மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல் (பகுதி ஒன்று)
இன்றைய கிரியை மற்றும் எதிர்காலக் கிரியைப் பற்றி மனிதன் கொஞ்சம் புரிந்துகொள்கிறான், ஆனால் மனிதகுலம் போய்ச்சேர வேண்டிய இடம் எது என்று அவன் புரிந்துகொள்ளவில்லை. ஒரு சிருஷ்டியாக, மனிதன் ஒரு சிருஷ்டிக்குரிய கடமையைச் செய்ய வேண்டும்: மனிதன் தேவனை அவர் செய்யக்கூடிய எல்லாவற்றிலும் பின்பற்ற வேண்டும்; நான் உங்களுக்குச் சொல்லும் வழியில் நீங்கள் தொடர வேண்டும். விஷயங்களை நீயாகவே நிர்வகிக்க உனக்கு வழி இல்லை, உனக்கு உன்மீது அதிகாரம் இல்லை; இவை அனைத்தும் நிச்சயம் தேவனின் திட்டத்திடம் விடப்பட வேண்டும், எல்லா விஷயங்களும் அவருடைய கரங்களுக்குள் அடங்கியிருக்கின்றன. தேவனின் கிரியை மனிதன் போய்ச்சேர வேண்டிய ஓர் அற்புதமான இடத்துடன் கூடிய ஒரு முடிவைக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அளித்தால், மனிதனை ஈர்க்கவும், மனிதனைப் பின்தொடரச் செய்யவும் தேவன் இதைப் பயன்படுத்தினால்—அவர் மனிதனுடன் ஓர் ஒப்பந்தம் செய்திருந்தால்—அப்படியானால் இது ஜெயமாக இருக்காது, அல்லது அது மனிதனின் ஜீவனில் செய்த கிரியையாக இருக்காது. மனிதனைக் கட்டுப்படுத்தவும், இருதயத்தை ஆதாயப்படுத்தவும் தேவன் மனிதனின் முடிவைப் பயன்படுத்தினார் என்றால், இதில் அவர் மனிதனைப் பரிபூரணப்படுத்த மாட்டார், அல்லது அவர் மனிதனை ஆதாயப்படுத்தவும் மாட்டார், மாறாக அவனைக் கட்டுப்படுத்த போய்ச்சேரும் இடத்தைப் பயன்படுத்துவார். மனிதன் எதிர்கால முடிவு, இறுதியாகப் போய்ச்சேருமிடம், மற்றும் நம்புவதற்கு ஏதேனும் நல்லது இருக்கிறதா இல்லையா என்பதைத் தவிர வேறு எதையும் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஜெயங்கொள்ளுதல் கிரியையின்போது மனிதனுக்கு ஓர் அழகான நம்பிக்கை அளிக்கப்பட்டிருந்தால், மனிதனை ஜெயங்கொள்வதற்கு முன்னர், பின்தொடர அவனுக்குச் சரியான போய்ச் சேருமிடம் வழங்கப்பட்டால், மனிதனை ஜெயங்கொள்வது அதன் பலனை அடைவது என்பது மட்டுமல்ல, ஜெயங்கொள்ளும் கிரியையின் பலனும்கூட பாதிப்புக்குள்ளாகும். அதாவது, ஜெயங்கொள்ளும் கிரியையானது மனிதனின் தலைவிதியையும் வாய்ப்புகளையும் பறிப்பதன் மூலமும், மனிதனின் கலகத்தனமான மனநிலைக்கு நியாயத்தீர்ப்பு அளித்து சிட்சிப்பதன் மூலமும் அதன் பலனை அடைகிறது. இது மனிதனுடன் ஓர் ஒப்பந்தம் செய்வதன் மூலம் அடையப்படவில்லை, அதாவது, மனிதனுக்கு ஆசீர்வாதங்களையும் கிருபையையும் அளிப்பதன் மூலம் அல்ல, மாறாக மனிதனின் விசுவாசத்தை வெளிப்படுத்துவதன் மூலமாகவும், அவனது “சுதந்திரத்தைப்” பறிப்பதன் மூலமாகவும், அவனது வாய்ப்புகளை அழிப்பதன் மூலமாகவும் அடையப்படுகிறது. இதுதான் ஜெயங்கொள்ளும் கிரியையின் சாராம்சமாகும். மனிதனுக்கு ஆரம்பத்திலேயே ஓர் அழகான நம்பிக்கை அளிக்கப்பட்டு, சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு கிரியைகள் பின்னர் செய்யப்பட்டிருந்தால், மனிதன் இந்தச் சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பைத் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் என்ற அடிப்படையில் ஏற்றுக்கொள்வான், இறுதியில், சிருஷ்டிகருக்கு நிபந்தனையற்ற முறையில் கீழ்ப்படிவது மற்றும் அவரைத் தொழுதுகொள்வது ஆகியவை அவரது எல்லா ஜீவராசிகளாலும் அடையப்பட மாட்டாது; கண்மூடித்தனமான, அறியாமையுடனான கீழ்ப்படிதல் மட்டுமே இருக்கும், இல்லையென்றால் மனிதன் கண்மூடித்தனமாகத் தேவனுக்குக் கோரிக்கைகளை வைப்பான், மேலும் மனிதனின் இருதயத்தைப் பரிபூரணமாக ஜெயங்கொள்ள முடியாது. இதன் விளைவாக, அத்தகைய ஜெயங்கொள்ளும் கிரியை மூலமாக மனிதனை அடைவதும், மேலும், தேவனுக்குச் சாட்சியம் அளிப்பதும் சாத்தியமில்லை. அத்தகைய ஜீவராசிகள் தங்கள் கடமையைச் செய்ய இயலாது, மேலும் தேவனோடு பேரம் பேசுவதை மட்டுமே செய்வார்கள்; இது ஜெயமாக இருக்காது, ஆனால் இரக்கமும் ஆசீர்வாதமுமாக இருக்கும். மனிதனுடைய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அவன் தனது விதி மற்றும் வாய்ப்புகளைத் தவிர வேறு எதையும் நினைக்கவில்லை, இந்த விஷயங்களை அவன் வழிபாட்டுப் பொருளாக்குகிறான். மனிதன் தனது விதி மற்றும் செல்லும் திசைகளுக்காக தேவனைப் பின்தொடர்கிறான்; அவன் தேவன் மீதுள்ள நேசத்தால் அவரைத் தொழுது கொள்வதில்லை. எனவே, மனிதனை ஜெயங்கொள்வதில், மனிதனின் சுயநலம், பேராசை மற்றும் தேவனைத் தொழுது கொள்வதை மிகவும் தடுக்கும் விஷயங்கள் அனைத்தும் கையாளப்பட வேண்டும், அதன் மூலம் அகற்றப்பட வேண்டும். அவ்வாறு செய்யும்போது, மனிதன் மீதான ஜெயத்தின் பலன்கள் அடையப்படும். இதன் விளைவாக, மனிதனை ஜெயங்கொள்வதன் முதல் கட்டங்களில், மனிதனின் மூர்க்கத்தனமான இலட்சியங்களையும், மிக மோசமான பலவீனங்களையும் நீக்குவது அவசியம், இதன் மூலம், தேவன் மீதுள்ள அன்பை மனிதன் வெளிப்படுத்தவும், மனிதனின் வாழ்நாள் பற்றிய தனது அறிவை மாற்றவும், தேவனைப் பற்றிய அவனது பார்வை மற்றும் அவன் உயிர் வாழ்வதன் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளவும் முடியும். இந்த வகையில், தேவன்மீதான மனிதனின் அன்பு சுத்திகரிக்கப்படுகிறது, அதாவது மனிதனின் இதயம் ஜெயங்கொள்ளப்படுகிறது. ஆனால் எல்லா ஜீவராசிகள் மீதுமான தேவனின் மனப்பான்மையில், தேவன் ஜெயங்கொள்ளும் பொருட்டு மட்டுமே ஜெயங்கொள்வதில்லை; மாறாக, மனிதனை ஆதாயப்படுத்துவதற்காகவும், தன் சொந்த மகிமைக்காகவும், மனிதனின் ஆரம்பக்கால, உண்மையான தன்மையை மீட்டெடுப்பதற்காகவும் அவர் ஜெயங்கொள்கிறார். அவர் ஜெயங்கொள்ளும் பொருட்டு மட்டுமே ஜெயங்கொள்ள வேண்டுமென்றால், ஜெயங்கொள்ளும் கிரியையின் முக்கியத்துவம் இழக்கப்படும். அதாவது, ஜெயங்கொண்ட பிறகு, தேவன் அவரது மனிதக் கைகளைக் கழுவி, மனிதனுடைய ஜீவன் அல்லது மரணத்துக்குச் செவிசாய்க்கவில்லை என்றால், இது மனிதகுலத்தின் நிர்வாகமாகவோ, அல்லது மனிதனை ஜெயங்கொள்வது மனிதனின் இரட்சிப்புக்காகவோ இருக்காது. மனிதனை ஜெயங்கொள்வதைத் தொடர்ந்து மனிதனை ஆதாயப்படுத்துவதும், இறுதியாக அவன் போய்ச்சேர வேண்டிய ஓர் அற்புதமான இடத்திற்கு வருவதும் இரட்சிப்பின் அனைத்துக் கிரியைகளின் இருதயத்திலும் உள்ளது, மேலும் இது மட்டுமே மனிதனின் இரட்சிப்பின் நோக்கத்தை அடைய முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், போய்ச்சேர வேண்டிய அழகான இடத்திற்கு மனிதனின் வருகையும், மீதமுள்ளவற்றுக்குள் பிரவேசிப்பதும் மட்டுமே அனைத்து ஜீவராசிகளிடமும் இருக்க வேண்டிய வாய்ப்புகளாகும், மற்றும் சிருஷ்டிகரால் செய்யப்பட வேண்டிய கிரியைகளாகும். மனிதன் இந்தக் கிரியையைச் செய்ய வேண்டியதிருந்தால், அது மிகவும் குறைவாகவே இருந்திருக்கும். இது மனிதனை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குக் கொண்டு சென்றிருக்கக்கூடும், ஆனால் அது மனிதனை நித்தியமாக போய்ச்சேருமிடத்திற்குக் கொண்டுவந்திருக்க முடியாது. மனிதனின் விதியை மனிதனால் தீர்மானிக்க முடியாது, மேலும், மனிதனின் வாய்ப்புகளையும் எதிர்காலத்தில் போய்ச்சேர வேண்டிய இடத்தையும் உறுதிப்படுத்த அவனால் முடியாது. இருப்பினும், தேவன் செய்யும் கிரியை வேறுபட்டது. அவர் மனிதனைச் சிருஷ்டித்ததிலிருந்து, அவனை வழிநடத்துகிறார்; அவர் மனிதனை இரட்சிப்பதால், அவர் அவனைப் பரிபூரணமாக இரட்சிப்பார், மற்றும் அவனைப் பரிபூரணமாக ஆதாயப்படுத்துவார்; அவர் மனிதனை வழிநடத்துவதால், அவனைப் போய்ச்சேர வேண்டிய சரியான இடத்திற்குக் கொண்டு வருவார்; அவர் மனிதனைச் சிருஷ்டித்து நிர்வகிப்பதால், மனிதனின் தலைவிதி மற்றும் வாய்ப்புகளுக்கு அவர் அவசியம் பொறுப்பேற்க வேண்டும். சிருஷ்டிகரால் செய்யப்படும் கிரியை என்பது இதுதான். மனிதனின் வாய்ப்புகளைத் தூய்மைப்படுத்துவதன் மூலம் ஜெயங்கொள்ளும் கிரியை அடையப்பட்டாலும், மனிதன் இறுதியில் தேவனால் அவனுக்கென்று ஆயத்தம் செய்யப்பட்ட போய்ச்சேர வேண்டிய சரியான இடத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும். தேவன் மனிதன் மீது கிரியை செய்வதால், மனிதனுக்குத் துல்லியமாகப் போய்ச்சேர வேண்டிய ஓர் இடம் இருக்கிறது, அவனுடைய தலைவிதி உறுதி செய்யப்படுகிறது. இங்கே, குறிப்பிடப்பட்ட பொருத்தமான போய்ச்சேருமிடம் மனிதனின் நம்பிக்கைகள் மற்றும் கடந்த காலங்களில் சுத்திகரிக்கப்பட்ட வாய்ப்புகள் அல்ல; இந்த இரண்டும் வேறுபட்டவை. மனிதன் எதிர்பார்க்கும் மற்றும் பின்தொடரும் விஷயங்கள் மனிதனுக்கு உண்டான போய்ச்சேருமிடம் என்பதைவிட, அவை மாம்சத்தின் ஆடம்பரமான ஆசைகளை தேடுவதிலிருந்து எழும் ஏக்கங்களாகும். இதற்கிடையில், மனிதனுக்காக தேவன் எதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார் என்றால், மனிதன் தூய்மைப்படுத்தப்பட்டவுடன் அவனுக்குக் கிடைக்க வேண்டிய, உலகைச் சிருஷ்டித்தபின் தேவன் மனிதனுக்காக ஆயத்தம் செய்த ஆசீர்வாதங்களும் வாக்குத்தத்தங்களுமாகும், மற்றும் இவை மனிதனின் விருப்பங்கள், எண்ணங்கள், கற்பனைகள் அல்லது மாம்சத்தால் கறைபடாதவை. போய்ச்சேரும் இந்த இடம் ஒரு குறிப்பிட்ட நபருக்காக ஆயத்தம் செய்யப்படவில்லை, ஆனால் இது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்குமான இடமாகும். எனவே, போய்ச்சேரும் இந்த இடம் மனிதகுலத்திற்கு மிகவும் பொருத்தமான இடமாகும்.
சிருஷ்டிகர் சிருஷ்டித்த அனைத்து ஜீவராசிகளுக்கும் திட்டமிட விரும்புகிறார். அவர் செய்யும் எதையும் நீ நிராகரிக்கவோ அல்லது கீழ்ப்படியாமல் இருக்கவோ கூடாது, அல்லது நீ அவருக்கு எதிராகக் கலகம் செய்யவும் கூடாது. அவர் செய்யும் கிரியை இறுதியில் அவருடைய நோக்கங்களை அடையும்போது, இதில் அவர் மகிமையைப் பெறுவார். இன்று, நீ மோவாபின் சந்ததி என்றோ, அல்லது சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததி என்றோ ஏன் கூறப்படவில்லை? தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களைப் பற்றி ஏன் பேசவில்லை, சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசிகளைப் பற்றி மட்டுமே ஏன் பேசப்படுகிறது? சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசி—இதுதான் மனிதனின் உண்மையான பெயர், அவனது உள்ளார்ந்த அடையாளமாக இருப்பது இதுவே. கிரியையின் காலம் மற்றும் காலகட்டங்கள் மாறுபடுவதால் மட்டுமே பெயர்கள் மாறுபடுகின்றன; உண்மையில், மனிதன் ஓர் இயல்பான ஜீவராசி. எல்லா ஜீவராசிகளும், அவை மிகவும் சீர்கெட்டவையாக இருந்தாலும், மிகப் புனிதமானவையாக இருந்தாலும், ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசியின் கடமையைச் செய்ய வேண்டும். தேவன் ஜெயங்கொள்ளும் கிரியையைச் செய்யும்போது, உனது திசை, விதி அல்லது போய்ச்சேருமிடத்தைப் பயன்படுத்தி அவர் உன்னைக் கட்டுப்படுத்த மாட்டார். உண்மையில் இந்த வகையில் அவர் கிரியை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஜெயங்கொள்ளும் கிரியையின் நோக்கம், ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசியின் கடமையை மனிதன் செய்ய வைப்பதும், சிருஷ்டிகரை அவன் தொழுது கொள்வதும் ஆகும்; இதற்குப் பிறகுதான் அவன் போய்ச்சேர வேண்டிய அற்புதமான இடத்திற்குள் பிரவேசிக்க முடியும். மனிதனின் தலைவிதி தேவனின் கைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. உன்னைக் கட்டுப்படுத்த உன்னாலேயே இயலாது. மனிதன் எப்போதுமே தன் சார்பாக விரைந்து வந்து தன்னை மும்முரமாகப் பயன்படுத்தினாலும், அவனால் தன்னைக் கட்டுப்படுத்த இயலாது. நீ உன் சொந்த வாய்ப்புகளை அறிந்து கொள்ள முடிந்தால், உன் சொந்த விதியை உன்னால் கட்டுப்படுத்த முடிந்தால், நீ அப்போதும் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசியாக இருப்பாயா? சுருக்கமாகக் கூறுவதென்றால், தேவன் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவருடைய எல்லாக் கிரியைகளும் மனிதனுக்காகவே செய்யப்படுகின்றன. உதாரணமாக, வானங்களையும் பூமியையும் மற்றும் மனிதனுக்குச் சேவை செய்யத் தேவன் சிருஷ்டித்த எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்: மனிதனுக்காக அவர் உருவாக்கிய சந்திரன், சூரியன் மற்றும் நட்சத்திரங்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள், வசந்த காலம், கோடைக் காலம், இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலம், மற்றும் இது போன்றவை எல்லாம் மனிதனின் ஜீவிதத்துக்காகவே உருவாக்கப்படுகின்றன. ஆகவே, தேவன் மனிதனை எவ்வாறு சிட்சிக்கிறார், நியாயந்தீர்க்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், இவை அனைத்தும் மனிதனின் இரட்சிப்பின் பொருட்டுதான் இருக்கின்றன. மனிதனை அவனது மாம்ச நம்பிக்கையிலிருந்து அவர் நீக்கினாலும், அது மனிதனைச் சுத்திகரிப்பதற்காகவே, மனிதனின் சுத்திகரிப்பு அவன் உயிர்வாழ்வதற்காகவே செய்யப்படுகிறது. மனிதன் யோய்ச்சேருமிடம் சிருஷ்டிகரின் கைகளில் உள்ளது, எனவே மனிதன் எப்படித் தன்னைத் தானே கட்டுப்படுத்த முடியும்?
ஜெயங்கொள்ளும் கிரியையை முடித்ததும், மனிதன் ஓர் அழகான உலகத்திற்குக் கொண்டு வரப்படுவான். இந்த ஜீவிதம் அப்போதும் நிச்சயமாகப் பூமியில்தான் இருக்கும், ஆனால் அது இன்றைய மனிதனின் ஜீவிதத்தைப்போலல்லாமல் இருக்கும். மனிதகுலம் முழுவதையும் ஜெயங்கொண்ட பின்னர் மனிதகுலத்தின் ஜீவிதம் இதுதான், இது பூமியில் மனிதனுக்கு ஒரு புதிய தொடக்கமாக இருக்கும், மேலும் மனிதகுலத்திற்கு இதுபோன்ற ஒரு ஜீவிதம் இருப்பது மனிதகுலம் ஒரு புதிய மற்றும் அழகான உலகில் நுழைந்துள்ளது என்பதற்குச் சான்றாக இருக்கும். இது பூமியிலுள்ள மனிதன் மற்றும் தேவனின் ஜீவிதத்தின் தொடக்கமாக இருக்கும். அத்தகைய அழகான ஜீவிதத்தின் முன்மாதிரி என்னவென்றால், மனிதன் சுத்திகரிக்கப்பட்டு ஜெயங்கொள்ளப்பட்ட பிறகு, அவன் சிருஷ்டிகருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிறான். ஆகவே, மனிதகுலம் போய்ச்சேர வேண்டிய அற்புதமான இடத்திற்குள் நுழைவதற்கு முன்பு, தேவனின் கிரியையின் கடைசிக் கட்டமே ஜெயங்கொள்ளும் கிரியையாகும். அத்தகைய ஜீவிதம் என்பது பூமியில் மனிதனின் எதிர்கால ஜீவிதமாகவும், பூமியில் மிக அழகான ஜீவிதமாகவும், மனிதன் ஏங்குகிற ஜீவிதமாகவும், உலக வரலாற்றில் மனிதன் இதற்கு முன் அடையாத ஒரு வகை ஜீவிதமாகவும் இருக்கிறது. இது 6,000 ஆண்டுக்கால நிர்வாகக் கிரியையின் இறுதிப் பலனாகும்; மனிதகுலம் இதற்குத்தான் வெகுவாக ஏங்குகிறது, மேலும் இது மனிதனுக்கு தேவன் அளித்த வாக்குத்தத்தமும் ஆகும். ஆனால் இந்த வாக்குத்தத்தம் உடனடியாக நிறைவேறாது: கடைசிக் காலத்தின் கிரியைகள் முடிந்ததும், மனிதன் முற்றிலுமாக ஜெயங்கொள்ளப்பட்டதும், அதாவது சாத்தான் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னரே மனிதன் எதிர்காலத்தில் போய்ச்சேருமிடத்திற்குள் நுழைவான். மனிதன் சுத்திகரிக்கப்பட்ட பிறகு, அவன் பாவ இயல்பு இல்லாதவனாக இருப்பான், ஏனென்றால் தேவன் சாத்தானைத் தோற்கடித்திருப்பார், அதாவது விரோத சக்திகளால் எந்தவிதமான ஆக்கிரமிப்பும் இருக்காது, மனிதனின் மாம்சத்தைத் தாக்கக்கூடிய விரோத சக்திகள் எதுவும் இருக்காது. ஆகவே மனிதன் சுதந்திரமாகவும் பரிசுத்தமாகவும் இருப்பான்—அவன் நித்தியத்திற்குள் நுழைந்திருப்பான். அந்தகாரத்தின் வலிமைமிக்க விரோத சக்திகள் அடிமைத்தனத்தில் வைத்திருந்தால் மட்டுமே, மனிதன் எங்குச் சென்றாலும் சுதந்திரமாக இருப்பான், ஆகவே அவன் கிளர்ச்சியோ எதிர்ப்போ செய்யாமல் இருப்பான். சாத்தான் அடிமைத்தனத்தில் இருக்க வேண்டும், இதனால் மனிதனிடத்தில் அனைத்தும் நன்றாக இருக்கும்; தற்போதைய நிலைமை நிலவுவது ஏனென்றால் பூமியில் எல்லா இடங்களிலும் சாத்தான் இன்னமும் பிரச்சினையைத் தூண்டுகிறான், மேலும் தேவனின் நிர்வாகத்தின் முழு கிரியையும் அதன் முடிவை இன்னும் எட்டவில்லை. சாத்தான் தோற்கடிக்கப்பட்டவுடன், மனிதன் முற்றிலுமாக விடுவிக்கப்படுவான்; சாத்தானின் ஆதிக்கத்தில் இருந்து வெளியே வந்து மனிதன் தேவனைப் பெற்றதும், அவன் நீதியின் சூரியனைக் காண்பான். இயல்பான மனிதனுக்கு உரிய ஜீவிதம் மீண்டும் பெறப்படும்; தீமையிலிருந்து நன்மையை அறிந்துகொள்ளும் திறன், எப்படி சாப்பிட வேண்டும் மற்றும் ஆடை அணிய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது, இயல்பாக வாழக்கூடிய திறன் போன்ற இயல்பான மனிதனுக்கு இருக்க வேண்டியவை அனைத்தும் மீண்டும் பெறப்படும். ஏவாள் சர்ப்பத்தால் பரீட்சிக்கப்படாவிட்டால், ஆரம்பத்தில் சிருஷ்டிக்கப்பட்ட பிறகு மனிதன் இந்த மாதிரியான இயல்பான ஜீவிதத்தைப் பெற்றிருக்க வேண்டும். அவன் சாப்பிட்டு, ஆடை அணிந்து, பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தை நடத்தியிருக்க வேண்டும். மனிதன் சீரழிவு நிலைக்கு வந்தபின், இந்த ஜீவிதம் அடைய முடியாத மாயையாக மாறியது, இன்றும் கூட மனிதன் அத்தகைய விஷயங்களைக் கற்பனை செய்யத் துணியவில்லை. உண்மையில், மனிதன் ஏங்குகிற இந்த அழகான ஜீவிதம் ஓர் அவசியத் தேவையாகும். மனிதன் அத்தகைய போய்ச்சேருமிடம் இல்லாமல் இருந்திருந்தால், பூமியில் அவனது சீரழிந்த ஜீவிதம் ஒருபோதும் முடிவடையாது, இவ்வளவு அழகான ஜீவிதம் இல்லாதிருந்தால், சாத்தானின் தலைவிதிக்கு அல்லது பூமியின் மீது சாத்தான் அதிகாரம் வைத்திருக்கும் காலத்துக்கு எந்த முடிவும் இருக்காது. மனிதன் அந்தகாரத்தின் வலிமை கொண்ட சக்திகளால் எட்ட முடியாத ஓர் உலகிற்குள் வர வேண்டும், அவன் அவ்வாறு செய்யும்போது, சாத்தான் தோற்கடிக்கப்பட்டான் என்பதை இது நிரூபிக்கும். இந்த வகையில், சாத்தானால் எந்த இடையூறும் ஏற்படாத நிலையில், தேவனே மனிதகுலத்தைக் கட்டுப்படுத்துவார், மேலும் அவர் மனிதனின் முழு ஜீவிதத்தையும் கட்டளையிடுவார், கட்டுப்படுத்துவார்; அப்போதுதான் சாத்தான் உண்மையிலேயே தோற்கடிக்கப்படுவான். இன்று மனிதனின் ஜீவிதம் பெரும்பாலும் அசுத்தமான ஜீவிதம்; அது இன்னும் கஷ்டமான மற்றும் துன்பப்பட்ட ஜீவிதம்தான். இதைச் சாத்தானின் தோல்வி என்று சொல்ல முடியாது; மனிதன் இன்னமும் துன்பக் கடலிலிருந்து தப்பவில்லை, இன்னும் மனிதனின் வாழ்க்கையின் கஷ்டத்திலிருந்து, அல்லது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தப்பவில்லை, ஆனால் இன்னும் அவனுக்கு தேவனைப் பற்றிய சிறிதளவு அறிவுகூட இல்லை. மனிதனின் கஷ்டங்கள் அனைத்தும் சாத்தானால் உருவாக்கப்பட்டவை; மனிதனின் வாழ்க்கையில் துன்பத்தைக் கொண்டுவந்தது சாத்தான்தான், மேலும் சாத்தான் அடிமைத்தனத்தில் வைக்கப்பட்ட பின்னரே மனிதனால் துன்பக் கடலில் இருந்து பரிபூரணமாகத் தப்பிக்க முடியும். ஆயினும், மனிதனின் இதயத்தை ஜெயிப்பதன் மூலமும், அதனை ஆதாயப்படுத்துவதன் மூலமும் சாத்தானுடனான போரில் வென்றெடுக்கப்பட்டவனாக மனிதனை ஆக்குவதன் மூலமும், சாத்தானின் அடிமைத்தனம் அடையப்படுகிறது.
இன்று, பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தை அடைவதற்கு முன்பு, ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவது மற்றும் பரிபூரணமாக்கப்படுவது ஆகியவையே மனிதன் பின்பற்ற வேண்டியவை, சாத்தான் அடிமைப்படுத்தி வைக்கப்படுவதற்கு முன்பு அவைதான் அவன் பெறவிரும்பும் நோக்கங்களாகும். அடிப்படையாகவே, ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவது மற்றும் பரிபூரணமாக்கப்படுவது அல்லது பெரிய அளவில் பயன்படுத்தப்படுவது இவற்றை மனிதன் பின்பற்றுவது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தப்பிப்பதற்கானது: மனிதனின் பின்பற்றல் ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவதற்கானது, ஆனால் இறுதிப் பயன் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தப்பிப்பதாக இருக்கும். சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தப்பிப்பதன் மூலம் மட்டுமே மனிதன் பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தை, தேவனைத் தொழுது கொள்ளும் ஜீவிதத்தை ஜீவிக்க முடியும். இன்று, ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுதல் மற்றும் பரிபூரணமாக்கப்படுதல் ஆகியவற்றை மனிதன் பின்பற்றுவது, பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தைப் பெறுவதற்கு முன்னர் பின்பற்றப்படும் விஷயமாகும். அவை சுத்திகரிக்கப்படுவது, சத்தியத்தைக் கடைப்பிடிப்பது மற்றும் சிருஷ்டிகரைத் தொழுது கொள்வது ஆகியவற்றுக்காகவே முதன்மையாகப் பின்பற்றப்படுகின்றன. பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தை, கஷ்டமோ உபத்திரவமோ இல்லாத ஒரு ஜீவிதத்தை மனிதன் கொண்டிருந்தால், மனிதன் ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவதற்கான பின்பற்றுதலில் ஈடுபட மாட்டான். “ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவது” மற்றும் “பரிபூரணமாக்கப்படுதல்” ஆகியவை மனிதன் பின்பற்றுவதற்குத் தேவன் கொடுக்கும் நோக்கங்களாகும், மேலும் இந்த நோக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் மனிதன் சத்தியத்தை நடைமுறையாக்கும்படியும் ஓர் அர்த்தமுள்ள ஜீவிதத்தை வாழும்படியும் அவர் செய்கிறார். மனிதனை முழுமையடையச் செய்வதும், அவனை ஆதாயப்படுத்திக் கொள்வதும் இதன் நோக்கமாகும், மேலும் ஒரு ஜெயங்கொண்டவனாக மாறுவது, பரிபூரணமாக்கப்படுவது இவற்றைப் பின்பற்றுவது அதற்கான ஒரு வழிமுறை மட்டுமேயாகும். எதிர்காலத்தில், மனிதன் அற்புதமான சென்றடையும் இடத்திற்குள் பிரவேசித்தால், ஒரு ஜெயங்கொண்டவனாக மாறியதற்கும் பரிபூரணமாக்கப்பட்டதற்கும் எந்தக் குறிப்பும் இருக்காது; தங்கள் கடமையைச் செய்யும் ஒவ்வொரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன் மட்டுமே இருக்கும். இன்று, மனிதன் வெறுமனே தனக்கான ஒரு நோக்கத்தை வரையறுக்கும் பொருட்டு இவற்றைப் பின்பற்றுமாறு செய்யப்பட்டுள்ளான், இதனால் மனிதனின் பின்பற்றுதல் அதிக இலக்கு மற்றும் நடைமுறை கொண்டதாக இருக்கும். இல்லையெனில், மனிதன் தெளிவற்ற புலனாகாதவற்றுக்கு மத்தியில் வாழ்வான், மேலும் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பதை நாடுவான், இது அப்படியானால், மனிதன் இன்னும் அதிகமாக பரிதாபத்துக்கு உரியவன் ஆகமாட்டானா? குறிக்கோள்களோ கொள்கைகளோ இல்லாமல் இந்த வகையில் பின்பற்றுவது—இது தன்னைத்தானே ஏமாற்றுவது அல்லவா? இறுதியில், இந்தப் பின்பற்றல் இயற்கையாகவே பயனற்றதாக இருக்கும்; முடிவில், மனிதன் இன்னும் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்வான், அதிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள அவனால் இயலாது. இத்தகைய நோக்கமற்ற பின்பற்றலுக்கு அவனை ஏன் உட்படுத்த வேண்டும்? மனிதன் நித்தியமான சென்றடையும் இடத்துக்குள் பிரவேசிக்கும்போது, சிருஷ்டிகரைத் தொழுது கொள்வான், மனிதன் இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டு நித்தியத்திற்குள் பிரவேசித்துள்ள காரணத்தால், மனிதன் எந்த நோக்கத்தையும் பின்பற்ற மாட்டான், அல்லது சாத்தானால் முற்றுகையிடப்படுவதைப் பற்றி அவன் கவலைப்பட மாட்டான். இந்த நேரத்தில், மனிதன் தனது இடத்தை அறிந்துகொள்வான், மேலும் தன் கடமையைச் செய்வான், அவர்கள் சிட்சிக்கப்படாவிட்டாலும் அல்லது நியாயந்தீர்க்கப்படாவிட்டாலும் கூட, ஒவ்வொரு நபரும் தங்கள் கடமையைச் செய்வார்கள். அந்த நேரத்தில், மனிதன் அடையாளம் மற்றும் அந்தஸ்து இவை இரண்டிலும் ஒரு ஜீவனாக இருப்பான். உயர்வு மற்றும் தாழ்வு என்ற வேறுபாடு இனி இருக்காது; ஒவ்வொரு நபரும் ஒரு வித்தியாசமான செயல்பாட்டைச் செய்வார்கள். ஆயினும்கூட மனிதன் ஒழுங்காகவும் மனிதகுலத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும் ஒரு சென்றடையும் இடத்தில் வாழ்வான்; சிருஷ்டிகரைத் தொழுது கொள்வதற்காக மனிதன் தன் கடமையைச் செய்வான், மேலும் இந்த மனுக்குலமே நித்திய மனுக்குலமாக மாறும். அந்த நேரத்தில், மனிதன் தேவனால் வெளிச்சம் பெற்ற ஒரு ஜீவிதம், தேவனின் கவனிப்பிலும் பாதுகாப்பிலும் உள்ள ஒரு ஜீவிதம், தேவனுடன் இணைந்த ஒரு ஜீவிதத்தை ஆதாயப்படுத்தியிருப்பான். மனுக்குலம் பூமியில் ஒரு இயல்பான ஜீவிதத்தை நடத்தும், மேலும் அனைத்து மக்களும் சரியான பாதையில் பிரவேசிப்பார்கள். 6,000 ஆண்டுக்கால நிர்வாகத் திட்டம் சாத்தானை முற்றிலுமாகத் தோற்கடித்திருக்கும், அதாவது மனிதன் சிருஷ்டிக்கப்பட்டபோது இருந்த அசலான சாயலைத் தேவன் மீட்டிருப்பார், அப்படி ஆகியிருந்தால் தேவனின் உண்மையான நோக்கம் நிறைவேறியிருக்கும். ஆரம்பத்தில், மனுக்குலம் சாத்தானால் சீர்கெட்டுப்போவதற்கு முன்பு, மனுக்குலம் பூமியில் ஓர் இயல்பான ஜீவிதத்தை நடத்தியது. பின்னர், மனிதன் சாத்தானால் சீர்கெட்டுப்போனபோது, மனிதன் இந்த இயல்பான ஜீவிதத்தை இழந்தான், அதனால் தேவனின் நிர்வாகக் கிரியையும், மனிதனின் இயல்பான ஜீவிதத்தை மீட்கச் சாத்தானுடனான யுத்தமும் தொடங்கியது. தேவனுடைய 6,000 ஆண்டுகால நிர்வாகக் கிரியைகள் முடிவுக்கு வரும்போதுதான், மனுக்குலத்தின் ஜீவிதம் அதிகாரப்பூர்வமாக பூமியில் தொடங்கும்; அதன்பிறகுதான் மனிதனுக்கு ஓர் அற்புதமான ஜீவிதம் கிடைக்கும், ஆரம்பத்தில் மனிதனை சிருஷ்டிப்பதில் தேவன் கொண்டிருந்த தனது நோக்கத்தையும், மனிதனின் அசல் சாயலையும் மீட்டெடுப்பார். ஆகவே, பூமியில் மனிதகுலத்தின் இயல்பான ஜீவிதம் மனிதனுக்கு கிடைத்தவுடன், மனிதன் ஜெயங்கொண்டவனாகவோ அல்லது பரிபூரணமாக்கப்பட்டவனாகவோ இருப்பதை பின்பற்ற மாட்டான், ஏனென்றால் மனிதன் பரிசுத்தவானாக இருப்பான். மக்கள் பேசும் “ஜெயங்கொண்டவர்கள்” மற்றும் “பரிபூரணமாக்கப்பட்டவர்கள்” என்பது தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான யுத்தத்தின் போது மனிதன் பின்பற்றுவதற்கானவை, மேலும் அவை மனிதன் சீர்கேட்டுப்போனதால் மட்டுமே இருக்கின்றன. உனக்கு ஒரு நோக்கத்தைக் கொடுத்து, உன்னை இந்த நோக்கத்தைப் பின்பற்றச் செய்வதன் மூலம், சாத்தான் தோற்கடிக்கப்படுவான். நீ சாட்சியம் அளித்து சாத்தானை அவமானப்படுத்த, உன்னை ஒரு ஜெயங்கொண்டவன் அல்லது பரிபூரணமாக்கப்பட வேண்டியவன் அல்லது பயன்படுத்தப்பட வேண்டியவனாக இருக்கும்படி கேட்பது தேவைப்படுகிறது. இறுதியில், மனிதன் பூமியில் இயல்பான மனித ஜீவிதத்தை நடத்துவான், மனிதன் பரிசுத்தவானாக இருப்பான்; இது நிகழும்போது, மக்கள் இன்னும் ஜெயங்கொண்டவர்களாக மாற முற்படுவார்களா? அவர்கள் அனைவரும் சிருஷ்டிப்பின் ஜீவன்கள் அல்லவா? ஒரு ஜெயங்கொண்டவன் மற்றும் ஒரு பரிபூரணமாக்கப்பட்டவன் என்று பேசுகையில், இந்த வார்த்தைகள் சாத்தானையும், மனிதனின் இழிநிலையையும் குறிக்கின்றன. “ஜெயங்கொண்டவன்” என்ற இந்த வார்த்தை சாத்தானுக்கும் விரோதச் சக்திகளுக்கும் எதிராக ஜெயங்கொள்ளப்படுவதைக் குறிக்கவில்லையா? நீ பரிபூரணப்படுத்தப்பட்டாய் என்று நீ கூறும்போது, உனக்குள் உள்ள எந்தவொன்று பரிபூரணப்படுத்தப்பட்டது? உன் சீர்கெட்ட சாத்தானிய மனப்பான்மையிலிருந்து நீயே விலகிவிட்டாய், இதனால் நீ தேவனுடைய மிக உயர்ந்த அன்பை அடைய முடியும் என்பதுதான், இல்லையா? இதுபோன்ற விஷயங்கள் மனிதனுக்குள் இருக்கும் இழிவான விஷயங்கள் தொடர்பாக மற்றும் சாத்தான் தொடர்பானவற்றுடன் கூறப்படுகின்றன; அவை தேவன் தொடர்பாகப் பேசப்படவில்லை.
நீ இப்போது ஒரு ஜெயங்கொண்டவனாக மாறி இப்போது பரிபூரணமாக்கப்படுவதை பின்தொடரவில்லையென்றால், பின்னர் எதிர்காலத்தில், மனுக்குலம் பூமியில் ஒரு இயல்பான ஜீவிதத்தை நடத்தும்போது, அத்தகைய பின்பற்றுதலுக்கு எந்த வாய்ப்பும் இருக்காது. அந்த நேரத்தில், ஒவ்வொரு வகையான நபரின் முடிவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அந்த நேரத்தில், நீ எந்த வகையான நபர் என்பது தெளிவாகத் தெரியும், மேலும் நீ ஒரு ஜெயங்கொண்டவனாக இருக்க விரும்பினால் அல்லது பரிபூரணமாக்கப்பட விரும்பினால், அது சாத்தியமற்றதாக இருக்கும். அவனது கீழ்ப்படியாமையின் காரணமாக, மனிதன் வெளிப்படுத்தப்பட்ட பின்னர் தண்டிக்கப்படுவான் என்பது மட்டுமே அப்போது இருக்கும். அந்த நேரத்தில், மனிதன் பின்பற்றுவது மற்றவர்களை விட உயர்ந்த நிலையில் இருக்காது, சிலர் ஜெயங்கொண்டவர்களாகவும், மற்றவர்கள் பரிபூரணமாக்கப்பட்டவர்களாகவும் இருப்பார்கள், அல்லது சிலர் தேவனின் முதற்பேறான குமாரர்களாகவும், மற்றவர்கள் தேவனின் குமாரர்களாகவும் இருப்பார்கள்; அவர்கள் இவற்றைப் பின்பற்ற மாட்டார்கள். அனைவரும் தேவனின் சிருஷ்டிகளாக இருப்பார்கள், அனைவரும் பூமியில் வாழ்வார்கள், அனைவரும் பூமியில் தேவனோடு சேர்ந்து வாழ்வார்கள். இப்போது தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான யுத்தத்தின் நேரம், இந்த யுத்தம் இன்னும் முடிவடையாத காலம், மனிதன் இன்னும் முழுமையாக ஆதாயப்படுத்தப்படாத காலம்; இது மாற்றம்பெறும் காலம். ஆகவே, மனிதன் ஒரு ஜெயங்கொண்டவனாகவோ அல்லது தேவனுடைய மக்களில் ஒருவராகவோ ஆவதைப் பின்பற்ற வேண்டும். இன்று அந்தஸ்தில் வேறுபாடுகள் உள்ளன, ஆனால் நேரம் வரும்போது அத்தகைய வேறுபாடுகள் இருக்காது: ஜெயம் பெற்ற அனைவரின் அந்தஸ்தும் ஒரே மாதிரியாக இருக்கும், அவர்கள் அனைவரும் மனிதகுலத்தின் தகுதிவாய்ந்த உறுப்பினர்களாக இருப்பார்கள், பூமியில் சமமாக வாழ்வார்கள், அதாவது அவர்கள் அனைவரும் தகுதிவாய்ந்த சிருஷ்டிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள், மேலும் அதுவே அனைவருக்கும் தரப்படும். ஏனென்றால், தேவனின் கிரியையின் காலங்கள் வேறுபட்டவை, அவருடைய கிரியையின் நோக்கங்கள் வேறுபட்டவை, இந்தக் கிரியை உங்களிடத்தில் செய்யப்பட்டால், நீங்கள் பரிபூரணமாக்கப்பட்டு, ஜெயங்கொண்டவராக மாறத் தகுதி பெறுவீர்கள்; இது வேறு தேசங்களில் செய்யப்பட்டால், அங்குள்ள மக்கள் ஜெயங்கொள்ளப்படுவதற்கான முதல் குழுவினராகவும், பரிபூரணப்படுத்தப்படும் முதல் குழுவினராகவும் இருப்பார்கள். இன்று, இந்தக் கிரியை வேறு தேசங்களில் செய்யப்படவில்லை, எனவே மற்ற தேசங்களின் மக்கள் பரிபூரணமாக்கப்படுவதற்கும், ஜெயங்கொண்டவராவதற்கும் தகுதி பெறாதவர்கள், மேலும் அவர்கள் முதல் குழுவாக மாறுவது சாத்தியமில்லை. தேவனின் கிரியையின் நோக்கம் வேறுபட்டது, தேவனின் கிரியையின் காலம் வேறுபட்டது, அதன் எல்லை வேறுபட்டது என்பதால், முதல் குழு அங்கே உள்ளது, அதாவது, அங்கே ஜெயங்கொண்டவர்கள் இருக்கிறார்கள், அதேபோல் பரிபூரணமாக்கப்படும் இரண்டாவது குழுவும்கூட அங்கே இருக்கும். பரிபூரணமாக்கப்பட்ட முதல் குழு அங்கே இருக்கும்போது, ஒரு உருமாதிரி மற்றும் முன்மாதிரி இருக்கும், எனவே எதிர்காலத்தில் பரிபூரணமாக்கப்பட்டவர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது குழு இருக்கும், ஆனால் நித்தியத்தில் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பார்கள், மேலும் அந்தஸ்தின் வகைப்பாடுகள் இருக்காது. அவர்கள் வெறுமனே வெவ்வேறு காலங்களில் பரிபூரணமாக்கப்பட்டிருப்பார்கள், மேலும் அந்தஸ்தில் வேறுபாடுகள் இருக்காது. எல்லோரும் பரிபூரணமாக்கப்பட்டு, முழு பிரபஞ்சத்தின் கிரியையும் முடிவடைந்த நேரம் வரும்போது, அந்தஸ்தில் வேறுபாடுகள் இருக்காது, அனைவருக்கும் சம அந்தஸ்து இருக்கும். இன்று, இந்தக் கிரியை உங்களிடையே செய்யப்படுகிறது, இதனால் நீங்கள் ஜெயங்கொண்டவர்களாக மாறுவீர்கள். இது பிரிட்டனில் செய்யப்பட்டிருந்தால், பிரிட்டன் முதல் குழுவைக் கொண்டிருக்கும், அதே வழியில் நீங்கள் முதல் குழு ஆவீர்கள். இன்று வெறுமனே உங்களிடத்தில் கிரியைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் விதத்தில் நீங்கள் குறிப்பாகக் கிருபையால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள், இந்தக் கிரியை உங்களிடத்தில் செய்யப்படவில்லை என்றால், நீங்கள் இரண்டாவது குழுவாக, அல்லது மூன்றாவது, அல்லது நான்காவது, அல்லது ஐந்தாவது குழுவாக இருப்பீர்கள். இதற்கு வெறுமனே கிரியையின் வரிசையில் உள்ள வேறுபாடு மட்டுமே காரணமாகும்; முதல் குழுவும் இரண்டாவது குழுவும் ஒன்று மற்றொன்றை விட உயர்ந்தது அல்லது குறைவாக இருப்பதைக் குறிக்கவில்லை, இது இந்த நபர்கள் பரிபூரணமாக்கப்படுவதற்கான வரிசையைக் குறிக்கிறது. இன்று இந்த வார்த்தைகள் உங்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றன, ஆனால் இவை ஏன் உங்களுக்கு முன்பே தெரிவிக்கப்படவில்லை? ஏனெனில், ஒரு செயல்முறை இல்லாமல், மக்கள் உச்சத்தை நோக்கிச் செல்ல எத்தனிக்கிறார்கள். உதாரணமாக, இயேசு தம் காலத்தில் சொன்னார்: “நான் எப்படிப் புறப்பட்டேனோ, அதேபோல நான் வருவேன்.” இன்று, பலர் இந்த வார்த்தைகளில் மனதைப் பறிகொடுத்திருக்கிறார்கள், மேலும் அவர்கள் வெள்ளை அங்கிகளை மட்டுமே அணிந்து, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்வதற்காகக் காத்திருக்கிறார்கள். இதனால், மிக முன்கூட்டியே பேச முடியாத பல சொற்கள் உள்ளன; அவை மிக முன்கூட்டியே பேசப்பட்டிருந்தால், மனிதன் உச்சத்தை நோக்கிச் செல்ல முற்பட்டிருப்பான். மனிதனின் வளர்ச்சி மிகச் சிறியது, மேலும் அவனால் இந்த வார்த்தைகளைக் குறித்த உண்மையைப் பார்க்க இயலாது.
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?