தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 110
தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் சாரத்தைக் கொண்டிருப்பார், மேலும் தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் வெளிப்பாட்டைக்...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
மாம்சமாகிய தேவனின் கிரியை இரண்டு பகுதிகளை உள்ளடக்கியதாகும். அவர் முதன் முறையாக மாம்சமான பொழுது, ஜனங்கள் அவரை விசுவாசிக்கவில்லை அல்லது அவரை அறியவில்லை, அவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். பிறகு, அவர் இரண்டாவது முறையாக மாம்சமான பொழுதும், ஜனங்கள் அவரை விசுவாசிக்கவுமில்லை, அவரை அறிந்துகொள்ளவுமில்லை, மீண்டும் அவர்கள் கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்கள். மனிதன் தேவனின் சத்துரு அல்லவா? மனிதன் அவரை அறியாதிருந்தால், மனிதன் எவ்வாறு தேவனுடன் நெருக்கமாக இருக்க முடியும்? தேவனுக்கு சாட்சிக் கொடுக்க அவன் எவ்வாறு தகுதி பெற முடியும்? தேவனை நேசிப்பதாக, தேவனுக்கு ஊழியம் செய்வதாக, தேவனை மகிமைப்படுத்துவதாக மனிதன் கூறுபவை அனைத்தும் வஞ்சகப் பொய்கள் அல்லவா? நீ யதார்த்தமில்லாத, வழக்கத்துக்கு மாறான இந்த காரியங்களுக்கு உன் ஜீவனை அர்ப்பணித்திருந்தால், நீ வீணாக வேலை செய்யவில்லை என்பதாகும் அல்லவா? தேவன் யார் என்று கூட உனக்குத் தெரியாத பொழுது நீ தேவனுக்கு நெருக்கமானவனாக எவ்வாறு இருக்க முடியும்? அத்தகைய நாட்டம் தெளிவற்றதாகவும் விளக்கமற்றதாகவும் இருக்கிறது அல்லவா? இது வஞ்சகமில்லையா? ஒருவர் எவ்வாறு தேவனுடன் நெருக்கமாக இருக்க முடியும்? தேவனுடன் நெருக்கமானவராக இருப்பதன் நடைமுறை முக்கியத்துவம் என்ன? உன்னால் தேவனுடைய ஆவியானவருடன் நெருக்கமாக இருக்க முடியுமா? ஆவியானவர் எவ்வளவு சிறந்தவர் மற்றும் உன்னதமானவர் என்பதை உன்னால் காண முடிகிறதா? ஒரு அதரிசனமான, தொட்டுணர முடியாத தேவனின் நெருக்கம் தெளிவற்றதாகவும் விளக்கமற்றதாகவும் இருக்கிறது அல்லவா? அத்தகைய பின்தொடர்தலின் நடைமுறை முக்கியத்துவம் என்ன? இது எல்லாம் ஒரு வஞ்சகமான பொய் அல்லவா? நீ பின்தொடர்வது தேவனின் நெருக்கத்திற்தாக இருக்க வேண்டும், ஆனால் உண்மையில் நீ சாத்தானின் மடியில் இருக்கும் செல்ல நாயாக இருக்கிறாய், ஏனென்றால் நீ தேவனை அறியாதிருக்கிறாய், மேலும் அதரிசனமான, தொட்டுணர முடியாத, உன்னுடைய கருத்துக்களைக் கொண்ட, எங்கும் இல்லாத "எல்லாவற்றிற்குமான தேவனைப்" பின்தொடர்கிறாய். மறைமுகமாகச் சொன்னால், அத்தகைய ஒரு "தேவன்" சாத்தானே, நடைமுறையில் சொன்னால், அது நீதான். நீ உனக்கே நெருக்கமாக இருக்கப் பார்க்கிறாய், ஆனாலும் நீ தேவனுக்கு நெருக்கமாக மாற முயற்சிக்கிறேன் என்று சொல்கிறாய்—இது தூஷணமில்லையா? அத்தகைய பின்தொடர்தலின் மதிப்பு என்ன? தேவனுடைய ஆவியானவர் மாம்சமாக மாறாவிட்டால், தேவனின் சாராம்சமானது வெறுமையான, ஒரு அதரிசனமான, தொட்டுணர முடியாத ஜீவ ஆவியாக, ஒழுங்கற்ற மற்றும் உருவமற்ற, பொருளற்ற, அணுக முடியாத மற்றும் மனிதன் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. இது போன்ற ஒரு உடலற்ற, ஆச்சரியமான, புரிந்து கொள்ள முடியாத ஆவியானவருக்கு எவ்வாறு மனிதன் நெருக்கமாக இருக்க முடியும்? இது ஒரு நகைச்சுவையல்லவா? இத்தகைய அபத்தமான பகுத்தறிவு தவறானது மற்றும் வழக்கத்துக்கு மாறானதுமாகும். சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் தேவனுடைய ஆவியானவரிலிருந்து இயல்பாகவே வேறுபட்ட வகையைச் சேர்ந்தவனாக இருக்கிறான், ஆகவே அவர்கள் இருவரும் எவ்வாறு நெருக்கமானவர்களாக இருக்க முடியும்? தேவனுடைய ஆவியானவரை மாம்சத்தில் உணராதிருந்தால், ஒரு சிருஷ்டிக்கப்பட்ட சிருஷ்டியைப் போல தேவன் மாம்சமாகாமலும், தன்னைத் தாழ்த்திக் கொள்ளாமலும் இருந்திருந்தால், சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் தகுதியற்று, அவருக்கு நெருக்கமானவனாக இருக்க முடியாமல் போயிருப்பான், மேலும் பரலோகத்திற்குள் அவர்களின் ஆத்துமாக்கள் நுழைந்த பின் தேவனுக்கு நெருக்கமானவர்களாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ள அந்த தேவபக்தியுள்ள விசுவாசிகளைத் தவிர, அநேக ஜனங்களால் தேவனுடைய ஆவியானவருக்கு நெருக்கமானவர்களாக மாறியிருக்க முடியாது. மாம்சமான தேவனுடைய வழிகாட்டுதலின் கீழ் பரலோகத்திலுள்ள தேவனுக்கு நெருக்கமாக ஜனங்கள் மாற விரும்பினால், அவர்கள் ஆச்சரியப்படத்தக்க முட்டாள்தனமான மனிதரல்லாதவர்கள் அல்லவா? ஜனங்கள் ஒரு அதரிசனமான தேவனிடம் மட்டுமே "விசுவாசத்தைக்" காட்டுகிறார்கள், மேலும் காணக் கூடிய தேவனிடம் சிறிதளவும் கவனம் செலுத்துவதில்லை, ஏனென்றால் அதரிசனமான தேவனைப் பின்தொடர்வது மிகவும் எளிதாக இருக்கிறது. இருப்பினும், ஜனங்கள் விரும்பினால் இதைச் செய்யலாம், ஆனால் காணக் கூடிய தேவனைப் பின்தொடர்வது அவ்வளவு எளிதானது அல்ல. கற்பனை தேவர்களைத் தேடும் நபரால் தேவனை அடைய முடியாது, ஏனென்றால் மனிதனால் கற்பனை செய்யப்படுகின்ற, மனிதனால் அடைய இயலாத காரியங்கள் யாவும் தெளிவற்றும் விளக்கமற்றும் இருக்கின்றன. உங்களுக்கு நடுவில் வந்த தேவன் உங்களால் அணுக முடியாத ஒரு உயர்ந்த, உன்னத தேவனாக இருந்தால், அவருடைய சித்தத்தை உங்களால் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? உங்களால் அவரை எவ்வாறு அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடியும்? அவர் தமது கிரியையை மட்டுமே செய்திருந்தாலும், மனிதனுடன் இயல்பான தொடர்பு இல்லாதவராகவோ, அல்லது இயல்பான மனிதத்தன்மை இல்லாதவராகவோ, மனுஷர்களால் அணுக முடியாதவராகவோ, அவர் உங்களுக்காக அதிகக் கிரியை செய்திருந்தாலும், அவரோடு உங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாமல், அவரை உங்களால் காணவும் முடியவில்லை என்றால், உங்களால் அவரை எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? இந்த மாம்சம் இயல்பான மனிதத்தன்மையைக் கொண்டிராமல் இருந்திருந்தால், மனிதனுக்கு தேவனை அறிய வழி இருந்திருக்காது; தேவனுடைய மனுவுருவாதலின் நிமித்தமாக மட்டுமே மனிதன் மாம்சத்தில் தேவனுடன் நெருக்கமாக இருக்க தகுதியுடையவனாக உள்ளான். ஜனங்கள் தேவனுடன் நெருக்கமாகி வருகிறார்கள், ஏனென்றால் அவர்கள் அவரோடு தொடர்பு கொள்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் அவரோடு சேர்ந்து ஜீவிக்கிறார்கள், அவருடன் நட்புறவு கொள்கிறார்கள், அதனால் படிப்படியாக அவரை அறிந்துகொள்கிறார்கள். இவ்வாறு இல்லாதிருந்தால், மனிதனின் பின்தொடர்தல் வீணாகியிருந்திருக்காதா? அதாவது, மனிதன் தேவனுக்கு நெருக்கமானவனாக இருப்பது தேவனின் கிரியை காரணமாக மட்டும் அல்ல, மனுவுருவான தேவனின் யதார்த்தம் மற்றும் இயல்பான தன்மையும் காரணமாகும். தேவன் மாம்சமாக மாறுவதால் மட்டுமே, ஜனங்களுக்கு தங்கள் கடமையைச் செய்ய வாய்ப்பும், மெய்யான தேவனைத் தொழுவதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. இது மிகவும் யதார்த்தமான மற்றும் நடைமுறைச் சத்தியம் அல்லவா? இப்போது, நீ இன்னும் கூட பரலோகத்திலுள்ள தேவனுக்கு நெருக்கமாக இருக்க விரும்புகிறாயா? தேவன் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தம்மைத்தாமே தாழ்த்திக் கொள்ளும் பொழுது, அதாவது, தேவன் மாம்சமாக மாறும் பொழுதுதான், மனிதனால் அவருக்கு நெருக்கமானவனாகவும் நம்பிக்கையுள்ளவனாகவும் இருக்க முடியும். தேவன் ஆவியானாவராக இருக்கிறார்: உன்னதமான மற்றும் புரிந்துகொள்ள முடியாதவரான இந்த ஆவியானவருடன் நெருக்கமாக இருக்க ஜனங்கள் எவ்வாறு தகுதி பெறுகிறார்கள்? தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தில் இறங்கி, மனிதனைப் போலவே வெளித்தோற்றம் கொண்ட ஒரு சிருஷ்டியாக மாறும் பொழுதுதான், ஜனங்களால் அவருடைய சித்தத்தைப் புரிந்துகொண்டு உண்மையில் அவரால் ஆதாயப்படுத்தப்பட முடியும். அவர் மாம்சத்தில் பேசுகிறார் மற்றும் கிரியை செய்கிறார், மனிதகுலத்தின் சந்தோஷங்கள், துக்கங்கள் மற்றும் உபத்திரவங்களில் பங்கு வகிக்கிறார், மனிதகுலத்தின் அதே உலகில் ஜீவிக்கிறார், மனித குலத்தைப் பாதுகாக்கிறார், அவர்களை வழிநடத்துகிறார், மேலும் இதன் மூலம் அவர் ஜனங்களைச் சுத்திகரித்து, அவருடைய இரட்சிப்பையும் அவருடைய ஆசீர்வாதத்தையும் அடைய அவர்களை அனுமதிக்கிறார். இவற்றை அடைந்த பிறகு, ஜனங்கள் தேவனின் சித்தத்தை உண்மையிலேயே புரிந்துகொள்கிறார்கள், அதன் பிறகு மட்டுமே அவர்களால் தேவனுடன் நெருக்கமானவர்களாக இருக்க முடியும். இது மட்டுமே நடைமுறைக்குரியது. தேவன் அதரிசனமானவராகவும், ஜனங்களால் புரிந்துகொள்ள முடியாதவராகவும் இருந்திருந்தால், அவர்கள் எவ்வாறு அவருக்கு நெருக்கமானவர்களாக இருந்திருக்க முடியும்? இது வெற்றுக் கோட்பாடு அல்லவா?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனையும் அவருடைய கிரியையையும் அறிந்தவர்களால் மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்த முடியும்” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் சாரத்தைக் கொண்டிருப்பார், மேலும் தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் வெளிப்பாட்டைக்...
பேதுருவின் அனுபவங்களில் ஓர் உச்சக்கட்டம் இருந்தது, அவருடைய உடல் கிட்டத்தட்ட முற்றிலுமாக உடைந்துவிட்டபோது, இயேசு இன்னும் அவருக்குள் ஊக்கத்தை...
இன்று, நடைமுறை தேவனைப் பற்றிய மக்களின் அறிவு ஒருதலைப்பட்சமாகவே இருக்கிறது, மேலும் மனித அவதாரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய அவர்களின்...
நீ எவ்வாறு பின்தொடர்கிறாய் என்பதைப் பொருட்படுத்தாமல், எல்லாவற்றிற்கும் மேலாக, தேவன் இன்று செய்யும் கிரியையை நீ புரிந்து கொள்ள வேண்டும்,...