தேவனுடைய ஜீவ வல்லமை எந்த வல்லமையையும் மேற்கொள்ள இயலும்; மேலும், இது எந்த வல்லமையையும் விஞ்சுகிறது. அவரது ஜீவன் நித்தியமானது, அவருடைய வல்லமை இயற்கைக்கு அப்பாற்பட்டது. அவரது ஜீவ ஆற்றலை எந்தவொரு சிருஷ்டியாலும் அல்லது எதிரி வல்லமையாலும் வெற்றிகொள்ளப்பட முடியாது. காலம் அல்லது இடத்தைப் பொருட்படுத்தாமல் தேவனுடைய ஜீவ வல்லமையானது இருக்கிறது மற்றும் அதன் அற்புதமான பிரகாசத்தைப் பிரகாசிக்கிறது. வானமும் பூமியும் மாபெரும் மாற்றங்களுக்கு உட்படலாம், ஆனால் தேவனுடைய ஜீவன் சதாகாலங்களிலும் மாறாததாக இருக்கிறது. சகல காரியங்களும் கடந்து போகலாம், தேவனே சகல காரியங்களும் இருப்பதற்கான ஆதாரமாகவும், அவை இருப்பதற்கான வேராகவும் இருப்பதனால், தேவனுடைய ஜீவன் இன்னும் நிலைத்திருக்கும். மனுஷனுடைய ஜீவன் தேவனிடமிருந்து பிறக்கிறது. வானம் இருப்பதற்கு தேவனே காரணம், பூமி இருப்பது தேவனுடைய ஜீவனின் வல்லமையிலிருந்து உருவாகிறது. ஜீவனுள்ள எந்தவொரு பொருளும் தேவனுடைய ராஜரீகத்தை விஞ்ச இயலாது, மேலும் ஜீவனுள்ள எதுவும் தேவனுடைய அதிகாரத்தின் ஆதிக்கத்தைத் தவிர்க்க முடியாது. இவ்விதமாக, ஒவ்வொருவரும் தாங்கள் யார் என்பதைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய ஆதிக்கத்தின் கீழ் அடிபணிய வேண்டும். ஒவ்வொருவரும் தேவனுடைய கட்டளைக்குக் கீழ் வாழ வேண்டும். அவருடைய கரங்களிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 404

தேவனுடைய வார்த்தைகள் வெளிவருகையில், நீ உடனடியாக அவற்றைப் பெற்று, அவற்றைப் புசிக்கவும் குடிக்கவும் வேண்டும். நீ எவ்வளவு புரிந்துகொண்டாலும்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவன் தோன்றுதல் மற்றும் அவருடைய கிரியை | பகுதி 69

என் மகிமையை அவர்கள் காண்பார்கள் என்ற விசுவாசம் எவருக்கும் இல்லை. நான் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் என் மகிமையை மனிதகுலத்தின்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 206

முந்தைய இரண்டு யுகங்களின் கிரியைகளில் ஒரு படிநிலை இஸ்ரவேலில் செய்து முடிக்கப்பட்டது, மற்றொன்று யூதேயாவில் செய்து முடிக்கப்பட்டது. பொதுவாகச்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 348

மனிதனை நிர்வகிப்பது எப்போதுமே என் கடமையாக இருக்கிறது. மேலும், உலகத்தைச் சிருஷ்டித்தபோதே நான் மனிதனை ஜெயங்கொள்ளுவதற்கு உத்தரவிட்டேன். கடைசி...