மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல் (பகுதி இரண்டு)
மனிதன் பூமியில் மனிதனின் உண்மையான ஜீவிதத்தை அடையும்போது, சாத்தானின் முழுச் சக்திகளும் அடிமைப்படுத்தி வைக்கப்படும்போது, மனிதன் பூமியில் எளிதாக வாழ்வான். இன்று இருப்பதுபோல விஷயங்கள் சிக்கலானதாக இருக்காது: மனித உறவுகள், சமூக உறவுகள், சிக்கலான குடும்ப உறவுகள்—அவை மிகுந்த சிரமங்களையும், மிகுந்த வேதனையையும் தருகின்றன! இங்கே மனிதனின் ஜீவிதம் மிகவும் பரிதாபகரமானது! மனிதன் ஜெயங்கொள்ளப்பட்டதும், அவனது இருதயமும் மனமும் மாறும்: தேவன் மீது பயபக்தியாயிருந்து, அவரை நேசிக்கும் இருதயம் அவனுக்கு இருக்கும். தேவனை நேசிக்க முற்படும் பிரபஞ்சத்திற்குள் உள்ள அனைவருமே ஜெயங்கொள்ளப்பட்டதும், அதாவது சாத்தான் தோற்கடிக்கப்பட்டதும், சாத்தானின் சகல அந்தகார வல்லமைகளும் அடிமைப்படுத்தி வைக்கப்பட்டதும், பூமியில் மனிதனின் ஜீவிதம் தொந்தரவு இல்லாததாக இருக்கும், அவனால் பூமியில் சுதந்திரமாக வாழ முடியும். மனிதனின் ஜீவிதம் மாம்ச உறவுகள் மற்றும் மாம்சத்தின் சிக்கல்கள் இல்லாததாக இருந்திருந்தால், அது மிகவும் எளிதாக இருக்கும். மனிதனின் மாம்ச உறவுகள் மிகவும் சிக்கலானவை, மனிதனுக்கு இதுபோன்ற விஷயங்கள் இருப்பது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தன்னை இன்னும் அவன் விடுவிக்கவில்லை என்பதற்குச் சான்றாகும். உனது ஒவ்வொரு சகோதர சகோதரிகளுடனும் நீ ஒரே உறவைக் கொண்டிருந்தால், உன் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருடனும் ஒரே உறவைக் கொண்டிருந்தால், உனக்கு எந்தக் கவலையும் இருக்காது, யாரையும் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இவை எதுவும் சிறப்பாக இருக்க முடியாது எனும்போது, இந்த வழியில் மனிதன் தனது துன்பத்தில் பாதியிலிருந்து விடுபடுவான். பூமியில் ஓர் இயல்பான மனித ஜீவிதத்தை வாழ்ந்தால், மனிதன் தேவதூதர்களை ஒத்து இருப்பான்; அவன் இன்னும் மாம்சமாக இருந்தாலும், அவன் ஒரு தேவதூதரைப் போலவே இருப்பான். இது இறுதி வாக்குத்தத்தம், மனிதனுக்கு வழங்கப்பட்ட கடைசி வாக்குத்தத்தம். இன்று மனிதன் சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவிக்கிறான்; இதுபோன்ற விஷயங்களை மனிதன் அனுபவிப்பது அர்த்தமற்றது என்று நீ நினைக்கிறாயா? சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியையை எந்தக் காரணமும் இல்லாமல் செய்ய முடியுமா? முன்னதாக மனிதனை சிட்சிப்பதும் நியாயத்தீர்ப்பளிப்பதும் அவனைப் பாதாளக்குழிக்குள் வைப்பதற்காகச் சொல்லப்பட்டது, அதாவது அவனது தலைவிதியையும் வாய்ப்புகளையும் பறிப்பது என்பது இதன் அர்த்தம். இது ஒரு விஷயத்திற்கானது: அது மனிதனின் சுத்திகரிப்பு. மனிதன் வேண்டுமென்றே பாதாளக்குழியில் வைக்கப்பட்டு, அதன்பிறகு தேவன் அவனைக் கை கழுவி விடுவதில்லை. மாறாக, அது மனிதனுக்குள் இருக்கும் கலகத்தனத்தைக் கையாள்வதற்கானது, இதனால் இறுதியில் மனிதனுக்குள் இருக்கும் விஷயங்கள் சுத்திகரிக்கப்படலாம், இதனால் அவன் தேவனைப் பற்றிய உண்மையான அறிவைப் பெறலாம், மேலும் அவன் ஒரு பரிசுத்தமான மனிதனைப் போல ஆகலாம். இது செய்யப்பட்டால், பின்னர் அனைத்தும் நிறைவேற்றப்படும். உண்மையில், மனிதனுக்குள் கையாளப்பட வேண்டிய விஷயங்கள் கையாளப்படும்போது, மனிதன் உறுதியான சாட்சியமளிக்கும் போது, சாத்தானும்கூட தோற்கடிக்கப்படுவான், மேலும் முற்றிலும் சுத்திகரிக்கப்படாத, மனிதனுக்குள் அசலாக இருக்கக் கூடிய சில விஷயங்கள் மனிதனுக்குள் இருந்தாலும் கூட, சாத்தான் தோற்கடிக்கப்பட்டதும் அதன்பின்னர் பிரச்சினையை ஏற்படுத்தாது, மேலும் அந்த நேரத்தில் மனிதன் முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டிருப்பான். மனிதன் அத்தகைய ஜீவிதத்தை ஒருபோதும் அனுபவித்து உணர்ந்ததில்லை, ஆனால் சாத்தான் தோற்கடிக்கப்பட்டதும், அனைத்தும் தீர்ந்துவிடும், மனிதனுக்குள் இருக்கும் அற்பமான விஷயங்கள் அனைத்தும் தீர்க்கப்படும், அந்த முக்கிய பிரச்சினை தீர்க்கப்பட்டவுடன், மற்ற எல்லாக் கஷ்டங்களும் முடிவுக்கு வரும். பூமியில் தேவன் மனித உருவம் எடுத்த இந்தச் சமயத்தில், அவர் மனிதர்களிடையே தனிப்பட்ட முறையில் தனது கிரியையைச் செய்யும்போது, அவர் செய்யும் எல்லாக் கிரியைகளும் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே செய்யப்படுகின்றன, மேலும் மனிதன் ஜெயங்கொள்ளப்படுவதன் மூலமும், உங்களை முழுமையாக்குவதன் மூலமும் அவர் சாத்தானைத் தோற்கடிப்பார். நீங்கள் உறுதியான சாட்சியங்களை அளிக்கும்போது, இதுவும் சாத்தானின் தோல்வியின் அடையாளமாக இருக்கும். மனிதன் முதலில் ஜெயங்கொள்ளப்படுகிறான், சாத்தானைத் தோற்கடிப்பதற்காக இறுதியில் முழுமையாக பரிபூரணமாக்கப்படுகிறான். சாராம்சத்தில், எவ்வாறாயினும், சாத்தானின் தோல்வியுடன் சேர்ந்து, உபத்திரவங்கள் நிறைந்த இந்த வெற்றுக் கடலிலிருந்து எல்லா மனிதர்களுக்கும் இது இரட்சிப்பாகும். கிரியை மேற்கொள்ளப்படுவது பிரபஞ்சம் முழுவதிலுமா அல்லது சீனாவிலா என்பதைப் பொருட்டாகக் கொள்ளாமல், சாத்தானைத் தோற்கடித்து, மனுக்குலம் முழுவதிலும் இரட்சிப்பைக் கொண்டுவருவதற்கு எல்லாம் வரிசையாக உள்ளன, இதனால் மனிதன் இளைப்பாறுதலான இடத்திற்குள் பிரவேசிக்க முடியும். மனித உருவான தேவன், இந்த இயல்பான மாம்சம், துல்லியமாகச் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே ஆகும். வானத்தின் கீழே உள்ள தேவனை நேசிக்கும் அனைவருக்கும் இரட்சிப்பைக் கொண்டுவருவதற்கு மாம்சத்தில் தேவனின் கிரியை பயன்படுத்தப்படுகிறது, இது எல்லா மனிதர்களையும் ஜெயங்கொள்ளும் பொருட்டாகும், மேலும், சாத்தானைத் தோற்கடிப்பதற்கானதாகும். எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பைக் கொடுப்பதற்கான தேவனின் அனைத்து நிர்வாகக் கிரியைகளின் உட்பொருளானது, சாத்தானின் தோல்வியிலிருந்து பிரிக்க முடியாதது. ஏன், இந்தக் கிரியையின் பெரும்பகுதிகளில், நீங்கள் சாட்சியம் அளிப்பது பற்றி எப்போதும் பேசப்படுகிறது? இந்த சாட்சியம் யாரை நோக்கி இயக்கப்படுகிறது? இது சாத்தானை நோக்கியதல்லவா? இந்தச் சாட்சியம் தேவனுக்குச் செய்யப்படுகிறது, மேலும் தேவனின் கிரியை அதன் பயனை அடைந்துள்ளது என்பதற்கான சாட்சியமளிக்கப்படுகிறது. சாட்சியம் அளிப்பது சாத்தானைத் தோற்கடிக்கும் கிரியையுடன் தொடர்பு கொண்டது; சாத்தானுடன் ஒரு யுத்தம் இல்லாவிட்டால், மனிதன் சாட்சியம் அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், மனிதனை இரட்சிக்கும் அதே நேரத்தில், சாத்தான் தோற்கடிக்கப்பட வேண்டும், சாத்தானுக்கு முன்பாக மனிதன் சாட்சியம் அளிக்க வேண்டும் என்று தேவன் கோருகிறார், அது மனிதனை இரட்சிக்கவும் சாத்தானுடன் யுத்தம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, மனிதன் இரட்சிக்கப்படும் பொருள் மற்றும் சாத்தானைத் தோற்கடிப்பதற்கான ஒரு கருவி என இரண்டுமாகிறான், ஆகவே மனிதன் தேவனின் முழு நிர்வாகக் கிரியையின் உட்பொருளாக இருக்கிறான், அதே சமயம் சாத்தான் வெறுமனே அழிவின் பொருள், மற்றும் எதிரியாக இருக்கிறான். நீ எதுவும் செய்யவில்லை என்று நீ உணரலாம், ஆனால் உனது மனநிலையின் மாற்றங்கள் காரணமாக, சாட்சியம் அளிக்கப்படுகிறது, மேலும் இந்தச் சாட்சியம் சாத்தானை நோக்கிச் செய்யப்படுகிறது, அது மனிதனுக்குச் செய்யப்படவில்லை. அத்தகைய சாட்சியத்தை அனுபவிக்க மனிதன் தகுதியற்றவன். தேவன் செய்த கிரியையை அவன் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? தேவனுடைய யுத்தத்தின் நோக்கம் சாத்தான்; இதற்கிடையில், மனிதன் இரட்சிப்பின் பொருள் மட்டுமேயாவான். மனிதனிடம் சீர்கெட்ட சாத்தானின் மனப்பான்மை உள்ளது, மேலும் இந்தக் கிரியையைப் புரிந்துகொள்ள இயலாதவனாக இருக்கிறான். இதன் காரணம் சாத்தான் ஏற்படுத்தும் சீர்கேடு ஆகும், அது மனிதனுக்கு இயல்பானது அல்ல, ஆனால் அது சாத்தானால் இயக்கப்படுகிறது. இன்று, தேவனின் முக்கிய கிரியை சாத்தானைத் தோற்கடிப்பது, அதாவது மனிதனை முற்றிலுமாக ஜெயங்கொள்ளுவது, இதனால் மனிதன் சாத்தானுக்கு முன்பாக தேவனுக்கு இறுதி சாட்சியம் அளிக்க முடியும். இந்த வகையில், எல்லா விஷயங்களும் நிறைவேற்றப்படும். பல சந்தர்ப்பங்களில், உனது வெறுங்கண்ணுக்கு எதுவும் செய்யப்படவில்லை என்பதுபோல தோன்றுகிறது, ஆனால் உண்மையில், கிரியை ஏற்கெனவே முடிக்கப்பட்டுவிட்டது. முடிக்கப்பட்டு விட்ட அனைத்துக் கிரியைகளும் கண்ணுக்குப் புலப்பட வேண்டும் என்று மனிதன் கோருகிறான், ஆனாலும் உன் கண்ணுக்குத் தெரியாமலேயே நான் என் கிரியையை முடித்துவிட்டேன், ஏனென்றால் சாத்தான் சரண் அடைந்துவிட்டான், அதாவது அவன் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டு விட்டான், தேவனின் ஞானம், சக்தி மற்றும் அதிகாரம் அத்தனையும் சாத்தானை வென்று விட்டது. துல்லியமாக, இதுவே சொல்லப்பட வேண்டிய சாட்சியம், அதற்கு மனிதனிடம் தெளிவான வெளிப்பாடு இல்லை என்றாலும், அது வெறுங்கண்ணுக்குப் புலப்படவில்லை என்றாலும், சாத்தான் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்டு விட்டான். இந்தக் கிரியை முழுதும் சாத்தானுக்கு எதிராக இயக்கப்பட்டு சாத்தானுடனான யுத்தம் காரணமாக மேற்கொள்ளப்படுகிறது. எனவே, வெற்றி பெற்றதாக மனிதன் பார்க்காத பல விஷயங்கள் உள்ளன, ஆனால் அவை தேவனின் பார்வையில் வெற்றிகரமாக நீண்ட காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டன. தேவனின் எல்லா கிரியைகளைப் பற்றிய உள்ளார்ந்த சத்தியங்களில் இது ஒன்றாகும்.
சாத்தான் தோற்கடிக்கப்பட்டவுடன், அதாவது, மனிதன் முற்றிலுமாக ஜெயங்கொள்ளப்பட்டவுடன், இந்தக் கிரியை அனைத்தும் இரட்சிப்பின் பொருட்டுதான் என்பதை மனிதன் புரிந்துகொள்வான், மேலும் இந்த இரட்சிப்பின் வழிமுறையானது சாத்தானின் கைகளிலிருந்து மக்களைக் கைப்பற்றுவதாகும். தேவனின் 6,000 ஆண்டுக்கால நிர்வாகக் கிரியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: நியாயப்பிரமாணத்தின் காலம், கிருபையின் காலம் மற்றும் ராஜ்யத்தின் காலம். இந்த மூன்று கட்ட கிரியைகள் அனைத்தும் மனுக்குலத்தின் இரட்சிப்பின் பொருட்டு, அதாவது சாத்தானால் கடுமையாகச் சீர்கெட்டுவிட்ட மனுக்குலத்தின் இரட்சிப்புக்காகவேயாகும். ஆயினும், அதே சமயம், அவை மேலும் தேவன் சாத்தானுடன் யுத்தம் செய்வதற்குமானவையாகும். இவ்வாறு, இரட்சிப்பின் கிரியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்படுவது போல, சாத்தானுடனான யுத்தமும் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் தேவனுடைய கிரியையின் இந்த இரண்டு அம்சங்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன. சாத்தானுடனான போர் உண்மையில் மனுக்குலத்தின் இரட்சிப்பின் பொருட்டானது ஆகும், மனுக்குலத்தின் இரட்சிப்பின் கிரியை ஒரே கட்டத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படக்கூடிய ஒன்றல்ல என்பதால், சாத்தானுடனான யுத்தமும் கட்டங்கள் மற்றும் காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் மனிதனின் தேவைகளுக்கேற்பவும், சாத்தான் அவனுக்குச் செய்துள்ள சீர்கேட்டின் அளவுக்கு ஏற்பவும் யுத்தம் நடத்தப்படுகிறது. ஒருவேளை, மனிதனின் கற்பனையில், இரண்டு படைகளும் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதுபோல், இந்த யுத்தத்தில் தேவன் சாத்தானுக்கு எதிராக ஆயுதங்களை எடுப்பார் என்று அவன் நம்புகிறான். மனிதனின் அறிவாற்றல் இப்படித்தான் கற்பனை செய்யும் திறன் கொண்டது; இது அதீதத் தெளிவற்ற மற்றும் நம்பத்தகாத யோசனை, ஆனாலும் மனிதன் இதைத்தான் நம்புகிறான். மனிதனுடைய இரட்சிப்பின் வழி சாத்தானுடனான யுத்தத்தின் மூலம் என்று நான் இங்கே சொல்வதால், யுத்தம் இப்படித்தான் நடத்தப்படுகிறது என்று மனிதன் கற்பனை செய்கிறான். மனிதனுடைய இரட்சிப்பின் கிரியைக்கு மூன்று கட்டங்கள் உள்ளன, அதாவது சாத்தானை முழுவதுமாக தோற்கடிப்பதற்காகச் சாத்தானுடனான யுத்தம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சாத்தானுடனான யுத்தத்தின் முழு கிரியையின் உள்ளார்ந்த சத்தியம் என்னவென்றால், அதன் விளைவுகள் பல படிநிலைகளிலான கிரியை மூலம் அடையப்படுகின்றன: அவை மனிதனுக்குக் கிருபையை கொடுப்பது, மனிதனின் பாவநிவாரணபலியாக மாறுதல், மனிதனின் பாவங்களை மன்னித்தல், மனிதனை ஜெயிப்பது, மனிதனைப் பரிபூரணமாக்குவது. உண்மையில், சாத்தானுடனான யுத்தம் என்பது சாத்தானுக்கு எதிராக ஆயுதங்களை எடுப்பது அல்ல, மாறாக மனிதனின் இரட்சிப்பு, மனிதனின் ஜீவிதம் பற்றிய கிரியை, தேவனுக்குச் சாட்சியம் அளிக்கும்படி மனிதனின் மனநிலையை மாற்றுவது ஆகியவையாகும். இப்படித்தான் சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான். மனிதனின் சீர்கெட்ட மனநிலையை மாற்றுவதன் மூலம் சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான். சாத்தான் தோற்கடிக்கப்பட்டிருக்கும்போது, அதாவது மனிதன் முற்றிலுமாக இரட்சிக்கப்பட்டிருக்கும்போது, பின்னர் அவமானப்படுத்தப்பட்ட சாத்தான் முற்றிலுமாக கட்டப்படுவான், இந்த வழியில் மனிதன் பரிபூரணமாக இரட்சிக்கப்பட்டிருப்பான். இவ்வாறு, மனிதனின் இரட்சிப்பின் சாராம்சமானது சாத்தானுக்கு எதிரான யுத்தமாகும், இந்த யுத்தம் முதன்மையாக மனிதனின் இரட்சிப்பில் பிரதிபலிக்கிறது. மனிதனை ஜெயங்கொள்ளும் கடைசி நாட்களின் கட்டம், சாத்தானுடனான யுத்தத்தின் கடைசிக் கட்டமாகும், மேலும் இது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் முழுமையான இரட்சிப்பின் கிரியையாகும். மனிதன் ஜெயங்கொள்ளப்படுவதன் உள்ளார்ந்த அர்த்தம், அவன் ஜெயங்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, சாத்தானின் பண்புருவத்தை—சாத்தானால் சீர்கெட்ட மனிதனை—சிருஷ்டிகரிடம் திருப்பித் தருவதேயாகும், இதன் மூலம் அவன் சாத்தானைக் கைவிட்டு முழுமையாக தேவனிடம் திரும்புவான். இந்த வழியில், மனிதன் முழுமையாக இரட்சிக்கப்பட்டிருப்பான். எனவே, ஜெயங்கொள்ளும் கிரியை என்பது சாத்தானுக்கு எதிரான யுத்தத்தின் கடைசிக் கிரியை மற்றும் சாத்தானின் தோல்வியின் பொருட்டு தேவனின் நிர்வாகத்தின் இறுதிக் கட்டமாகும். இந்தக் கிரியை இல்லாமல், மனிதனின் முழு இரட்சிப்பும் இறுதியில் சாத்தியமற்றதாகும், சாத்தானின் முழுதளவான தோல்வியும்கூட சாத்தியமற்றதாகும், மனுக்குலம் ஒருபோதும் அற்புதமான சென்றடையும் இடத்துக்குள் பிரவேசிக்க முடியாது, அல்லது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாது. இதன் விளைவாக, சாத்தானுடனான யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் மனிதனின் இரட்சிப்பின் கிரியையை முடிக்க முடியாது, ஏனென்றால் தேவனின் நிர்வாகக் கிரியையின் உட்கருத்து மனுக்குலத்தின் இரட்சிப்புக்கானதாகும். ஆரம்பக்கால மனுக்குலம் தேவனின் கைகளில் இருந்தது, ஆனால் சாத்தானின் சோதனை மற்றும் சீர்கேட்டின் காரணமாக, மனிதன் சாத்தானால் கட்டப்பட்டு தீயவனின் கைகளில் விழுந்தான். இவ்வாறு, சாத்தான், தேவனின் நிர்வாகக் கிரியையில் தோற்கடிக்கப்பட வேண்டிய பொருளாக ஆனான். ஏனென்றால், சாத்தான் மனிதனைத் தன்னிடம் எடுத்துக்கொண்டான், மனிதன் எல்லா நிர்வாகத்தையும் நிறைவேற்ற தேவன் பயன்படுத்தும் மூலதனம் என்பதால், மனிதன் இரட்சிக்கப்பட வேண்டுமென்றால், அவன் சாத்தானின் கைகளிலிருந்து பறிக்கப்பட வேண்டும், அதாவது சாத்தானால் சிறைபிடித்து வைக்கப்பட்ட பின்னர் மனிதன் மீட்டெடுக்கப்பட வேண்டும். ஆகவே, மனிதனின் பழைய மனநிலையின் மாற்றங்கள், மனிதனின் அசலான ஆராயும் உணர்வை மீட்டெடுக்கும் மாற்றங்கள் மூலம் சாத்தானைத் தோற்கடிக்க வேண்டும். இந்த வழியில், சிறைபிடிக்கப்பட்ட மனிதனைச் சாத்தானின் கைகளிலிருந்து மீண்டும் பறிக்க முடியும். மனிதன் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டால், சாத்தான் வெட்கப்படுவான், மனிதன் இறுதியில் திரும்பப் பெறப்படுவான், சாத்தான் தோற்கடிக்கப்படுவான். மனிதன் சாத்தானின் அந்தகார ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதால், மனிதன் இந்த முழு யுத்தத்திலும் கொள்ளைப் பொருளாக மாறுவான், யுத்தம் முடிந்தவுடன் தண்டிக்கப்பட வேண்டிய பொருளாகச் சாத்தான் மாறுவான், அதன் பிறகு மனிதகுலத்தின் இரட்சிப்பின் முழுக்கிரியையும் முடிந்துவிடும்.
சிருஷ்டிக்கப்பட்டவர்களுக்கு தேவன் எந்தத் தீங்கும் செய்ய மாட்டார்; அவர் சாத்தானைத் தோற்கடிக்க மட்டுமே விரும்புகிறார். அவருடைய எல்லா கிரியைகளும்—அது சிட்சையாக இருந்தாலும், நியாயத்தீர்ப்பாக இருந்தாலும்—அது சாத்தானை நோக்கியது; அது மனிதகுலத்தின் இரட்சிப்பின் பொருட்டு மேற்கொள்ளப்படுகிறது, அது சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே ஆனது, அது ஒரு குறிக்கோளைக் கொண்டுள்ளது: சாத்தானுக்கு எதிராக இறுதிவரை யுத்தம் செய்வது! சாத்தானை வென்றெடுக்கும் வரை தேவன் ஒருபோதும் ஓய மாட்டார்! அவர் சாத்தானைத் தோற்கடித்தவுடன் மட்டுமே ஓய்வார். ஏனென்றால், தேவன் செய்த எல்லாக் கிரியைகளும் சாத்தானை நோக்கியவையாகும், மேலும் சாத்தானால் சீர்கெட்டவர்கள் அனைவரும் சாத்தானின் ஆதிக்கத்தில் இருப்பதாலும், அனைவரும் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்வதாலும், சாத்தானுக்கு எதிராகப் போராடாமல், அவனுடன் முறித்துக் கொள்ளாமல், சாத்தான் இந்த மக்கள் மீது உள்ள அவனது பிடியைத் தளர்த்த மாட்டான், மேலும் அவர்களை ஆதாயப்படுத்த முடியாது. அவர்களை ஆதாயப்படுத்தாவிட்டால், சாத்தான் தோற்கடிக்கப்படவில்லை, அவன் முறியடிக்கப்படவில்லை என்பதை அது நிரூபிக்கும். எனவே, தேவனின் 6,000 ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தில், முதல் கட்டத்தில் அவர் நியாயப்பிரமாணத்தின் கிரியையைச் செய்தார், இரண்டாவது கட்டத்தில் அவர் கிருபையின் காலக் கிரியையைச் செய்தார், அதாவது சிலுவையில் அறையப்படும் கிரியை மற்றும் மூன்றாம் கட்டத்தில் மனிதகுலத்தை ஜெயங்கொள்ளும் கிரியையை அவர் செய்கிறார். இந்தக் கிரியைகள் அனைத்தும் சாத்தான் மனிதகுலத்தை எந்த அளவுக்கு சீர்கேடாக்கியிருக்கிறானோ அந்த அளவுக்கு அவனை நோக்கியிருக்கும், இது எல்லாமே சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே, மற்றும் ஒவ்வொரு கட்டமும் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே ஆனதாகும். தேவனுடைய 6,000 ஆண்டுகால நிர்வாகக் கிரியையின் சாராம்சமானது சிவப்பான பெரிய வலுசர்ப்பத்துக்கு எதிரான யுத்தமாகும், மனிதகுலத்தை நிர்வகிக்கும் கிரியையும் சாத்தானைத் தோற்கடிக்கும் கிரியையாகும், அது சாத்தானுடன் யுத்தம் செய்யும் கிரியை. தேவன் 6,000 ஆண்டுகளாக யுத்தம் செய்தார், இப்படியாக இறுதியில் மனிதனை புதிய உலகத்திற்குக் கொண்டு வர அவர் 6,000 ஆண்டுகளாகக் கிரியை செய்துள்ளார். சாத்தான் தோற்கடிக்கப்படும்போது, மனிதன் முற்றிலும் விடுவிக்கப்படுவான். இது இன்று தேவனின் கிரியையின் வழிகாட்டுதல் அல்லவா? துல்லியமாக இதுதான் இன்றைய கிரியையின் வழிகாட்டுதலாகும்: மனிதனின் முழுமையான விடுதலை மேலும் மனிதனை விடுவிப்பது, இதனால் அவன் எந்த விதிகளுக்கும் உட்படாமல் இருக்க அல்லது எந்த கட்டுகளாலும் அல்லது கட்டுப்பாடுகளாலும் மட்டுப்படுத்தப்படாமல் இருக்க முடியும். இந்தக் கிரியைகள் அனைத்தும் உங்கள் வளர்ச்சிக்கு ஏற்பவும், உங்கள் தேவைகளுக்கு ஏற்பவும் செய்யப்படுகின்றன, அதாவது நீங்கள் நிறைவேற்றக் கூடியது எதுவோ அது உங்களுக்கு வழங்கப்படுகிறது. உங்கள் மீது எதையும் திணிப்பதற்கான “வாத்தைக் கூண்டுக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளுவது” அல்ல; மாறாக, இந்தக் கிரியைகள் அனைத்தும் உங்கள் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு கட்ட கிரியையும் மனிதனின் உண்மையான தேவைகளுக்கும் வேண்டப்படுவனவற்றுக்கும் ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது; ஒவ்வொரு கட்ட கிரியையும் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே ஆனது. உண்மையில், ஆரம்பத்தில் சிருஷ்டிகருக்கும் அவருடைய சிருஷ்டிப்புகளுக்கும் இடையில் எந்தத் தடைகளும் இல்லை. இந்தத் தடைகள் அனைத்தும் சாத்தானால் ஏற்பட்டவை. மனிதனைச் சாத்தான் எவ்வாறு தொந்தரவு செய்தான், சீர்கேடாக்கினான் என்பதன் காரணமாக அவனால் எதையும் பார்க்கவோ தொடவோ முடியவில்லை. மனிதன் பாதிக்கப்பட்டவன், அவன் ஏமாற்றப்பட்ட ஒருவன். சாத்தான் தோற்கடிக்கப்பட்டவுடன், சிருஷ்டிக்கப்பட்டவர்கள் சிருஷ்டிகரைப் பார்ப்பார்கள், சிருஷ்டிகர் சிருஷ்டித்தவர்களைப் பார்க்கவும் தனிப்பட்ட முறையில் அவர்களை வழிநடத்தவும் முடியும். பூமியில் மனிதன் கொள்ள வேண்டிய ஜீவிதம் இது மட்டுமேயாகும். எனவே, தேவனின் கிரியை முதன்மையாகச் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவே ஆனது, சாத்தான் தோற்கடிக்கப்பட்டவுடன், அனைத்தும் தீர்க்கப்பட்டுவிடும். இன்று, தேவன் மனிதர்கள் மத்தியில் வருவது எளிதான விஷயமல்ல என்பதை நீ பார்த்திருக்கிறாய். ஒவ்வொரு நாளும் உங்களிடம் தவறு கண்டுபிடிப்பதற்கும், இது, அது என்று சொல்வதற்கும், அல்லது அவர் எப்படி இருக்கிறார் என்பதையும், அவர் எப்படிப் பேசுகிறார், வாழ்கிறார் என்பதையும் பார்ப்பதற்கு உங்களை அனுமதிக்க அவர் வரவில்லை. அவரை நீங்கள் பார்க்க அனுமதிக்கவோ அல்லது உங்கள் கண்களைத் திறக்கவோ, அல்லது அவர் பேசிய புரியாத மறைபொருட்களை கேட்பதற்கும், அவர் திறந்த ஏழு முத்திரைகளுக்காகவும் தேவன் மாம்சமாக மாறவில்லை. மாறாக, சாத்தானைத் தோற்கடிக்க அவர் மாம்சமாக மாறினார். மனிதனை இரட்சிப்பதற்கும் சாத்தானுடன் யுத்தம் செய்வதற்கும் அவர் மாம்சமாக மனிதர்களிடையே தனிப்பட்ட முறையில் வந்துள்ளார்; இதுதான் அவரது மனித உருவெடுத்ததன் முக்கியத்துவம். சாத்தானைத் தோற்கடிப்பதற்காக அல்ல என்றால், அவர் தனிப்பட்ட முறையில் இந்தக் கிரியையைச் செய்ய மாட்டார். மனிதர்களிடையே தம்முடைய கிரியையைச் செய்வதற்கும், மனிதனுக்குத் தனிப்பட்ட முறையில் தன்னை வெளிப்படுத்துவதற்கும், மனிதன் தன்னைப் பார்ப்பதற்கு அனுமதிப்பதற்கும் தேவன் பூமிக்கு வந்துள்ளார்; இது ஒரு சிறிய விஷயமா? இது உண்மையில் அவ்வளவு எளிதல்ல! இது மனிதன் கற்பனை செய்வது போல அல்ல: தேவன் வந்துவிட்டார், அதனால் மனிதன் அவரைப் பார்க்கலாம், இதனால் தேவன் இருப்பது உண்மை, அது தெளிவற்ற அல்லது வெற்றுத்தனமான விஷயம் அல்ல என்பதையும், தேவன் உயர்ந்தவர், ஆனாலும் தாழ்மையுள்ளவர் என்பதையும் மனிதன் புரிந்துகொள்ள முடியும். அது அவ்வளவு எளிதாக இருக்க முடியுமா? இது துல்லியமாக, சாத்தான் மனிதனின் மாம்சத்தை சீர்கேடு அடையச் செய்ததால், மற்றும் மனிதனை தேவன் இரட்சிக்க விரும்புவதால், சாத்தானுடன் யுத்தம் செய்வதற்கும் மனிதனைத் தனிப்பட்ட முறையில் மேய்ப்பதற்கும் தேவன் மாம்ச உருவத்தைப் பெறவேண்டும் என்பதாகும். இது மட்டுமே அவருடைய கிரியைக்கு நன்மை பயக்கும். தேவனின் இரண்டு மனித உருவம் எடுத்த மாம்சங்கள் சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவும், மனிதனைச் சிறப்பாக இரட்சிப்பதற்காகவும் இருந்தன. இது ஏனென்றால், தேவனின் ஆவியானவராக இருந்தாலும் சரி, தேவனின் மனித உருவ மாம்சமாக இருந்தாலும் சரி, சாத்தானுடன் யுத்தம் செய்யும் ஒருவர் தேவனாக மட்டுமே இருக்க முடியும். சுருக்கமாகச் சொன்னால், சாத்தானுடன் யுத்தம் செய்கிறவர்கள் தேவதூதர்களாக இருக்க முடியாது, அப்படி இருக்கும்போது, அதனைக் காட்டிலும் குறைவாக, அது சாத்தானால் சீர்கேடடைந்த மனிதனாக இருக்க முடியாது. இந்த யுத்தத்தில் சண்டையிட தேவதூதர்கள் சக்தியற்றவர்கள், மனிதன் அதைக்காட்டிலும் பலமற்றவன். எனவே, மனிதனின் ஜீவித காலத்துக்கான கிரியையைச் செய்யத் தேவன் விரும்பினால், மனிதனை இரட்சிக்க அவர் தனிப்பட்ட முறையில் பூமிக்கு வர விரும்பினால், அவர் தனிப்பட்ட முறையில் மாம்சமாக மாற வேண்டும்—அதாவது, அவர் தனிப்பட்ட முறையில் மாம்ச உருவத்தைப் பெறவேண்டும், மேலும் அவரது உள்ளார்ந்த அடையாளம் மற்றும் அவர் செய்ய வேண்டிய கிரியையுடன் அவர் தனிப்பட்ட முறையில் மனிதனை இரட்சிக்க மனிதர் மத்தியில் வருகிறார். இல்லையென்றால், இந்தக் கிரியையைச் செய்தது தேவனுடைய ஆவியானவர் அல்லது மனிதன் என்றால், இந்த யுத்தத்தில் எதுவும் முடிவுக்கு வரப்போவதில்லை, மேலும் அது ஒருபோதும் முடிவடையாது. மனிதர்களிடையே உள்ள சாத்தானுக்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் யுத்தத்துக்குச் செல்ல தேவன் மாம்சமாக மாறும்போதுதான் மனிதனுக்கு இரட்சிப்பின் வாய்ப்பு கிடைக்கும். மேலும், அப்போதுதான் சாத்தானை வெட்கமடையச் செய்து, அபகரிப்பதற்கான வாய்ப்புகள் அல்லது செயல்படுத்த எந்தத் திட்டமும் இல்லாமல் போகுமாறு செய்ய முடியும். மனுவுருவான தேவனால் செய்யப்படும் கிரியை தேவனுடைய ஆவியானவரால் செய்ய முடியாதது, மேலும் எந்த மாம்ச மனிதனும் தேவனின் சார்பாக அதைச் செய்வது இன்னும் சாத்தியமற்றது, ஏனென்றால் அவர் செய்யும் கிரியை மனிதனின் ஜீவிதம் நிமித்தமானது, மற்றும் மனிதனின் சீர்கெட்ட மனநிலையை மாற்றுவதற்கானது. இந்த யுத்தத்தில் மனிதன் பங்கேற்க வேண்டுமென்றால், அவன் மோசமாகக் குழப்பமடைந்து தப்பி ஓடுவான், மேலும் அவனது சீர்கெட்ட மனநிலையை வெறுமனே அவனால் மாற்ற இயலாது. மனிதனைச் சிலுவையிலிருந்து காப்பாற்றவோ, அல்லது கலகக்கார மனுக்குலம் அனைத்தையும் ஜெயங்கொள்ளவோ அவனால் இயலாது, ஆனால் கொள்கைகளுக்கு அப்பால் செல்ல இயலாத ஒரு சிறிய பழைய காரியத்தை, இல்லையெனில் சாத்தானின் தோல்விக்கு தொடர்பில்லாத காரியத்தை மட்டுமே செய்ய முடியும். அதனால் ஏன் கவலைப்படவேண்டும்? சாத்தானைத் தோற்கடிக்க முடியாதது, அதைக்காட்டிலும் குறைவாக, மனிதகுலத்தைக்கூட ஆதாயப்படுத்த முடியாத இந்தக் காரியத்தில் என்ன முக்கியத்துவம் இருக்கும்? எனவே, சாத்தானுடனான யுத்தத்தை தேவனால் தாமே மேற்கொள்ள முடியும், மனிதன் அதைச் செய்வது என்பது கொஞ்சமும் சாத்தியமில்லாதது. மனிதனின் கடமை கீழ்ப்படிதல் மற்றும் பின்பற்றுவதுதான், ஏனென்றால் வானத்தையும் பூமியையும் உருவாக்குவதற்கு ஒத்த கிரியையை மனிதனால் செய்ய முடியாது, மேலும், சாத்தானுடன் போரிடும் கிரியையையும் அவனால் செய்ய முடியாது. தேவன் தாமே அவரது தலைமையின் கீழ் மனிதன் சிருஷ்டிகரை திருப்திப்படுத்த மட்டுமே முடியும், இதன் மூலம் மட்டுமே சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான்; மனிதனால் செய்யக்கூடிய ஒரே விஷயம் இதுதான். எனவே, ஒரு புதிய யுத்தம் தொடங்கும் ஒவ்வொரு முறையும், அதாவது, புதிய காலத்தின் கிரியை தொடங்கும் ஒவ்வொரு முறையும், இந்தக் கிரியை தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்படுகிறது, இதன் மூலம் அவர் அனைத்து யுகங்களையும் வழிநடத்தி, மனுக்குலம் முழுமைக்கும் புதிய பாதையைத் திறக்கிறார். ஒவ்வொரு புதிய காலத்தின் விடியலும் சாத்தானுடனான யுத்தத்தில் ஒரு புதிய தொடக்கமாகும், இதன் மூலம் மனிதன் ஒரு புதிய, அழகான உலகிற்குள், மற்றும் தேவனால் தாமே தனிப்பட்ட முறையில் வழிநடத்தப்படும் ஒரு புதிய காலத்திற்குள் பிரவேசிக்கிறான். எல்லாவற்றிற்கும் மனிதன் எஜமானன், ஆனால் ஆதாயமாக்கப்பட்டவர்கள் சாத்தானுடனான எல்லா யுத்தங்களிலும் விளை பலன்களாக மாறுவார்கள். சாத்தான் எல்லாவற்றையும் சீர்கேடு ஆக்குபவன், அவன் எல்லா யுத்தங்களின் முடிவிலும் தோற்கடிக்கப்படுபவன், மேலும் இந்த யுத்தங்களைத் தொடர்ந்து தண்டிக்கப்படும் ஒருவன். தேவன், மனிதன் மற்றும் சாத்தான் இவர்களில், சாத்தான் மட்டுமே வெறுக்கப்படுவான் மேலும் நிராகரிக்கப்படுவான். சாத்தானால் ஆதாயப்படுத்தப்பட்டவர்கள், ஆனால் தேவனால் திரும்ப மீட்கப்படாதவர்கள், இதற்கிடையில், சாத்தானின் சார்பாகத் தண்டனையைப் பெறுவார்கள். இந்த மூவரில், தேவனை மட்டுமே எல்லோரும் தொழுது கொள்ள வேண்டும். சாத்தானால் சீர்கேடு ஆக்கப்பட்டவர்கள், ஆனால் தேவனால் மீட்கப்பட்டவர்கள் மற்றும் தேவனின் வழியைப் பின்பற்றுபவர்கள், இதற்கிடையில், தேவனுடைய வாக்குத்தத்தத்தைப் பெற்றவர்களாகவும் தேவனுக்காகத் தீயவனை நியாயந்தீர்ப்பவர்களாகவும் மாறுகிறார்கள். தேவன் நிச்சயமாக ஜெயங்கொள்ளுவார், சாத்தான் நிச்சயமாகத் தோற்கடிக்கப்படுவான், ஆனால் மனிதர்களிடையே ஜெயம் பெறுபவர்களும் தோற்பவர்களும் இருக்கிறார்கள். ஜெயித்தவர்கள் ஜெயங்கொண்டவர்களுடன் ஒன்றிணைவார்கள், தோற்றவர்கள் தோல்வியுற்றவர்களுடன் சேர்வார்கள்; இதுதான் ஒவ்வொன்றின் தன்மைக்கேற்ப உள்ள வகைப்பாடு, இதுதான் தேவனின் எல்லாக் கிரியைகளின் இறுதி முடிவாகும். மேலும் தேவனின் எல்லா கிரியைகளின் நோக்கமும் இதுவேயாகும், மற்றும் இது ஒருபோதும் மாறாது. தேவனின் நிர்வாகத் திட்டத்தின் முக்கிய கிரியையின் உட்பொருள் மனிதனின் இரட்சிப்பின்மீது கவனம் செலுத்துகிறது, மேலும் தேவன் முதன்மையாக இந்த உட்பொருளின் பொருட்டு, இந்தக் கிரியையின் பொருட்டு மேலும் சாத்தானைத் தோற்கடிப்பதற்காக மாம்சமாக மாறுகிறார். தேவன் முதன்முதலில் மாம்சமாக மாறியதும்கூட சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவேயாகும்: அவர் தனிப்பட்ட முறையில் மாம்சமாக ஆனார், மனிதகுலத்தின் மீட்புக்கான கிரியையான முதல் யுத்தத்தின் கிரியையை முடிக்க, தனிப்பட்ட முறையில் சிலுவையில் அறையப்பட்டார். அதேபோல், இந்தக் கட்டத்தின் கிரியையும் தனிப்பட்ட முறையில் தேவனால் செய்யப்படுகிறது, அவர் மனிதர்களிடையே தனது கிரியையைச் செய்வதற்கும் அவருடைய வார்த்தையைத் தனிப்பட்ட முறையில் பேசுவதற்கும் மனிதர்கள் அவரைப் பார்க்க அனுமதிப்பதற்கும் மாம்சமாக மாறினார். நிச்சயமாக, அவர் அந்த வழியில் வேறு சில கிரியைகளையும் செய்வது தவிர்க்க முடியாதது, ஆனால் அவர் தனிப்பட்ட முறையில் தனது கிரியையைச் செய்வதற்கு முக்கிய காரணம் சாத்தானைத் தோற்கடிப்பது, மனுக்குலம் முழுவதையும் ஜெயங்கொள்வது, மேலும் இந்த மக்களை ஆதாயப்படுத்துவது ஆகியவையாகும். எனவே, தேவன் மனித உருவம் எடுத்த கிரியை உண்மையில் அவ்வளவு எளிதானது அல்ல. தேவன் தாழ்மையானவர், மறைபொருளாக உள்ளவர், தேவன் நிஜமானவர் என்பதை மனிதருக்குக் காண்பிப்பதே அவருடைய நோக்கம் என்றால், அவை இந்த கிரியையைச் செய்வதற்காக மட்டுமே என்றால், அவர் மாம்சமாக மாற வேண்டிய அவசியமில்லை. தேவன் மாம்சமாக மாறாவிட்டாலும், அவருடைய தாழ்மையையும் மறைபொருளாக இருப்பதையும், அவருடைய மகத்துவத்தையும் பரிசுத்தத்தையும் மனிதனுக்கு நேரடியாக வெளிப்படுத்த முடியும், ஆனால் இதுபோன்ற விஷயங்களுக்கும் மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவற்றால் மனிதனை இரட்சிக்கவோ அல்லது அவனை முழுமையாக்கவோ இயலாது, அப்படி இருக்கும்போது அவற்றால் சாத்தானைத் தோற்கடிக்க முடியாது என்பதைச் சொல்லத் தேவையில்லை. சாத்தானின் தோல்வியானது ஆவியானவர் ஒரு ஆவிக்கு எதிராக யுத்தம் செய்வதை மட்டுமே கொண்டிருக்குமானால், அத்தகைய கிரியை இன்னும் குறைவான நடைமுறை மதிப்பைக் கொண்டிருக்கும்; அதனால் மனிதனை ஆதாயப்படுத்த இயலாது மற்றும் அது மனிதனின் தலைவிதியையும் செல்லும் திசைகளையும் அழித்துவிடும். எனவே, இன்று தேவனின் கிரியை மிகவும் ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது. மனிதன் அவரைக் காணவேண்டும் என்பது மட்டுமல்ல, அல்லது மனிதனின் கண்கள் திறக்கப்படவேண்டும் என்பது மட்டுமல்ல, அல்லது செயல்படவும் ஊக்குவிப்பதற்கும் அவனுக்கு ஒரு சிறிய உணர்வை வழங்குவது மட்டுமல்ல; இத்தகைய கிரியைக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லை. நீ இத்தகைய அறிவை பற்றி மட்டுமே பேச முடியும் என்றால், தேவன் மனித உருவம் எடுத்ததன் உண்மையான முக்கியத்துவத்தை நீ அறியவில்லை என்பதை இது நிரூபிக்கிறது.
தேவனுடைய நிர்வாகத் திட்டத்தின் கிரியை முழுவதும் தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்படுகிறது. முதல் கட்டம்—உலகத்தைச் சிருஷ்டித்தல்—இது தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்பட்டது, அது அவ்வாறு இல்லாதிருந்தால், மனிதகுலத்தைச் சிருஷ்டிக்கும் வல்லமை வேறு யாருக்கும் இருந்திருக்காது; இரண்டாவது கட்டம் அனைத்து மனிதகுலத்தையும் மீட்பது ஆகும், இதுவும்கூட தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்பட்டது; மூன்றாவது கட்டம் பற்றிச் சொல்லாமலே அது விளங்கும்: அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வரும் தேவனின் கிரியைகள் எல்லாமும் தேவனால் தாமே செய்யப்பட வேண்டும் என்பதற்கு இன்னும் பெரிய தேவை உள்ளது. ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் மீட்பது, ஜெயங்கொள்வது, ஆதாயப்படுத்துவது, மனித குலம் முழுவதையும் பரிபூரணப்படுத்துவது ஆகிய அனைத்தும் தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்படுகின்றன. அவர் தனிப்பட்ட முறையில் இந்தக் கிரியையைச் செய்யவில்லை என்றால், அவருடைய அடையாளத்தைப் பிரதிநிதித்துவம் செய்யவோ அல்லது அவரது கிரியையை அறிந்துகொள்ளவோ மனிதனால் முடியாது. சாத்தானைத் தோற்கடிப்பதற்காக, மனிதகுலத்தை ஆதாயப்படுத்த, மனிதனுக்கு பூமியில் ஓர் இயல்பான ஜீவிதத்தைத் தருவதற்காக, அவருடைய முழு நிர்வாகத் திட்டத்துக்காகவும், அவருடைய எல்லா கிரியைகளுக்காகவும், அவர் தனிப்பட்ட முறையில் மனிதனை வழிநடத்துகிறார், தனிப்பட்ட முறையில் மனிதர்களிடையே கிரியை செய்கிறார், அவர் தனிப்பட்ட முறையில் இந்தக் கிரியையை அவசியம் செய்ய வேண்டும். மனிதன் அவரைக் காணும் படிக்கு, மனிதன் சந்தோஷப்படுவதற்காக தேவன் வந்தார் என்று மட்டுமே மனிதன் நம்பினால், அத்தகைய நம்பிக்கைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை, முக்கியத்துவமும் இல்லை. மனிதன் விளங்கிக் கொள்வது மிகவும் மேலோட்டமானது! இந்தக் கிரியையைத் தானே நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே தேவன் இந்தக் கிரியையைப் பரிபூரணமாகவும் முழுமையாகவும் செய்ய முடியும். தேவன் சார்பாக மனிதனால் அதைச் செய்ய இயலாது. தேவனின் அடையாளமோ அல்லது அவருடைய சாராம்சமோ அவனுக்கு இல்லாததால், அவனால் தேவனின் கிரியையைச் செய்ய இயலாது, மனிதன் இந்தக் கிரியையைச் செய்தாலும், அதற்கு எந்த விளைவும் இருக்காது. மீட்புக்காகவும், எல்லா மனிதர்களையும் பாவத்திலிருந்து மீட்பதற்கும், மனிதன் தூய்மைப்படுத்தப்படுவதற்கு ஏற்றவன் ஆவதற்கும், அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்படுவதற்கும் தேவன் முதன்முதலில் மாம்சமாக ஆனார். மேலும் மனிதர்களிடையே ஜெயங்கொள்ளும் கிரியையும் தேவனால் தனிப்பட்ட முறையில் செய்யப்படுகிறது. இந்தக் கட்டத்தில், தேவன் தீர்க்கதரிசனத்தை மட்டுமே பேசினால், ஒரு தீர்க்கதரிசி அல்லது அத்தகைய திறமை பெற்ற ஒருவர் அவருடைய இடத்தைப் பிடிக்க முடியும்; தீர்க்கதரிசனம் பற்றி மட்டுமே பேசப்பட்டால், மனிதன் தேவனுக்குப் பதிலீடாக இருக்க முடியும். மனிதன் தனிப்பட்ட முறையில் தேவன் தாமே செய்யும் கிரியையைச் செய்ய முயன்றால், மேலும் மனிதனின் ஜீவித காரியத்தைச் செய்ய முயன்றால், அவனால் அந்தக் கிரியையைச் செய்ய இயலாது. இது தேவனால் தாமே தனிப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டும்: இந்தக் கிரியையைச் செய்யத் தேவன் தனிப்பட்ட முறையில் மாம்சமாக மாற வேண்டும். வார்த்தையின் காலத்தில், தீர்க்கதரிசனம் மட்டுமே பேசப்பட்டால், ஏசாயா அல்லது எலியா தீர்க்கதரிசி இந்தக் கிரியையைச் செய்ய முடியும், மேலும் அதைத் தனிப்பட்ட முறையில் தேவன் தாமே செய்ய வேண்டியதில்லை. இந்தக் கட்டத்தில் செய்யப்படும் கிரியைகள் வெறுமனே தீர்க்கதரிசனத்தைப் பேசுவதல்ல, மேலும் மனிதனை ஜெயங்கொள்ளவும் சாத்தானைத் தோற்கடிக்கவும் வார்த்தைகளின் கிரியை பயன்படுத்தப்படுவது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், இந்தக் கிரியையை மனிதனால் செய்ய முடியாது, தனிப்பட்ட முறையில் தேவன் தாமே செய்ய வேண்டும். நியாயப்பிரமாணத்தின் காலத்தில் யேகோவா தம்முடைய கிரியையின் ஒரு பகுதியைச் செய்தார், அதன் பிறகு அவர் சில வார்த்தைகளைப் பேசினார், தீர்க்கதரிசிகள் மூலம் சில கிரியைகளைச் செய்தார். இது ஏனென்றால், மனிதன் யேகோவாவை அவரது கிரியையில் பதிலீடு செய்ய முடியும், மேலும் தீர்க்கதரிசிகள் விஷயங்களை முன்னறிவிக்கவும், அவர் சார்பாகச் சில கனவுகளை விளக்கவும் முடியும். ஆரம்பத்தில் செய்யப்பட்ட கிரியை மனிதனின் மனநிலையை நேரடியாக மாற்றும் கிரியை அல்ல, அது மனிதனின் பாவத்துடன் தொடர்பில்லாதது, மேலும் மனிதன் நியாயப்பிரமாணத்திற்குக் கட்டுப்பட வேண்டிய தேவை இருந்தது. ஆகவே, யேகோவா மாம்சமாகி, தன்னை மனிதனுக்கு வெளிப்படுத்தவில்லை; அதற்குப் பதிலாக அவர் மோசேயுடனும் மற்றவர்களுடனும் நேரடியாகப் பேசினார், அவர்களை அவர் சார்பாகப் பேசவும் கிரியை செய்யவும் அனுமதித்தார், மேலும் அவர்கள் நேரடியாக மனிதர்களிடையே கிரியை செய்யும்படி செய்தார். தேவனுடைய முதல் கட்டக் கிரியை மனிதனின் தலைமையாக இருந்தது. இது சாத்தானுக்கு எதிரான யுத்தத்தின் தொடக்கமாக இருந்தது, ஆனால் இந்த யுத்தம் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவில்லை. சாத்தானுக்கு எதிரான அதிகாரப்பூர்வ யுத்தம் தேவன் முதலில் மாம்ச உருவம் எடுத்தபோது தொடங்கியது, அது இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தேவன் மாம்ச உருவம் எடுத்துச் சிலுவையில் அறையப்பட்டதுதான் இந்த யுத்தத்தின் முதல் சண்டை. மனித உருவம் எடுத்த தேவன் சிலுவையில் அறையப்பட்டது சாத்தானைத் தோற்கடித்தது, அதுதான் யுத்தத்தின் முதல் வெற்றிகரமான கட்டமாகும். மனித உருவம் எடுத்த தேவன் மனிதனின் ஜீவிதத்தில் நேரடியாகக் கிரியை செய்யத் தொடங்கியபோது, அதுதான் மனிதனை மீட்டெடுக்கும் கிரியையின் அதிகாரப்பூர்வத் தொடக்கமாகும், மேலும் இது மனிதனின் பழைய மனநிலையை மாற்றும் கிரியை என்பதால், இது சாத்தானுடன் போரிடுவதற்கான கிரியை ஆகும். ஆரம்பத்தில் யேகோவா செய்த கிரியையின் கட்டமானது பூமியில் மனிதனின் ஜீவிதத்தின் தலைமைத்துவம் மட்டுமேயாகும். இது தேவனின் கிரியையின் தொடக்கமாக இருந்தது, அது இன்னும் எந்தவொரு யுத்தத்திலும் அல்லது எந்தவொரு பெரிய கிரியையிலும் ஈடுபடவில்லை என்றாலும், அது வரவிருக்கும் யுத்தத்தின் கிரியைக்கு அடித்தளத்தை அமைத்தது. பின்னர், கிருபையின் காலத்தின் இரண்டாம் கட்டக் கிரியை மனிதனின் பழைய மனநிலையை மாற்றுவதை உள்ளடக்கியது, அதாவது மனிதனின் ஜீவிதத்தை தேவன் தாமே வார்த்தெடுத்தார். இதனை தேவன் தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டியிருந்தது: இதற்கு தேவன் தனிப்பட்ட முறையில் மாம்சமாக மாற வேண்டியிருந்தது. அவர் மாம்சமாக மாறாமல் இருந்திருந்தால், இந்தக் கிரியையின் கட்டத்தில் வேறு யாரும் அவருக்குப் பதிலீடு செய்திருக்க முடியாது, ஏனென்றால் அது சாத்தானுக்கு எதிராக நேரடியாகப் போரிடும் கிரியையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. மனிதன் இந்த வேலையை தேவனின் சார்பாக செய்திருந்தால், மனிதன் சாத்தானுக்கு முன் நின்றபோது, சாத்தான் கீழ்ப்படிந்திருக்க மாட்டான், அவனைத் தோற்கடிப்பது சாத்தியம் இல்லாது போகும். அதைத் தோற்கடிக்க வந்தது மனித உருவம் எடுத்த தேவனாகத்தான் இருக்க வேண்டும், ஏனென்றால் மனித உருவம் எடுத்த தேவன் சாராம்சத்தில் இன்னும் தேவன்தான், அவர் இன்னும் மனிதனின் ஜீவிதம்தான், அவர் இன்னும் சிருஷ்டிகராகவே இருக்கிறார்; என்ன நடந்தாலும், அவருடைய அடையாளமும் சாராம்சமும் மாறாது. எனவே, அவர் மாம்ச உருவத்தை எடுத்துக்கொண்டார் மற்றும் சாத்தானின் பரிபூரணமான கீழ்ப்படிதலை ஏற்படுத்தும் கிரியையைச் செய்தார். கடைசிக் காலத்தின் கிரியையின் போது, மனிதனை இந்தக் கிரியையைச் செய்து, வார்த்தைகளை நேரடியாகப் பேசும்படி செய்திருந்தால், அவனால் அவற்றைப் பேசமுடிந்திருக்காது, தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தால், இந்தத் தீர்க்கதரிசனத்தால் மனிதனை ஜெயங்கொள்ள முடியாமல் இருந்திருக்கும். மாம்ச உருவத்தை எடுத்துக் கொள்வதன் மூலம், தேவன் சாத்தானைத் தோற்கடித்து அதன் முற்றிலுமான அடிபணிதலை ஏற்படுத்தினார். அவர் சாத்தானை முற்றிலுமாகத் தோற்கடித்து, மனிதனைப் பரிபூரணமாக ஜெயங்கொண்டு, மனிதனை முழுவதுமாக ஜெயங்கொள்ளும் போது, இந்தக் கட்டக் கிரியை முடிவடைந்து ஜெயம் கிடைக்கும். தேவனின் நிர்வாகத்தில், மனிதன் தேவனுக்கு மாற்றீடாக இருக்க முடியாது. குறிப்பாக, காலத்தை வழிநடத்துவதற்கு மற்றும் புதிய கிரியையைத் தொடங்குவதற்குத் தேவனால் தாமே தனிப்பட்ட முறையில் கிரியைகள் செய்யப்பட வேண்டிய தேவை அதிகமாக உள்ளது. மனிதனுக்கு வெளிப்பாட்டைக் கொடுப்பதும், தீர்க்கதரிசனத்தை வழங்குவதும் மனிதனால் செய்யப்படலாம், ஆனால் அது தேவனால் தனிப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டிய கிரியை என்றால், அது தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான யுத்தத்தின் கிரியை என்றால், பின்பு இந்தக் கிரியையை மனிதனால் செய்ய முடியாது. முதல் கட்டக் கிரியையின் போது, சாத்தானுடன் போர் இல்லாதபோது, தீர்க்கதரிசிகள் பேசிய தீர்க்கதரிசனத்தைப் பயன்படுத்தி யேகோவா தனிப்பட்ட முறையில் இஸ்ரவேல் மக்களை வழிநடத்தினார். பின்னர், இரண்டாம் கட்ட கிரியையானது சாத்தானுடனான யுத்தம், மற்றும் தேவன் தாமே தனிப்பட்ட முறையில் மாம்சமாகி, இந்தக் கிரியையைச் செய்ய மாம்சத்திற்குள் வந்தார். சாத்தானுக்கு எதிரான யுத்தத்தில் சம்பந்தப்பட்ட எதுவும் மனித உருவம் எடுத்த தேவனையும் உள்ளடக்கியது, அதாவது இந்த யுத்தத்தை மனிதனால் தொடங்க முடியாது. மனிதன் யுத்தம் செய்தால், அவன் சாத்தானைத் தோற்கடிக்க சக்தியில்லாதவன். அதன் ஆதிக்கத்தின்கீழ் இருக்கும்போது அதை எதிர்த்துப் போராடுவதற்கான வலிமை அவனுக்கு எப்படி இருக்க முடியும்? மனிதன் இவற்றுக்கு இடையில் இருக்கிறான்: நீ சாத்தானை நோக்கிச் சாய்ந்தால், நீ சாத்தானுக்குச் சொந்தம், ஆனால் நீ தேவனைத் திருப்திப்படுத்தினால், நீ தேவனுக்குச் சொந்தமானவன். இந்த யுத்தத்தின் கிரியையில் மனிதன் முயற்சித்து தேவனுக்கு மாற்றீடு ஆகலாமா, அவனால் முடியுமா? அவன் அவ்வாறு செய்திருந்தால், அவன் வெகு காலத்திற்கு முன்பே அழிந்து போயிருக்க மாட்டானா? அவன் நீண்ட காலத்திற்கு முன்பே பாதாள உலகுக்குள் நுழைந்திருப்பான் அல்லவா? ஆகவே, மனிதன் தேவனை அவரது கிரியையில் மாற்றீடு செய்ய முடியாது, அதாவது மனிதனுக்கு தேவனின் சாராம்சம் இல்லை, அதாவது நீ சாத்தானுடன் போரிட்டால் அதை உன்னால் தோற்கடிக்க இயலாது. மனிதனால் சில வேலைகளை மட்டுமே செய்ய முடியும்; அவன் சிலரை ஜெயிக்க முடியும், ஆனால் தேவன் தாமே செய்யும் கிரியையில் அவன் தேவனுக்கு மாற்றீடாக இருக்க முடியாது. மனிதன் எப்படிச் சாத்தானுடன் யுத்தம் செய்ய முடியும்? நீ தொடங்குவதற்கு முன்பே சாத்தான் உன்னைச் சிறைபிடிப்பான். தேவன் தாமே சாத்தானுடன் போரிடுகிறார், இந்த அடிப்படையில் மனிதன் தேவனைப் பின்பற்றிக் கீழ்ப்படிகிறான், அதனால் மனிதன் தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டு சாத்தானின் கட்டுகளிலிருந்து தப்பிக்க முடியும். மனிதன் தனது சொந்த ஞானத்தினாலும் திறன்களாலும் அடையக்கூடிய விஷயங்கள் மிகவும் குறைவு; அவனால் மனிதர்களை முழுமையாக்குவதற்கும், அவர்களை வழிநடத்துவதற்கும், மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக, சாத்தானைத் தோற்கடிப்பதற்கும் இயலாது. மனிதனின் புத்திசாலித்தனமும் ஞானமும் சாத்தானின் திட்டங்களை முறியடிக்காது, ஆகவே மனிதன் அதை எவ்வாறு எதிர்த்து யுத்தம் செய்ய முடியும்?
பரிபூரணமாக்கப்படுவதற்கு விருப்பமாக உள்ள அனைவருக்கும் பரிபூரணமாக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது, எனவே அனைவரும் இளைப்பாற வேண்டும்: எதிர்காலத்தில் நீங்கள் அனைவரும் சென்றடையும் இடத்துக்குள் பிரவேசிப்பீர்கள். ஆனால் நீ பரிபூரணமாக்கப்பட விரும்பவில்லை என்றால், அற்புதமான உலகில் நுழைய விரும்பவில்லை என்றால், அது உனது சொந்தப் பிரச்சினை. பரிபூரணமாக்கப்படுவதற்கு விருப்பமாக இருப்பவர்களும் விசுவாசமுள்ளவர்களும், தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் அனைவரும், மற்றும் தங்கள் செயல்பாட்டை உண்மையாகச் செய்கிறவர்களும்—இவர்கள் அனைவருமே பரிபூரணமாக்கப் படக்கூடியவர்கள். இன்று, விசுவாசமாகத் தங்கள் கடமையைச் செய்யாதவர்கள் அனைவரும், மற்றும் தேவனுக்கு விசுவாசமில்லாதவர்கள் அனைவரும், தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் அனைவரும், குறிப்பாகப் பரிசுத்த ஆவியானவரின் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் பெற்றவர்கள், ஆனால் அதை நடைமுறைக்குக் கொண்டு வராதவர்கள் அத்தகைய அனைவரும் பரிபூரணமாக்கப்பட முடியாதவர்கள். விசுவாசமுள்ளவர்களாகவும் தேவனுக்கு கீழ்ப்படிபவர்களாகவும் இருக்கத் தயாராக உள்ள அனைவரையும் பரிபூரணமாக்க முடியும், அவர்கள் கொஞ்சம் அறியாதவர்களாக இருந்தாலும்; இதனைப் பின்பற்றத் தயாராக உள்ள அனைவரையும் பரிபூரணமாக்க முடியும். இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. இந்தத் திசையில் நீ தொடரத் தயாராக இருக்கும் வரை, நீ பரிபூரணமாக்கப்படமுடியும். உங்களில் யாரையும் கைவிடவோ அல்லது புறம்பாக்கவோ நான் விரும்பவில்லை, ஆனால் மனிதன் நல்லவிதமாகச் செய்ய முயற்சிக்கவில்லை என்றால், பின்னர் உன்னை நீயே அழித்துக் கொள்கிறாய்; உன்னை புறம்பாக்குவது நானல்ல, நீயே உன்னை அவ்வாறு செய்கிறாய். உனக்கு நீ நல்லவிதமாகச் செய்ய முயற்சிக்கவில்லை என்றால்—நீ சோம்பேறியாக இருந்தால், அல்லது உனது கடமையைச் செய்யாவிட்டால், அல்லது விசுவாசமாக இல்லாவிட்டால், அல்லது நீ சத்தியத்தைக் கடைப்பிடிக்காவிட்டால், நீ எப்போதும் நீ விரும்பியபடி செய்வதானால், நீ பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், உன் சொந்தப் புகழுக்காகவும், செல்வத்துக்காகவும் போராடுகிறவன் என்றால், மற்றும் எதிர் பாலினத்தவர்களிடம் நடந்துகொள்ளும் முறையில் நீ நேர்மையற்றவனாக இருந்தால், நீ உனது சொந்தப் பாவங்களின் சுமையைச் சுமப்பாய்; நீ யாருடைய பரிதாபத்திற்கும் தகுதியுள்ளவன் அல்ல. நீங்கள் அனைவரும் பரிபூரணமாக்கப்பட வேண்டும் என்பதும், குறைந்தபட்சம் ஜெயங்கொள்ளப்பட வேண்டும் என்பதும் எனது நோக்கம், இதனால் இந்தக் கட்டக் கிரியை வெற்றிகரமாக முடிக்கப்படலாம். ஒவ்வொரு மனிதனும் பரிபூரணமாக்கப்பட வேண்டும், இறுதியில் அவரால் ஆதாயப்படுத்தப்பட வேண்டும், அவரால் பரிபூரணமாகச் சுத்திகரிக்கப்பட வேண்டும், அவருக்குப் பிரியமான மக்களாக மாற வேண்டும் என்பதே தேவனின் விருப்பம். நான் உங்களுக்குச் சொல்வது பின்தங்கியதா அல்லது மோசமான திறமை வாய்ந்ததா என்பதெல்லாம் முக்கியமல்ல—இது எல்லாம் உண்மை. இதை நான் சொல்வதென்பது, நான் உங்களைக் கைவிட உத்தேசிக்கிறேன், நான் உங்களிடத்தில் நம்பிக்கையை இழந்துவிட்டேன், அதைக்காட்டிலும் உங்களை இரட்சிக்க நான் விரும்பவில்லை என்பதையெல்லாம் நிரூபிக்கவில்லை. இன்று நான் உங்கள் இரட்சிப்பின் கிரியையைச் செய்ய வந்திருக்கிறேன், அதாவது நான் செய்யும் கிரியை இரட்சிப்பின் கிரியையின் தொடர்ச்சியாகும். ஒவ்வொரு நபருக்கும் பரிபூரணமாக்கப் படுவதற்கு வாய்ப்பு உள்ளது: ஆனால் நீ அதற்குத் தயாராக இருக்க வேண்டும், நீ பின்பற்ற வேண்டும், இறுதியில் நீ இந்த முடிவை அடைய முடியும், உங்களில் ஒருவர் கூடக் கைவிடப்பட மாட்டார்கள். நீ மோசமான திறமை வாய்ந்தவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் உன் மோசமான திறனுக்கேற்ப இருக்கும்; நீ அதிகத் திறன் கொண்டவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் உன் உயர் திறனுக்கேற்ப இருக்கும்; நீ அறியாதவனாகவும், கல்வியறிவற்றவனாகவும் இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் உன் கல்வியறிவின்மைக்கு ஏற்ப இருக்கும்; நீ கல்வியறிவு பெற்றவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் நீ கல்வியறிவு பெற்றவனாக இருப்பதற்கு ஏற்ப இருக்கும்; நீ வயதானவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் உன் வயதுக்கு ஏற்ப இருக்கும்; நீ விருந்தோம்பல் வழங்க வல்லவனாக இருந்தால், உன்னிடம் எனது தேவைகள் இந்தத் திறனுக்கு ஏற்ப இருக்கும்; உன்னால் விருந்தோம்பல் வழங்க முடியாது, ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை மட்டுமே செய்ய முடியும் என்று நீ சொன்னால், அது ஒரு நற்செய்தியைப் பரப்புவதா, அல்லது தேவாலயத்தைக் கவனித்துக்கொள்வதா, அல்லது பிற பொது விவகாரங்களில் கலந்துகொள்வதா என்பதில் உன்னைப் பற்றிய எனது பரிபூரணமாக்கும் செயல் நீ செய்யும் செயல்பாட்டிற்கு ஏற்ப இருக்கும். விசுவாசமாக இருப்பது, கடைசிவரை கீழ்ப்படிதல், தேவன்மீது மிகுந்த அன்பு செலுத்த முற்படுவது—இதைத்தான் நீ நிறைவேற்ற வேண்டும், இந்த மூன்று விஷயங்களை விடச் சிறந்த நடைமுறைகள் எதுவும் இல்லை. இறுதியில், இந்த மூன்று விஷயங்களை மனிதன் அடைய வேண்டிய தேவையுள்ளது, அவனால் அவற்றை அடைய முடிந்தால், அவன் பரிபூரணமாகிவிடுவான். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, நீ உண்மையிலேயே பின்பற்ற வேண்டும், இந்த விஷயத்தில் நீ முன்னோக்கியும் மேல்நோக்கியும் தீவிரமான உந்துதல் செய்ய வேண்டும், அந்த விஷயத்தில் செயலற்றவனாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு நபருக்கும் பரிபூரணமாக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும், பரிபூரணமாக்கப்பட்டவராக ஆகும் திறன் உள்ளது என்றும் நான் சொல்லியிருக்கிறேன், இது உண்மைதான், ஆனால் நீ உன் பின்பற்றும் செயலில் சிறப்பாக இருக்க முயற்சிக்க வேண்டாம். இந்த மூன்று அளவுகோல்களை நீங்கள் அடையவில்லை என்றால், இறுதியில் நீ அவசியம் புறம்பாக்கப்படுவாய். எல்லோரும் இதைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், எல்லோருக்கும் கிரியையும் பரிசுத்த ஆவியின் பிரகாசமும் இருக்க வேண்டும், மேலும் கடைசிவரை கீழ்ப்படிய இயல வேண்டும், ஏனென்றால் நீங்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை இதுதான். நீங்கள் அனைவரும் உங்கள் கடமையைச் செய்தவுடன், நீங்கள் அனைவரும் பரிபூரணப்படுத்தப்பட்டிருப்பீர்கள், உங்களிடம் பலத்த சாட்சியம் இருக்கும். சாட்சியம் அளிப்பவர்கள் அனைவரும் சாத்தானை வென்றவர்களாகவும், தேவனின் வாக்குத்தத்தைப் பெற்றவர்களாகவும் உள்ளனர், மேலும் அவர்கள் அற்புதமான சென்றடையும் இடத்திலேயே வாழ்வார்கள்.
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?